டிவைன் பிளவர் பகுத்தறிவு நாளேடு

  • Home
  • டிவைன் பிளவர் பகுத்தறிவு நாளேடு

டிவைன் பிளவர் பகுத்தறிவு நாளேடு கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் ? பெண்மையை போற்றுவோம் நம் வாழும் நிலையில்லாத ஆச்சாியமிக்க கொஞ்சநேர வாழ்வில்

உலக வெற்றியாளர்களின் வாழ்விலிருந்து நான் கற்ற 10 முக்கிய பாடங்கள்.....உலகம் முழுவதும் வெற்றியை அடைந்தவர்கள் அனைவரும் ஒரே...
07/04/2025

உலக வெற்றியாளர்களின் வாழ்விலிருந்து நான் கற்ற 10 முக்கிய பாடங்கள்.....

உலகம் முழுவதும் வெற்றியை அடைந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்திக்கவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் சில பொதுவான பாடங்கள் இருக்கின்றன. அந்த உலகின் சிறந்த வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்கவேண்டிய 10 முக்கிய பாடங்களை அறிவோம்....

(01) முன்னேற்றத்திற்காக அபாயத்தை ஏற்க வேண்டும்....

எடுத்துக்காட்டு: எலோன் மஸ்க் (Elon Musk)
எலோன் மஸ்க் தனது SpaceX மற்றும் Tesla நிறுவனங்களை தொடங்கும்போது பல தடைகளை சந்தித்தார். ஆனாலும், தனது கனவுகளை நிஜமாக்க எந்தளவிற்கும் சென்று, அபாயங்களை ஏற்று முன்னேறினார். வெற்றிக்காக ஒருபோதும் பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுக்காமல், புதுமைகளை விரும்ப வேண்டும்.

(02) தோல்வியை பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்....

எடுத்துக்காட்டு: ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)
Apple நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோதும், ஸ்டீவ் ஜாப்ஸ் அதை ஒரு பெரிய பாடமாக எடுத்துக்கொண்டு Pixar மற்றும் NeXT போன்ற நிறுவனங்களை உருவாக்கி, மறுபடியும் Apple-க்கு திரும்பினார். தோல்வி ஒரு முடிவு அல்ல, அது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு படிக்கல்.

(03) கல்வி மட்டுமே போதாது, நிபுணத்துவம் தேவை...

எடுத்துக்காட்டு: பில் கேட்ஸ் (Bill Gates)
பில் கேட்ஸ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை விட்டு விலகினாலும், தனது கணினி தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி Microsoft நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உருவாக்கினார்.

(04) மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.....

எடுத்துக்காட்டு: ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)
அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்க தான் தொழில்நுட்ப மாற்றங்களை செய்கிறார். மக்களின் தேவையை புரிந்து, அவர்களுக்கு உதவும்போது உங்கள் தொழில்முனைவில் அதிக வெற்றியைப் பெறலாம்.

(05) ஒருமுனைப்புடன் உழைக்க வேண்டும்...

எடுத்துக்காட்டு: ஒப்ரா விண்ப்ரி (Oprah Winfrey)
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒப்ரா விண்ப்ரி, தன்னம்பிக்கையுடன் மக்களின் வாழ்க்கையை மாற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கி உலக அளவில் புகழ்பெற்றார். தன்னம்பிக்கையும், தொடர்ந்து உழைக்கும் தன்மையும் வெற்றிக்கு முக்கியம்.

(06) உறுதியான இலக்கை வைத்துக் கொள்ள வேண்டும்...

எடுத்துக்காட்டு: வாரன் பஃபெட் (Warren Buffett)
நிதி முதலீடுகளில் உலகின் சிறந்த முதலீட்டாளராக இருக்கும் வாரன் பஃபெட், நீண்ட கால இலக்குகளை மனதில் கொண்டு தனது முதலீட்டுக் கொள்கைகளை உருவாக்கினார். சிறிய லாபங்களை நாடாமல், நீண்ட கால வெற்றியை நோக்கி செயல்பட வேண்டும்.

(07) சிந்தனை முறையில் தனித்துவம் கொண்டிருக்க வேண்டும்....

எடுத்துக்காட்டு: மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg)
Facebook (மாற்றப்பட்ட Meta) நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், சமூக வலைதளங்களை ஒரு புதிய நிலைக்கே கொண்டு சென்றார். புதிய யோசனைகளைப் பரிசோதித்து, பாரம்பரியமான முறைகளை மீறி, உலகை மாற்றியவர்.

(08) கடின உழைப்பு மற்றும் பொறுமை வேண்டும்....

எடுத்துக்காட்டு: ஜாக் மா (Jack Ma)
Alibaba நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, வேலைக்கான தேர்வுகளில் தொடர்ந்து தோல்வியுற்றவர். ஆனால், தனது லட்சியத்தை விட்டுவைக்காமல் கடின உழைப்புடன் போராடி, உலகளவில் முன்னணி தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பிடித்தார்.

(09) சிறந்த அணியை உருவாக்க வேண்டும்....

எடுத்துக்காட்டு: ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson)
Virgin Group நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன், வெற்றிக்கான ரகசியமாக தனது குழுவினரை குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வணிக முயற்சியும் ஒரு சிறந்த அணியால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

(10) எளியதாக இருக்க வேண்டும்....

எடுத்துக்காட்டு: சுந்தர் பிச்சை (Sundar Pichai)
Google-வின் CEO ஆன சுந்தர் பிச்சை எப்போதும் எளிமையாகவும், அடக்கமாகவும் இருப்பவர். அறிவை வளர்த்துக்கொள்வதும், மனிதர்களுடன் நேர்மையாக இருக்கவும் முக்கியமானவை.

