Dr.Prakash Murthy MBBS MD

Dr.Prakash Murthy MBBS MD General Physician,
Diabetologist,
Infectious Diseases consultant .

For Clinic Appointments - 9092404570

clinic address: West Third Street, opposite TVS showroom, Mannargudi, Thiruvarur (Dt ) PIN -614001

13/01/2025

உயர் மருந்து செலவுகளை எளிதாக நிர்வகிப்பது எப்படி ?
Buy a Health Plan & Get Online Discounts Up to 25%👇
https://tinyurl.com/3xykv89e

"Wheal and flare reaction "⭐படத்தில் நீங்கள் பார்க்கும் பாப்பவிற்கு லேசாக அரிப்பு ஏற்பட்டாலோ , சொரிந்தாலோ இவ்வாறு தடித்த...
13/01/2025

"Wheal and flare reaction "

⭐படத்தில் நீங்கள் பார்க்கும் பாப்பவிற்கு லேசாக அரிப்பு ஏற்பட்டாலோ , சொரிந்தாலோ இவ்வாறு தடித்து , சிவந்து விடுகிறது.

⭐Allergy/ ஒவ்வாமையை அதிகப் படுத்தும் eosinophils எனப்படும் அணுக்கள் இரத்தத்தில் அதிகமாக இருந்தால் இப்படி வரும்.

⭐மேலும், IgE எனப்படும் அலர்ஜி பரிசோதனை செய்து பார்த்தாலும் , அதன் அளவுகள் அதிகமாக இருக்கும்.

⭐Eosinophils அதிகமாக இருந்தால் சளி, தும்மல்,வீஸிங் மட்டுமல்ல , அரிப்பும் ஏற்படும்.

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
❌தூசி ( dust)
❌புகை ( smoke )
❌கடல் மீன், கருவாடு, நண்டு, இறால் ( sea foods)
❌நல்லெண்ணெய் ( எள்ளு)
❌கிரீம் ( cream)

13/01/2025

திருப்பூரிலிருந்து எதிர்பாராமல் வந்த அன்பளிப்பு !திருப்பூரிலிருந்து எதிர்பாராமல் வந்த அன்பளிப்பு !
Unboxing video. A feel good video to start the upcoming pongal holidays.
Stay happy. Stay blessed!
Thanks to Harris m**s for the wonderful bgm

゚viralfbreelsfypシ゚viral

12/01/2025

சர்க்கரை நோய்க்கு புதிதாக வரவுள்ள இரண்டு மருந்துகள் என்ன ? White adipose tissue, brown adipose tissue என்றால் என்ன ? அதன் அடிப்படையில் சர்க்கரை அளவையும் , உடல் எடையையும் குறைப்பது எப்படி ? இன்சுலின் அளவை அதிகரிப்பது எப்படி ? ( Final 30 seconds blast 💥💣🎇)

゚viralfbreelsfypシ゚viral

12/01/2025

Influenza card பரிசோதனைInfluenza card பரிசோதனை
"Influenza A & B"
எளிய செய்முறை விளக்கத்துடன் கூடிய பரிசோதனை விளக்கம் .
Must watch for doctors and lab technicians
゚viralfbreelsfypシ゚viral
# # #

11-1-2025புத்தாண்டில் மகிழ்ச்சியான நாள் இன்று. வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நாள் ⭐சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவிட...
11/01/2025

11-1-2025
புத்தாண்டில் மகிழ்ச்சியான நாள் இன்று. வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நாள்

⭐சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். அதில் நீரிழிவு பிரச்சனை உள்ள ஒரு நபருக்கு, குதி காலில் வெடிப்பு ஏற்பட்டு. பின் அது புண்ணாக மாறி, சலம் ஏற்பட்டு, செப்டிக் ஆகி, அதில் புழுக்கள் வளர்ந்து, பின் அவற்றை சுத்தம் செய்தது பற்றி கூறியிருந்தேன். ( படங்கள் கமென்ட் செல்தனில்)

⭐ அம்மா என்னிடம் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக , கால் புண்ணிற்காக தொடர் சிகிச்சையில் இருந்தார். இன்று பரிசோதனைக்கு வந்த போது, குதி காலில் இருந்த புண் முற்றிலும் குணமாகி, தோல் வளர்ந்து நன்றாக அந்தப்பகுதி முழுவதும் மூடி விட்டது.

⭐இனிமேல் புண்ணிற்கு எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம் என்று சொன்னதும் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி.

⭐அவரது அருகில் இருக்கும் பாப்பா தான் , தினமும் அந்த அம்மாவிற்கு ( அவரது பாட்டி) டிரெஸ்ஸிங் செய்து விடுவார். அவரது காலை அகற்றாமல் புண்ணை குணப்படுத்தியதில் அந்த பாப்பாவிற்கும் முக்கிய பங்கு உள்ளது .

