நாம் தமிழர் செய்திகள்

  • Home
  • India
  • Chennai
  • நாம் தமிழர் செய்திகள்

நாம் தமிழர் செய்திகள் நாம் தமிழர் கட்சி - செய்திகள் Naam Tamilar Katchi - LIVE NEWS

19/08/2022

🔴 நேரலை: 19-08-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாயோன் பெருவிழா

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.ம...
20/07/2022

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்! – #சீமான் வலியுறுத்தல்

குமரி மலைகளை வெட்டி கேரளாவிற்குக் கடத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, தற்போது குமரி கடற்கரை பகுதியினை ஒன்றிய அரசின் அருமணல் நிறுவனத்திற்கு (IREL) தாரைவார்க்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கனிம வளங்களைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, தொடர்ச்சியாகக் கனிமவளங்களைச் சூறையாட அனுமதியளிக்கும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அரியவகைக் கனிமங்கள் பெருமளவு புதைந்து கிடக்கின்றன. நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தமிழ்நாட்டு ஆறுகள் மூலம் இக்கனிமங்கள் பல லட்சம் ஆண்டுகளாகக் கடலில் சேர்க்கப்பட்டு, தென்தமிழகக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. கடந்த 1965 ஆம் ஆண்டுக் குமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சியில் அணுசக்திக்குத் தேவையான தாதுப்பொருட்களைப் பிரித்தெடுப்பதற்கு அருமணல் தொழிற்சாலை இந்திய ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. அருமணல் தொழிற்சாலையில் தாதுமணலிருந்து அரியவகைக் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையால் கதிரியக்கம் அதிகமாகிறது என இப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன.

அதுமட்டுமின்றி, இக்கதிரியக்கம் கடற்கரை காற்றின் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் பரவி மக்களுக்குப் பெரும்பாதிப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக அப்பகுதிகளில் இதுவரை 5000க்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாதுமணல் அள்ளுவதினால் வெளிப்படும் கதிர்வீச்சுகளால் பிறக்கும் குழந்தைகள் மனநலம் குன்றியவர்களாகவும், முதுகுகட்டி, தீராத வாய்ப்புண், கழலைக் கட்டி, விழித்திரை பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வகை நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மக்களின் மரபணுவைத் தாக்கி அடுத்த தலைமுறைக்கும் புற்றுநோயைக் கடத்தும் பெருங்கொடுமையும் நிகழ்கிறது. மேலும் கழிவு மணலால் நிலம் பாலைவனம் போலாகி, குமரி மாவட்டமே வாழத்தகுதியற்ற நிலமாக மாறிவிடும்.

மேலும், இவ்வாறு கடலோர மணலிலிருந்து தாதுப்பொருட்களைப் பிரித்தெடுத்த பிறகு கழிவுநீரையும், மணலையும் கடற்கரை பகுதியில் கொட்டுவதால் கடலின் நிறமே சிவப்பாக மாறிவிடுகிறது. கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதினால் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் நாசமாகிறது. வள்ளியாற்றின் நன்னீரைத் தாதுமணலைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்திவிட்டு கழிவுநீரை அதே ஆற்றின் மறுபுறம் கலக்கவிடுவதால், வள்ளியாறே அழிந்து குற்றுயிரும், குலையுயிருமாகக் காட்சி அளிக்கின்றது. அதுமட்டுமின்றிக் கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே அமைந்திருக்கும் மணல் குன்றுகள் தரைமட்டமாவதால், கடல்நீர் ஊர்களில் புகுந்துவிடுவதோடு, நிலத்தடிநீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்காக மக்கள் அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இருக்கும் அருமணல் ஆலையால் மக்கள் இத்தனை துன்ப துயரங்களுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், தற்போது மேலும் 1144 ஹெக்டர் கடற்கரை நிலங்களை அருமணல் ஆலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்த தரவுகளைத் திமுக அரசு கேட்டிருப்பது பேரதிர்ச்சியளிப்பதாக உள்ளது. குறிப்பாகக் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் வாழும் மீனவமக்களின் எதிர்ப்பையும் மீறி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, தமிழ்நாடு அரசே நிலங்களை அபகரித்துக் கொடுக்க முயல்வது, இது மக்களுக்கான அரசுதானா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

