Radhai TV

Radhai TV திருநெல்வேலி @ தூத்துக்குடி @ தென்காச?

19/03/2024

தேர்தல்…………?

  BIRTHDAY #பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று (6-4-23) பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கும் யது குல உறவுகள் அனைவருக்கும் பிறந...
06/04/2023

BIRTHDAY
#பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று (6-4-23) பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கும் யது குல உறவுகள் அனைவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்தின் மகிழ்வில்
#ராதாபுரம் சுற்று வட்டார யாதவ நல சங்கம்
#ராதை மீடியா

 #வெற்றிமாறன் இயக்குனரின்  #விடுதலை  #யாதவ போராளியின் கதையை மீட்டெடுத்தது  #விடுதலை படகுளுவினருக்கு நன்றி  #சூரி  #விஜய்...
04/04/2023

#வெற்றிமாறன் இயக்குனரின் #விடுதலை #யாதவ போராளியின் கதையை மீட்டெடுத்தது #விடுதலை படகுளுவினருக்கு நன்றி #சூரி #விஜய் சேதுபதி
sethupathi
#துணைவன் சிறுகதை

#விடுதலை படத்தில் #யாதவ போராளியின் கதையை மீட்டெடுத்த #வெற்றிமாறன் இயக்குனருக்கு நன்றி

  experience  #வலிகள் நிறைந்த அனுபவத்தால் பக்குவப்பட்ட மனசு #அயோத்தி வெற்றியில் #சசிகுமார்
31/03/2023

experience #வலிகள் நிறைந்த அனுபவத்தால் பக்குவப்பட்ட மனசு
#அயோத்தி வெற்றியில்
#சசிகுமார்

 #அயோத்தி  #சசிகுமார்  #மாபெரும் வெற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிக்குமார் அவர்களின் ஒரு சிறந்த படம் அல்ல பாடம்...அயோத்...
10/03/2023

#அயோத்தி #சசிகுமார்
#மாபெரும் வெற்றி

நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிக்குமார் அவர்களின் ஒரு சிறந்த படம் அல்ல பாடம்...

அயோத்தியிலிருந்து தீபாவளியன்று புனித யாத்திரையாக தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் ராமேஸ்வரம் வருகிறார் ஒருவர். மதுரை டு ராமேஸ்வரம் டாக்ஸி பயணத்தின்போது அவரின் பொறுப்பில்லாத தனத்தால் பெரும் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் அவரின் மனைவி இறந்துவிட, மொழிப் புரியாத ஊரில் திக்கற்று நிற்கிறது குடும்பம்.

மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு உதவ முன்வருகிறார் சசிகுமார். தன் நண்பர்களின் ஆதரவுடன் சசிகுமார் அந்தக் குடும்பத்துக்கு எப்படி உதவுகிறார், அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் என்ன , பொது மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சட்டம் சமயத்தில் எளியவனை எப்படியெல்லாம் நொருக்குகிறது, ஒரு சூழல் மனுதனை எப்படி மாற்றுகிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதைய
சசிக்குமாருக்கு அளவெடுத்து செய்தது போலவே ஒரு பாத்திரம். வேறு ஒரு நாயகனாக இருந்திருந்தால் அவரின் உதவும் குணத்திற்கு என்று பல காட்சிகள் வைத்திருக்க வேண்டும்... ஆனால் இவருக்கு தான் அது தேவையே இல்லையே... நட்பு, காதல் , துரோகம் என பாத்திரங்களை தேர்வு செய்து கொண்டிருந்த சசிக்குமார்.... மனிதத்தை கையிலெடுத்தது அவருக்கு கைகொடுத்துள்ளது.. நாயக பிம்பம் இல்லாமல் யதார்த்தமாக செல்வதே அவருடன் நம்மை ஒன்ற வைக்கிறது...

