Relax Please

Relax Please Relax here Relax please fan page started on 2011 and removed on December 2015 due to some privacy issues.

Now the page get renewed and gonna rocking on Facebook again. We have lost nearly 12 thousand members of the page on removing. We are planing to do a good shares further to achieve more than the previous count of members to be fan for our relax please. Thanks for the patience and please do likes and shares on our page.

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்....உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவு...
27/07/2024

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்....

உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவும் நானும் மிகவும் மகிழ்ச்சியுற்றோம். வெகுவிரைவில் உன் திருமணத்தை காண ஆவலாக உள்ளோம். நீ பக்குவப்பட்டிருப்பாய் என தெரிந்தும் சில குறிப்புகளை சொல்கிறேன். மனதில் வைத்துக்கொள்.

• வருடம் முழுவதும் மீனை எதிர் பார்க்காதே. சோற்றில் சாமபாரை பார்த்ததும் என்னிடம் சண்டையிடுவது போல் சண்டையிடாதே. இனியாவது தட்டில் வைக்கும் அத்தனையையும் சாப்பிட கற்றுக்கொள்.

• 25 வருட உணவு சுவையில் பெரும் மாற்றம் வரும். அது சரி, நீ காபியே அடுத்தவர் வீட்டில் குடிக்க மாட்டாய் சுவை மாறும் என்று. என் அன்பு மகளே, எல்லா சுவையும் சுவையே என்று ஏற்றுக்கொள்.

• இது வரை நீ ஓடி ஆடிய வீதி போன்று இருக்குமா? இதுவரை நீ பழகிய மனிதர்கள் போன்று இருப்பார்களா? புது மனிதர்கள் என்று அச்சம் கொள்ளாதே. அன்பு அகில உலகத்திற்கும் பொதுவானது தானே? அவர்களும் மனிதர்கள் தானே? அன்புடன் எவரையும் எதிர்கொள்.அன்பினால் உலகையே ஆளலாம் ஒரு குடும்பத்தை ஆண்டுவிட முடியாதா உன்னால் ?

• அடிக்கடி எனக்கு போன் செய்து உன் புகுந்தகத்தில் நடப்பதை என்னுடன் பகிர்ந்துகொள்ளாதே. அது உன் கணவனுக்கு சலிப்பை தரும். புகுந்தகத்தில் நடப்பதை பிறந்தகத்திற்குள் கொண்டு வராதே.

• உனக்காக ஒட்டு மொத்த குடும்பமும் அனுசரிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்காக நீ ஒருத்தி அனுசரித்து செல்லலாம். தவறில்லை.

• எவரையும் இவர் இப்படி தான் என்று நீயாகவே நியாயம் தீர்த்துவிடாதே . எல்லோரும் சந்தர்ப்பவாதிகளே. கொஞ்சம் பொறுத்திருந்து வேடிக்கை பார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதம் இருக்கும். அதை அவர்களிடம் புகழ்ந்து பேசு. பிறகென்ன நீ புகுந்தகத்திலும் ராஜாத்தி தான்.

• குடும்பத்திற்குள் சென்ற உடனே குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் உன்னிடம் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணாதே. உன் மாமனார் மாமியார் கணக்கில் ஒரு குழந்தை பெற்று, பள்ளி அனுப்பும் வரையில் நீ ஒன்றும் அறியாத பெண் தான். காலம் மாறும். குடும்ப தலைவியாக நீயும், குழந்தைகளாக உன் மாமனார் மாமியும் மாறுவார்கள் அதுவரை பொறுத்திரு.

• உன் விருப்பங்களனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டது போலவே அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏங்காதே. ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆதங்கம் கொள்ளாதே. காலை காபிக்கு பதில் அங்கு டீ தான் என்றால் ஏற்றுக்கொள். உன்னால் முடியும் அத்தனை வலிமையையும் உனக்குள் இருக்கிறது.

• தங்கை மீது உன் கணவனுக்கு பாசம் அதிகம் என்றால் ஆதங்கம் கொள்ளாதே. அன்புக்கு அணை கட்டாதே. அது அப்படியே இருக்கட்டும். நாளை உன் மகனும் உன் மகள் மீது அதே அன்பை செலுத்துவான். அன்னையாக நீ மகிழ்வாய் அதை காணும்போது.