கடந்த 2005ஆம் ஆண்டு இதே பகுதியில் அருமணல் ஆலைக்குத் தாதுமணல் சுரங்கம் தோண்ட 1700 ஏக்கர் நிலம் வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசு கோரியபோது, அப்போதைய குமரி ஆட்சியர் முறையாக ஆய்வுசெய்து, வெறும் 115 ஹக்டேர் கடற்கரை பகுதியை மட்டுமே கொடுக்க இயலும் என்று அரசுக்குப் பரிந்துரை அளித்திருக்கும் நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், வனத்துறை எனப் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டு விதிகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது 1144 ஹெக்டர் கடற்கரை நிலங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி, ஏற்படும் பாதிப்புகள் குறித்த எவ்வித அக்கறையுமின்றி திமுக அரசு அளிக்க முன்வருவது அப்பட்டமான மக்கள் விரோதப்போக்காகும். மீனவ கிராமங்களைக் காலிசெய்து அருமணல் ஆலைக்குக் கொடுப்பதன் மூலம், அதானியின் துறைமுகம் அமைக்க வழிவகைச் செய்யும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்திற்கு, மாநில திமுக அரசும் துணைபோகிறதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனவே தமிழ்நாடு அரசு, குமரி மாவட்ட கனிமவளங்களைக் கேரளாவுக்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த தவறியதுபோல் அல்லாமல், உடனடியாக இவ்விடயத்தில் சீரிய கவனமெடுத்து, மக்கள் நலனுக்கு எதிராகக் கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க நிலம் வழங்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையேல் குமரி மாவட்டத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.

https://twitter.com/SeemanOfficial/status/1549632048608038913?s=20&t=q5tfbqwYujyjfor6FvFWww

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Chief Minister of Tamil Nadu | M. K. Stalin

#தற்போது | | |

10/06/2022

🔴 தற்போது நேரலையில்: 10-06-2022 திருச்சி(சமயபுரம்) | பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் மதுக்கடைகளை மூடக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் உழைப்பாளர் நாள் நிகழ்ச்சிஉழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலை...
01/05/2022

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் உழைப்பாளர் நாள் நிகழ்ச்சி

உழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற மே நாளையொட்டி இன்று 01-05-2022 காலை 10 மணியளவில், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில், தொழிற்சங்கப் பேரவை மாநிலத் தலைவர் இரா.அன்புத்தென்னரசன் மற்றும் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார் ஆகியோரது தலைமையில் மே தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டச் செயலாளர் மு.குமரன் தொழிற்சங்கப் பேரவைக் கொடியேற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் இராஜேந்திரன் அவர்கள் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுக் கல்வெட்டைத் திறந்துவைத்தார். உடன் தொழிற்சங்கப் பேரவை துணைத்தலைவர் கோ.சீனிவாசன், திருப்பெரும்புதூர் நாடாளுமன்றப் பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் மு.ஆனந்த், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், மதுரவாயல் தொகுதிச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தொழிற்சங்கப்பேரவை பொறுப்பாளர்களும், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்...
02/03/2022

உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

https://twitter.com/SeemanOfficial/status/1498979488197410819?s=20&t=-ZaCreysbjZjx6_RxEYQNQ

ரஷ்யா–உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அத்துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கெடுக்கிறேன். உக்ரைன் நாட்டின் கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷிய இராணுவம் நடத்தி வரும் கோரத்தாக்குதலினால் அந்நகரங்களிலுள்ள இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் செய்திகள் பெருங்கவலையைத் தருகின்றன. இதனால், இந்தியாவிலுள்ள அவர்களது பெற்றோரும், உறவினர்களும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வந்து, தாயகத்திலுள்ள அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசின் தார்மீகக்கடமையாகும்.

