Thillaikural-தில்லைகுரல்

Thillaikural-தில்லைகுரல் தில்லை செய்திகள், நிகழ்ச்சிகள்

27/12/2014
27/12/2014
27/12/2014
27/12/2014
27/12/2014
வளம் தரும் வியதீபாத தரிசனம்(மார்கழி 13, ஞாயிறு,   28.12.2014, அதிகாலை 04.30 மணி)சிதம்பரம்.கோயில் என்றாலே பொருள்படுவது. ஆ...
25/12/2014

வளம் தரும் வியதீபாத தரிசனம்
(மார்கழி 13, ஞாயிறு, 28.12.2014, அதிகாலை 04.30 மணி)

சிதம்பரம்.
கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன.
பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்,) பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து. (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி). சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் (சித்தாந்தம்) ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம்.
அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அலகிலாத உருவம் உடையவர். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. இயங்கு சக்திகளை தாள கதியுடன் ஆட்டுவிப்பவர். அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலம¡க நிகழ்ந்து வருவது.

நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

1. திதி : திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர்.
2. வாரம் : கிழமைகளுக்கு ந¡யகராகிய சூர்யனை குண்டலமாக அணிந்தவர்.
3. நக்ஷத்திரங்கள் : இவற்றை மாலையாக அணிந்தவர்
4. யோகம் : வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர்.
5. கரணம் : கரணங்களை தன்னுள் கொண்டவர்.
மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும்.

பஞ்சாங்கத்தின் யோகம் என்பது சிறப்பு வாய்ந்த ஒரு அம்சம். சூர்யனுக்கும், சந்திரனுக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவும் அம்சம்.


யோகங்கள் என்பது மூன்று வகைப்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் கிரஹங்கள் இணைவதால் உண்டாகும் யோகம். (கஜகேசரி யோகம், சகடயோகம்)

நக்ஷத்திரமும், தினமும் இணைவதால் உண்டாகும் யோகம் (அமிர்த, சித்த மற்றும் மரண யோகம்). அஸ்வினி நக்ஷத்திரம் திங்கட்கிழமையில் அமைந்தால் அது சித்த யோகம்.

சூர்யனும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் யோகங்கள் 27. (விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை) இந்த 27 யே¡கங்களுள் ஒன்றுதான் வியதீபாத யோகம், யோக நாயகர்களுக்கு அதிபதியாக விளங்குவது.

மார்கழி மாதம் & வியதீபாத யோகம் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லது.

வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது நல் இல்லற வாழ்வை நல்கும்.


புராண விளக்கம் :ஒரு சமயம், சந்திரன் குரு பகவானின் மனைவியான தாரையின் அழகில் மயங்குகிறார். இதை அறிந்த சூர்ய பகவான், சந்திர பகவானிடம் இது தகாத செயல் என எச்சரிக்கிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப் பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப்படுத்திய சூர்ய சந்திரர்கள், யோகங்களில் ஒருவராக, வியதீபாதம் என்று பெயர் அளித்து, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப்படுத்தியதால், பூலோக மக்கள் உன் யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்யமாட்டார்கள் எனவும் கூறினர்.

மக்கள் புனித செயல்கள் செய்யாத திதிகளான, அஷ்டமி, நவமி திதிகள் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டு, அவரின் அவதார தினப் பெருமையைப் பெற்றனர்.

அதுபோல, வியதீபாத யோகம், தன் நாட்களில் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே என்று எண்ணி, நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை (தூக்கிய திருவடியை) சரணடைய, பக்தர்களுக்கு வேண்டியதை உடனடியாக வரமளிக்கும் நடேசர், மார்கழி மாதமும், வியதீபாதம் யோகம் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வே¡ருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்று, அந்த யோகத்திற்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார்.