• எதை செய்தாலும் உன் கணவனிடமேனும் தெரியப்படுத்திவிடு. ஒளிவு மறைவின்றி வாழ்வது தான் திருமண பந்தத்தின் அஸ்திவாரமே.

• ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை பெருக்கு.

• வீணாக இனி எதையும் தூக்கி போடாதே. வீணானதென்று இங்கு ஒன்றும் இல்லை. பொருட்களை பத்திரப்படுத்த கற்றுக்கொள்.

• இது தான் எனக்கு பிடித்த கலர் இது எனக்கு தான் வேண்டும் என்று உன் பிறந்தவர்களிடம் மல்லுக்கட்டுவது போல் அங்கும் மல்லுக்கட்ட நினைக்காதே. இனி நீயும் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்.

• உன் நண்பர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டது போல உன் புகுந்தகத்திலும் ஏற்றுக்கொள்ளவார்கள் என கனவு காணாதே. உன் நண்பர்கள் நீ சம்பாதித்த சொத்து அதை பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு.

• அரக்க பறக்க ஓடும் ஓட்டத்தில் பட்டனை தைத்துக் கொடு என்று பாட்டியையும் வேலை வாங்குவாயே அதை நிறுத்திவிடு உன் வேலைகளை பிறர் உதவியின்றி செய்ய கற்றுக்கொள்.

• பின்னாடியே வந்து ஊட்டிவிட்டு உன்னை கல்லூரிக்கு அனுப்ப இனியும் நீ குழந்தை அல்ல. உன்னை இனி நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும்.

• ரசத்தையும், சட்னியையும் கொதிக்க விட்டுவிடாதே. பருப்பை நன்கு வேக விடு. உன் அவசர Bachelor Room சமையலை புகுந்தகத்தில் காட்டிவிடாதே அன்பு மகளே.யூடியூப் பார்த்தேனும் நிதானமாக சமைக்கக் கற்றுக்கொள்.

• உன் அப்பாவை நீ இங்கேயே விட்டு விட்டு தான் செல்ல போகிறாய். எனவே இனி பொறுப்புணர்ந்து செயல்படு.

• படித்தவள் என்னும் கிரீடத்தை இறக்கி வைத்துவிட்டு காலடி எடுத்து வை. உன் 400 பக்க புத்தகமும் உன் மாமனார் மாமியாரின் 40 வருட அனுபவமும் ஒன்றல்ல.

• உன்னை அழகாக வைத்துக்கொள்வது போலவே உன் இருப்பிடத்தையும் வைத்துக்கொள்.

• வீட்டிற்கு வரும் உன் கணவனின் சகோதரிகளை வெறுமையாக ஒருபோதும் அனுப்பி விடாதே. பிறந்தகத்திலிருந்து ஏதேனும் கொண்டு செல்வது அவர்களுக்கு பெருமை மட்டும் இல்லை அது அளவுகடந்த மகிழ்ச்சியே.

• உறவினர் கண்டு ஓடி ஒளிந்துகொள்வதை இனியும் நீட்டிக்காதே. விருந்தினருக்கு வந்தனம் செய். அவர்களை அவமதிக்காதே.

• உதட்டோரம் ஒரு புன்னகையை எப்பொழுதும் உதிர்த்துக்கொண்டே இரு. அது தான் எங்கள் மகிழ்ச்சியே.

• உணவருந்தும் முன் வீட்டில் அனைவரும் உணவருந்தி விட்டார்களா? என கேட்டு உணவருந்து. மேசை முன் அனைவருக்காகவும் காத்திருக்கவும் பழகிக்கொள்.

• எதை சமைத்தாலும் வீட்டில் முதியவர்களுக்கு முதலில் கொடுத்து விடு.

• குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தில் இன்னும் இருப்பதற்கு காரணம் பெண்கள் நாமே. அதில் இனி நீயும் முக்கிய பங்கு என்பதை மறந்துவிடாதே. இதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்.