⭐இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் :-

✅டயபடீஸ் ( நீரிழிவு) உள்ளவர்கள் தங்களது பாதங்களை, முகத்தைப் பராமரிப்பது போல பராமரிக்க வேண்டும்.

✅குதி காலில் வெடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

✅தினமும் இரவு உறங்கும் முன்பு, பாதங்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொள்வது நல்ல moisturiser ஆக இருக்கும்.

10/01/2025

வயசானாலும் இளமையுடன் இருப்பது எப்படி ?Love & Humour இரண்டும் இருந்தால் என்றும் இளமை தான். ゚viralfbreelsfypシ゚viral ゚viral

08/01/2025

அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் முன்னேற்றம் காணும் காப்பீட்டுத் திட்டங்கள், இந்தியாவில் ஏன் பின்தங்கியுள்ளது ?
இந்திய மக்களிடையே காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவதற்கு என்ன காரணம் ?
அதை மேம்படுத்த என்ன செய்யலாம் ?
Buy a Term Plan & Get Online Discounts Up to 10%👇
https://tinyurl.com/2p55nbzc

03/01/2025

பரிசளிப்பு நேரம் !
சில தினங்களுக்கு முன்பு கம்பு கூழ் படம் போட்டு, அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு அறிவித்திருந்தேன்.
அதற்கென்று பிரத்யேகமாக வாங்கிய எந்திரம், என்னுள் இருக்கும் சிறுவனை தட்டி எழுப்பியது 😂😂 ( என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு )
நீங்களே பாருங்க.... ゚viralfbreelsfypシ゚viral
゚viral

புத்தாண்டின் முதல் நாளிலேயே , முதல் diabetic wound dressing.❗நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில், கேக் மற்றும் மது அருந...
01/01/2025

புத்தாண்டின் முதல் நாளிலேயே , முதல் diabetic wound dressing.

❗நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில், கேக் மற்றும் மது அருந்தியதன் விளைவாக , ஏற்கனவே காலில் இருந்த புண்ணிலிருந்து இன்று காலை எழுந்தவுடன் வலி மற்றும் Bad smell வந்ததாகக் கூறினார்.

❗அவர் கூறியவாறே புண்ணிலிருந்து சலம் மற்றும் துர்நாற்றம் வந்தது. அதை சுத்தம் செய்து , மருந்து தடவி dressing செய்தேன்.

❗" நேற்று 170 இருந்த சுகர் இன்று 240 என உயர்ந்தது.ஒரே நாளில் எப்படி சார் இவ்வளவு உயரும் ? ஒரே நாளில் எப்படி சார் புண்ணில் bad smell வரும்" என்று அவர் ஆச்சர்யமாக கேட்டார் .

🍷மது குடித்தால் கிட்னி பாதிக்கும், லிவர் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால், ஆல்கஹால் சுகருக்கு எதிரி என்பது பலரும் அறியாத ஒன்று.

❌ஆல்கஹால் கணையத்தைப் பாதிக்கும் ( pancreas)
❌சர்க்கரை அளவை ஒரே நாளில் பல மடங்கு உயர்த்தும் ( High risk for diabetics)
❌காலில் புண் ஏற்பட்டால், குணமாக தாமதமாகும்.( Diabetic wound )

❗ஏற்கனவே குடி பழக்கம் உள்ளவர்கள், இந்தப் புத்தாண்டிலிருந்து குடி மற்றும் போதைப் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்கவும்.
இது வரை, குடிபழக்கம் இல்லாதவர்கள், அப்படியே இருங்கள். புதிதாக போதை பழக்கதிற்கு அடிமை ஆகாதீர்கள் !

31/12/2024

சுகர் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள இணையதளம்
https://rxguide.in/a/26136
விளம்பரங்கள் எதுவுமில்லாமல், பயனுள்ள உணவுக் குறிப்புகள், உடற்பயிற்சி செய்முறை விளக்கங்கள் உள்ள இணையதளம்.
INDIAN DIABETES RISK CALCULATOR, RETINOPATHY RISK CALCULATOR, BMI CALCULATOR, SEASONAL TIPS, DIET CHART, YOGA AND EXERCISES
゚viralfbreelsfypシ゚viral ゚viral

30/12/2024

Home theatre tour !
வீட்டிலேயே dedicated home theatre ஏற்படுத்த என்னென்ன தெரிந்துக் கொள்ள வேண்டும் ?
எந்த brand வாங்கலாம் ?
Acoustics என்றால் என்ன ?
எவ்வளவு செலவு ஆகும் ?
A-Z முழு விவரங்கள் !
Contact :- Engineer Mr.Shanmuga. Raja , Madurai 63823 55379
゚viralfbreelsfypシ゚viral ゚viral ゚viral

🏏Catches win matches என்று கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்வார்கள்.🏏1983 ODI WC கபில் தேவ் பிடித்த கேட்ச், 2023 ODI WC ரோஹித...
29/12/2024

🏏Catches win matches என்று கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்வார்கள்.

