31/03/2024
தருமபுரி 31.03.24
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே திமுக வேட்பாளருக்கு பெண்கள் மலர் தூவி வரவேற்பு. முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் வழக்கறிஞர் மணியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரித்தார்
வருகிற 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் மணி போட்டியிடுகிறார். அதனை தொடர்ந்து திமுகவினர் மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் அடுத்த பெரியப்பட்டி, தீர்த்தமலை, முத்தானூர், சித்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முத்தானூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் பெண்கள் வேட்பாளர் மணி மீது மலர் தூவி உற்சாக வரவேற்றனர். பெண்களிடம் வாக்குகளை சேகரித்து பின்பு முதியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடபட்டார். அப்போது தமிழக முதல்வர் பெண்களுக்கு முதியோர் உதவி தொகை, உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், கல்லூரி பெண்களுக்கு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளார். மீண்டும் ஸ்டாலின் ஆட்சி நிலைக்க வேண்டும் என்றால் உதய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.