• உன் கனவை யாருக்காகவும் கனவாகவே ஆக்கிவிடாதே. பறந்துகொண்டே இரு இன்னும் உயர உயர.

• மேற்சொன்ன அத்தனையும் கேட்பது எளிது தான். அத்தனையையும் எதிர் கொள்ளும் மன வலிமையை இறைவன் பெண்ணுக்குள் அதிகம் வைத்திருக்கிறான் என்பதற்கு இவ்வுலகம் சான்று கொடுக்கும். உனக்கு மனவலிமை அதிகம். பயப்படாதே.

- படித்ததில் பிடித்தது

படித்ததில் வருந்தியது :- உலகத்தின் பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian) தமிழ்நாட்டில் இருந்ததுதமிழ்நாட்டில் இருந்து அழிக்...
15/11/2023

படித்ததில் வருந்தியது :-

உலகத்தின் பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian) தமிழ்நாட்டில் இருந்தது

தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?

ஆம் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது.

பல கிமீ பரவி விரிந்து ஓடியதால் இது பரவனாறு எனவழங்கப்பட்டது

வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது

சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம், தற்போதைய என்எல்சி சுரங்கம், கத்தாழை, கரிவெட்டி, இளவரசம்பட்டு, கரைமேடு, எல்லைக்குடி வழியாக பெருமாள் ஏரியில் அடைந்து பின் 26 கிமீ பயணித்து பூண்டியாங்குப்பம் வழியாக கடலூர் துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது

பரவனாறு உண்மையில் பூமியின் ஆழத்திலிருந்து உற்பத்தி ஆகிறது என்பதே இதன் சிறப்பு

இந்த ஆற்றுக்கான நீர ஆதாரம் ஆர்ட்டீசியன் பொங்குநீர் ஊற்றுகளே

இரண்டாம் பராந்தக சோழன் பரவனாற்றை சீரமைத்து இதன் கரைகளில் நிறைய ஏரிகளை அமைத்ததுடன் அதன் உச்சமாக 16 கிமீ நீளமுள்ள பெருமாள் ஏரியை வெட்டினான்

வெள்ளையர் காலத்தில் இந்த ஏரியின் குறுக்கே மக்கள் பயணிக்க பாலங்கள் அமைத்ததுடன் பெருமாள் ஏரி வாலாஜா ஏரிகளை சீரமைத்து மேம்படுத்தினர்

இந்த பரவனாறு எந்த காலத்திலும் வற்றாத ஜீவ நதி 850 சதுர கிமீ பரப்பிலான நிலங்களின் நீராதாரமாக ஒரு காலத்தில் விளங்கியது

இந்த பரவனாறு வளமான செம்மண்ணில் உற்பத்தியாகி சுக்காங்கல் பாறை, களிமண், வண்டல்மண், வெள்ளைப்பாறை, களர்மண், மணல்பாறை, இளுவைமண் என் பல்வேறான மண்வளத்தில் பாய்ந்தோடும் சிறப்பு கொண்டது

இந்த ஆற்றில் உலகத்தில் வேறெங்கும் காணப்படாத அறியவகை நீர்ப்பூனைகளும் , அறியவகை நீர் விலங்குகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வாழ்ந்தன

மழைகாலத்தில் தென்னாற்காடு மாவட்டமே பரவனாற்றால் நீர் கொப்பளித்து பொங்கி ஓடும்

இவையெல்லாம் என்எல்சி என்னும் நாசக்கார சுரங்கம் வரும் வரைக்கும்தான்

நிலக்கரி ஆலை மற்றும் சுரங்கத்திலிருந்து்வெளிப்படும் பாதரசக்கழிவுகளால் அறியவகை நீர்விலங்குகள் அழிந்தன

தென்னாற்காடு மாவட்டத்தின் நன்னீர் கடலாக விளங்கிய பரவனாற்றை என்எல்சி அழித்து நாசப்படுத்திவிட்டது. தலை இழந்த முண்டமாக தன் உயிர்குடித்த என்எல்சியால் இரத்தபேதியாகிக்கொண்டிருக்கிறது பரவனாறு.

