infoV

infoV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from infoV, News & Media Website, Mannargudi.

16/12/2022
10/10/2022

தூக்கமின்றி போகிறது. வார்த்தைகள், நடவடிக்கையில் கவனமாக இருங்கள் - கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை

24/08/2022

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இன்று( புதன்கிழமை) காலை 6 மணி வரை பதிவான மழை அளவின்படி மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் 11 செண்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக திருவாரூரில் ஒன்றரை சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி இருக்கிறது.

04/08/2022

“வைகோ நாட்டிலேயே மிகவும் வலிமையாக பேச்சாற்றல் உள்ள தலைவர். அதை இங்குள்ள இளம் உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் வைகோவின் கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவு என்பதால்தான் அவருக்கு 2 நிமிடம் மட்டும் பேச ஒதுக்க முடிந்தது.-வெங்கையா நாயுடு பாராட்டு/வருத்தம்

17/07/2022

*கர்நாடகா*

*கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 15 ஆயிரத்து 836 அடியாக உள்ளது.*

17.07.2022 இன்று காலை 6 மணி நிலவரப்படி

*கே ஆர் எஸ் அணை*
முழு கொள்ளளவு : 124.80 அடி
நீர் இருப்பு : 123.50 அடி
நீர் வரத்து : 86,917 கன அடி
நீர் வெளியேற்றம் : 83,836 கன அடி

*கபினி அணை*
முழு கொள்ளளவு : 84.00 அடி
நீர் இருப்பு : 82.56 அடி
நீர் வரத்து : 34,561 கன அடி
நீர் வெளியேற்றம் : 32,000 கன அடி

இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றம் *ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 836 கன அடி*யாக உள்ளது.

கரண்ட் எப்போ போகும்னு சொல்றதுக்கு பதிலா...எப்போ  இருக்கும்னு நேரம் சொல்லிட்டா நல்லாருக்கும்லடா
16/07/2022

கரண்ட் எப்போ போகும்னு சொல்றதுக்கு பதிலா...எப்போ இருக்கும்னு நேரம் சொல்லிட்டா நல்லாருக்கும்லடா

15/07/2022

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் ஆணித்தெப்பத் திருவிழா: #குதிரை வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா....

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான  "ஏா்பஸ் பெலுகா" விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தது.இது தி...
12/07/2022

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான "ஏா்பஸ் பெலுகா" விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தது.

இது திமிங்கலம் வடிவத்தில் காணப்படும்.

Eps & Ops இரண்டு தரப்பை உற்று நோக்கி கொண்டிருக்கும் நமக்கு....  3வதா ஒரு வாய்ப்பு.  Courtடையும் Nokiya...11.07.2022 9amm...
10/07/2022

Eps & Ops இரண்டு தரப்பை உற்று நோக்கி கொண்டிருக்கும் நமக்கு.... 3வதா ஒரு வாய்ப்பு. Courtடையும் Nokiya...
11.07.2022 9ammmmmm

10/07/2022

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்...

 #சிங்கம் 1, 2, 3 பார்த்தாச்சு... #சிறுத்தை பார்த்தாச்சு.. பார்த்தாச்சு... #புலி (பார்த்தா அவ்வளவுதான் என்று சொன்னதால் த...
09/07/2022

#சிங்கம் 1, 2, 3 பார்த்தாச்சு...
#சிறுத்தை பார்த்தாச்சு.. பார்த்தாச்சு...
#புலி (பார்த்தா அவ்வளவுதான் என்று சொன்னதால் தப்பிச்சாச்சு)
#யானை பாத்தாச்சு... பாத்தாச்சு...

#பன்னிக்குட்டி பாத்துட்டா போச்சு...

08/07/2022

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஆர்.காமராஜ் MLA வீட்டில் மாநில லஞ்ச ஒழிப்பு ஊழல் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார்குடி வடக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர்.அதனைத் தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டின் வெளியில் தகவல் அறிந்து வந்த அதிமுகவினர் போலீசாரை கண்டித்தும், திமுக பொய் வழக்கு போடுவதாக கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மேலும் இவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 49 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்த லஞ்ச ஒழிப்பு துறையின் இந்த ரெய்டு நடைபெற்று வரும் இடகளின் முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

07/07/2022

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
தனி நபர்களை கொண்ட குடும்பத்திற்குள் பிரச்சனை என்றால் கூட குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான #அதிமுகவின் பிரச்சனையில் தலையிட நீதிமன்றம் மறுத்து 'உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று ஒதுங்கி நிற்கிறது. எனவே நடுநிலையாளர்களும் மாற்றுக் கட்சியினரும் இதில் வேடிக்கை பார்த்து நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துக்களை பரிமாறிக் கொள்வது மட்டுமே நமக்குள்ள உரிமை.

07/07/2022

அதிமுக -வின் தற்போதைய தலைமை தேர்வு போட்டியை அழகாக, புரியும்படி, நாகரீகமாக பதிவு செய்துள்ள சிறுவர்களின் குறும்படம்.

07/07/2022

புகழ்ந்து பேசியதால் கிடைத்ததா? இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். நாடாளுமன்ற மேல் சபையில் 'இசைக்குராஜா' தேர்வு செய்யப்படுவதில் என்ன தவறு இருக்கிறது...?
மேல்சபை விதிமுறைப்படி தகுதியான நபர்தானே இளையராஜா!
இதுவரை தேர்வு செய்யப்பட்ட மற்றவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா? அவர்களது தகுதியும் தான் அறிவோமா?
Ilayaraja MP

07/07/2022

07.07.2022 Mannargudi R. Vijayakumar
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இரண்டாம் தினமான நேற்று இரவு தங்க சூரிய பிரபை வாகனத்தில் வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா வந்தார்.
ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் தென்கரையில் உள்ள மண்டபத்தில் ராஜகோபாலசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.9894441700
அதனை தொடர்ந்து தீட்சிதர்கள் வேத பாராயணம் பாடல்களை பாடினர். பின்னர் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
07.07.2022 Mannargudi rajagopalan Suryabrabai

06/07/2022

06.07.2022 10 am R VIJAYAKUMAR. Mannargudi
மன்னார்குடியில் உள்ள ஆல், அரசு, வேம்பு விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடத்தப்பட்டது.
மன்னார்குடி யானை விழுந்தான் குளம் என்று அழைக்கப்படும் கஜேந்திர மோட்சம் குளத்தின் வடகரையில் ஆல், அரசு, வேம்பு ஆகிய மரங்களுக்கு நடு நாயகமாக அமர்ந்து அருள் பாலிக்கும் விநாயகர் பெருமான் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை உடன் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது.
இன்று காலை இரண்டாவது கால யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூர்ணாகதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடத்தப்பட்டது.
பின்னர் கோவிலின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சன்னதியில் அருள்பாளிக்கும் விநாயகர் பெருமானுக்கு புனித கடத்திலிருந்து நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து புதிய பட்டு வஸ்திரம், மாலைகள் அணிவித்து தீபம் காட்டப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு ஆள் அரசு வேம்பு விநாயகரை தரிசனம் செய்தனர்.
06-07-2022 Mannargudi AL Arasu vemvu vinayagar templ kumbabishegam
9894441700

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 100/100 மதிப்பெண் எடுத்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி துர்க்காவை ம...
25/06/2022

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 100/100 மதிப்பெண் எடுத்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி துர்க்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி புத்தகத்தினை பரிசாக வழங்கினார்.

25/06/2022

இனிய துவக்கம் infoV
இணைந்திருங்கள் நம் பகுதி செய்திகளை/நமக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள...

Address

Mannargudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when infoV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Mannargudi

Show All

You may also like