முடிவுரை:
உலக வெற்றியாளர்களிடமிருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ளலாம். அவர்களின் வாழ்க்கை, அவர்கள் எடுத்த முடிவுகள், அவர்கள் எதிர்கொண்ட தோல்விகள்—இவை அனைத்தும் நம்மை நமது வெற்றிப் பாதையில் ஊக்குவிக்கின்றன. கடின உழைப்பு, தனித்துவமான சிந்தனை, வாடிக்கையாளர்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவை வெற்றிக்கான ரகசியங்கள்.
நீங்கள் இந்த பாடங்களில் எதை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!

🔥 சாதிக்க விரும்புகிறீர்களா? இந்த இந்திய தொழிலதிபர்கள் பின்பற்றும் தத்துவங்களை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்! 🚀> "நீங்க...
07/04/2025

🔥 சாதிக்க விரும்புகிறீர்களா? இந்த இந்திய தொழிலதிபர்கள் பின்பற்றும் தத்துவங்களை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்! 🚀

> "நீங்கள் எங்கே இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம்!"

இந்தியாவில் வெற்றியை அடைந்த தொழிலதிபர்கள், சாதாரண மனிதர்களாக தொடங்கி உலகத்தை மாற்றிய பெருந்தகைகள்! அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றிய தத்துவங்கள் உங்கள் வாழ்வையும் மாற்றி விடலாம்! இதோ, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் வெற்றிக்கான ரகசியங்கள்! 👇🔥

---

1️⃣ அப்துல் கலாம் – கனவுகளை மட்டும் காணாதீர்கள், அவற்றைச் செயலில் மாற்றுங்கள்! 🌠

📌 "Dream is not what you see in sleep, it is the thing which doesn’t let you sleep."
👉 கனவு காண்பதோடு மட்டும் நின்றுவிடாதீர்கள் – அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்!
👉 கடின உழைப்பு + தன்னம்பிக்கை = வெற்றி!

---

2️⃣ ரத்தன் டாடா – பணத்தை மட்டும் இல்லாமல், மதிப்பையும் சம்பாதியுங்கள்! 💎

📌 "Take the stones people throw at you and use them to build a monument."
👉 உங்கள் மீது யார் விமர்சனம் செய்தாலும் அதை சக்தியாக மாற்றுங்கள்!
👉 நேர்மையும், மனித நேசமும், அடிப்படை மதிப்புகளும் உங்கள் வெற்றிக்கு நிச்சயமாக உதவும்!

---

3️⃣ முகேஷ் அம்பானி – பெரிய கனவுகள், பெரிய சாதனைகள்! 💰

📌 "If you’re born poor, it’s not your mistake. But if you die poor, it’s your mistake."
👉 நீங்கள் சிறியதாக தொடங்கலாம், ஆனால் பெரிய கனவுகளுடன் செயல்பட வேண்டும்!
👉 குழு சக்தி, சரியான திட்டம், கடின உழைப்பு – வெற்றியின் மூன்றாவது ரகசியம்!

---

4️⃣ கீரண் மஜுந்தார் ஷா – சாதாரண மகளாக இருந்து பெண் துறவி வரை! 💪

📌 "Believe in yourself. Success is not far from those who are determined!"
👉 தன்னம்பிக்கையும், போராட்டமும் வெற்றியை கொண்டுவந்தது.
👉 சூழ்நிலை எப்படி இருந்தாலும், உங்கள் கனவுகளை விடாமல் கடைசி வரை உழையுங்கள்!

---

5️⃣ நாராயண மூர்த்தி – நேர்மை மற்றும் ஒழுங்கு வாழ்க்கையின் ராசி! 📊

📌 "Progress is often equal to the difference between mind and mindset!"
👉 Infosys நிறுவனத்தை ஆரம்பிக்க சிறிய முதலீடு இருந்தாலும், பெரிய வெற்றி பெற முடிந்தது!
👉 வெற்றிக்கு மூல காரணம் – நேர்மை, ஒழுங்கு, பொறுமை!

---

6️⃣ அசீம் பிரேம்‌ஜி – எளிமையான வாழ்க்கை, உயர்ந்த இலக்குகள்! 🏆

📌 "Ordinary people can do extraordinary things with determination."
👉 Wipro நிறுவனத்தை உலக அளவில் கொண்டு சென்றவர்!
👉 அவரது வெற்றியின் ரகசியம் – எளிமையான வாழ்க்கை + பெரிய இலக்குகள்!

---

7️⃣ கோதம் அதானி – ஆபத்துகளே வாய்ப்பாக மாறும்! 🔥

📌 "Risk and success are two sides of the same coin."
👉 Ports முதல் Renewable Energy வரை வளர்ந்த அதானியின் தத்துவம்!
👉 பயத்தை விட தைரியத்தோடு செயல்படுங்கள்!

---

8️⃣ விஜய் ஷேகர் சர்மா – சின்ன முயற்சிகளும் பெரிய வெற்றி தரும்! 💡

📌 "Think big, start small, act fast."
👉 Paytm உருவாக காரணமான மனப்பான்மை!
👉 சின்ன முயற்சிகள் கூட உலக அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்!

---

9️⃣ நந்தன் நீலேகணி – ஒரு இந்தியருக்கும் தனிப்பட்ட அடையாளம்! 🔍

📌 "Technology should empower people, not replace them!"
👉 Aadhaar திட்டம் – ஒரு நாட்டின் அடையாளம்!
👉 தொழில்நுட்பமும் சமூக நலனும் இணைந்து செயல்பட வேண்டும்!

---

🔟 ஷிபி கிரோவல் – வெற்றி என்பது வித்தியாசமான சிந்தனையில்தான்! 🎯

📌 "Disruption is the key to innovation!"
👉 Innov8 Coworking நிறுவனம் – வித்தியாசமான பார்வையில் உருவாக்கப்பட்டது!
👉 புதிய எண்ணங்களுக்குள் தான் புதிய வாய்ப்புகள் இருக்கும்!

