Keelakarai Times News page

Keelakarai Times  News page www.keelakaraitimes.com

விரல் நுனியில் உள்ளூர் செய்திகள்

25/04/2024

இராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரை அருகே

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹனி மஹால் அருகே சரக்கு வாகனம் அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது விபத்தில் காயமடைந்தவரை மீட்கும் பணியில் கீழக்கரை ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் கீழக்கரை இரத்த உறவுகள் மற்றும் அங்கிருந்த மக்கள்

கடல் அட்டை பதுக்கல்: கீழக்கரையில் 2 வது முறை சிக்கிய இரட்டையர்கள்இலங்கைக்கு கடத்துவதற்காக  கீழக்கரையில் வீட்டில் மூடையில...
21/04/2024

கடல் அட்டை பதுக்கல்: கீழக்கரையில் 2 வது முறை சிக்கிய இரட்டையர்கள்

இலங்கைக்கு கடத்துவதற்காக கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 1 கோடி மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக இரட்டையரை போலீசார் கைது செய்தனர்.

கீழக்கரை காவல்துறை எஸ்ஐ கோட்டைச்சாமி, முத்துச்செல்வம் போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் இன்று கீழக்கரையில் ஒரு வீட்டில் இருந்த மூடைகளை சோதனை செய்தனர். அதில் நன்கு பதப்படுத்திய கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றிய 35 மூடைகளில் தலா 20 கிலோ வீதம் 720 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. ரூ.1 கோடி மதிப்பிலான 720 கிலோ கடல் அட்டைகளை கீழக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் சேகரித்த கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக முஹமது அசாருதீன், முஹமது நஸ்ருதீனை கைது செய்தனர். அம்புலன்ஸ் ஓட்டுநர்களான இந்த இரட்டையர் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் பிடிபட்டுள்ளனர் .

13/04/2024

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாகூர் ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாகூர் ஹனிபா அவர்களின் மகனார் நவ்ஷாத் அவர்கள்

13/04/2024

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாகூர் ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில் இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீத் அவர்கள் …

13/04/2024

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாகூர் ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில் தேரிழந்தூர் தாஜூதீன்..

13/04/2024
12/04/2024

இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் போதை கும்பலுக்கு எதிராக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் களமிறங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் .. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுமக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஈகை பெருநாளை முன்னிட்டு உற்சாகத்துடன் நண்பர்கள்..கீழக்கரைடைம்ஸ் சார்பில் அனைவருக்கும்...
11/04/2024

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஈகை பெருநாளை முன்னிட்டு உற்சாகத்துடன் நண்பர்கள்..

கீழக்கரைடைம்ஸ் சார்பில் அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈகைப் பெருநாளையோட்டி துபாயில் இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை சேர்ந்த நண்பர்கள் சந்திப்பு..
10/04/2024

ஈகைப் பெருநாளையோட்டி துபாயில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த நண்பர்கள் சந்திப்பு..

மீண்டும் வேண்டு வாக்குச்சீட்டு பதிவு முறை: நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுகீழக்கரையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி அரசியல்...
04/03/2024

மீண்டும் வேண்டு வாக்குச்சீட்டு பதிவு முறை: நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

கீழக்கரையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி அரசியல் பொதுக்கூட்டம் கீழக்கரையில் நேற்றிரவு நடந்தது.
தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். கட்சியின் நிறுவனரும், நடிகருமான் மனசூர் அலி கான் பேசினார். அவர் பேசுகையில்,
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை விலக்கிக் கொண்டு வாக்குச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அக்கட்சி தொண்டர்கள் மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்றக்கோரும் பதாகைகள் ஏந்தி பொதுக்கூட்ட முடிவில் கோஷங்கள் எழுப்பினர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பாடகர் பகவதி ரவி தலைமயில் துபாயில் உலக சாதனை படைத்த தமிழக பாடகர்கள். ஏசியா புக்...
01/03/2024

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பாடகர் பகவதி ரவி தலைமயில் துபாயில் உலக சாதனை படைத்த தமிழக பாடகர்கள். ஏசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றனர்

இடைவிடாமல் 24 மணி நேரம் மேடையில் திரை இசை பாடல்கள். .சிறப்பு விருந்தினர் ஏஆர் ரஹ்மான் சகோதரி முன்னிலையில் பாடினர்

உலக சாதனை படைத்த கீழக்கரை பள்ளி மாணவர்கள்கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை 24.02.2024 அன்று இஸ்லாமி...
29/02/2024

உலக சாதனை படைத்த கீழக்கரை பள்ளி மாணவர்கள்

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை 24.02.2024 அன்று இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் கண்ணை கட்டிக்கொண்டு பல் வேறு நிறங்களை துள்ளியமாக அடையாளம் காண்பித்து அசத்தினர்.
ஒரே நேரத்தில் 84 மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு பத்து வண்ணங்களை துரிதமாக அடையாளம் காண்பித்தது உலக அளவில் இதுவே முதல் முறையாகும். தமிழகத்தை சேர்ந்த கலாம் உலக சாதனைகள் அமைப்பு உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் சான்றிதழ்களும் மெடலும் வழங்கி கவுரவித்தனர். சாதனை மாணவர்களையும் அவர்களுக்கு சிறப்புபயிற்சி அளித்த சென்னையை சேர்ந்த ஸ்வப்னா மாஸ்ட்டர் மைண்ட் அகாடமி நிறுவனர் திருமதி ஸ்வப்னா குழுவினர் மற்றும் உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தாளாளர் அவர்களை பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

Address

Kilakarai

Alerts

Be the first to know and let us send you an email when Keelakarai Times News page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Keelakarai Times News page:

Videos

Share


Other News & Media Websites in Kilakarai

Show All