kallakudi kalakkal

kallakudi kalakkal Mani.P

07/12/2023
12/08/2023
*🙏மக்களின் குரல்🙏*காலை வணக்கம் குழுவினர்களுக்கும் சார்ந்தோர்களுக்கும் பொது மக்களுக்கும் ....நேற்று நடந்த கருத்து கேட்பு ...
20/07/2023

*🙏மக்களின் குரல்🙏*காலை வணக்கம் குழுவினர்களுக்கும் சார்ந்தோர்களுக்கும் பொது மக்களுக்கும் ....நேற்று நடந்த கருத்து கேட்பு
கூட்டத்தில் சுரங்க விரிவாக்கம் தேவையா தேவையில்லையா என்ற கருத்து முன் வைக்க பட்டது. ஆம் என்பவர்கள் 90 பேர் வேண்டாம் என்பவர்கள் 10 பேர். ஆம் என்பவர்கள் ஆதரவு அதிகம் இருந்ததால் சுரங்கம் விரிவாக்கம் தேவை தான் எனும் மமதையோடு குழுவை விட்டு வெளியேறியவர்களுக்கும் ஆம் என்பவர்களுக்கும் ஒரே ஒரு கருத்தை பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். இந்த வெற்றி தற்காலிகமானது தான் என்பதை மட்டும் ஆணிதரமாக பதிவிடுகிறேன். பொது மக்களாகிய நாங்கள் முறையாக அனுமதி பெற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்த இருக்கிறோம். அது சமயம் சுரங்க விரிவாக்கம் வேண்டாமென 90 பேரும் வேண்டுமென ஒரு நபரும் சொல்வார்கள். அரசு உயர் அதிகாரிகளின் உத்ததரவிற்கு ஏற்ப கல்லக்குடியிலும் வடுகர்பேட்டையிலும் பொது இடத்தில் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்பதை உறுதியுடன் பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன்.நன்றி. குழுவிலிருந்து விலகியவர்களை பற்றி கவலை கொள்ளாது தன் கடமை பணி செய்து கிடப்போம் என கூறி அனைத்தையும் கடப்போம்...நான் பதிவு செய்ய வேண்டிய கருத்தை கூட்டத்தில் நிராகரிக்கபட்ட கருத்தை இன்று குழுவில் பதிவிடுகிறேள்.

குறிப்பு :வரும் திங்கள் காலை 9.30மணியளவில் கல்க்குடி பஸ் நிலையத்திலிருந்து பத்து பேருந்துகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு தர பொது மக்களுடன் சமூக ஆர்வலர்களும் செல்ல இருப்பதால் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பணிகிறேன்...

*🙏மக்களின் குரல்🙏*19-07-2023 காலை 11 மணி அளவில் கல்லக்குடி பெரியார் சமத்துவபுரம் எதிரில் உள்ள செல்வி மஹாலில்.டால்மியா சி...
20/07/2023

*🙏மக்களின் குரல்🙏*19-07-2023 காலை 11 மணி அளவில் கல்லக்குடி பெரியார் சமத்துவபுரம் எதிரில் உள்ள செல்வி மஹாலில்.
டால்மியா சிமெண்ட் ஆலையின் சுரங்க விரிவாக்கத்திற்கு பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது..

கல்லக்குடி பொதுமக்களின் சார்பில் நானும் கலந்து கொண்டு என்னுடைய கருத்தினை பதிவு செய்தேன்....

டால்மியா சிமெண்ட் ஆலையினால் இந்த மக்களுக்கும் இந்த மண்ணிற்கும் வளர்ச்சி அடைந்துள்ளதா.....?
இந்த மண்ணினாலும்.
மக்களினாலும் ஆலை வளர்ச்சி அடைந்துள்ளதா....?

ஒரே ஒரு பதிவை மட்டும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்...

இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் இடம் தனியார் இடம்...
டால்மியா சிமெண்ட் ஆலை 1939 ல் இந்த ஊருக்கு வந்தது.
கிட்டத்தட்ட 84 ஆம் ஆண்டுகள் ஆகியும்.
டால்மியா சிமெண்ட் ஆலையின் சார்பில் ஒரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு சொந்தமாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த இடமில்லை..
சமுதாய கூடம் இல்லை...
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு டால்மியா சிமெண்ட் ஆலையின் மூலம் ஒரு திருமண மண்டபம் இல்லை.....!
டால்மியா மக்கள் மன்றம் வைத்துள்ளார்கள் ஆனால் அது நிரந்தர பணியாளர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு மட்டுமே அதில் இடம் கிடைக்கும்....
அரசின் சார்பில் ஒரு விளையாட்டு திடல் உண்டா....?
அரசு மருத்துவமனை உண்டா.....?
இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு அரசு பள்ளிக்கூடம் உண்டா சிமெண்ட் ஆலையின் பள்ளிக்கூடம் டால்மியா மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியே..,..

