VPM TMMK NORTH ITwing

VPM TMMK NORTH ITwing "தமுமுக" எங்கள் இயக்கம்,
"மமக' எங்கள் அதிகாரம்,
"அல்லாஹு அக்பர்" எங்கள் மூச்சி...

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்டமன்ற  தொகுதி மயிலம் ஒன்றியத்தில் மமக M. முஸ்தபா அவர்களின் தலைமையில் மனிதநேய மக்கள...
22/04/2024

விழுப்புரம் வடக்கு மாவட்டம்
மயிலம் சட்டமன்ற தொகுதி மயிலம் ஒன்றியத்தில் மமக M. முஸ்தபா அவர்களின் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் களப்பணியாம் முதல் பணி அதிலே உன்னை அர்ப்பணி என்பதற்கு இணங்க களப்பணியாற்றினர்


#தரணிவேந்தன்4ஆரணி

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதி மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்  Dr.S.சையத் உஸ்மான் அவர்கள் மற...
19/04/2024

விழுப்புரம் வடக்கு மாவட்டம்
செஞ்சி தொகுதி
மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் Dr.S.சையத் உஸ்மான் அவர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் K.S.M.மொக்தியார் மஸ்தான் அவர்கள் ஆய்வு செய்தனர். இதில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் களப்பணியாம் முதல் பணி அதிலே உன்னை அர்ப்பணி என்பதற்கு இணங்க களப்பணியாற்றினர்


#தரணிவேந்தன்4ஆரணி

18/04/2024

ஜனநாயகத்தை காக்க உறுதி ஏற்போம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச்
ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

ஏப்ரல் 19 அன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கு இடையில் நடைபெறும் அறப்போராகும்.

பன்முக சமூகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய திருநாட்டின் அமைதியை கடந்த பத்து ஆண்டுகள் சீர்குலைத்து, பாசிச பாஜக ஆட்சி செய்தது என்றால் அது மிகையாகாது.

நம் முன்னோர் வழங்கிய சுதந்திர இந்தியாவின் பன்முக மதசார்பற்ற கொள்கையை அரசியல் சட்ட சாசன முகவுரையில், இந்தியத் திருநாட்டில் நிலைத்து நிற்க வேண்டுமாயின், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்

வயது தளர்ந்த முதியவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ரயில் பயண கட்டணச் சலுகையை பறித்த ஆட்சி மோடி ஆட்சி.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்க காரணமான ஆட்சி பாஜக ஆட்சி.

பெட்ரோல் டீசல் விலையை விண்ணை முட்டவைத்து, மக்களின் துயரை வேடிக்கை பார்த்த ஆட்சி மோடி ஆட்சி.

அக்னிபாத் என்னும் தற்காலிக இராணுவ வீர்களை பணி அமர்த்துவோம் என்று கோடிக் கணக்கான இளைஞர்களின் மத்தியில் அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய ஆட்சி இந்த பாஜக ஆட்சி.

வங்கியில் கணக்கு இல்லாத அனைவரும் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு துவங்க வேண்டும் என கூறி, பாமர மக்களின் வங்கி கணக்குகளில் குறைந்த பட்சம் வைப்புத் தொகை இல்லை எனக்கூறி, கிட்ட தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்து வரும் ஆட்சி பாஜக ஆட்சி.

இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கி, வடகிழக்கு இந்தியாவை பற்றி எரிய வைத்து, அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகிய போதும், அந்த துயரில் குளிர் காய்ந்த ஆட்சி, இந்த பாஜக ஆட்சி.

குறைந்த பட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக மாற்ற கோரி்ய விவசாயிகளை, டெல்லியின் வீதிகளில் போராட வைத்து, அவர்கள் மீது காவல்துறை தாக்குதல்களை நடத்திய ஆட்சி, இந்த பாஜக ஆட்சி.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை,
சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய அரசின் முகமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவற்றைத் தனது வேட்டை நாய்களாக மாற்றி, நவீன முறையில், "தேர்தல் பத்திரங்களை" வைத்து, சட்டப்பூர்வ கொள்ளை அடித்த ஆட்சி பாஜக ஆட்சி.