என்எல்சி இன்னும் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும்

ஆனால் தொலைந்த ஆறு கிடைக்குமா? இழந்த நீர் வளமை திரும்ப வருமா?

4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பரவனாறு என்எல்சியால் 40 வருடத்தில் சூரையாடப்பட்டது.

சிறு வயதில் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகளில் குளித்திருக்கிறேன்

குளிர் காலத்தில் இந்த ஆர்ட்டீசியன் ஊற்றில் மிதமான சூட்டில் வென்னீர் வரும்

அது ஒரு சுகமான அனுபவம்

நான் படித்த காலத்தில் 1980 காலத்தில் நெய்வேலி ஆர்ட்டீசியன் ஊற்று குறித்த பாடங்கள் இருந்தது

தமிழ்நாட்டின் பள்ளி வரலாறு புவியியல் பாடபுத்தகங்களில் இருந்தும் பரவனாறு குறித்த பாடங்கள் அழிக்கப்பட்டதுதான் சோகத்திலும் சோகம்

கண்ணில் வழியும் கண்ணீருடன் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றில் குளித்த சாட்சி

என் தகப்பன் காலத்தில் எம் முன்னோர்களின் அறியாமையாலும் விழிப்புணர்வற்ற தன்மையாலும் அழிக்கப்பட்ட பரவனாற்றின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வோம்.

King 👑 Virat Kohli breaks Sachin's record on ODI semi-final WC2023
15/11/2023

King 👑 Virat Kohli breaks Sachin's record on ODI semi-final WC2023

10/11/2023

தீபாவளி ஸ்பெஷல். புழுங்கல் அரிசியில், கொங்கு பாரம்பரிய அரிசி முறுக்கு.

09/11/2023

🦆 வாத்து கிரேவி 🍖 வேலூர் ( நாமக்கல் ) !! கொங்கு ஸ்டைல்

யாருடையது காவிரி நீர் ?.. பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,27 ஊழியர்களுக்கு நான் மேலாளர்...
29/09/2023

யாருடையது காவிரி நீர் ?..

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.

ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.

அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.

"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.

""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.

"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.

"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.

அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.

நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.

"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.

Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam

மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.

"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.

நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.

குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.

அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.

கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.

ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.

கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.

உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

25/07/2023
வெற்றிலை = வெற்றி + இலை.. நாலஞ்சு இலை உங்ககிட்ட இருந்தாலே போதும்.. கேட்கும்போதே சிலிர்க்குதே.. ஹெல்த்வெற்றிலை பாக்கு என்...
16/06/2023

வெற்றிலை = வெற்றி + இலை.. நாலஞ்சு இலை உங்ககிட்ட இருந்தாலே போதும்.. கேட்கும்போதே சிலிர்க்குதே.. ஹெல்த்

வெற்றிலை பாக்கு என்றாலே நம்முடைய தாத்தா பாட்டிக்களுடன் தொடர்புடைய பொருளாக கருதி, அவற்றை ஒதுக்கிவிடும்.. இதன்காரணமாக, வெற்றிலைக்குள் ஒளிந்த அற்புதங்களையும் தெரிந்துகொள்ளாமலேயே விட்டுவிடுகிறோம்.. முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் இல்லையே.. இதோ வெற்றிலையின் ஆச்சரியங்களையும், அதன் மருத்துவ குணங்களையும் பாருங்கள்.

வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச்சேர்ந்த ஒரு கொடியாகும்.. அதனால்தான் வெற்றிலை கொடி என்கிறார்கள்.. மற்ற நாடுகளைவிட நம்முடைய இந்தியாவில் வெற்றி போடும் பழக்கம் அதிகமாம். சாப்பாட்டுக்கு பிறகு, வீட்டில் பெரியவர்கள் வெற்றிலை போடுவதை ஒரு பழக்கமாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்..

கடவுள்களுக்கும், சுபநிகழ்ச்சிகளும் வெற்றிலைக்கட்டினை வைப்பார்கள்.. இந்த இலைக்குள் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், என ஏகப்பட்ட வைட்டமின்கள் நிறைந்து கிடக்கின்றன..