நாயகியாக வருபவர் செம்மையாக நடித்துள்ளார் .. கை கூப்பி சசிக்குமாரிடம் உதவி கேட்கும் காட்சியாகட்டும், தந்தையின் ஒடுக்குமுறையை எதிர்த்து வெடிக்கும் காட்சியாகட்டும், தாயைக் கண்டு கதறுவதும், தம்பியை அணைப்பதாகட்டும் அனைத்தும் கச்சிதம்...

ஒரு வில்லத்தனம் கலந்த மனிதனாக தந்தை பாத்திரத்தில் வருபவர்... நமக்கே அவரைப் பார்த்ததும் வரும் வெறுப்பின் மூலம்.... அவரின் நடிப்பு வெற்றி பெற்றுள்ளது..

புகழ் காமெடி என்றில்லாமல் ஒரு நல்ல பாத்திரம். இப்படியே போனால் கூட சிறந்த நிலையை அடையலாம் போல...

தம்பியாக வரும் சிறுவன் , தாயாக வருபவர், போஸ் வெங்கட் உட்பட அனைவரும் சிறந்த நடிப்பையே கொடுத்துள்ளனர்...

என்.ஆர். ரகுனந்தனின் இசையில் "காற்றோடு பட்டம்போலே" உருக வைத்த பாடல், பின்னணி இசை கதையோடு இணைகிறது ... ஒளிப்பதிவாளர் தேவையான அளவிற்க்கு கொடுக்க, எடிட்டர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பர பர தொகுப்பை கொடுத்துத்துள்ளார்...

அயோத்தி இது மனிதம் பற்றிய எமோஷனல் படமாக மாற்றியதிலேயே இயக்குனரின் முத்திரை தெரிகிறது... எளிய மக்களின் போராட்டம், அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள், அதை கடந்து நிற்கும் மனிதம் என மனுசன் கண்கலங்க வைத்து அனுப்புகிறார்... இயக்குனருக்கு நிச்சயம் ஒரு எதிர்காலம் உண்டு..

அயோத்தி -
மனிதத்தை கற்றுக்கொடுக்கும் ஒரு படம் 👌👌👌

ராதை மீடியா

 #சங்கை சிங்கம் குருசாமி யாதவர் பிறந்தநாள் தொகுப்பு  yadhav...    of sankarankovil
04/03/2023

#சங்கை சிங்கம் குருசாமி யாதவர் பிறந்தநாள் தொகுப்பு
yadhav... of sankarankovil

#மாவீரன் #குருசாமி யாதவ் #பிறந்தநாள் விழா தொகுப்பு singam #சங்கை சிங்கம் yadhav #குருசாமி யாதவ் #ஆட்கொண்டர்குளம் சி.....

ஊரல்வாய்மொழி ஆறுமுகம் மற்றும் முத்துசெல்வி... இருவருக்கும் இன்று திருமணநாள் நல்வாழ்த்துக்கள். திருமண நாளில்  இரண்டாவது வ...
10/02/2023

ஊரல்வாய்மொழி ஆறுமுகம் மற்றும் முத்துசெல்வி... இருவருக்கும் இன்று திருமணநாள் நல்வாழ்த்துக்கள். திருமண நாளில் இரண்டாவது வருடத்தை அடியெடுத்து வைக்கின்றனர். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்றிட வாழ்த்துவதில் ராதை மீடியா பெருமை கொள்கிறது ❤️.

 #இராதாபுரம் சுற்றுவட்டார யாதவ நல சங்கம் சார்பாக, மதிப்பிற்குரிய திரு.இசக்கிமுத்து அவர்களுக்கு சிறுதொழில் மூலம் பொருளாதா...
08/02/2023

#இராதாபுரம் சுற்றுவட்டார யாதவ நல சங்கம் சார்பாக, மதிப்பிற்குரிய திரு.இசக்கிமுத்து அவர்களுக்கு சிறுதொழில் மூலம் பொருளாதார வளர்ச்சி அடைய அவருக்கு மளிகை கடை வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது . நமது சங்க உறவுகள் மூலம் அவருக்கு Rs.27000 வழங்கப்பட்டுள்ளது.