குதிரை பேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை களைப்பதும், மாநில முதல்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜனநாயகத்தின் வழியே சர்வாதிகார போக்கை கையாண்டு வந்த ஜனநாயக விரோத ஆட்சி, மோடியின் பாஜக ஆட்சி.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்கும், குடியுரிமை சட்டம்
எனப்படும் பாரபட்சமான அரசியல் சாசனத்திற்கு விரோதமான சட்டத்தை இயற்றி, முஸ்லிம் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்களை வஞ்சித்த அரசும், இந்த பாஜக ஆட்சியே.

இத்தனையும் நடைபெறும் போது, வாய் மூடி மௌனமாக, அவர்களின் மக்கள் விரோத ஆட்சியை ஆதரித்து, கூட்டணியில் இணைந்து இளைப்பாறிய கட்சி தான் "அதிமுக".

இன்று கூட்டணி முறிவு என்ற தேர்தல் நாடகத்தை, அச்சு பிழறாமல் நடத்திவரும் அதிமுக, மேலே குறிப்பிட்ட எந்த ஒரு மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களையும், அதற்கு காரணமான மோடி எங்கள் பிரதமர் வேட்பாளர் இல்லை என, எடப்பாடி பழனிச்சாமி பேசவோ, பரப்பவோ இல்லை என்பது, பாஜக- அதிமுக வின் கள்ள கூட்டணி உறவை அம்பலப்படுத்தி உள்ளது.

எனவே, இத்தகைய போலி ஜனநாயக நாடக நடிகர்களை நம்பி, உங்கள் அர்த்தமுள்ள வாக்கை வீணாக்கி விடாமல்,

இந்தியாவை நியாயத்தின் பக்கம் அழைத்து செல்லும், "இந்தியா கூட்டணியை" வெற்றி பெற செய்வது தான், தேசத்தை காக்க ஒவ்வொரு குடிமகனும் செய்யவேண்டிய கடமையாக இருக்க முடியும்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா.
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

15/04/2024
15/04/2024
14/04/2024
மனிதநேய_மக்கள்_கட்சியின்மாநில பொதுச் செயலாளர் வருகை …!! இந்தியா கூட்டணி ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ் தரணிவேந...
13/04/2024

மனிதநேய_மக்கள்_கட்சியின்
மாநில பொதுச் செயலாளர் வருகை …!!

இந்தியா கூட்டணி ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ் தரணிவேந்தன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வருகிறார் ..!!

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் மணப்பாறை உறுப்பினரும்,தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் பா.அப்துல் சமது MLA அவர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு வருகிறார் ...

16.4.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3:30 மணி அளவில் செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி அருகில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எம்.எஸ் தரணிவேந்தன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளார்.மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் ,வார்டு நிர்வாகிகள்,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.



#தரணிவேந்தன்4ஆரணி

செஞ்சி பேரூராட்சியில் I.N.D.I.A கூட்டணியின்,ஆரணி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.M.S.தரணிவேந்தன் அவர்களுக...
13/04/2024

செஞ்சி பேரூராட்சியில் I.N.D.I.A கூட்டணியின்,ஆரணி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.M.S.தரணிவேந்தன் அவர்களுக்கு, மமக மாநில செயற்குழு உறுப்பினர்
Dr. S.சையத் உஸ்மான் அவர்களின் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் வாக்குகளை சேகரித்தனர்.


#தரணிவேந்தன்4ஆரணி
| #வாக்களிப்பீர்_உதயசூரியன்

10/04/2024



01/04/2024

பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே...

#பதில்_சொல்லுங்க_மோடி

இந்தியா கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளர்  த...
31/03/2024

இந்தியா கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளர் துரை ரவிக்குமார் அவர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA அவர்கள்
உடன் மாநில செயலாளர் விழுப்புரம் முஸ்தாக்தீன், வர்த்தக அணி மாநில செயலாளர் காஞ்சி கவுஸ்பாஷா, மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம், மாநில செயற்குழு உறுப்பினர் Dr.S.சையத் உஸ்மான், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முகமது உள்ளிட்ட மாநில மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் மற்றும் தமுமுக மமக வினர் கலந்து கொண்டார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்தும் புனித ரமலான் மாதம் நோன்பு திறக்கும்  #இப்தார்...
30/03/2024