இதுதான் இந்த பகுதி மக்களுக்கு வளர்ச்சியா....?

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு 5000 பேர் வேலை செய்த டால்மியா சிமெண்ட்ஆலை
இன்றைய தினம் 240
தொழிலாளர்களை வைத்துக்கொண்டு சிமெண்ட் ஆலை நடைபெற்று வருகிறது.

1939இல் கல்லக்குடியில் ஆரம்பித்த டால்மியா சிமெண்ட் நிறுவனம் இன்றைக்கு 27 கம்பெனிகளாக உலகம் முழுவதும் பரவி உள்ளது...
கல்லக்குடி மக்கள் வேலை தேடி வெளி மாவட்டத்திற்கும் வெளி மாநிலத்திற்கும் செல்கின்றனர்.
ஆனால் வெளி மாநிலத் தவர்களை இங்கு பணியில் அமர்த்தி வேலை கொடுக்கும் நிலை உள்ளது உள்ளூர் காரர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது....

இந்தப் பகுதியில் படித்த இளைஞர்கள் ஏராளம் உள்ளனர்....!

இந்தப் பகுதி மக்கள் அரசை நம்பி இருப்பதை விட டால்மியா சிமெண்ட் ஆலையை நம்பித்தான் உள்ளனர்.

ஏன் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இந்த நிர்வாகம் கொடுக்க கூடாது....

கடந்த காலங்களில் கல்லக்குடி... பழங்காநத்தம்... கோவண்டா குறிச்சி... வடுகர் பேட்டை.... உள்ளிட்டவர்கள் அதிகமான பேர் ஆலையினால் வேலை கிடைத்து பயனடைந்து வந்தனர்.,....
தற்போது மீண்டும் அந்த நிலை வேண்டும் இந்த பகுதியில் வசிக்கும் ஆயிரம் பேர்களுக்காவது நிரந்தர பணி கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

1960 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியில் பிறந்தவர்களை கணக்கிட்டால் பிறப்பு பதிவில் பெரும்பான்மை யானோர் டால்மியா சிமெண்ட் மருத்துவமனையில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்....
அதையும் இந்த நேரத்திலே நினைவு கூறுகிறோம்..
ஆனால் 1990க்கு பிறகு பொதுமக்களுக்கு சுத்தமாக மருத்துவம் பார்ப்பதே கிடையாது கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவம் பார்ப்பது அரிதாகிவிட்டது.....!

டால்மியா சிமெண்ட் ஆலையின் எதிர்ப்பாளர்கள் என்பவர்களையும் அழைத்து என்னவென்று கேளுங்கள்....
ஆலையில் வேலை செய்பவர்களை வரவழைத்து ஆதரவு நிலை எடுக்கும் போது.
எதிர்ப்பாளர்களை அழைத்து பேசுவதில் என்ன தயக்கம்.....

அவர்கள் உங்களிடம் என்ன கேட்டு விடப் போகிறார்கள் வேலை வாய்ப்பு தான் கேட்பார்கள்......!
வேலைவாய்ப்பை உங்களிடம் கேட்காமல் யாரிடம் கேட்க முடியும்....!

கில்லனிலிருந்து வெளியேறும் நச்சு புகை மாற்ற நடவடிக்கை எடுங்கள்...!

கடந்த பத்து வருடங்களுக்குள்ளாக வந்திருக்கக்கூடிய டால்மியா சிமெண்ட் ஆலையின் உயர் அதிகாரிகள் கடந்த காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி டால்மியா சிமெண்ட் என்ன செய்தார்கள் என்பதை உற்றுப் பாருங்கள்...

மக்களுக்கான பணியை செய்யுங்கள்..

மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு குறை தீர்க்கும் நாள் நடத்துவது போல...

காவல்துறையின் சார்பில் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாள் நடத்துவது போல....

டால்மியா சிமெண்ட் இந்த பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதை தீர்ப்பதற்காக ஏன் குறை தீர்க்கும் முகாம் நடத்தக் கூடாது.....!

இது போல் நடத்தி பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுங்கள்...!

நீங்களும் வாழ்வாங்கு வாழுங்கள்......
பொதுமக்களையும்வாழவைத்து வாழுங்கள்...

சுரங்கத்தை ஒரு அடி கூட ஆள படுத்தாதீர்கள்...
நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்திடுங்கள்....!

எனது கருத்தை பதிவு செய்த வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி...!

