18/05/2019
திரும்பியப்பாக்கம் எல்லாம் டிஜிட்டல் மையம் , நம் அன்றாட வாழ்வியலில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சாராத வழக்கை முறையை ஒரு நிமிடமாவது வாழ முடியுமா? சாத்திய கூறுகள் மிக மிக குறைவுதான். மின்னல் வேகத்தில் தொழில்நுட்பவளர்ச்சி,நாள் முழுவதும் அல்லல் பட்டு செய்து முடிக்க வேண்டிய வேலைகளை விரல் சொடுக்கும் நேரத்தில் பலநூறு மடங்கு துல்லியமாக செய்து முடித்து அடுத்த வேலைக்காக காத்திருக்கும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்,நம் கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத அளவு கோப்புகளை நகக்கண் அளவுக்குள் சுருக்கும் அளவிலான டிஜிட்டல் நினைவக சாதனங்ககள்,பல்வேறு சாதனங்களால் பகிர்ந்த இயக்கம் , தரவுகளை மிகவும் பாதுகாப்பாக வைக்க எளியமான கருவிகள், அதிபயங்கர வேகம் படைத்த கணினி, எளிய கட்டணத்தில் அதிவேக இணையதள சேவைகள்,இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றல் உள்ளங்கையில் உலகம். இப்படி பிரமாண்டமான டிஜிட்டல் வளர்ச்சியில் நாம் ஒரு சக தொழிலாளராகவும் ,கணிப்பொறி வல்லுநராகவும்,புகைப்பட கலைஞராகவும் ,ஒளிப்பதிவாளராகவும் ,மற்றும் அனைத்து பணிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற உற்ற தோழனுடன் மிக சிறப்பான முன்னேற்றம் அடைந்துளோம் என்பதில் மாற்று இல்லை.இருந்தபோதிலும் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி வெள்ளத்தில் நாம் மிதந்தது மகிழ்ந்தாலும் நம்ம அன்றாட தகவல்,மற்றும் புகைப்பட கோப்புகள் ,இதர தரவுகளை பாதுகாப்பதில் மிக கடினமா மாற்று பாதையில் நம் நிலை உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையே,ஆம் நம் கோப்புகள் மற்றும் தரவுகள் எந்தநேரத்திலும் அழித்துவிடலாம் ,நமது அதிவேக கணனி நொடி பொழுதில் செயலிழக்கலாம் அல்லது நம் உருவாக்கிய கோப்புகளை நம் கணினியால் படிக்கமுடியாத நிலைக்கு தள்ளப்படலாம் இதை அனைத்தையும் கடந்து இன்று இணையத்தள கொள்ளையர்களின் கைவரிசை.. ஆம் எங்கோ உலகத்தில் ஒரு மூலையில் நடந்த ஒரு செய்தியாக இருந்த இணையதள கோப்புகள் முடக்க சம்பவங்கள் இன்று நம் சக தொழிலாளர்களுக்கு அரங்கேறும் பொழுது தான் நம் அதன் வீரியத்தின் ஆழம் உணர்கிறோம்,அது மட்டும் இன்றி அவர்கள் கேட்கும் பிணை தொகையை கண்டால் ஐயோ அப்பா என அலறும் அளவுக்கு உள்ளது தற்போதய நிலை ,ஆம் cryptovirology எனும் புதிய யுக்தியால் அவர்கள் தீர்மானிக்கும் எந்த ஒரு கணினி,அலுவலகம்,எதுவாக இருந்தாலும் முடக்கி விடுவார்கள் இதில் அதிர்ச்சி என்னவென்றல் crypto-virusகலை (ransomware) நம் பயன்படுத்தும் antivirusகல் தடுப்பது மிக மிக கடினம், இந்த ஒரு சூழலில் திருமண படபதிவாளர்கள் மற்றும் கணினி கட்டமைப்பு துறை சார்ந்த நாம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம், இந்த நிலை பற்றிய விழிப்புணவு கூட்டம் ஒன்று i-Edit நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் olippathivaalan.com (ஒளிப்பட கலைஞர்களுக்கான சமூக வலைத்தளம் ) இன் தலைமை வல்லுநர் ஆகிய நான் ஈரோடு பூபதி வரும் ஜூன் -1 அம் தேதி ஒரு நாள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் get-together நிகழ்ச்சி திருச்சி மாநகரில் திட்டமிடப்பட்டுள்ளது
இந்த கூட்டத்தில் பங்குபெறும் தலைப்புகள்
காலை 10 மணி முதல் 1 மணி வரை :
1.யார் இந்த இணையதள கொள்ளையர்கள் ? அவர்களில் பிரிவுகள் எத்தனை ?
2.இணையதள கொள்ளையர்கள் எப்படி நாம் கணினியை அவர்கள் வசப்படுத்துகிறார்கள் ?
3.நமது கணினிஇன் தற்போதய நிலையை கண்டுஅறிதல்..!
4.பிரபல வைரஸ்களின் செயல்பாடுகள்.
5.antivirusகளின் பலவீனங்கள்.
6.இத்தகைய கொடிய வைரஸ்களிடம் இருந்து எப்படி நம் கணினியை பேணிக்காப்பது
7.புதிய கணினியை கட்டமைப்பதில் நாம் கவனிக்க வேண்டியவை ?
இன்னும் பல...
நண்பகல் 2 மணி முதல் 4 மணி வரை:
1.வீடியோ எடிட்டிங்இல் ஸ்மார்ட் ஒர்க்
2.திருமண படபதிவில் எடிட்டிங்இல் வீடியோ எப்படி இருக்கவேண்டும்
3.montage, hi-lights song,மற்றும் candid வீடியோ ஏவாறு அமைந்திட வேண்டும்
4.codec, frame rate ,fps hi -definition பற்றிய தெளிவுரை
5.intel desktopஇல் mac os நிறுவது சரியா? அல்லது i-mac கணினியா? தெளிவான விளக்கங்கள்..!
6.ஏன் FCPக்கு மாறவேண்டும் கட்டாயமா இல்லய் சவுகரியமா ?
இன்னும் பல...
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
கேள்வி பதில் ,சந்தேகங்களுக்கு விளக்கங்கள்,மற்றும் ஆலோசனைகள்...
இந்த get-together நிகழ்ச்சி மதிப்புக்குரிய திரு அமிழ்தினி தனசேகரன் (olippathivaalan.com ஆலோசகர்,தலைமை எழுத்தாளர் ) மற்றும் நிலா ரசிகன் தலைசிறந்த Photoshop technician (olippathivaalan.com அட்மின் )
joy வினோத் (olippathivaalan.com community moderator )
ஆகியோரின் ஆலோசனையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சார்ந்த நன்றிகள் :
crypto-virology,hybrid encrypts, மற்றும் current encryption methodology பற்றியும் மற்றும் எனது ஒவொரு மென்பொருள் தேடலின் இணையிலா மையில் கல்லாக உதவிக்கொண்டிருக்கும்
திரு மதிப்புக்குரிய Mr.venice raj சார் (high-end programmer) ShineX Media,மற்றும் VR Wedding album Software developer அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு
ஈரோடு பூபதி 98427 96601
email :[email protected]
joy-வினோத் 73739 21010
நண்பர்கள் தொடர்ந்து இந்த பதிவை பகிருங்கள்