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்தும் புனித ரமலான் மாதம் நோன்பு திறக்கும் #இப்தார்_நிகழ்ச்சி குறித்து
தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள்
மமக மாநில செயற்குழு உறுப்பினர் Dr.S.சையத் உஸ்மான் அவர்கள்
மமக மாநில வர்த்தக அணி பொருளாளர்
S.M. அப்துல் ஹக்கீம் அவர்கள் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அ.அர்ஷத் அவர்கள் மற்றும் செஞ்சி நகரத் தலைவர் A.M.அலிஜான் அவர்கள் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலையில் அழைப்பு கொடுத்தனர். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ாஹிருல்லா அவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொள்ளவும். வாகனம் செஞ்சி நகரம் தமுமுக மமக அலுவலகத்திடம் இருந்து புறப்படும்

இடம்: தளபதி அரங்கம் (கலைஞர் அறிவாலயம்) விழுப்புரம்
நாள்: ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணி




மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்தும் புனித ரமலான் மாதம் நோன்பு திறக்கும் இப்தார் ந...
30/03/2024

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்தும் புனித ரமலான் மாதம் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சிக்கு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்களை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் Dr.S.சையத் உஸ்மான் அவர்கள்,
மமக மாநில வர்த்தக அணி பொருளாளர்
S.M. அப்துல் ஹக்கீம் அவர்கள்,
இப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுத்தனர் உடன் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூ...
28/03/2024

விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்,

மயிலம் தொகுதி,தீவனூர் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.M.S.தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து மமக தலைமை செயற்குழு உறுப்பினர் Dr.S.சையத் உஸ்மான் அவர்கள் மற்றும் மமக தலைமை பிரதிநிதி அச்சிறுப்பாக்கம் ஷாஜகான் அவர்கள், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.L.S.சான்பாஷா அவர்கள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் செஞ்சி.அ.அர்ஷத் அவர்கள் மற்றும் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர் அல்ஹம்துலில்லாஹ்



#ஆரணிநாடாளுமன்றதொகுதி
ிவேந்தன்

விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூ...
27/03/2024

விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்,

செஞ்சி தொகுதி,செம்மேடு பகுதியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.M.S.தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து, மமக மாநில செயற்குழு உறுப்பினர் Dr. S.சையத் உஸ்மான் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டு தங்களை ஆதரவை தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.



#ஆரணிநாடாளுமன்றதொகுதி
ிவேந்தன்

2024 ஆரணி தொகுதி நாடாளுமன்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தரணி வேந்தர் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியா...
26/03/2024

2024 ஆரணி தொகுதி நாடாளுமன்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தரணி வேந்தர் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய மனிதநேய மக்கள் கட்சி செஞ்சி நகர அலுவலகத்தில் மமக மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் சையது உஸ்மான் அவர்களின் தலைமையில் (26-3-2024) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அ.அர்ஷத் அவர்கள் மற்றும் செஞ்சி நகரத் தலைவர் A.M.அலிஜான் அவர்கள் மற்றும் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்





23/03/2024
2024 ஆரணி தொகுதி நாடாளுமன்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தரணி வேந்தர் அவர்கள் மற்றும் சிறுபான்மை நலத்துறை...
21/03/2024

2024 ஆரணி தொகுதி நாடாளுமன்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தரணி வேந்தர் அவர்கள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சிK.S.மஸ்தான் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் டாக்டர் S. சையத் உஸ்மான் அவர்கள் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



18/03/2024

தேர்தல் ஆணையத்தின் தேதி அறிவிப்பும் சந்தேகங்களும்…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் பத்திரிகை அறிக்கை.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்து முறை தமிழகத்திற்கு வருகை தந்திருக்கின்றார். பெருமழை வெள்ளத்தில் தமிழகம் மூழ்கித் தவித்தபோது கூட ஆறுதல் சொல்ல வராதவர் தமிழ்நாட்டிற்கான நிவாரண உதவியை சிறிதளவு நீட்டாதவர் இந்த முறை தொடர்ச்சியாக ஐந்து முறை தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதும் அவருடைய இறுதி வருகையின் போது தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதியை அறிவிப்பதும் அதில் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் என்று அறிவிப்பதும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்திருக்கின்றது.