நடுநரம்பு: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.

உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது... நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்...

பாக்கு சுண்ணாம்பு: இதை அளவோடு சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடும் நீங்கும். வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்... வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். செரிமான ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.. வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட.. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளை போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம்...

சாறு: இளஞ்சூடான வெற்றிலையை, பேஸ்ட் போல செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.. அப்படி செய்தால், வெற்றிலையிலுள்ள சாறு உடலில் உள்ள உள் வலிகளை அகற்றும்.. அதுமட்டுமல்ல, ரேடிக்கல்களை அகற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆற்றல் உடையதுதான் இந்த் வெற்றிலைகள்.

ஆயுர்வேத சிகிச்சையில், இந்த வெற்றிலையை நிறைய பயன்படுத்துவார்கள்.. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெற்றிலை சாப்பிட வலியுறுத்துகிறார்கள்.. இரவில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் போட்டுவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.. குடல் இயக்கத்தை எளிதாக்கும்..

அருமருந்து: அதேபோல, சுவாச பிரச்சனைகளுக்கு வெற்றிலைகள் அருமருந்தாக உள்ளன.. இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு வெற்றிலை உதவுகிறது... மார்பு, நுரையீரல் அடைப்பு, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிலையை பயன்படுத்தலாம்.. இந்த வெற்றிலையில், சிறிது கடுகு எண்ணெயை தடவி சூடாக்கி மார்பின்மீது வைத்தாலே போதும்.. நிவாரணம் மெல்ல கிடைக்கும்..

2 கப் தண்ணீரில் போட்டு சில வெற்றிலைகளையும், ஏலக்காய், கிராம்பு லவங்கப்பட்டை போன்றவற்றையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. 2 கப் தண்ணீர் 1 கப் ஆகும்வரை கொதித்தவுடன், அந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிட்டால் அத்தனை சுவாச பிரச்சனைகளும் காணாமல் போயிவிடும்.

ஆன்டிசெப்டிக்: வெற்றிலை ஒரு ஆன்டிசெப்டிக் நிறைந்த இலையும் கூட.. காரணம், இந்த வெற்றிலைகளில் பாலிபினால்கள் அதிகம் காணப்படுகின்றன.. கீல்வாதம், ஆர்க்கிடிஸ் சிகிச்சைகளில் வெற்றிலைகளை அதிகம் பயன்படுத்த காரணமே இதற்காகத்தான். பூஞ்சை தொற்றுகளை ஒழிக்கவும் வெற்றிலை உதவுகிறது.

வெற்றிலைக்குள் ஏகப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்துள்ளன.. இவைகளை நாம் மெல்லும்போது, வாயில் வசிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகின்றன.. மேலும், வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுவதுடன், பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய்வழி தொற்று போன்றவற்றையும் இந்த வெற்றிலை நீக்குகிறது.

புகையிலை: வெற்றிலையை புகையிலை மற்றும் வெற்றிலையுடன் சேர்த்துக் கொள்ளும்போது, வாய்வழி புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.. ஆனால், வெறும் வெற்றிலையில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பலன்களை கொண்ட பைட்டோ கெமிக்கல்களும் நிரம்பி உள்ளதாம்.

~ படித்ததில் பிடித்தது.

*ஒரு மனிதனின் உண்மையான உறவினர்கள் என்று ஆறு பேர் இருக்கிறார்கள், எந்த சூழ்நிலை வந்தாலும் அவர்கள் ஒருவரை விட்டு விலக மாட்...
16/06/2023

*ஒரு மனிதனின் உண்மையான உறவினர்கள் என்று ஆறு பேர் இருக்கிறார்கள், எந்த சூழ்நிலை வந்தாலும் அவர்கள் ஒருவரை விட்டு விலக மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.*