---

🔥 இந்த தத்துவங்களை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் அடுத்த வெற்றியாளராக மாறலாம்! 🚀

"சந்தர்ப்பங்கள் வந்து செல்லும், ஆனால் உங்கள் முயற்சிகள் எப்போதும் நிலைத்து நிற்கும்!"

> 💬 இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிருங்கள்!👇
📢 உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள் – உங்கள் ஒரு பகிர்வு ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம்!

பிறக்கும்போதே யாரும் தலைவர்களாகப் பிறப்பதில்லை. அப்படியானால், எந்தப் பண்பு ஒருவரை ஒரு தலைவராக மாற்றி, மற்றவர்கள் அவரைப் ...
04/02/2025

பிறக்கும்போதே யாரும் தலைவர்களாகப் பிறப்பதில்லை. அப்படியானால், எந்தப் பண்பு ஒருவரை ஒரு தலைவராக மாற்றி, மற்றவர்கள் அவரைப் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு உத்வேகமூட்டுகிறது?

'வெற்றி' நிபுணரான பிரையன் டிரேசி பல்லாயிரக்கணக்கான மக்கள் தனித்துவமான தலைவர்களாக ஆக உதவியிருக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த தலைவராக ஆவதற்கு நீங்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களையும் அவற்றை எவ்வாறு நீங்கள் செயல்படுத்துவது என்பதையும் அவர் இந்நூலில் விளக்கியிருக்கிறார். அவற்றில் சில பின்வருமாறு:

மற்றவர்களிடம் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி

தாங்கள் ஒரு குறிக்கோளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை உங்கள் ஊழியர்களிடம் ஏற்படுத்துவது எப்படி

பாதகமான சூழ்நிலைகளை வாய்ப்புகளாக மாற்றிக கொள்ளுவது எப்படி

வெற்றி பெறும் குழுக்களை உருவாக்குவது எப்படி

சாதாரணமான மக்களிடமிருத்து அசாதாரணமான விளைவுகளைப் பெறுவது எப்படி

நிறுவனத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய ஒருவராக எல்லோரும் உங்களைப் பார்க்கும்படியான ஒரு நபராக ஆவது எப்படி

மாபெரும் தலைமைத்துவம் என்பது கற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு திறமையாகும். சிறப்பாகப் பலனளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ள பல வழிமுறைகளை உள்ளடக்கிய இந்த வழியாட்டி நூல், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற தலைமைத்துவ ஆற்றலை கட்டவழித்துவிடும் என்பது உறுதி.

பலநபர்களுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது பல நபர்களுடன் பாலுறவு கொண்டவர்களுடன் பாலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் எப்போதும் உங...
25/01/2025

பலநபர்களுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது பல நபர்களுடன் பாலுறவு கொண்டவர்களுடன் பாலுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள்

எப்போதும் உங்களை பாலுறவில் ஈடுபட முடியாத சூழ்நிலைக்கு உங்களை உருவாக்கிவிடும்

பாலியல் சார்ந்த வியாதிகள் 30 விதமான தொற்றுகள் உள்ளன இவை ஒவ்வொன்றுமே உங்களின் வாழ்க்கையை அழித்து உங்களை மரணத்திற்கு கூட்டி சென்றுவிடும் என்று பாலியல் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்

Chlamydia:
Gonorrhea:
Syphilis:
Trichomoniasis:
Hepatitis B:
Herpes simplex virus (HSV):
HIV:
Human papillomavirus (HPV):

சாதாரண மனிதர்களுக்கு தெரிந்தது எல்லாம் HIV மட்டும் தான் ஆனால் மற்றவை அனைத்தும் மிகவும் அபாயகரமான நோய் கிருமிகள் இந்த தொற்று ஏற்பட்டுவிட்டால் நீங்கள் எப்போதும் யாருடனும் பாலுறவு கொள்ள இயலாது

ஒரு சாதாரண ஒரு குடும்பத்தில் viral fever வந்தால் கூட அந்த குடும்பத்திற்க்கே பரவி விடுகிறது

Condom use பண்ணும் நபராக இருந்தாலும் நீங்கள் பாலுறவில் ஈடுபடும் நபர் பல நபர்களுடன் பாலுறவில் ஈடுபடுத்திருந்தால், Condom use பண்ணும்போது HIV வராது என்றாலும் மற்ற SexuallyTransmitted Disease STD 100% வருவது உறுதி

பல நபருடன் பாலுறவு கொண்ட பெண் ஒரு புதிய ஆணிடம் வாய்வழி புணர்ச்சி மேற்கொண்டால் அந்த பெண்ணிற்கு Human papillomavirus (HPV): தொற்று ஏற்பட்டு Throat Cancer, Tonsils Inflammation போன்ற வியாதிகள் ஏற்பட்டு அந்த பெண்ணின் வாழ்க்கையை பாதித்துவிடும் அந்த ஆணிற்கும் ஆணுறுப்பில் கொப்பளங்கள் infections தொற்று ஏற்படும்

வாய்வழி புணர்ச்சி (Oral s*x) marital partners அல்லது பல நபருடன் பாலுறவு கொள்ளாத நபராக இருந்தால் மட்டும் அவருடனான வாய்வழி புணர்ச்சி நன்கு சுகாதார முறையில் ஆண் பெண் மேற்கொள்ளவேண்டும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உங்களுக்கு நன்கு தெரிந்த நபராக அவர் பலநபருடன் பாலுறவு கொள்ளாதவராக இருக்க வேண்டும்

பலநபர்களுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற ஆசை உள்ள ஆண் பெண்ணாக இருந்தால் அவர்கள் துறவற வாழ்க்கை மேற்கொள்வது நல்லது ஏனென்றால் ஒரு தடவை தொற்று ஏற்பட்டாலும் உங்களால் வாழ்நாள் முழுவதும் பாலுறவு கொள்ளமுடியாது ஏனென்றால் இன்பஉறுப்புகளில் கொப்பளங்கள், வெடிப்புகள் உருவாகி உங்களின் இன்ப றுப்பு பழையநிலையை அடைய முடியாது

இதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது அவர்களுக்கு வாய்வழி புணர்ச்சி மூலம் Throat Cancer, கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வருவதற்கு Human papillomavirus (HPV) காரணமாக அமைகிறது

இளம் வயது ஆண்கள், திருமணம் ஆகாத ஆண்கள் படிக்கும் போதோ, வேலையில் இருக்கும்போதோ Multipartners Woman உடன் வாய்வழி புணர்ச்சி அல்லது Condom use பண்ணி பாலுறவு கொண்டாலும் அந்த ஆணுக்கு தொற்று ஏற்பட்டு அவர் திருமணம் செய்யும் போது அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வர வாய்ப்புஉள்ளது

தொற்றுகள்

பாக்டீரியா வஜினோசிஸ் (BV)

மைக்கோபிளாஸ்மா பிறப்புறுப்பு (Mgen),

இடுப்பு அழற்சி நோய் (PID) மற்றும் அந்தரங்க பேன்.

சில தொற்றுகள் இரத்தமாற்றம், பகிர்வு ஊசிகள் அல்லது தாய்ப்பால் மூலம் பரவலாம்.

STI களின் அறிகுறிகள்: அசாதாரண பெண்ணுறுப்பு வெள்ளை படுதல் வெளியேற்றம், சிறுநீர்க்குழாய் திரவம் வெளியேற்றம், பிறப்புறுப்பு புண்கள் மற்றும் கட்டிகள் மற்றும் அடிவயிற்று வலி அசாதாரணமாக அமையும்

பாலுறவு பொறுத்தவரை ஆணோ பெண்ணோ தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளாமல் 100% சதவீதம் Marital Partners உடன் இருப்பது சிறந்தது ஆனால் பல காரணங்களால் Divorce , தன் இணையுடன் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் பிரிந்து இருந்தால் அவர்கள் பலநபர்களை நாடி செல்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ஒரு ஆணோ பெண்ணோ தங்களின் உடலையும் மனதையும் அனைவருக்கும் என்று பகிர்ந்து கொள்ள நினைக்காமல் தங்களை நேசிப்பவர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள நினைப்பது சிறந்தது

THE 48 LAWS OF POWER.A Book written by Robert Greene that offers a Series of Strategies for Obtaining and Maintaining Po...
10/01/2025

THE 48 LAWS OF POWER.

A Book written by Robert Greene that offers a Series of Strategies for Obtaining and Maintaining Power in various situations. Here I leave you a summary of the 48 Laws:

1. Don't Outshine the Boss: Make your Superiors feel Superior. Don't expose your Talent too much or you might Trigger their Insecurity.

2.Don't Trust friends too much, use your Enemies: Friends Betray you more easily, but if you Manage to WIN an Enemy, they will be more Loyal.

3. Hide your Intentions: Keep People Off Balance so they can't anticipate your Actions.

4. Always say Less than Necessary: Silence Breeds Power, and Talking too much Reveals your Plans.

5. Protect your Reputation at all Costs: Reputation is the Cornerstone of Power.

6. Call Attention at all Costs: Be Visible to be Relevant.

7. Make others Work for you and Attribute it: Take Advantage of the Work and Effort of others to your Advantage.

8. Make others come to you: Don't Run after Others, make them Look for you.

9. Win with Actions, Never Arguments: Prove your Point through Actions, Not Words.

10. Avoid Losers and Unhappy: The Misfortune of others is Contagious; stay away from those who Bring you Down.

11. Make People Depend on you: If others Depend on you, you're in Control.

12. Disarm with Sincerity and Selective Generosity: Emotional Disarmament will give you an Edge.

13. When you ask for Help, Appeal to the Interests of Others: Appeal to what Benefits Others, not Gratitude or Compassion.

14. Introduce yourself as a Friend, act as a Spy: Learn to Extract Valuable Information from others without them Noticing.

