Be the first to know and let us send you an email when Edappadi vlogger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Edappadi vlogger:
Videos
Happy salem day
𝐬𝐞𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐚𝐥𝐥 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐨𝐧 👇👇
http://www.instagram.com/edappadivlogger
salem butterfly bridge
Video credited🎥 @ #discoverssalem
#salem #butterfly_bridge #drone_view #salem_drone_view
#Nov1
#SalemDay 🎉🎉
#HappySalemDay 🎂🎂
நம்ம இடைப்பாடி சித்திரை தேர் திருவிழா திருக்கல்யாணம் அனைவரும் வருக! வருக!! (08.04 2022 முதல் 20.04.2022 வரை) ➨ www.instagram.com/edappadivlogger
𝐒𝐞𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬 👆 𝐂𝐥𝐢𝐜𝐤 𝐇𝐞𝐫𝐞
ஓமலூர் -சங்ககிரி வரையிலான சாலை தற்போது நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த வழி சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகண ஓட்டிகள் பதுகாப்பாக பயணம் செய்யவும்
வரலாற்றில் மறைக்கப்பட்ட பழம்பெரும் நாடான சங்ககாலத்து #மழநாடு #வண்ணியர்_தேசம் குறித்த செய்திகளையும் ஆதாரங்களையும் வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். எங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்திய #மழவர்நாட்டு மக்களுக்கு நன்றிகள் பல.
மழநாட்டு (சேலம் எடப்பாடி) வரலாற்று மீட்பு. மழவர்களால் ஆளப்பட்ட சேலம் ஒரு தனி நாடு. சேலம் கொங்குநாட்டின் பகுதி அல்ல.
மழநாடு என்பது எருமைநாடு (தற்போதைய மைசூர்), சித்தூர் லட்டிகம், லால்குடி, சேர்வராயன் மலை இது எல்லாம் மழநாட்டின் எல்லை.
அதாவது தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், சேலம், #எடப்பாடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, துறையூர்(திருச்சி) இவை எல்லாம் அடங்கும். மழநாடு தான் மிகப்பெரியது.
சங்க கால மன்னர்கள் ஓரி, அதியன் இருவர்களும் மழ நாட்டை ஆண்ட மன்னர்கள்.
#சேலம், #எடப்பாடி என்பது மழநாட்டில் அடங்கும், இன்னும் விளக்கம் வேணும்னா இலக்கிய பாடல் முதல் ஆங்கிலேயர் எழுதி வைத்த ஆவணம் வரை தருகிறேன்.
மழவர்கள் என்றால்
மழவர்கள் என்றால் தலைவன் என்று பொருள், தகடூர் நாட்டில் போர் மறவர்களாக விளங்கிய பழங்குடியினர் மழவர்கள், மழவர் என்பார் சிலைவீரர்கள் என்று நச்சினார்க்கினியார் கூறியுள்ளார். வில்லேந்திய வீரர்கள் மழவர்கள். இன்றுள்ள மழவராயர்கள் மழவர்களின் வழித்தோன்றல் ஆவார். பதிற்று பத்து என்ற சங்க நூலில் "மழவர் மெய்ம்மறை" என்ற தொடர் இடம்பெறுகிறது. தகடூர் நாடு மற்றும் செங்கம் பகுதிகளில் வரும் பெயர்களான “மழுவூர் மற்றும் மழ நாடர்” மழவர்களுடன் தொடர்புடையவை.
கால்நடைகள் மிக்க காவல் காடுகளை காக்கும் பணியில் மழவர் வெட்சியரவாகவும் கரந்தையராகவும் போரிடும் காட்சியை அகநானூறு (35) தெளிவாக கூறுகிறது. மழவர்கள் ஓரிடத்தில் தங்காது அலைந்து திரிந்தவர் என்பர், அவர்கள் காவற்காடுகளையும், குறும்புகளையும் பாதுகாக்கும் வீரர்களாக தொண்டை மண்டலத்திலும், தகடூர் நாட்டிலும் வாழ்ந்தனர். மழு என்றால் “இளமை” என்று பொருள், மழகளிறு என்ற சொல்லுண்டு. மழவரை நடுகற்களில் வரும் இளையோர் என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தவர். (இளமக்கள் என்றால் வீரர்கள்), இளையர் என்றால் காவலர், ஏவலர், வீரர் என்று பொருள். இளையர் என்ற சொல்லுக்கும் போருக்குமிடையிலான தொடர்பு தொன்மையானது.
“இளையர் நட்ட நடுகல்” என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.
“இளமக்கள் நடுவித்த கல்” செங்கம் நடுகல்லில் உள்ள கல்வெட்டு.
“நிரைகோளில்” மழவர் (மறவர் – வீரர்) இளயர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.
“சிம்மவிஷ்ணு” மழவர்களை வென்றார்கள் ( தருமபுரி மற்றும் செங்கம் நடுகல் கல்வெட்டு)
மேலும் அதியனையும், ஒரியையும் “மழவர் பெருமகன்” என்று சங்க காலப் புலவர்கள் பாடியுள்ளார்கள். மழவர்கள் வாழ்ந்த நாடான “மழ நாடு” சுமார் 180 கி.மீ பரப்பளவுடையது.
மழவர்கள் பகைத்தப் பகைவர்களை போரின்கண் வெல்வார்கள், அழிப்பார்கள், புயல்வேகமாய் பறக்கும் குதிரை மீது எறிபோய் போரிடும் மறவர்கள், பொலிவுற்ற வீரக்கழல்களை காலிலே அணிந்து ஏறு நடைபோடும் சிங்கங்கள். வில் போரில் வல்லவர்கள், வீரமே நிலைக்களனாக கொண்டவர்கள். அப்படிப் பட்டவர்கள் வில் பயிற்சி முடிந்து முதன் முதலாக வில்லில் அம்பு விடும் நாளை தொடை நாளாக விழாவாக கொண்டாடுவர்.
மழவர்களின் தலைமயிர் செம்மறியாட்டுக் கிடாயின் வளைந்த கொம்பு போல சுருண்டு அழகாக இருக்கும். மழவர்களின் அழகிய கழுத்துப்பிடரியை அம்மயிற் மறைத்து இருக்கும். சினத்தால் சிவந்த கண்களை பெற்றவர். நெருப்பை உண்டாக்கும் அம்பு வில்லும் கொண்ட எரிஅம்பு வீரர்கள் மழவர்கள். பசுக்களைக் கவர்ந்து செல்லப் போர்ப்படையுடன் செல்பவர்கள். கொற்றவை தெய்வத்தை வணங்குபவர்கள் மழவர்கள்.
“யாவ ராயினுங் கூழை தார்கொண்
டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
கதிர்விடு றுண்பூ ணம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழுவுத்தோ ளேன்னையைக் காணா வூங்கே
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் கிருஷ்ணகிரி அணையை அடுத்த #மழவராயன்பட்டினத்துப் பெருமாள் மலைப் பாறை ஓவியங்கள்.
1800 அடி உயரத்தே மலை மீதுள்ள சரிவில் இருக்கும் குகை. செங்காவி ஓவியங்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை சுமார் 5000 வருடங்களுக்கும் முற்பட்டவை. கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை.
மழவர் அரசாட்சி செய்தற்கு ஆதாரமாய் மழவர் பெயர் தாங்கிய மழவராய்ன்பட்டினம். வரலாற்றில் மறைக்கப்பட்ட பழம்பெரும் நாடான சங்ககாலத்து #மழநாடு குறித்த செய்திகளையும் ஆதாரங்களையும் வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். எங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்திய #மழவர்நாட்டு மக்களுக்கு நன்றிகள் பல.