*உண்மை தாய் போன்றது*
உண்மை எப்போதும் தனித்துவமாக நிற்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒருமுறை அது வெளிவந்தால், அதை மாற்ற முடியாது, அப்படி மாற்றினால், அது உண்மையாக இருக்காது. உண்மையைப் பேசும் ஒரு மனிதன், எதற்கும் பயப்படவோ அல்லது எதையும் கஷ்டப்பட்டு நியாபகம் வைத்துக் கொள்ளவோ தேவையில்லை. ஒரு சிறிய பொய்யை காப்பாற்ற ஆயிரம் பொய்கள் தேவை, உண்மைக்கு அப்படி எதுவும் தேவையில்லை. தாய் எப்போதும் தன் குழந்தைகளை பாதுகாப்பது போல உண்மை ஒருவரை பாதுகாக்கிறது. அவர்கள் உலகைப் பார்த்து பயப்படும் போதெல்லாம் தாய் போல கவசமாக இருந்து பாதுகாக்கிறது.

*அறிவு தந்தை போன்றது*
அறிவுள்ள மனிதன் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறான். ஆயிரக்கணக்கான உறவினர்களைக் கொண்டிருப்பவனை விட அறிவுடன் இருக்கும் தனிநபர் சிறந்தவர். அறிவு அவரை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, எனவே சிறந்த முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது, இது அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிவகுக்கும். இவ்வாறு, அறிவு மனிதனின் உண்மையான உறவினர் என்பதை நிரூபிக்கிறது, எல்லா இடங்களிலும் அவரை ஆதரிக்கிறது.

ஒரு தந்தை தன் பிள்ளையை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எப்படி வழிநடத்துகிறாரோ, அதே வழியில் அறிவு அவரை வழிநடத்துகிறது. பாதகமான சூழ்நிலையில் தந்தை அவரைப் பாதுகாப்பது போல, அறிவும் அவருக்குப் பிரச்சனையின் போது உதவுகிறது. எனவே, சாணக்கியர் அறிவை ஒருவரின் தந்தையுடன் ஒப்பிடுகிறார்.

*நீதி சகோதரர் போன்றது*
நீதி சகோதரனைப் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு சகோதரன் உங்களுக்குப் பக்கபலமாக நிற்கிறார். அதேபோல, நீதி உங்கள் சகோதரனாக இருக்க வேண்டும் என்றால், வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளிலும் நீங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நீதி அவருடன் என்றென்றும் நிலைத்திருக்கும். தர்மம் அல்லது நீதி ஒரு மனிதனின் வாழ்நாள் தொடங்கி மரணம் வரை செல்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, நீதி சிறந்த சகோதரனாக விளங்குகிறது. ஒரு சகோதரர் உங்களைத் தவறு செய்வதிலிருந்து தடுக்கிறார், அதேபோல் நீதியானது தவறான வாழ்க்கைப் பாதைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

*இரக்கம் நண்பர் போன்றது*

கருணை உங்கள் நண்பனாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். கருணை உங்கள் நண்பராக இருக்கும்போது, அனைவரும் உங்கள் நண்பர்களாகிறார்கள். இரக்கம் மக்களை ஈர்க்கிறது. மாறாக, ஒரு மனிதன் இரக்கமற்றவராக இருந்தால், மக்கள் அவரை வெறுக்கிறார்கள், இதனால் இரக்கமற்ற தன்மை அவருக்கு எதிரியாகிறது. எனவே இரக்கத்தை சிறந்த நண்பராக கொண்டவர்கள், அனைவரின் அன்பையும் பெற முடியும்.

*அமைதி மனைவி போன்றது*
மனிதன் முதலில் அமைதியை மனைவியாக ஏற்க வேண்டும். மனைவி எப்படி அவருக்குப் பக்கபலமாக நிற்பார்களோ, அதுபோலவே வாழ்க்கையின் மோசமான தருணங்களில் அமைதி அவர்களுடன் இருக்க வேண்டும்.

*மன்னிப்பு மகன் போன்றது*
மன்னிப்பை உங்கள் மகனாக பார்க்க வேண்டும். இது நீங்கள் விலகிச் செல்ல முடியாத ஒன்று, அது உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கம். மன்னிப்பை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளும் போது, சில சமயங்களில் மன்னிப்பதும் சரி என்பதை நாம் உணர்கிறோம். மேலும், பெற்றோர்கள் தங்கள் மகனின் ஒவ்வொரு தவறையும் மன்னிப்பது போல, நாமும் மக்களின் தவறுகளை மன்னிக்க வேண்டும்.