15. Crush your Enemy Completely: Do not let your Enemy Recover, or he will seek Revenge.

16. Use Absence to Increase Respect: The Value of something Increases with Scarcity..

17. Keep Others in Suspense: Be Unpredictable, you will Confuse Others and Gain Power.

18. Do Not Isolate yourself: Loneliness Weakens you; Engage yourself in the Web of Influence.

19. Know Who You’re Dealing With: Choose Your Opponents And Partners Wisely.

20. Don't compromise with anyone: Maintain your Independence so you don't get Caught up in other People's Affairs.

21. Pretend to be a Fool to Catch the Sly: Let others think they have an Advantage over you.

22. Use the Surrender Tactic: Sometimes giving in at the Right Time gives you the Advantage.

23. Focus your Forces: Keep your Energy Focused on what really Matters.

24. Be a Master at Simulation and Disguise: Don't reveal all your cards.

25. Recreate your own identity: Be the architect of your own destiny.

26. Keep your hands clean: Make sure the responsibility for the problems falls on others.

27. Play with people's needs to create devotion: Satisfy their deep desires to earn you their loyalty.

28. Be bold in acting: Timidity is dangerous, boldness is powerful.

29. Plan everything to the end: Having a detailed plan allows you to avoid unpleasant surprises.

30. Make your accomplishments look easy: Minimize the effort you put in to make others think you have innate talent.

31. Control Other People's Options: Guide the decisions of others by giving them limited options.

32. Play with people's fantasy: Appeal to people's emotions and dreams to gain clout.

33. Discover the weaknesses of others: Identify what drives people to manipulate their actions.

34. Be rule in your behavior: Power lies in the appearance of greatness and dignity.

35. Master the art of timing: Don't rush; everything has its right time.

36. Despise what you can’t have: Don’t obsess over things that are out of your reach.

37. Create engaging spectacles: Theatrics and spectacles capture attention.

38. Think as you wish, but behave like everyone else: Do not openly defy social norms.

39. Stir the waters to catch fish: Destabilize others to make mistakes.

40. Despise free: What is free usually comes with a hidden cost.

41. Avoid imitating great men: Forge your own path instead of following in the footsteps of others.

42. Beat the shepherd and the sheep will scatter: He demolishes leaders to weaken his followers.

43. Work on the hearts and minds of others: Conquer the spirit of people to control them.

44. Disarm and anger with mirror effect: Reflect the actions of others to destabilize them.

45. Preach the need for change, but never reform too much: Radical change can generate resistance.

46. Never look too perfect: Perfection breeds envy and haters.

47. Don't exceed your goal: When you achieve what you want, retire on time.

48. Be amorphous: Be adaptable, don't limit yourself to a rigid form.

These laws are designed to handle situations of power, but it's important to consider context and personal ethics when applying them.

அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.. #கேள்வி:நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்...
09/01/2025

அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..

#கேள்வி:
நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்களில் நான் செய்த குறும்பிற்கு அளவில்லை. என்னைக் கல்லூரியில் நிறைய பெண்கள் விரும்பினர். ஆனால், ஏனோ எனக்கு காதல் பிடிக்கவில்லை. எனக்கு இப்போது 34 வயது. இத்தனை நாட்கள் கட்டுக்கோப்புடன் இருந்த என் மனம், இப்போது சஞ்சலப்படுகிறது. நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும், என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். என் பிரச்னை என்னவென்றால், அவளுக்கு திருமணமாகி விட்டது. அவள் வயது 22. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் சென்ற பின் தான், முதன் முதலில் அவளைப் பார்த்தேன். முதலில் இதை இனக்கவர்ச்சி என்று நினைத்தேன். ஆனால், அப்படியேதும் இல்லை என்று, நிச்சயமாக சொல்ல முடியும். அவளுடைய கணவன் கொஞ்சம் முன்கோபி. அதனால், அடிக்கடி அவளுக்கு அடி விழும். அவளை அரவணைக்க ஆள் இல்லாததால் தான், என்னை விரும்புகிறாளோ என்று, என் மனம் சில சமயம் சஞ்சலப்படும். அவளோ, “இருவரும் செத்துவிடலாம்’ என்றும், “கண்காணாத இடத்திற்கு போய்விடலாம்’ என்றும் கூறுகிறாள். அவள் கூறும் எதற்கும் நான் தயார். அவளில்லாமல் நான் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டேன். அவளைப் பார்க்காமல், என்னால் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை; என்னால் நிம்மதியாக தூங்கவும் முடிவதில்லை. ஏனெனில், ஒரு திருமணம் ஆன, பெண்ணின் மனதைக் கெடுத்து விட்டோமோ என்ற, உறுத்தல் தான்.

ஆனால், இந்த எண்ணம் முழுவதும் அவளைப் பார்க்கும் வரைதான். அவளைப் பார்த்தவுடன், என் மனம் மாறி விடுகிறது. என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் செய்வது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை. தவறாக இருந்தாலும் என்னால் திருத்தி கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய நான் முக்கால் பைத்தியம் ஆகிவிட்டேன். என்னை உடன் பிறவா சகோதரனாக நினைத்து, நல்லதொரு நல்வழியை காட்டுங்கள்.

⤵️
ஆலோசகர் #பதில்:

உங்கள் இருவரிடையே ஏற்பட்டுள்ள அன்பை, “காதல்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களேயானால் #சாரி. அது காதல் இல்லை.

நான் இப்படி சொல்வதற்காக வருத்தப்படக் கூடாது. ஒரு பெண்ணிடம் ஏற்படும் பரிவு, பச்சாதாபம், அன்பு, நட்பு இதெல்லாம் கூட, சில சமயங்களில் காதல்போல தோற்றமளிக்கும். காலப்போக்கில் அது, எந்த வகையை சேர்ந்தது என்பது புரிந்து விடும். ஆனால், அதற்குள், நாம் அவசரப்பட்டு, “இது காதல் தான்’ என்று முடிவு கட்டி, தாலி கட்டி, மேளம் கொட்டி, தனிக்குடித்தனம் போய், தனிமை இருட்டில், விட்டத்தை பார்த்து வெறித்தபடி, “நாம் செய்தது தப்போ’ என்று, யோசித்துக் கொண்டிருப்போம்.

காதலனும், காதலியும் நாள் முழுக்க ஒருவர், மற்றொருவரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்து, மாலையில் கடற்கரையிலோ, பூங்காவிலோ கொஞ்சநேரம் சேர்ந்திருந்து, மறுபடியும் பிரியும்போது, “மறுநாள் மாலை எப்போது வரும்… எங்கு சந்திப்போம்’ என்று நினைத்துக் கொண்டே பிரிகின்றனர். இந்த சமயத்தில், அவர்கள் இருவரது மனதிலும், இந்த ஒரு நினைப்பைத் தவிர, வேறு எதுவும் இருப்பது இல்லை. இருவரும் மணம் புரிந்து, ஒரே கூரையின் கீழ் வாழும்போது தான், ஒருவர் குறை மற்றவருக்குத் தெரிகிறது. காலை காபியிலிருந்து, இரவு படுக்கப்போகும் வரையில் சின்னதும், பெரிசுமாய் ஆயிரம் சச்சரவுகள்… அவள் அழும்போது முகம் ரொம்பவும் அசிங்கமாக இருப்பதுபோல அவன் உணர்கிறான்.

அதாவது, விலகி இருக்கும்போது மனதால் சேர்ந்திருந்தவர்கள், சேர்ந்து இருக்கும்போது, உள்ளத்தால் எங்கோ பிரிந்து போய் விடுகின்றனர். என்னதான் அந்தப் பெண்ணின் மீது உங்களுக்கு, உங்கள் பாஷைப்படி, அளப்பரிய காதல் இருந்தாலும், அவள் இன்றளவும் 'இன்னொருவன் மனைவி’ என்பதை, நீங்கள் மறக்கக் கூடாது.