13/07/2023
25/05/2023

🍒🌿🍒🌿🐘🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒
🇮🇳Made in India 2023🇮🇳
*🌹 #தானங்களும்_அதன்_பலன்களும்..🌹

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

* #மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.*

* #அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.*

* #அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.*

* #ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.*

* #எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.*

* #காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும்.* *குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.*

* #காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.*
*தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.*

* #குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.*

* #தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.*

* #நெய் தானம் – வீடுபேறு* *அடையலாம்-தேவதா அனுக்ரஹம்*

* #தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.*

* #கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன* *பயநிவர்த்தி*

* #பால் தானம் –* *சவுபாக்கியம்*

* #பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர* *அபிவிருத்தி*

* #தயிர் சாதம் / பால்* *சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.*

* #தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.*

* #வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.*

* #சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்*

* #பூமி தானம் – இகபரசுகங்கள்*

* #வஸ்த்ர தானம்* *(துணி) – சகல* *ரோக நிவர்த்தி*

* #கோ தானம்* *(பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.*

* #திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்*

* #குல தானம் (வெல்லம்) – குல* *அபிவிருத்தி – துக்கநிவர்த்தி*

* #சந்தனக்கட்டை* *தானம் – புகழ்*

* #விதை தானம் –* *வம்ச விருத்தியை* *தரும்*

* #மாங்கல்ய சரடு* *தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.*

* #பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.*

* #தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும்.* *பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.*

* #தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.*

🌺 *பூரணநலன் உண்டாக்கும்.* *நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.*
*தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.*

🌺 *அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.*

*அத்தகைய தானங்கள் பல வகைப்படும்.*
🌺 * #கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள்* *என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்* *என்பதைத் தெரிந்து கொள்வோம்.*

🌹*அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.*

🌹*கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.*

🌹*பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம்* *வைகுண்ட வாசம் உண்டு.*

🌹 *குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.*

🌹*தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.*

🌹*வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.*

🌹*ஆலயத்துக்கு யானை தானம் –* *இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.*

🌹 *குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.*

🌹*நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –* *வாயுலோகத்தில் வாழ்வார்.*

🌹 *தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.*

🌹 *பயன் கருதாது தானம் – மரணம்* *உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.*

🌹*பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.*

🌹 *தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் –* *நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.*

🌹*சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.*

🌹 *தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.*

🌹 *நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.*

🌹 *தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*

💐 *தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.*

🇮🇳Made in India 2023🇮🇳

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

12/05/2023

🇮🇳Made in India 2023🇮🇳(12-05-2023*கல்லக்குடி வனத்து சின்னப்பர் ஆலயம் எதிரில்) கல்லக்குடி தழிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த காணொளிபதிவு...உயர் மின்னழுத்தம் கொண்ட மின்கம்பிகள்மீது காற்று பலமாக வீசும் போதுதெல்லாம் அடர்ந்த மரக்கிளைகள் அதிக பலத்தோடு உராய்வதால் தீப்பொறிகள் ஏற்படுகின்றது.மேலும் மரம் முறிந்துவிழும் நிலை ஏற்பட்டால் மின் கம்பங்கள் சேதமடையும் ஆபத்து உள்ளது.அப்பகுதியில் மக்கள் குடியிருப்பு உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுத்து சீரமைக்குமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..🙏🙏🙏

12/05/2023

*🇮🇳Made in India 2023🇮🇳 சற்று முன்(12-05-2023)கல்லக்குடி சுங்கவரி (டோல்பிளாசா )வசூல் மையத்தில் கனரக வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து உடனடியாக தீயணைப்பு வண்டி வந்து தீயை அனைத்தது. இருந்தபோதும் கனரக வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது அந்த ஏரியா முழுவதும் புகைமண்டலமாக கட்சி அளித்தது*

*கல்லக்குடியில் DMK IT wing நடத்தும் கிரிக்கெட் திருவிழா மழைக்கு இடையிலும் நேற்றைய தினம் இனிதாக நடைபெற்றது**இன்றைய தினம்...
12/05/2023

*கல்லக்குடியில் DMK IT wing நடத்தும் கிரிக்கெட் திருவிழா மழைக்கு இடையிலும் நேற்றைய தினம் இனிதாக நடைபெற்றது*

*இன்றைய தினம் புதிய அணிகள் இணையலாம் என விழா குழுவினர் அறிவித்து உள்ளனர்**🇮🇳Made in India 2023🇮🇳அணைவரும் வருக!! ஆதரவு தருக!!*🙏🙏🇮🇳Made in India 2023🇮🇳