அவருடைய
#முத்து ஸ்ரீ மினி ஸ்டோர் அமைவதற்கு காரணமாக இருந்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் இராதாபுரம் சுற்றுவட்டார யாதவ நலச் சங்கம் பெருமை கொள்கிறது.

#அன்பின் மகிழ்வில்
இராதாபுரம் சுற்று வட்டார யாதவ நல சங்கம்
பதிவு எண் 42/2020

 #ராதாபுரம் சுற்றுவட்டார யாதவ நல சங்க செயலாளர் திரு. கிருஷ்ணன் அவர்களின் மூத்த மகன் திரு மணிகண்டன் அவர்களின் திருமண விழா...
08/02/2023

#ராதாபுரம் சுற்றுவட்டார யாதவ நல சங்க செயலாளர் திரு. கிருஷ்ணன் அவர்களின் மூத்த மகன் திரு மணிகண்டன் அவர்களின் திருமண விழாவிற்கு வருகை தர வேண்டி,,

#யாதவர்களின் சமகால தலைவர் திரு.S.பொட்டல் துரை அவர்களின் இல்லத்திற்குச் சென்று திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

#திருமண அழைப்பிதழ் வழங்க ராதாபுரம் சுற்றுவட்டார யாதவ நல சங்க செயலாளர் திரு. கிருஷ்ணன் அவர்கள், துணை தலைவர் திரு.கோபால் அவர்கள்,,, தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்பிரமணி அவர்கள் மற்றும் உறுப்பினர் திரு. ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

#ராதை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 👍

 #பொங்கல் வாழ்த்துக்களுடன் சபதம் #இந்து மக்களின் எழுச்சி  PEOPLE  CELEBRATION - 2023
05/02/2023

#பொங்கல் வாழ்த்துக்களுடன் சபதம்
#இந்து மக்களின் எழுச்சி
PEOPLE
CELEBRATION - 2023

#இந்து மக்களின் மன கொந்தளிப்பு media pongal valthukal #ராதை மீடியா சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள் #இந்து மக்களின் பொங்கல் உற.....

01/04/2021
21/01/2021


18-19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒவ்வொரு தேர்தலின் போதும் 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதில் 18-19 வயதுடையோர் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக தமிழகத்தில் நடந்த சிறப்பு சுருக்க திருத்த முகாம்க ளின் போது 18-19 வயதுடைய 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதில் லட்சத்து 80 ஆயிரத்து 953 பேர் ஆண்கள். 4 லட்சத்து 16 ஆயி ரத்து 423 பேர் பெண்கள். 318 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர் இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

21/01/2021

அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்ட மன்ற தொகுதி எது?

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்ட மன்ற தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆகும். இங்கு 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர் அதேபோன்று குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி ஆகும் இங்கு 1லட்சத்து76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.

#சோழிங்கநல்லூர் #துறைமுகம்

20/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #தூத்துக்குடி 🔴

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஆண்டுதோறும் கருமேனி ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

📌 கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர்
திருச்செந்தூர் தாலுகா உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையநேரிகுளம், தாங்கைகுளம், கல்லாநேரி, புல்லாநேரி, அம்பாள் குளம் ஆகிய 5 குளங்கள் மற்றும் கருமேனிஆறு ஆகியவற்றை நம்பி சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வாழை, நெல், முருங்கை, தென்னை, பனை உள்பட பல்வேறு விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மழை காலங்களில் பலஆயிரம் கன அடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக கடலுக்கு வீணாக செல்கிறது.

📌 நிரந்தர அரசு ஆணை
இந்த தண்ணீரை உடன்குடி வட்டார பகுதியில் உள்ள 5 குளங்கள் மற்றும் கருமேனி ஆற்றுக்கு ஆண்டுதோறும் விடுவதற்கு நிரந்தரமாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் புதிதாக அனல்மின்நிலையம், ராக்கெட் ஏவுதளம் போன்றவை உருவாக உள்ளது. இதனால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆண்டுதோறும் தண்ணீர் விட வேண்டும்.