அவள்தான் சிறுபிள்ளைத்தனமாக, “செத்துப் போய்விடலாம்; ஓடிப் போய் விடலாம்’ என்று சொன்னாலும், நீங்கள் கொஞ்சம் விவேகமாய் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். 'மாற்றான் மனைவியுடன் ஓடிப்போனான்’ என்கிற வார்த்தை, உங்களுக்கு தேவையா தம்பி… யோசியுங்கள்.

சரி, அவளைப் பிரிய முடியாது; வாழ்ந்தால் அவளுடன்தான் என்று நிச்சயம் செய்து விட்டீர்களானால், முதலில், அவளை, அவளது கணவனை விட்டு பிரிந்து வந்து, தாய் வீட்டில் இருக்கச் சொல்லுங்கள். 'எனக்கு இவருடன் வாழ பிடிக்கவில்லை. விவாகரத்து வேண்டும்.’ என்று, வக்கீல்மூலம் மனு தாக்கல் செய்து, விவாகரத்து பெறச் சொல்லுங்கள்.

அதற்கு பின், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொறுத்து, பின், ஊரறிய அவளை மணந்து கொள்ளுங்கள். இது தான் முறை. இப்படியெல்லாம் நடக்குமா, புருஷன்காரன் விடுவானா என்றெல்லாம், கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.

இது ஒரு பக்கம் இருக்க, இப்போது நான் கூறுவது உங்களுக்கு…
எப்போதுமே தூரத்தில் வைத்து பார்க்கிற எந்தப் பொருளுமே, அழகாகத்தான் இருக்கும். எட்டாத உயரத்தில் இருக்கும் பூ, அடுத்தவன் தோட்டத்து மாங்காய், ஊரான் பொண்டாட்டி… இதெல்லாம் இதில் சேர்த்தி. கைக்கு வந்தவுடன், “ப்பூ’ இவ்வளவுதானா என்றாகி விடும். நாளைக்கு உங்களுக்குள் ஏதாவது சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வராது என்று சொல்லக் கூடாது; வரும். சம்சாரம் என்று இருந்தால் சண்டை நிச்சயம் உண்டு. அப்போது, “ஏற்கனவே, நீ என்கிட்ட ஓடிப் போயிடலாமா என்று கேட்டவள் தானே… உன் #புத்தி எனக்குத் தெரியாதா?’ என்று கேட்கத் தோன்றும்.

எதிர்வீட்டு, அடுத்த வீட்டு ஆண்களுடன் அவள் பேசினால், “ஓ, இவளுக்கு அதுக்குள்ள நாம அலுத்துட்டோம் போலயிருக்கு… புதுசு தேடுறாளோ…’ – இப்படிப்பட்ட சந்தேகங்கள் தோன்றும். இப்போது இல்லாவிட்டாலும், வயதானவுடன் தோன்றும்.

வாலிபத்தில், இல்லற தர்மமோ, முறையோ எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் குதிக்கிற ஆண்பிள்ளைகள், வயதானவுடன் தன் மனைவியை மட்டுமன்றி, தன் மகளையும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவர்.

அன்பு சகோதரரே… நீங்கள் இந்த நிமிஷத்தை மட்டும் நினைக்கிறீர்கள். நான் இருபது வருஷத்தையும் சேர்த்து கற்பனை செய் து பார்க்கிறேன். இன்னொன்று சொல்கிறேன்… உங்கள் காதலியின் கணவர் அடிக்கிறார், முன் கோபி. சரி.. நீங்கள் இரு கை நீட்டி அணைக்கக் காத்திருக்கிறீர்கள்… அவளுக்கு, கணவரின் சாதாரண கோபம்கூட பெரிதாகத் தானே தெரியும்? சின்னக் குழந்தையை அப்பா அடித்தால், “அழாதே கண்ணு இங்கே வா’ என்று யாராவது அழைத்தால், பாய்ந்து கொண்டு ஓடாதா.. இன்றைக்கு அடிப்பதும், நாளை அணைப்பதும் தாம்பத்யத்தில் சகஜமல்லவா… கணவரிடம் திட்டு வாங்கும் பெண்கள் எல்லாம், இப்படி வேறு ஒருவருடன் ஓடுவது என்றால், அத்தனை நன்றாக இல்லையே தம்பி. எதற்கும் யோசித்து முடிவெடுங்கள்.

கணவனின் நண்பனிடம் ஆலோசனை கேட்கக்கூடாது, ஏன்?கணவனின் நண்பன் மட்டுமல்ல, பெண்கள் கணவனின் குறைகளை அல்லது நிறைகள் அல்லது அந்த...
23/12/2024

கணவனின் நண்பனிடம் ஆலோசனை கேட்கக்கூடாது, ஏன்?

கணவனின் நண்பன் மட்டுமல்ல, பெண்கள் கணவனின் குறைகளை அல்லது நிறைகள் அல்லது அந்தரங்கம் எதுவுமே ஆண்களிடம் ஆலோசனை அல்லது கருத்து கேட்க கூடாது.

ஆனால் பெண்கள் அப்படியில்லை. உதாரணமாக, ஒரு கணவன்மனைவியின் தோழியிடம், மனைவி சந்தோஷம் தரவில்லை என்று சொல்லுவது தவறு என்றாலும், அதனால் பின் விளைவுகள் ஒன்றும் கிடையாது.

சொல்லப்போனால், அந்த தோழி, நல்ல சிநேகிதியாக இருந்தால், அவள் பல நல்ல உபதேசம் சொல்லி, அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க, சந்தோஷம் ஏற்பட தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்வாள்!