திருச்சிமலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி🙏
18/04/2023

திருச்சிமலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி🙏

18/04/2023

*🇮🇳Made in India 2023🇮🇳
*✶⊶⊷⊶⊷❍ ✍️ ❍⊶⊷⊶⊷✶*

*🔹🔸துபாய் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.*

*✍️இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:*

*✍️துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் இமாம் காசீம் (43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த சலியா குண்டு மகன் குடு (எ) முகமது ரபிக்(49) ஆகிய இருவரும் கடந்த 15ம்தேதி அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.*

*✍️உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை துரித நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.*

*✍️உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.*
🇮🇳Made in India 2023🇮🇳
*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

18/04/2023

*_🇮🇳Made in India 2023🇮🇳

*_✍️ 18, Tuesday, April.,2023_*

*🔹🔸மதியம் 2 மணிவரை மாநிலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சில....🔸🔹*

*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️*

*📌📍📌சென்னை: நெகிழி பைகளில் சூடான உணவுகளை விற்கும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*

✍️பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌சென்னையின் பிரதான பகுதியில் தனியார் வசம் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான 3.54 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.*

✍️3.54 எக்கர் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்குரிய வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு*

✍️ மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு விதிகளை திருத்தி அரசு வேலை வழங்க நடவடிக்கை உள்ளிட்ட சலுகைகள் சட்ட சபையில் முதல்-அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌கிளம்பிட்டீங்களா... மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இன்று ஒரு நாள் இலவசம்!*

✍️உலக பாரம்பரிய தினத்தையொட்டி இன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று ஒருநாள் இலவசம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது

*🏵️❀••┈┈•┈┈••❀🏵️*

*📌📍📌அதிமுக செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

✍️சென்னை, சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்*

✍️காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு*

✍️ தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை சர்வதேச அலை சறுக்கு போட்டி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌சென்னை: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.*

✍️வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்*

✍️ மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை*

✍️ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி - பொதுமக்கள் அதிர்ச்சி..!*

✍️வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், குறட்டை விட்டு தூங்கிய அதிகாரியால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌பொதிகை ரெயில் மீது கல்வீச்சு; 2 பெண்கள் படுகாயம்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு*

✍️ திருமங்கலம் அருகே தென்காசி செல்லும் பொதிகை ெரயில் மீது கல்வீச்சு நடந்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை -சென்னை மாநகராட்சி அறிவிப்பு*

✍️ 2023-24-ம் நிதியாண்டின் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌கும்பகோணத்தில் அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

✍️ ஓட்டுனர் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌மதுரை: மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஏப்ரல்.20 ல் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

✍️ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மதுரை சிறு, குறு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌நெல்லையில் எல்லா காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை முறையாக வைக்க எஸ்.பி சிலம்பரசன் அறிவுரை வழங்கினார்.*

✍️நிலையில் திருடு போன 118 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தபின் எஸ்.பி சிலம்பரசன் பேட்டியளித்துள்ளார்.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.*

✍️ பாலசரோஜா ஆலையில் உள்ள அறையில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது.

*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

*📌📍📌சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*

✍️இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என ஆய்வு மையம் தகவல் தெரிவித்த நிலையில், ஏப்ரல்.20, 21, 22 ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது
🇮🇳Made in India 2023🇮🇳
*🏵️❀••┈┈••┈┈••❀🏵️*

🇮🇳Made in India 2023🇮🇳
18/04/2023

🇮🇳Made in India 2023🇮🇳

18/04/2023

.

🇮🇳Made in India 2023🇮🇳 *ஓலைக் குடிசையானாலும் குடும்பமாய் வாழப்பழகுங்கள்...!!*

*என்னதான் சம்பாதித்தாலும் பெற்றோரோடு வாழப்பழகுங்கள்...!!*

*இளமையின் வலிமையே இருந்தாலும் விட்டுக்கொடுக்கப் பழகுங்கள்..!!*

*ஏனெனில், உங்கள் குடும்பத்தை தவிர,*
*இந்த உலகில் எதையும் நீங்கள் பெரிதாய் சம்பாதித்து விடப் போவதில்லை...!!*

*உங்களிடம் இருக்கும் தனிப்பெரும் சக்திவாய்ந்த சொத்து உங்கள் மனம்தான். அதைச் சிறப்பாக பயிற்றுவித்தால், ஏராளமான செல்வத்தை அதனால் உருவாக்க முடியும்..!!*
🇮🇳Made in India 2023🇮🇳
*இனிய மாலை வணக்கம்* 🙏🏼

🌹🌹

🇮🇳Made in India 2023🇮🇳
01/03/2023

🇮🇳Made in India 2023🇮🇳

நேரலை

Address

Chithambaram Salai, Kallakudi
Lalgudi
621652

Telephone

+919095299876

Website

Alerts

Be the first to know and let us send you an email when kallakudi kalakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kallakudi kalakkal:

Videos

Share


Other Lalgudi media companies

Show All