🏏1983 ODI WC கபில் தேவ் பிடித்த கேட்ச், 2023 ODI WC ரோஹித் ஷர்மாவை டிராவிஸ் ஹெட் பிடித்த கேட்ச், 2024 T20 WC SKY பிடித்த கேட்ச் , போன்றவை போட்டியின் முடிவை மாற்றக் கூடியதாக அமைந்த catches.

🏏இன்று Jaiswal தவற விட்ட catch, மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் முடிவை மட்டுமல்ல WTC இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியின் முடிவை மாற்றக் கூடியதாக அமையப் போகிறது .( கிளினிக் சென்றுவிட்டதால் இந்தக் கொடுமையைப் பார்க்கவில்லை . பார்த்தால் நொந்திருப்பேன்)

🏏91/6 என்று தடுமாறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா வை 150 க்குள் அவுட் ஆக்கியிருந்தால், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.

🏏ஆனால், இப்போது அந்த வெற்றி வாய்ப்பு சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. நாளை நன்றாக விளையாடினால் டிரா செய்யாலாம்.

🏏ரோஹித் சர்மாவுக்கு இது FAREWEL TEST ஆக இருக்கலாம்

🏏இன்னொரு பக்கம் 148 என்ற இலக்கை தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தானுடன் போராடி chase செய்து WTC இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டது.

So, it's India/ Australia vs South Africa at the WTC final !

29/12/2024

ஶ்ரீலங்கன் எருமை தயிர் எப்படி இருக்கும் ? நீங்கள் சாப்பிட்டிருக்கிங்களா ?
மாடு மேய்ப்பது ஈஸியான வேலை இல்லை 😂😂
தயிர் சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சி அடைகிறது. நன்மை செய்யும் பாக்டீரியா( probiotics) வயிற்றிற்கு கிடைக்கிறது. வயிறு புண் மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சனைகள் சரி ஆகின்றன
゚viralfbreelsfypシ゚viral ゚viral

26/12/2024

A statistical data about heart attacks in the early morning and the need for a proper term insurance https://tinyurl.com/345ky924

26/12/2024

மாஸ்க் அணிந்து சலித்து போயிற்று. புன்னகை முகத்தைப் பார்ப்பது எப்போ ?
புதிது புதிதாய் வரும் நோய் கிருமிகள் மற்றும் வைரஸ் கிருமியால் பரவும் இருமலும் , காய்ச்சலும் . தடுப்பது எப்படி ?
தர்ம சங்கடமான சூழல் !
゚viralfbreelsfypシ゚viral ゚viral

😂"அத வேற ஞாபக படுத்திட்டீங்க தம்பி. மனசெல்லாம் புண்ணா இருக்கு " இப்படித்தான் இந்த ஃபோட்டோவை நினைவு படுத்தி விட்டது கூகிள...
25/12/2024

😂"அத வேற ஞாபக படுத்திட்டீங்க தம்பி. மனசெல்லாம் புண்ணா இருக்கு "
இப்படித்தான் இந்த ஃபோட்டோவை நினைவு படுத்தி விட்டது கூகிள் மெமரிஸ் ( கல்லூரி இறுதியாண்டில் எடுத்த ஃபோட்டோ )

👉தைராய்டு , டயபடீஸ், அனீமியா, ஊட்டச் சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் முடி கொட்டினால், அதை சரி செய்ய முடியும். மீண்டும் முடி வளர வைக்க முடியும்.

👉தாய் மாமா , தாத்தா மரபு வழி வந்த வழுக்கைக்கு எந்த மாத்திரை மருந்தும், கூந்தல் தைலமும் வேலை செய்யாது. "வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை " தான் 😂😂 ( நம்ம இந்த வகையரா)

🫢(அதற்கென்று ஒரு மாத்திரை உள்ளது. ஆனால் அது மற்றோரு முக்கியமான விஷயத்தை பதம் பார்த்து விடும். அதனால் அதன் பக்கமே போகவில்லை)🫢

🤡மீதம் இருக்கும் ஒரே தீர்வு hair patches/ hair weaving/ hair transplant தான். Hair transplant செய்வதற்கு சென்னை அல்லது கோவை வரை செல்ல வேண்டும் .

😎கிளினிக்கிற்கு விடுமுறை விட்டுட்டு செல்லும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மனம் வரவில்லை. அப்புறம் பார்ப்போம்.
( என் அருகில் இருப்பவர் Dr. பிரபு MD, DM NEUROLOGY)

Address

WEST THIRD Street
Mannargudi
614001

Telephone

9092404570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Prakash Murthy MBBS MD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share