வல்லமை வாய்ந்த இந்த யோகத்தில் தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெரு வாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி, மார்கழி மாதம் தனுர் அல்லது தனுசு மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூர்யனுக்கு முன்பு வரும்போது, வியதீபாதம் யோகம் ஏற்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலில் (வியதீபாத யோகம் தோன்றக் காரணமான) சந்திரன், குரு பகவானின் மனைவியான தாரையை மோகித்ததால் ஏற்பட்ட தோஷத்தினை சிதம்பரத்தில் நடராசரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் தனது சிவார்ச்சனா சந்திரிகையில் (தந்த சுத்தி படலம்), வியதீபாத யோகம் வரும் நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் சிவனை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

வியதீபாத யோக நன்னாளில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம், நல்யோகங்கள் மற்றும் வளங்கள் அனைத்தயும் பெறுவோம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்,
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572, 93626 90299.
Mail : [email protected]

வியதீபாத யோகத்தையும் அன்று ஆனந்த தாண்டவரை திருப்பள்ளியெழுச்சி காலத்தில் வணங்குவதால் உண்டாகும் பலன்களையும் கூறும் அருமையான பதிவு. நிறைய தெரிந்து கொள்கிறேன் உங்கள் வலைப்பூவிலிருந்து

25/12/2014

சிதம்பரம் மக்கள் முற்றிலும் மறந்த/துறந்த ஒரு மிக முக்கியமான ஆறு(கால்வாய்) பாலமான் ஆறு.

சிதம்பரம் கிழக்கு பகுதியில், 20 கிராமங்களின் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கிய, பாலமான் கால்வாய் சாக்கடையாக மாறி ஓடுகிறது.

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் அதை நம்பியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணை மதகிலிருந்து உருவாகக்கூடிய கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால் 45 கி.மீ. காட்டுமன்னார்கோவில் புளியங்குடி வரை அமைந்துள்ளது. புளியங்குடி கோப்பாடி மதகிலிருந்து கான்சாகிப் வாய்க்கால் உருவாகி 41.08 கி.மீ. தூரத்துக்கு வெள்ளாற்றில் வடிகிறது. கான்காகிப் வாய்க்கால் செல்லும் பாதையில் 25.2 கி.மீ. தொலைவில் சிதம்பரம் நகரத்தை கடந்து செல்கிறது.

இந்த கான்சாகிப் வாய்க்காலில் சிதம்பரம் நகரில் பாலமான் என்னுமிடத்தில் அரசு மருத்துவமனை கழிவு, நகராட்சி கழிவு நீர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் ஆகியவை கலந்து 15 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீராகதான் உள்ளது. இக்கால்வாயில் உள்ள 34 மதகுகள் மற்றும் இதர வடிகால்கள் மூலம் 9994 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இக்கால்வாயின் முழு நீர்க்கொள்ளளவு 240.89 கனஅடியாகும். இக்கால்வாயில் எண்ணற்ற நிலங்களின் நீர்பிடிப்பு தண்ணீரும், வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு இதில் வந்து சேருகிறது.

பல இடங்களில் புதை சாக்கடை நீர் திறந்தவெளி சாக்கடையில் விடப்பட்டுள்ளன.
அந்த கழிவுநீர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் கொண்டு விடப்படுகிறது.

ஆட்சிகள் மாறியது காட்சிகள் மாறவில்லை.

கான்சாகிப் வாய்க்கால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 75 ஆயிரம் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் சிதம்பரம் நகரத்தில் 58 தங்கும் விடுதிகள், 23 திருமண மண்டபங்கள், 27 பெரிய உணவு விடுதிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கான்சாகிப் வாய்க்கால் கரையில் கொட்டப்படுகிறது.

சிதம்பரம் நகரின் மேற்கு, தெற்கு திசைகளில் புதிதாக உருவாகியுள்ள நகர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கான்சாகிப் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கீழணை வழியாக கான்சாகிப் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சம்பா சாகுபடியும், அதன் அறுவடைக்கு பின்னர் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நவரைப்பட்ட சாகுபடியும் செய்யப்படும். நவரைப்பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் குறைந்த அளவு பாசன தண்ணீரோடு சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் கலந்துவிடுவதால் ஒட்டுமொத்த வாய்க்காலிலும் கழிவுநீர் கறுப்பாக காணப்படுகிறது.