இதைத் தற்செயலானதாக பார்க்க முடியவில்லை. இது திட்டமிட்டு நடந்த நிகழ்வாகவே பார்க்க முடிகின்றது.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஏப்ரல் 19 .2024 வெள்ளிக்கிழமை அன்று வருகின்றது. வெள்ளிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு ஒரு புனிதமான நாளாகும். வேறு பல நாட்கள் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் அதிகமாக வாக்களித்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்தது போன்ற ஒரு தோற்றமும் ஏற்படுகின்றது. இந்த ஐயங்களுக்கு தேர்தல் ஆணையம் விடை தர வேண்டும்.

தேர்தல் தேதிக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிக்கும் மிக நீண்ட இடைவெளி இருக்கின்றது. ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு தனியார் இடங்களிலும் கடைகளிலும் கிடந்த முன்மாதிரிகளை பார்த்திருக்கின்றோம்.
எனவே இந்த தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்கின்ற அச்சம் மக்கள் மனதிலே உச்சமாக எழுந்திருக்கின்றது.

இதற்கான விடைகளை தேர்தல் ஆணையம் தான் தர வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பும் தமிழகத்திற்கு தொடர்ச்சியான பிரதமர் வருகையும் வாக்காளர்கள் மனதில் மிக வலிமையான சந்தேகங்களை உருவாக்கி இருக்கின்றன என்பதை இங்கே பதிவு செய்கிறோம்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி



17/03/2024

மும்பையில் மமக தலைவருக்கு வரவேற்பு !

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் மும்பை வருகை புரிந்தார்கள்.

மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் மமக தலைமை பிரதிநி ஏர்வாடி ரிஸ்வான், மும்பை முஸ்லிம் ஜமாத் நிர்வாகி முகைதீன், தமுமுக நிர்வாகிகள் கல்பாக்கம் நஸீர்,அஹமது அனஸ் ஆகியோர் வரவேற்றனர்.


08/03/2024

புதுச்சோி சிறுமி மீதான வன்கொடுமை - குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை

புதுச்சோி மாநிலம் - முத்தியால்பேட்டை, சோலை நகரை சாா்ந்த 9 வயது சிறுமி கடந்த மாா்ச் 02ம் தேதி அவா்கள் வசிக்கும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கொடூரா்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கடத்தப்பட்டு பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி கை கால் கட்டப்பட்டு துணியால் மூடி சாக்கடையில் வீசிய கயவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை உறுதி செய்திட வேண்டும்.

சிறுமி முதல் பெண்கள் வரையில் நமது நாட்டில் தொடா்ந்து அரங்கேறும் இம்மாதிாியான அருவருப்பான நிகழ்வுகளை ஒடுக்க, ஏற்கனவே பல்வேறு சட்டங்கள் இருப்பினும் சட்டப்பிடியிலிருந்து தப்பா வண்ணம் மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிரான உடனடி தண்டனை கிடைத்திடும் வகையிலும், உச்சப்பட்ச கடுமை தண்டனை விதிக்கும் சட்டத்தையும் இயற்றி பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய அறுதியிட வேண்டும்.

கடந்த மாதம் ஜாா்க்கண்டில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஸ்பைய்ன் பெண்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததது, சென்னை, பெங்களுரு என அடுத்தடுத்த செய்திகள் நடந்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான செயல்களை ஒடுக்கவும் அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீவீரம் காட்ட வேண்டும்.

புதுச்சோி 5ம் வகுப்பு மாணவியின் வழக்கில் குற்றஞ்சட்டப்பட்ட இருவா் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனி யாரும் இது போன்று வன்செயல்களில் ஈடுபடா வண்ணம் உச்சப்பட்ச தண்டனையை வழங்க சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) வலியறுத்துகிறது.

கோவை அம்ஜத்
மாநில செயலாளா்
சமூகநீதி மாணவா் இயக்கம் SMI

| | |

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம்  சிட்டாம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முஸ்தபா ஷா அவுலியா தர்கா நடந்தது என்ன.....?செஞ...
07/03/2024

விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி வட்டம் சிட்டாம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முஸ்தபா ஷா அவுலியா தர்கா நடந்தது என்ன.....?