*சாணக்கிய நீதி*
"சத்ய மாதா பிதா ஞானம், தர்மோ ப்ரதா தயா சகா, சாந்திஹ் பத்னி, க்ஷம புத்ரா, ஷதேதே மாம் பாந்தவா' அர்த்தம்: உண்மை என் தாய், அறிவு என் தந்தை, நீதி என் சகோதரன், இரக்கம் என் நண்பன், அமைதி என் மனைவி, மன்னிப்பு என் மகன். இந்த ஆறு பேர் என் உறவினர்கள் என்கிறார் சாணக்கியர்.

~ படித்ததில் பிடித்தது.

தனுஷ்கோடியின் கழுகு பார்வை ❤️
15/02/2023

தனுஷ்கோடியின் கழுகு பார்வை ❤️

Shadow sculpture (1997) by Tim Noble and Sue Webster.
15/02/2023

Shadow sculpture (1997) by Tim Noble and Sue Webster.

கையளவு துணி இருந்தாலும், கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாய் பொது இடத்தில் உட்கார முடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரம...
17/01/2023

கையளவு துணி இருந்தாலும், கால் மேல் கால் போட்டுக்
கம்பீரமாய் பொது இடத்தில் உட்கார முடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல,
#உழைப்பு தருகின்ற கம்பீரம்!
கார், பணம், பதவி, அதிகாரம் பார்த்து வருகின்ற மரியாதைகள்
அவை போனதும்
அவற்றுடனேயே போய்விடும்,
உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர் போனாலும் போவதில்லை!...
______________________
கோவணத்தோடு நின்றாலும் குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக் கூடிய துணிவு கடவுளுக்குப் பின் உழவனுக்கு மட்டுமே இருக்கிறது!
படைப்பது மட்டுமல்ல
பயிரிடுவதும் கூட
கடவுள் தொழில்தான்!!..🙏

11/01/2023

Hi Relax please Viewers ! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars! Relax Please

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்ட...
09/01/2023

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!

அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes).

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

வைத்தியனுக்கு தருவதை
விவசாயிக்கும் விவசாய வணிகனுக்கும் தருவோம்!

08/01/2023

கொங்கு பாரம்பரிய கலை மாரியம்மன் கம்பம் ஆட்டம்.

100 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியின் மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் மெக்காவின் கிராண்ட் மசூதி முதல...
08/01/2023

100 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியின் மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் மெக்காவின் கிராண்ட் மசூதி முதலிடத்தில் உள்ளது.

அளவு: ஒரு மில்லியன் (1,000,000) சதுர மீட்டர் கொள்ளளவு:

🕋இரண்டு (2) மில்லியன் மக்கள் தங்க முடியும்
🕋ஆண்டுதோறும் இருபது (20) மில்லியன் பார்வையாளர்களைப் பெறுகிறது
🕋இருபத்தி நான்கு (24) மணிநேரம் திறந்திருக்கும். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இது முழுமையாக மூடப்படவில்லை
🕋1800 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர், 40 மின்சார சானிட்டரி துப்புரவு கார்கள் உள்ளன
🕋திறந்த முற்றங்களை சுத்தம் செய்ய 60 மின்சார சானிட்டரி இயந்திரங்கள் உள்ளன
🕋2000 சானிட்டரி பீப்பாய்கள் வளாகம் முழுவதும் பரவியுள்ளது
🕋40000 கம்பளங்களால் மூடப்பட்ட தரை (ஜித்தாவிற்கும் மக்காவிற்கும் இடையிலான தூரத்தை விட நீளமானது (79 கிமீ))