ஆனால், ஒரு ஆண் முதலில், அந்த பெண்ணின் நிலைமையை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்ள வாய்ப்புண்டு!

அந்த பெண், "என் கணவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்வதில்லை!" என்று சொன்னால், ஆண்கள் என்ன பேச வேண்டும்?

உண்மை பேச வேண்டும்!

எது உண்மை?

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் கூட என் மனைவியிடம் பெரிய அன்பெல்லாம் காட்டியதில்லை. ஆனால் அதற்காக அவள் என்னை விட்டு வேறு ஒருவருடன் செல்ல மாட்டாள், என்று சொல்லவேண்டும். பெண்கள் மீது தவறு இருந்தாலும், அவள் தவறை பொய் சொல்லி மறைக்க வேண்டும். வள்ளுவர் சொல்வது போல், இங்கே பொய், வாய்மை ஆகி விடும். ஏனென்றால் நோக்கம், சேர்த்து வைக்கும் நல்ல நோக்கம்.

ஆனால் பெரும்பாலும் ஆண்கள், சபலம் அடைவார்கள். நமக்கு நல்ல சான்ஸ், என்று ஆறுதலாக பேசுவார்கள்!

பெண்கள் அந்த நேரத்தில், குழப்பம் அடையும் படி பேசினால், அந்த பெண் சலன பட வாய்ப்புகள் அதிகம். ஒரு பெண் தன் கணவனை பற்றி ஒரு ஆணிடம் குறை சொல்வது என்பது, ஆண்களை பொறுத்தவரை, சிக்னல் கொடுப்பது மாதிரி! வாய்ப்பை தவற விடாதே, என்றுதான் அந்த ஆண் உள்மனம் சொல்லும், அந்த பெண் தன் சொந்த தங்கையாக இல்லாத பட்சத்தில்!

ஆகவே கை கொடுத்த தெய்வம் சாவித்திரி மாதிரி ஒரு பெண் வெகுளி பெண்ணாக மாறினாலும் , கேட்கும் ஆண் ஒரு அண்ணன் சிவாஜி கணேசன் போலே பாசமலர்,. "மலர்ந்து மலராகி " என்று பாடமாட்டார்! அவன், ஆறுதல் சொல்லும் சாக்கில் ஜெமினி கணேசனாக மாறி "காலங்களில் அவள் வசந்தம் " என்று பாடும் வாய்ப்பு அதிகம். இது காதல் இல்லை, கள்ளக்காதல்! கூடாநட்பு!

அந்த கணவன் சீக்கிரம் " உச்சி வகுடெடுத்து, பிச்சி பூ வச்ச கிளி, பச்ச மலை பக்கத்திலே மேயுதுன்னு சொன்னாங்க " என்று பாடும் படி ஆகிவிடும்!

பெண்கள் சில விஷயங்கள் பேச வேண்டும் என்றால், பெண்களிடம் மட்டும் பேசவேண்டும். ஆண்களிடம் பேசுவது, "ரிஸ்க" என்றுதான் சொல்வேன்!

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்...செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான...
28/11/2024

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்...

செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல்.

இன்று…?

பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்கி சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது. கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல…பொதுவாகவே உறவுகளுக்குள் விரிசல் எங்கிருந்து வருகிறது? விரிசலை ஏற்படுத்த காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். எப்படி சுற்றி வளைத்துப் பார்த்தாலும் எல்லா காரணங்களும் பெரும்பாலும், இந்த பத்துக்குள் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியான பத்து காரணங்களை பார்க்கலாம்.

1. ஈகோ (Ego):

குடும்பத்துக்குள் எட்டிப் பார்க்கக்கூடாத விஷயம் ஈகோ, அந்த வார்த்தைக்குள்ளேயே ‘கோ’ என்பது இருப்பதால், யாராவது ஒருவருக்கு அது வந்துவிட்டால், நிம்மதியை விரட்டிவிடும். நீ பெரியவனா… நான் பெரியவளா என்று போட்டிபோடும் மைதானம் அல்ல, வாழ்க்கை. கணவனுக்கு தெரியாதது மனைவிக்கு தெரிந்திருக்கலாம்; மனைவிக்கு தெரியாதது கணவனுக்கு தெரிந்திருக்கலாம்; எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்னொரு பக்கம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இந்த ஈகோ அடிக்கடி வந்து போகும். அதனால் ஈகோவை தவிர்த்துவிடுவோம்.


2. தாழ்வு மனப்பான்மை: (Inferiority Complex)

இது எந்த நேரத்தில் மனிதனுக்குள் எட்டிப்பார்க்கும் என்பது தெரியாது. ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போய், அதற்காக வீட்டில் உள்ளவர்கள் சாதாரணமாக கிண்டல் செய்தால் கூட, அது சிலருக்கு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். அது நாளடைவில் அதிகமாகி தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்வார்கள். அந்த வட்டமே விரிசலாக மாறும். சமையல் தொடங்கி படிப்பு வரை இந்த தாழ்வுமனப்பான்மை எதற்காக வேண்டுமானாலும் வரலாம்.


3. தவறான புரிதல்: (Misunderstanding)

வாழ்க்கையை அழகாக மாற்றுவதே புரிதல்தான். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி… அப்பா பிள்ளை, அண்ணன் தங்கை என எந்த உறவுகளானாலும் புரிதல் என்பது அவசியம். புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கை வரமாகும். அதுமட்டும் இல்லாமல் போய்விட்டால், தொட்டதற்கெல்லாம் பிரச்னை எழ ஆரம்பித்துவிடும். ‘நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க…’ என்று எல்லோரிடமும் எரிந்து விழ ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவர்கள் எப்படி உங்களை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோல வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.