மேலும் கருமேனி ஆற்றில் தண்ணீர் வந்தால் அதில் உள்ள ஏராளமான தடுப்பு அணைகளில் தண்ணீர் தேங்கி நின்று வழிநெடுகிலும் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். எனவே, 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்க ஆண்டுதோறும் உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், மற்றும் கருமேனி ஆறு ஆகியவற்றை முழுமையாக நிரப்ப தண்ணீர் விட வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

20/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #தூத்துக்குடி 🔴

மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

⭕ தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 முத்துநகரை சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துமாலை என்ற அனுஷியா என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கணவர் கருப்பசாமியிடம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஞானேசுவரன், உதவி செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி பொறியாளர் அந்தோணிஜோசப், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

பரிந்துரை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தாழ்வான பல்வேறு பகுதியில் மழை நீர் அதிக அளவு தேங்கியது. மேலும் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ள நீர் வந்தது. இதன் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தோம். இந்த நேரத்தில் துரதிருஷ்டவசமாக முத்துமாலை என்ற அனுஷியா என்ற பெண் மின்சாரம் தாக்கி இறந்து உள்ளார்.

இதனால் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. அவரது மனைவியின் பரிசோதனை அறிக்கை பெற்ற பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிவாரண நிதி மற்றும் வேலைவாய்ப்புக்கும் பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  #திருச்செந்தூர்  #தூத்துக்குடி 🔴⭕ ஆத்தூரில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ⭕திருச்செந்தூர...
20/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #திருச்செந்தூர் #தூத்துக்குடி 🔴

⭕ ஆத்தூரில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ⭕

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆத்தூர் பேரூராட்சி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணங்களை உடனடியாக வழங்க கோரியும், ஆற்றின் கரை ஓரம் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கரைகளை மராமத்துப் பணி செய்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டவேண்டும், ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் வரை செல்லும் தார் சாலைகளை முழுவதுமாக சீர் செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர் நகர செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் குளோரியான், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற செயலாளர் பிரபு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் இனிதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் மெர்வின், ஆறுமுகநேரி நகர செயலாளர் ஆனந்தவேல் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  #நெல்லை  #தைப்பூசம் 🔴⭕ நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்; நாளை மறுநாள் நெல்ல...
20/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #நெல்லை #தைப்பூசம் 🔴

⭕ நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்; நாளை மறுநாள் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி ⭕

📌 கொடியேற்றம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 7 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’’ நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

📌 தீர்த்தவாரி
28-ந் தேதி தைப்பூசம் தினத்தன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் புகழ் பெற்ற கைலாசபுரத்தில் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலியநாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் பகல் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு தைப்பூச மண்டபத்தில் இறங்குகின்றனர். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சுவாமி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைகின்றனர்.

📌 தெப்பத்திருவிழா
29-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சியருளும், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 30-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பகுளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  #நெல்லை  #ராதாபுரம் 🔴கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் பழுது; 1,000 மெகாவாட் மின் உற்பத்த...
19/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #நெல்லை #ராதாபுரம் 🔴
கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் பழுது; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

⭕ நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு 2-வது அணு உலையில் உள்ள டர்பனில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால் அந்த உணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் பழுது சரி செய்யப்பட்டு, 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது.

950 மெகாவாட் மின் உற்பத்தி
ஏற்கனவே கடந்த மாதம் 29-ந்தேதி கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து அந்த அணு உலையில் ஏற்பட்ட பழுதினை விஞ்ஞானிகள் சரி செய்த பின்னர் கடந்த 2-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த நிலையில் 2 வாரங்களில் மீண்டும் அந்த அணு உலை பழுதடைந்துள்ளது. முதலாவது அணு உலையில் 950 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகளை அதிகாரி ஆய்வு
19/01/2021