சிதம்பரத்தை சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமல்லாமல் சிதம்பரம் நகரின் நிலத்தடி நீரை உயர்த்தும் இந்த ஜீவ நதியை கண்டுகொள்ள யாரும் இல்லை.

24/12/2014

Devaram ponmuthukumar livevedaparayana madaam chidambaram 23-12-14

24/12/2014

சித்தர்களில் மிக முக்கியமான ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில்

"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே"

என்று கூறுகிறார்.

அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிகின்றது.

சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது. இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

சித்தர்களின் உடற்கூற்று அறிவியல்படி ஒரு நாளில் மனிதரில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

24/12/2014

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

1) சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன.
2) இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.
3) பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின்
ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.
4) 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.
5) இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்.
6) இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.
எனவே விதி முடிவும் விலகியே போகும். -


எண்ணும் எழுத்தும்
__________________
உடற்கூறு கணிதம்

21600 மூச்சுக்காற்று

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்


ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'

24/12/2014

நடராஜ ஸ்தோத்ரம்

24/12/2014

தில்லைவாழந்தணர்களது மகிமை.
பெருஞ்சிறப்பினதாகிய சிதம்பர ஸ்தலத்தில் வியாக்கிரபாதமுனிவர் பதஞ்சலிமுனிவர் என்பவர்களோடு, இத்தில்லைவாழந்தணர் மூவாயிரரும், பராசத்தியால் அதிட்டிக்கப்பட்ட சுத்தமாயாமயமாகிய கனகசபையின்கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவன் செய்தருளும். ஆனந்த தாண்டவத்தைத் தரிசனஞ் செய்து பேரானந்தம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது; பிரமாவானவர் கங்கா தீரத்தில் உள்ள அந்தர் வேதியிலே தாம் தொடங்கிய யாகத்தின் பொருட்டு, இச்சிதம்பரத்தில் வந்து வியாக்கிரபாத முனிவரது அநுமதியினாலே இவர்களை அழைத்துக் கொண்டு போயினார்; பின்பு அம்முனிவரது ஏவலினாலே, இரணியவன்மச்சக்கிர வர்த்தியானவர் அந்தர்வேதியிற் சென்று, இவ்வந்தணர் மூவாயிரரையும் வணங்கி, தேர்களில் ஏற்றி அழைத்துக் கொண்டு, சிதம்பரத்தை அடைந்தார். உடனே இவர்கள் சிதம்பரத்துக்கு வடமேற்றிசையிலே தேர்களை நிறுத்தி, இப்பாலே வந்து, தங்களை எதிர் கொண்ட வியாக்கிரபாத முனிவருக்குத் தங்களை எண்ணிக் காட்டினார்கள். அப்பொழுது, அம்மூவாயிரர்களுள், ஒருவரைக் காணாமல். இரணியவன்மச் சக்கிரவர்த்தி மனந்திகைத்துநிற்ப; அடியார்க்கெளியராகிய பரமசிவன், தேவர்கள் முதலிய யாவருங் கேட்ப இவ்விருடிகளெல்லாரும் எமக்கு ஒப்பாவர்கள்; நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால், நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்திருவாக்கைக் கேட்ட சக்கிரவர்த்தியானவர், சபாநாதரே இவ்விருடிகளில் நாம் ஒருவரென்று சொல்லத்தக்க பெருமையையுடையவர்கள் இவர்கள் என்று மனம் நடுங்கி, இவர்களை நமஸ்கரித்தார். இவ்வந்தணர்கள் இத்திருவாக்கைக் கேட்டவுடனே, மிக அஞ்சி, பூமியிலே தண்டாகாரமாய் வீழ்ந்து; மீள எழுந்து வாழ்வு பெற்று, உன்மத்தராகி, ஸ்தோத்திரம் பண்ணி, "சுவாமீ! சிறியேங்களை அகத்தடிமைகளாகக் கொண்டருளும்" என்று பிரார்த்தித்து, கூத்தாடினார்கள். இச்சரித்திரம் கோயிற் புராணத்தில் விரித்துரைக்கப்பட்டது.
இவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச்

24/12/2014

நடராஜர் கோயிலில் டிசம்பர் 27-ல் ஆருத்ரா உற்சவம் தொடக்கம்!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் என ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற 31ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், ஜனவரி 2ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. 3ஆம் தேதி சோமாஸ்கந்தர் வெடடுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

5ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

24/12/2014

ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!

ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் எனும் உலக இயக்கத்துக்கு மூலமான ஐந்து தொழில்களும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தால் நிகழ்கின்றன. இந்த ஐந்தெழுத்தும் பரம சிவனாரின் திருமேனியாகவே விளங்குகிறது. அவரோ, அண்ட பகிரண்டமும் அனைத்து நலன்களையும் பெற்றுச் சிறக்கும் விதம், ஐந்தொழில்களை தமது ஆடலால் நிகழ்த்துகிறார் எனச் சிலாகிக்கின்றன ஞான நூல்கள்!

சேர்க்கும் துடி சிகரம் சிககென வா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம்- பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரம் அதுதான்...

என்ற பாடலில் (உண்மை விளக்கம் - 33) விளக்கப்படுவது போன்று... இறையனாரின் வலது கை - துடியை முழக்கி உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறது. அபயம் காட்டும் வலது முன் கை- காத்தல் செய்கிறது. இடது கரத்தில் உள்ள தீ - ஓயாது அழித்தல் தொழிலை நடத்துகிறது. ஊன்றிய பாதத்தால் மறைப்பும், தூக்கிய திருவடியால் அருளலும் நடைபெறுகின்றன.

இவ்வாறு உலகமும் உயிர்களும் உய்வடைய இறைவன் ஆடும் எல்லையில்லாத கூத்துக்களை, பலவாறு நுட்பமாக ஆய்ந்து இறையருளை எண்ணி அவற்றுக்கு பெயரும் சூட்டியுள்ளனர் ஆடற்கலை வல்லுனர்கள். ஆதியில் ஒரு லட்சம் கூத்துக்கள் வகைப்படுத்தப்பட்டனவாம். அதிலிருந்து 1008 கூத்துக்களைத் தேர்ந்தெடுத்து ஆடினர். பின்னர் அதிலிருந்தும் 108 கூத்துக்களைத் தெரிந்தெடுத்துப் போற்றினர்.

அவர்கள் தொகுத்த 108 கூத்துக்களில், இறைவன் தானே தனித்து உவந்து ஆடியது 48; உமையவளுடன் சேர்ந்தாடியது 36; திருமாலுடன் ஆடியது 9; முருகனுக்காக ஆடியது 3; தேவர்களுக்காக ஆடியது 12. இதுகுறித்து அகத்தியம், பரதம், கூத்தநூல் முதலான ஞானநூல்களில் விரிவாக அறியலாம்.

ஆடற்கலையை விவரிக்கும் கூத்தநூலில் பரமேஸ்வரனின் 12 கூத்துக்கள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. அந்த நூலில் காணப்படும் 'படிமவியல்’ எனும் பகுதி சிவபெருமானின் ஆடற் கோலங்களை விளக்குகிறது. ஒவ்வொரு ஆடலுக்கும் இரண்டு மூன்று திருக்கோலங்களின் வர்ணனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் படிமவியலில் 96 கோலங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த நூல் குறிப்பிடும் 12 கூத்துக்கள் குறித்த விளக்கங்களை நாமும் அறிவோம்.

அதிகாலைப் பொழுதில் அல்லியம்!
அல்லியம் என்பது காலை தொடங்கும் அதிகாலைப் பொழுது. அல்லியம் என்பதை இருள் விலகும் நேரம் என்பர் (அல்-இருள்). இந்த வேளையில் பெருமான் கொட்டம் எனும் கூத்தினை ஆடுகிறான். இது, உலக உற்பத்தியையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் நடனம் ஆதலால், ஆனந்தத் தாண்டவம் என அழைக்கப்படுகிறது. தில்லையில் பெருமான் ஆனந்தத் தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கின்றார்.