4. பொஸசிவ்னஸ்: (Possessiveness)

‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்று என்ற பொஸசிவ்னஸ் நமக்கு இந்நாளில் பழக்கமாகிவிட்டது. அளவு கடந்த அன்புதான் இந்த பொஸசிவ்னஸ். கணவன் வேறு ஒரு பெண்ணிடமோ, மனைவி வேறு ஓர் ஆணிடமோ சாதாரணமாக பேசினால் கூட அதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த இடத்தில் அப்படியான ஒன்று நிகழ்ந்தால், ‘ஹேய் லூசு… அவளும் நீயும் ஒண்ணா…’ என அதே இடத்தில் சொல்லி உங்கள் துணையின் முக்கியத்துவத்தை புரியவைத்துவிட வேண்டும். அப்படியே அதை வளரவிட்டால், ஆபத்துதான். இது கல்யாணம் ஆனதும் வரலாம். 40 வயதிலும் வரலாம். எந்த நேரத்திலும் இது என்ட்ரி ஆகலாம்.


5. சந்தேகம் (Suspicion):

பொஸசிவ்னஸுக்கும் இதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதன் அடுத்த கட்டம் இது. வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம். வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு. பல வீடுகளில் புகுந்த சந்தேகப்பேய், வீட்டையே புரட்டிப்போட்டு, சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது. அதனால் சந்தேகம் என்ற பேயை மனசுக்குள் விடாதீர்கள். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அதை உடனே உங்கள் துணையுடன் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகத்தை வளரவிட்டால் அது வெட்ட முடியாத முள் காடாக வளர்ந்துவிடும்.


6. மனம் விட்டுப் பேசாதது: (Not being open about their feelings)

எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசினால் தீர்ந்துவிடும். ஆனால், அப்படி பேசுவதற்குதான் பலர் தயாராக இருப்பதே இல்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வரும் சண்டைகளை இருவரும் பேசாமல் தள்ளிப்போடுவது தான் விரிசலை விரிவுபடுத்துகிறது. அதேபோல குழந்தைகளாக இருந்தாலும் சரி…
பெற்றோராக இருந்தாலும் சரி… அவரவர்களுக்குள் ஒரு எண்ணம் இருக்கும். மற்றவர்கள் அதில் இருந்து மாறுபட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆளுக்கொரு விஷயத்தை மனசுக்குள் மட்டுமே நினைத்திருந்தால் அதற்கு தீர்வு கிடைக்காது. அது விரிசலில் மட்டுமே முடியும்.


7. மூன்றாம் நபரின் தலையீடு:
(The intervention of a third person)

குறிப்பாக இது கணவன- மனைவி கவனிக்க வேண்டிய விஷயம். எந்த பிரச்னை வந்தாலும் அதை எந்த காரணத்துக்காகவும் மூன்றாம் நபரிடம் கொண்டு போகக் கூடாது. அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்கு மனைவியைவிடவும், மனைவிக்கு கணவனைவிடவும் வேறு எவரும் நல்லது நினைக்க முடியாது; நல்லது செய்யவும் முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் பிரச்னைக்குள் வந்தாலே நீங்கள் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறீர்கள் என்பதுதான் மறைமுகப் பொருள்.


8. துன்புறுத்தல்:
(Harassment)

கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பாசம், குழந்தைகளின் வரவுக்குப்பின் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். அதுவும் 40 வயதைக் கடந்த பெண்கள், குழந்தைகள் மீது அன்பையும் அக்கறையையும் காட்டிக் கொண்டு, கணவனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். கணவன் நெருங்கி வந்தாலும் விலகிப் போவார்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் துணைக்கு அரவணைப்பு முக்கியம். அடிப்பது, சண்டை போடுவது மட்டுமல்ல, விட்டு விலகிப்போவதும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அப்படியான ஒன்று நிகழும்போது இருவருக்கும் இடையில் விரிசல் தொடங்கியிருக்கும்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேளுங்கள். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணித்தால், அவர்களைப் பொருத்தவரையில் அதுவும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அந்தத் திணிப்பு நாளடைவில் உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும்.


9. விட்டுக் கொடுக்காதது: (Being Selfish)

குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. சண்டைக்குப் பிறகு யார் முதலில் பேசுவது என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் இரவு தூங்கப் போவதற்குள் முடிவுக்கு வந்துவிட வேண்டும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்; மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார். ‘அடச்சே… இதுக்கா சண்டை போட்டோம்!’ என மறுநாள் உங்களுக்கே தோன்றலாம். அதேபோல குழந்தைகளிடமும் சில விஷயங்களில் பெரியவர்கள் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். ’அவன் என்ன சின்ன குழந்தைதானே… நான் சொன்னால் கேட்க மாட்டானா?’ என்ற எண்ணம் வரவே கூடாது. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போக மாட்டான் என பெரியவர்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது.


10. சோசியல் மீடியா:
(Social Media)

இன்று பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைக்கும் விரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது சோஷியல் மீடியாக்கள். பெரும்பாலானோர் அதிக நேரத்தை இங்கேதான் செலவிடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதை விட சோஷியல் மீடியாவுக்குள் முன் பின் தெரியாதவர்களிடம் பேசுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, அலுவலகம் செல்வதற்கு என எல்லாவற்றும் தனித்தனியாக நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நேரம் காலமில்லாமல் சோஷியல் மீடியா நம்மை ஆக்ரமித்துவிடுகிறது.

இதைக் கேட்டால் பிரச்னை தொடங்கிவிடுகிறது. அதேபோல் போன். உங்கள் கட்டுப்பாட்டில் போன் இருக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது - முக்கியமாக படுக்கையறையில் - எந்தக் காரணத்துக்காகவும் போனை நோண்டிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அது உங்கள் துணையை எரிச்சல்படுத்தும்.

இந்த பத்து காரணங்களை திரும்ப ஒருமுறை படியுங்கள். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதை சரி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when டிவைன் பிளவர் பகுத்தறிவு நாளேடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share