செஞ்சி வட்டம் சிட்டாம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முஸ்தபா ஷா அவுலியா தர்கா
அமைந்துள்ள இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஒன்பது குடும்பங்களை காலி செய்ய வேண்டி அரசு வருவாய்த்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மக்களை திரட்டி வட்டாட்சியரிடம் விசாரித்ததன் அடிப்படையில் அந்த இடம் தர்காவிற்கு சொந்தமான இடம் (அதாவது வஃபு வாரியத்திற்கு )அல்ல என்றும் அது அரசு வருவாய்த்துறை ஏட்டில் புறம்போக்கு நிலமாக இருப்பதாகவும் வஃப் வாரியமும் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தடையில்லா சான்றை நீதிமன்றத்தில் அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அந்த இடத்தில் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி அமைக்க அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த தர்கா டிரஸ்டி நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் கிடப்பில் போடப்பட்டது . பின்னர் திடீரென ஒருநாள் அங்குள்ள இடத்தை சீர்செய்வதாக கூறி அடக்கஸ்தலத்தை சேதப்படுத்தியதாக வந்த தகவலின் பேரில் உடனடியாக அடக்கஸ்தலத்தை சேதப்படுத்தியவர்களை தண்டிக்க கோரிஅப்போதைய தமுமுக மாவட்டத்தலைவர் சையது உஸ்மான் அவர்கள் தலைமையில் தர்காவில் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பின்னர் வருவாய் துறையும் காவல் துறையும் சரி செய்து தருவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முடித்து வைக்கப்பட்டது . பின்னர் ஆளூர் ஷாநவாஸ் MLA உள்ளிட்ட வக்ப் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர் .பின்னர் மீண்டும் அதிகாரிகள் காலி செய்ய வலியுறுத்தியதன் பேரில் பேச்சுவார்த்தை நடத்தி அங்கே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தர்கா மற்றும் அடக்கஸ்தலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் மேலும் பல ஆண்டுகளாக தர்காவுக்கு சொந்தமான இடமாக சொல்லி அங்கே குடியமர்த்தப்பட்ட 9 குடும்பங்களுக்கு வழிவகை செய்யும்படியும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு சிட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள வேறு இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் தலா இரண்டு சென்ட் வீட்டுமனை வீதமாக பட்டா மாற்றம் செய்து அங்கே அரசு சார்பில் அவர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு கட்டித் தரவும் ஆவன செய்யப்படும் என்றும் , தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் மண்டபம் மற்றும் கப்ரஸ்தான் (அடக்கஸ்தலம்) மற்றும் பக்கீர் குளம் ஆகியவைகளுக்காக சுமார் 82 செண்ட் நிலம் ஒதுக்ப்பட்டு அவை எந்த சேதாரமுமின்றி பாதுகாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குடியிருப்புவாசிகளை திரட்டி அமைச்சரிடம் முறையிட்டதற்கு அமைச்சர் அவர்கள் அது அரசு நிலம் ஆனால் யாரோ உங்களை அது வக்பு இடம் என ஏமாற்றி பணம் பறித்துள்ளார்கள் . இருப்பினும் வேறு இடம் பார்த்து உங்களுக்கு வழங்கப்படும் என்றார் . இந்நிலையில் இது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கடந்த (14/01/2024) அன்று செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செஞ்சி அர்ஷத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முனுசாமி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள்,நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பத்தாரில் ஏழு குடும்பத்தார் அதை ஒப்புக்கொண்டு வட்டாட்சியர் அவர்கள் வேறு இடத்தில் பட்டா அளிக்க அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. இந்நிலையில் மாற்று அமைப்பினர் அம்மக்களுக்கு அந்த வீடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது அதை நாங்கள் பாதுகாப்போம் என பொய் வாக்குறுதி அளித்து மேற்படி குடியிருப்பு வாசிகளை நம்ப வைத்து அரசு அதிகாரிகால் அறிவிக்கப்பட்ட மாற்று இடத்தையும் பட்டாவையும் அவர்கள் வாங்கவிடாமல் செய்ததோடு மட்டுமின்றி அந்த இடத்தில் கல்லூரி வராது மாறாக அங்கே கோவில் கட்டப்போகிறார்கள் அதற்கு தமுமுக துணை போவதாக பொய் பிரச்சாரங்கள் பரப்பினார்கள் இதனால் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க அந்த தர்கா டிரஸ்டி மற்றும் மாற்று அமைப்பு நிர்வாகிகள் முத்தவல்லி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரை அழைத்து விளக்கம் தருவதற்கு சார்ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்து அழைப்பு விடுக்கபட்டது அவர்களின் போலிமுகத்திரை கிழியும் என தெரிந்த SDPI IMMK வினர் அக்கூட்டதை புறக்கணித்தனர் இருப்பினும் சார் ஆட்சியர் சார்பில் அந்த இடத்தின் விளக்கப்படம் அளித்து விளக்கம் அளித்து கூட்டத்தை முடித்துவைத்தனர் .இந்நிலையில் மாற்று இடம் பெற சம்மதித்த 7 நபர்களில் 5 நபர்களிடம் பொய்யான தகவலை தந்து அவர்களை அக்கூட்டத்திற்கு வரவிடாமல் தடுத்ததால் அந்த குடியிருப்புவாசிகளில் இருவர் மட்டும் அந்த பட்டாவை பெற்றுக் கொண்டு வீடுகளை தாமாக காலி செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு வாரங்களாக வருவாய்த்துறையினர் காவல் துறையினர் அறிவிப்பு செய்தும் வீடுகளை காலி செய்ய விடாமல் அவர்களுக்கு மேற்படி அமைப்பினர் தவராக வழிநடத்திவந்தனர் மேற்படி குடியிருப்பு வாசிகள் இவர்கள் பேச்சைய நம்பிஇருந்தனர் இந்நிலையில் 06-03-2024 இன்று காலை வருவாய்த்துறையினர் காவல் துறை படையுடன் வந்து வீடுகளை அப்புறப்படுத்த முயன்ற போது மேற்படி sdpi immk வினர் காவல் துறையினரிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்த பின் வீடுகளை புல்டோசர்மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இச்சம்பவத்தில் தர்காவின் முத்தவல்லி பணம் பெற்றுக்கொண்டு மனைகளாக அம்மக்களுக்கு அளித்து துரோகம் செய்தது முதல் குற்றவாளி இரண்டாவது அம்மக்களை தவராக வழிநடத்தி பகடைக்காயாக வைத்து மலிவான அரசியல் செய்த மாற்று அமைப்பினர் இரண்டாம் குற்றவாளி
இச் சம்பவத்தில் தமுமுக செய்த தவறு என்ன என்பது பொது சமூகமே முடிவு செய்யுங்கள்
அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் வைக்கவும்.
அ.அர்ஷத்
பொறுப்புக் குழு உறுப்பினர், விழுப்புரம் வடக்கு மாவட்டம்,
தமுமுக-மமக,
செஞ்சி