சந்தியா நேரத்தில் எல்லியம்
இது பகல் மறைந்து இரவு தோன்றும் சந்தியா நேரத்தைக் குறிப்பதாகும். இது சந்திதாண்டவம் எனப்படுகிறது. சந்தியா தாண்டவம் எனவும் அழைப்பர். மதுரையில் பெருமான் சந்தியா தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றார்.

முரசொலிக்க ஆடும் பல்லியம்
பல்லியம் என்பது முரசு. முரசொலிக்க ஆடும் நடனம். இதை ஒட்டரம் அல்லது சுத்த தாண்டவம் என்பர். இது, கயிலை மலையில் ஆடிக் கொண்டிருக்கும் தாண்டவம்.

பரதம் தோன்றிய உள்ளம்
இது உள்ளத்தின் அசைவைக் குறிக்கும். ஆசை எனப்படும் காமத்தால் உள்ளம் அசைந்து செயல் படுகிறது. ஆசை இல்லையேல் மனத்தில் சலனம் இல்லை. அதையட்டி, இதனைக் காமம் என்பர். காமத்தின் வெளிப்பாடே ஸ்ருங்காரம். இந்த நாட்டியத்தில் இருந்தே பரதநாட்டியம் பிறந்ததாகக் கூறுவர்.

திசைமுகன் காண நுதல்விழி
நுதல்விழி என்பது நெற்றிக்கண். நெற்றிக்கண் கொண்டு திரிபுரங்களை எரிந்தார் சிவபெருமான். அதனால் இது திரிபுரம் எனப்பட்டது. இந்தத் தாண்டவம் திருபுரதாண்டவமாகும். இதைப் பெருமான் திருவதிகையில் ஆடினார் என்பர். திசைமுகன் காண இந்த நடனத்தைப் பரமன் ஆடியதாகச் சொல்கிறது சிலப்பதிகாரம்.

திருவாலங்காட்டில் நுதல்கால்
வலது கால் விரலால் நெற்றிப்பொட்டு இட்டுக் கொள்வதாக இந்த நாட்டியம் அமைந்ததால், நுதல்கால் எனப்பட்டதாம். சுட்டி என்றும் கூறுவர். காலை இடுப்புக்கு மேல் உயர்த்துவதால் ஊர்த்துவ தாண்டவம் என்பர். இதிலிருந்தே சித்திரகலா நாட்டியங்கள் தோன்றியது என்பார்கள். இந்த நாட்டியத்தைப் பெருமான் திருவாலங்காட்டில் ஆடிக் கொண்டிருக்கின்றான்.

பரமனின் பார்வையால் விளையும் நோக்கம்
இது பார்வையைப் பல கோணங்களில் செலுத்தி, அந்தக் கோணங்களில் கைகளையும் கால்களையும் வளைத்து ஆடுவதாகும். அங்க அசைவுகளையட்டி இது வித்தாரம் எனப்பட்டது. இதனை முனிதாண்டவம் என்பர்.

மாற்றங்களைச் சொல்லும் நுணுக்கம்
இது தொடர்ந்து நிகழும் மாற்றங்களைக் குறிக்கும். சங்கார தாண்டவம் எனவும் அழைக்கப்படும். தரங்கிணி என்னும் நாட்டியம் இதிலிருந்து பிறந்ததாகும். இந்தத் தாண்டவம் திருநெல்வேலியில் ஆடப்படுவதாகும்.

வெற்றியின் வெளிப்பாடு கால்வரி
வெற்றி பெற்றபின் ஆடும் ஆட்டம் இது. கைகளைக் கொட்டி ஆடுவதால் கொட்டி எனவும், கொட்டிச் சேதம் எனவும் அழைக்கப்பட்டது. இது பிரளய தாண்டவம் என்றும் கூறப்படும். சாலியம், வீர வெறியாடல் என்றும் இதைக் குறிப்பிடுவர்.