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகளை அதிகாரி ஆய்வு

19/01/2021

🔴 Radhai TV 📺செய்திகள்🔴 #நெல்லை #ராதாபுரம் #திசையன்விளை🔴
மணிமுத்தாறு அணை 4-வது ரீச் மூலம் திசையன்விளை, இட்டமொழி பகுதியில் வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

📌 வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி, உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு முன்னுரிமை அடிப்படையில், மணிமுத்தாறு அணையின் 3, 4-வது ரீச்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்ததால், 1, 2-வது ரீச்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

3-வது ரீச் மூலமாக பாணான்குளம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கும், 4-வது ரீச் மூலமாக விஜயநாராயணம், திசையன்விளை பகுதியில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

வறண்ட குளங்கள்
மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலமும், நம்பியாற்றின் விஜயங்கால் மூலமும் விஜயநாராயணம் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தததால், அந்த குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. அந்த தண்ணீர் பட்டஞ்சேரி குளத்துக்கு செல்வதால், அந்த குளத்தில் பாதி அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது.

ஆனால் அதற்கடுத்து உள்ள விஜய அச்சம்பாடு குளம், இட்டமொழி இலங்கையாடி குளம், சுப்பிரமணியபுரம் குளம், சுவிஷேசபுரம் குளம், அந்தோணியார்புரம் குளம், நல்லம்மாள்புரம் குளம், மகாதேவன்குளம், திசையன்விளை குளம், எருமைகுளம், ஆயன்குளம் படுகை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் பெரும்பாலும் வறண்டே கிடக்கிறது.

தண்ணீர் வழங்க கோரிக்கை
திசையன்விளை, இட்டமொழி பகுதியில் போதிய பருவமழை பெய்யாததால், அங்குள்ள அனைத்து குளங்களும் தண்ணீரின்றி மைதானமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்காமல் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம் ஆயன்குளம் படுகை வரையிலான குளங்கள் நிரம்பினால், தேரிப்பகுதியில் அமைந்துள்ள புத்தன்தருவைகுளத்துக்கு தண்ணீர் செல்லும். மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்கினால் இட்டமொழி, திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வளம் செழிக்கும்.

எனவே மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம், வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

19/01/2021

நெல்லை தாமிரபரணி வெள்ளத்தில் குறுக்குத்துறை முருகன் கோவில், 100 மின்கம்பங்கள் சேதம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

19/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #நெல்லை 🔴
நெல்லை அருகே சென்னை சிறப்பு ெரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு ரெயில் நேற்று மாலை நெல்லைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து ரெயில் நிலையத்தில் இருந்து 4.20 மணி அளவில் கங்கைகொண்டாைன நோக்கி சென்றபோது என்ஜினில் இருந்து 9-வது பெட்டியில் பிரேக் கட்டை உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்தது. அது பிளாஸ்டிக் ஆக இருந்ததால் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பரபரப்பு
இதனை அறிந்ததும் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஊழியர்கள் விரைந்து சென்று ரெயிலில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். சுமார் ½ மணி நேரம் கழித்து 4.50 மணிக்கு ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை சென்ற ரெயிலில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴    🔴ஜன.19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி⭕ ஜனவரி 19-ஆம் தேத...
12/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 🔴
ஜன.19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி

⭕ ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளைத் திறக்க இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிகளை இயக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது.
இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  #நெல்லை  #திருச்செந்தூர்  #தைப்பூசம்🔴நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செ...
12/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #நெல்லை #திருச்செந்தூர் #தைப்பூசம்🔴

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் முருக பக்தர்கள்

⭕ முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறார்கள். தைப்பூசம், பொங்கல் பண்டிகை, புத்தாண்டு, வைகாசி விசாகம், மாசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழா நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு செல்வது வழக்கம்.

பாத யாத்திரை பக்தர்கள்
அதன்படி பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வரும் பக்தர்களும் குழுக்களாக திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு செல்கின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் பச்சை நிற ஆடை அணிந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர். இதனால் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் வழிநெடுகிலும் முருக பக்தர்களாகவே காட்சி அளிக்கின்றனர்.