மக்களாட்சித்தத்துவத்தை ஏற்றுக்கொண்ட உலகின் மிகப்பெரும் நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் கல்வி என்பது விற்பனைப்பண்டமாக ஆக்கப்பட்டு, பெரும் வர்த்தக நிறுவனங்களாகக் கல்வி நிறுவனங்கள் உருமாற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையிருப்பதாலேயே கல்வி வாய்ப்புக்காக அந்நிய நாடுகளுக்கு இந்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலப் பயணப்படுகிறார்கள் என்பதும், விடுதலைபெற்று 70 ஆண்டுகளைக் கடந்தும் கல்வியறிவில் தன்னிறைவுப் பெறாதிருக்கிற இந்நாட்டின் கொடுஞ்சூழலும், சொந்த நாட்டு மக்கள் விரும்பியக் கல்வியைப் பயிலப் பொருளாதாரம் இந்தியாவில் பெரும் தடைக்கற்களாக இருக்கிற துயர நிலையும் ஏற்கவே முடியாத சனநாயகத்துரோகமாகும். இதனாலேயே, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் கல்வி பயிலச் செல்கின்றனர். அந்நாட்டில் வெளிநாட்டிலிருந்து கல்வி பயிலச்செல்லும் மாணவர்களில் 24 விழுக்காட்டினர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். தற்போதையப் போர்ச்சூழலில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைக்காது இந்தியா நடுவு நிலை வகித்ததால், அந்நாட்டிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும், மிகச்சொற்ப எண்ணிக்கையில்தான் மாணவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்; பெருவாரியான மாணவர்கள் இன்னும் மீட்கப்படவில்லையென்றும் வரும் செய்திகள் பெரும் அச்சத்தைத் தருகின்றன.

ஆகவே, உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரணமானப் போர்ச்சூழலைக் கருத்தில்கொண்டு, பல்லாயிரக்கணக்கில் அங்குள்ள இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்து அவர்களைப் பாதுகாப்பாக நாடுதிரும்ப செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

16/02/2022

தற்போது நேரலையில்: 16-02-2022 சென்னை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் - தி.நகர் (சென்னை) | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022!

https://youtu.be/AZwBXah-EzA

14/02/2022

தற்போது நேரலையில்: 14-02-2022 கடலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் - கடலூர் | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

13/02/2022

நேரலை: 13-02-2022 பாளையங்கோட்டை | தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம்

தற்போது நேரலையில் 13-02-2022 பாளையங்கோட்டை | தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

12/02/2022

நேரலை: 12-02-2022 தஞ்சாவூர் - பாலகணபதி நகர் | ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

தற்போது நேரலையில் 12-02-2022 தஞ்சாவூர் - பாலகணபதி நகர் | ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல வேட்பாளர் அறிமுகக் கூட்டம் | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

11/02/2022

நேரலை 11-02-2022 நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் - சேலம்

#தற்போது நேரலையில்: 11-02-2022 நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் - சேலம் | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

10/02/2022

நேரலை: 10-02-2022 திருப்பூர் - சீமான் பரப்புரை | கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேட்பாளர் அறிம…

நேரலை: 10-02-2022 திருப்பூர் - சீமான் பரப்புரை | கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம்

10/02/2022

🔴தற்போது நேரலையில்:

https://youtu.be/vteHgiK4f34

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

முத்துச்சாமி முதலியார் திருமண மண்டபம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்

08/02/2022

நேரலை: 08-02-2022 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. தமிழ்நாடு முழுவதும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொள்ளவிருக்கும் தொடர் பரப்புரை குறித்தும், நகர்ப்புறத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்திட்டங்கள் குறித்தும் செய்தியாளர்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 08-02-2022 செவ்வாய்க்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 2022
02/02/2022

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 2022

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 13ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு, நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் இன்று  (...
29/01/2022

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 13ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு, நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் இன்று (29-01-2022) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் நடைபெற்றது

26/01/2022

பேராசையை விட்டவன்..!

நாளும் பல நற்செய்திகள்!

https://youtu.be/sbYrxAziQ74

26-01-2022 | 206 | Seeman Quotes

| #நாளும்பலநற்செய்திகள் |

எந்தத் தன்னலமும் இல்லாமல், தன் வாழ்வு பாராமல், நம் மொழி காக்க தன்னுயிரை தந்த மான மறவர்களான மொழிப்போர் ஈகிகளை ஒவ்வொரு தமி...
25/01/2022

எந்தத் தன்னலமும் இல்லாமல், தன் வாழ்வு பாராமல், நம் மொழி காக்க தன்னுயிரை தந்த மான மறவர்களான மொழிப்போர் ஈகிகளை ஒவ்வொரு தமிழரும் நினைவில் சுமந்து, அவர்கள் எந்த கனவிற்காகத் தன்னுயிரை தந்தார்களோ, அந்தக் கனவை நிறைவேற்ற உழைப்பேனேன உறுதி ஏற்க வேண்டுமென உலகமெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களுக்குப் பேரழைப்பு விடுக்கிறேன்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான்

Address

Chennai
600028

Alerts

Be the first to know and let us send you an email when நாம் தமிழர் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நாம் தமிழர் செய்திகள்:

Videos

Share