சுடலையில் ஆடும் பேய்வரி
இது பேய்களுடன் பண்டரம் என்னும் சுடுகாட்டில் ஆடுவதாகும். தாருகாவனத்தில் ஆடியதென்பர். இது பூதத் தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பெருமான் திருவெண்காட்டில் ஆடினான். திருவெண்காடு திருத்தலமானது சுவேதவனம் என்றும், பிரம்ம மாசானம் என்றும் ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுவது இங்கே சிந்திக்கத்தக்கதாகும்.

கஜம் உரித்தாடிய களிற்றுரி
இது எதிரிகளின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு ஆடும் கூத்து. சிவபெருமான் தாருகாவனத்து ரிஷிகள் அனுப்பிய யானையையும், கயாசுரன் எனும் யானையையும் உரித்து தோலைப் போர்த்திக்கொண்டு ஆடினார். அப்படி ஆடும் ஆட்டம் குஞ்சரம் என்றும் அழைக்கப் பட்டது.

கண்களை விழித்துக் கைகளை விரித்துக் கொடுமை தோன்ற ஆடும் ஆட்ட மாதலின் உக்ரம் எனப்பட்டது. இதிலிருந்து ராஜ நாட்டியம் தோன்றியது என்பர்.
பாம்புகளை ஏந்தி ஆடும் நச்சம்
நச்சு என்பது நஞ்சினைக் கொண்டுள்ள பாம்புகளைக் குறித்தது. பாம்புகளை ஏந்தி அழகாக ஆடியதால், சுந்தர தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.

புஜங்கம் என்றால் பாம்பு. பாம்புகளை அணிந்தாடுவதால் புஜங்க தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும் பாம்பாகிய வாசுகி அளித்த விஷத்தை உண்டு பித்தனைப் போல் ஆடியதால் பித்த நடனம் எனவும் அழைக்கப்படுகிறது. உன்மத்த நடனம் இதிலிருந்து தோன்றியதாகும்.

-Vikatan

24/12/2014

Arudhra Residency - 04144 - 221930
Dhaya mansion - 04144 - 220299
Hotel Akshaya - 04144 - 220191
Hotel Darshan - 04144 - 220194
Hotel Sabanayagam - 04144 - 220896
Hotel Saradaram - 04144 - 221337
Hotel Grand park - 04144 - 220859

AARDHRAA DHARSANA FESTIVAL SCHEDULE27.12.2014, Saturday	DWAJAAROHANAM 28.12.2014, Sunday	GOLDEN SOORYAPRABHA 29.12.2014,...
24/12/2014

AARDHRAA DHARSANA FESTIVAL SCHEDULE

27.12.2014, Saturday DWAJAAROHANAM

28.12.2014, Sunday GOLDEN SOORYAPRABHA

29.12.2014, Monday SILVER CHANDRAPARABHA

30.12.2014, Tuesday BHOOTHA VAAHANAM

31.12.2014, Wednesday SILVER
RISHABHAVAAHANAM(THERUVADAICHAAN)

01.01.2015, Thursday SILVER GAJA VAAHANAM

02.01.2015, Friday GOLDEN KAILAASA VAAHANAM

03.01.2015, Saturday BHIKSHADANAR ON GOLDEN CAR

04.01.2015, Sunday
MAHAA RATHOTHSAVAM OF SRINATARAJARAJAR

05.01.2015, Monday AARDHRA MAHAABHISHEKAM 3.30a.m., AARDHRAA DHARSANAM after 12.00 noon

Chidambaram Temple is a Hindu temple dedicated to Lord Shiva located in the heart of the temple town of Chidambaram,Tamil Nadu).The temple , 78 km south of Pondicherry and 235 Km from Chennai, the capital of Tamil Nadu state of southeastern India. The Sangam classics refer to Viduvelvidugu Perumtacc…

24/12/2014
24/12/2014

Natarajar Temple Chidambaram Margazhi aarudhra festival event invitation.

23/12/2014

chidambaram,thillai

Address

Aishwarya Apts
Chidambaram
608001

Alerts

Be the first to know and let us send you an email when Thillaikural-தில்லைகுரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thillaikural-தில்லைகுரல்:

Share


Other Media/News Companies in Chidambaram

Show All

You may also like