நெல்லை பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து அவரது திருப்புகழை பாடியவாறு செல்கின்றனர். பாத யாத்திரை பக்தர்கள் ஆங்காங்கே தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் நீராடி, இளைப்பாறிய பின்னர் திருச்செந்தூருக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  #நெல்லை 🔴பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக...
12/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #நெல்லை 🔴

பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  #நெல்லை  #விஜயநாராயணம் 🔴📌 நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் தோட்டத்தில் புகுந்த சிறுத்த...
12/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 #நெல்லை #விஜயநாராயணம் 🔴
📌 நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 24 ஆடுகளை கடித்துக்கொன்றது

⭕ நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை தனது குட்டியுடன் நடமாடியதை பார்த்ததாக அப்பகுதியினர் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் வடக்கு விஜயநாராயணத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை அடித்துக் கொன்றது. இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஆனாலும் சிறுத்தை சிக்கவில்லை.

இந்த நிலையில் அந்த சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்துள்ளது. வடக்கு விஜயநாராயணம் அருகே வெங்கட்ராயபுரம் வீரனாஞ்சேரி பகுதியில் பிச்சைப்பழம் என்பவருக்கு (வயது 45) சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் சிறுத்தை புகுந்தது. அங்கு தோட்டத்தில் ஆட்டுக்கிடையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதில் 22 ஆடுகள் இறந்தன. மேலும் 10 ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தன.

📌 ஆடுகள் சாவு
இதேபோன்று வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் குட்டதட்டப்பாறை பகுதியில் புஷ்பராஜிக்கு (36) சொந்தமான ேதாட்டத்தில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை, அங்கு கயிற்றில் கட்டப்பட்டு இருந்த பசுவின் கன்றுக்குட்டியை கடித்து குதறி கொன்றது. இதில் மற்றொரு கன்றுக்குட்டியும் காயம் அடைந்தது.

மேலும் பக்கத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த 2 ஆடுகளையும் கடித்துக் கொன்றது.

நேற்று காலையில் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் தங்களது ஆடுகள், கன்றுக்குட்டி ஆகியவற்றை சிறுத்தை அடித்துக் கொன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து நெல்லை வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

📌 வனத்துறையினர் ஆய்வு
உடனே மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவுரையின்பேரில், வனச்சரக அலுவலர் கருப்பையா தலைமையில் வனவர் பிரகாஷ், வன காப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடங்களை பார்வையிட்டனர். தோட்டங்களில் பதிவான சிறுத்தையின் கால்தடங்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு தோட்டங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பரமசிவன் உள்ளிட்ட வருவாய் துறையினரும் இறந்த ஆடுகள், கன்றுக்குட்டியை பார்வையிட்டனர்.

சிறுத்தை தாக்கியதில் இறந்த ஆடுகள், கன்றுக்குட்டி ஆகியவற்றை வனத்துறை டாக்டர் மனோகரன், கால்நடைத்துறை டாக்டர் ராஜூ ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். படுகாயம் அடைந்த ஆடுகள், கன்றுக்குட்டிக்கும் சிகிச்சை அளித்தனர்.

📌 பொதுமக்கள் அச்சம்
கடந்த சில நாட்களாக வடக்கு விஜயநாராயணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சங்கனாங்குளம், திருவடநேரி, ஏழாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் தோட்டங்களில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆடுகள், கன்றுக்குட்டி போன்றவற்றை கடித்துக் கொன்றுள்ளது.

இதனால் பகல் நேரங்களிலும் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சிறுத்தை நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் முறையாக கூண்டு வைத்து அவற்றை பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴  🔴
07/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 🔴

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴    🔴
07/01/2021

🔴 Radhai TV 📺 செய்திகள் 🔴 🔴

Address

Radhapuram
627111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radhai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radhai TV:

Share


Other Media/News Companies in Radhapuram

Show All

You may also like