ஏக இறைவனின் திருப்பெயரால் இன்று 02-03-2024 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் செஞ்சி நகர அலுவலகம் மாடியில் செஞ்சி பேரூர் நக...
02/03/2024

ஏக இறைவனின் திருப்பெயரால் இன்று 02-03-2024 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் செஞ்சி நகர அலுவலகம் மாடியில் செஞ்சி பேரூர் நகர பொது குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக் உறுப்பினர் செஞ்சி அ.அர்ஷத் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக தமுமுக மாநில செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கலந்து கொண்டு தேர்தலை நடத்தி கீழ்க்கண்டவாறு நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அவர்களின் பொறுப்புகளின் அமானிதத்தை பற்றி அறிவுரைகள் கூறி சிறப்பு உரையாற்றினார். இப்பொதுக்குழுவில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் Dr.S.சையத் உஸ்மான் அவர்கள், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டிவனம் A1.அலாவுதீன் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.L.S.சான்பாஷா மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திண்டிவனம் ஜஹாங்கீர் மண்டல சமூகநீதி செயலாளர் வழுதாவூர் ஒசாமா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

செஞ்சி நகர தலைவர்
A.M.அலிஜான்

செஞ்சி நகர தமுமுக செயலாளர்
A. சதாம் உசேன்

செஞ்சி நகர மமக செயலாளர்
A.யூனுஸ் பாஷா

செஞ்சி நகர பொருளாளர்
M.மீரான்

செஞ்சி நகர துணைத் தலைவர்
S.B. மஸ்தான்

அல்ஹம்துலில்லாஹ்
இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்


Address

Gingee
Gingee
604202

Alerts

Be the first to know and let us send you an email when VPM TMMK NORTH ITwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VPM TMMK NORTH ITwing:

Videos

Share

Category