🕋13000 கழிப்பறைகள், தினமும் நான்கு (4) முறை/6 மணிநேரம் சுத்தம் செய்யப்படுகின்றன
🕋25000 நீர் விநியோகிகள் (உலகின் மிகப்பெரிய நீர் விநியோக அமைப்புகளில் ஒன்று)
தினமும் 100 சீரற்ற குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன
🕋ஜம்ஜாம் கிணற்றில் இருந்து அதிகப்படியான நீர் 1,700,000 (1.7 மில்லியன்), தண்ணீர் பாட்டில்கள் (10 லிட்டர் கொள்ளளவு) கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது.
🕋HARAMAIN ஓதுதல் சேவை: குர்ஆன் ஓதுதல் ஒலிபரப்பு; 24/7; குர்ஆனின் அனைத்து பத்து (10) அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி ஓதுதல்; 180 நாடுகளில் 500,000 (அரை மில்லியன்) அத்தியாயங்கள் மூன்று (3) ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்டன.
🕋2,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகள் (தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க)
மசூதிக்குள் நூற்றுக்கணக்கான ஏர் கண்டிஷனிங் அலகுகள் (குளிரூட்டலுக்காக) சிதறிக்கிடக்கின்றன.
🕋மசூதியின் தளம் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது, இதனால் வளாகத்தில் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது.
🕋மசூதியின் எந்தப் பகுதியின் இருப்பிடத்தையும் காட்டக்கூடிய மின்னணு சுற்றுலா வழிகாட்டி பயன்பாடு.
🕋விரிவான மற்றும் மிகவும் திறமையான ஆடியோ சிஸ்டம்:
🕋கிராண்ட் மசூதியில் உள்ள ஒலி அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான ஒலி அமைப்புகளில் ஒன்றாகும்,
ஆடியோ சிஸ்டம் பிழை விளிம்பு: 0%
6000 பேச்சாளர்கள்
நான்கு (4) வெவ்வேறு ஆடியோ அமைப்புகள்
ஐம்பது (50) ஒலி பொறியியல் பணியாளர்கள்
🕋குர்ஆனின் பிரதிகள் 65 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
🕋ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிரசங்கமும் ஐந்து (5) வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு

🕋ஊனமுற்றோருக்கான சேவைகள்/வசதிகள்

🕋10,000 வழக்கமான சக்கர நாற்காலிகள் இலவசமாகப் பயன்படுத்தப்படுகின்றன, 400 மின்னணு வழிகாட்டி சக்கர நாற்காலிகள் உள்ளன, தானியங்கி சக்கர நாற்காலிகள் (2 சக்கரங்கள் மற்றும் 3 சக்கரங்கள்)

🕋ரமதான் சிறப்பு சேவைகள்

🕋 ரமலான் முழுவதும் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்க 4 மில்லியன் இலவச உணவு
🕋5,000,000 பேரீச்சம்பழங்கள் (விதைகளை அப்புறப்படுத்தியது) ரமழானில் ஒவ்வொரு நாளும் மசூதி பகுதியில் விநியோகிக்கப்படுகிறது.
நோன்பு துறந்த பிறகு, மக்ரிப் தொழுகையின் இடத்தை சுத்தம் செய்வதற்கான உணவு மற்றும் உபகரணங்களை அகற்றுவது (ஷாலா) இரண்டு (2) நிமிடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.

நன்றி-படித்ததில் பிடித்திருந்ததால் பகிர்கின்றோம்
உரிமம் முதல் பதிந்தவருக்கே ……….

கடையேழு வள்ளல்கள் யார்?(01) பேகன்  - மயிலுக்கு போர்வை அளித்தவர்.(02) பாரி - முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.(03) காரி ...
26/12/2022

கடையேழு வள்ளல்கள் யார்?

(01) பேகன் - மயிலுக்கு போர்வை அளித்தவர்.

(02) பாரி - முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.

(03) காரி - தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியவர்.

(04) ஆய் - நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு அளித்தவர்.

(05) அதியமான் - நீண்ட நாள் வாழக்கூடிய அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தவர்

(06) நள்ளி - தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்ததால்...

(07) ஓரி - விற் போரில் வல்ல ஓரி கொல்லி மலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

Address

Housing Unit, Edappadi
Salem
637101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Relax Please posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Relax Please:

Videos

Share

Category