4 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் அரசியலில் கால்பதிக்க ஆரம்பித்தபோது நடிகர் சிவகுமார் அனுப்பிய வாழ்த்து வீடியோ
Ithayakkani
பிரதமர் மோடி அவர்களுக்கு தெரிகின்றது எம் ஜி ஆர் ஆன்மா பற்றி. எம்ஜிஆரால் உருவானவர்கள், வளர்ந்தவர்கள், பொருள் சேர்த்தவர்கள் சிலர் அவரை புறக்கணிக்கிறார்கள். யார் தவறு செய்தாலும் புரட்சித்தலைவரின் ஆன்மா மன்னிக்காது. அவர் புகழை அழிக்க யாராலும் முடியாது,
Ithayakkani News
MGR song reflected
கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால் கோபுரம் ஆவதில்லை
குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால்
பருந்துகள் ஆவதில்லை
(படம் : ஆசைமுகம், பாடல் : கவிஞர் வாலி)
எம்ஜிஆருக்கான இந்த பாடல் வரிகள்
'கூலி' படத்தில் கவுண்டமணி, செந்தில்
நடித்த இந்த காட்சிக்கு பொருந்துகின்றதல்லவா ?
இதயக்கனி எஸ். விஜயன்
Agitation against DMK
திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய போராட்டத்தின் போது, முன்னாள் அமைச்சர்
திரு டி.ஜெயகுமார் அவர்களுக்கு
திடீரென இந்த திரைப்பட பாடல் நினைவிற்கு வந்தது...அதை தங்கள்
பாணிக்கு மாற்றினார்.... 👇
அண்ணே அண்ணே..
ஸ்டாலின் அண்ணே..
நம்ம ஊரு நல்ல ஊரு...
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே...
அத சொன்னா வெட்கக்கேடு !
நான் சொல்லாட்டி மானக்கேடு....😂
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா ?
Ithayakkani S Vijayan
Mohanlal video
மலையாள உச்ச நட்சத்திரம் மோகன்லால் கார்ட்டூன் அனிமேஷன் வடிவில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தாய் மொழியில் வெளியிட்டுள்ளார்.
அதில் கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முக கவசம் அணியும் அவசியம், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுதல், அவசியமின்றி வெளியே செல்லாது வீட்டிலேயே பாதுகாப்புடன்
இருக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதை நமது நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்தலாமே.
#இதயக்கனி
Corona awareness video
கொரோனா தொற்றிலிருந்து விடுபட விழிப்புணர்வுக்கான யோசனைகளை நடிகர் திரு சத்தியராஜ் வழங்குகிறார்.
#Ithayakkani
Arasilangumari movie
''நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'' இது சித்தர் பாடல், 'அரசிளங்குமரி' படத்தில் தங்கவேலுவை பார்த்து எம்.ஜி.ஆர். பாடுவது போலும் வரும். இதே வரிகளில் மாற்றம் செய்து -அதே ட்யூனில் டி.எம்.எஸ் பாடியது அந்தப் பாடல். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது.
"நந்தவனத்திலோர் ஆண்டி -அவன் வந்த இடத்திலோ மங்கையை வேண்டி வார்த்தையைக் கொடுத்துப் புட்டாண்டி -இவன்
வம்பாக மாட்டிண்டுத் தொங்கப் போறாண்டி
காஷாயம் கட்டி கிட்டாண்டி- கொஞ்சம் காதல் கதையிலும் ஓட்டிக் கிட்டாண்டி வேஷத்தை மாத்திக் கிட்டாண்டி- இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக்கட்றாண்டி"
இந்த பாடல் வரிகளையெல்லாம் சொல்வதற்கு காரணம், 1991 - முதல் 2021 - வரை தலைமைப் பண்பு இல்லாத 'தலைவர்களை' துதிபாடி துதிபாடி தூக்கி வைத்துக்
Amith sha about MGR
#எம்ஜிஆர்_ஒரு_மகான் - அமித்சா புகழாரம் !
அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, மற்றும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "எம்.ஜி.ஆர்.,ஒரு மகான். அவர் ஏழை மக்களின் உண்மையான தலைவர்" என்று புகழாரம் சூட்டினார்.
எம்.ஜி.ஆரை பொதுவாகவோ, சுய நலத்திற்காகவோ யார் பாராட்டினாலும் அதைப் பதிவு செய்வதும், ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். ஒருவர் விருப்பத்தில் இன்னொருவர் தலையிடுவது எம்.ஜி.ஆர். வழியல்ல.
Ithayakkani-இதயக்கனி
Fight against Corona
கொரோனாவை எதிர்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஹோமியோபதி மருந்து !
கொரோனாவுக்கு உரிய மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் அண்மையில் மத்திய மாநில அரசுகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஹோமியோபதி மருந்துகளை சிபாரிசு செய்துள்ளன. அதில் ஒன்று 'ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்து.
இதனை அறிமுகம் செய்து ஊடகங்களை சந்தித்த மீன்வளத்துறை
அமைச்சர் திரு டி. ஜெயகுமார், இந்த மருந்துகளை கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தனது ராயபுரம் தொகுதியிலுள்ள 12 அம்மா உணவகங்களிலும் சாப்பிட வருகின்ற அனைவருக்கும் தனது செலவில் அளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அது பற்றிய விபரங்களை ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் திரு ஞானசம்பந்தம்
கூறுகின்றார்.
#Ithayakkani S Vijayan
Boycott Chinese PRODUCTS
சீனாவின் நாட்டாமைக்கு முடிவு ?
இந்திய எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவில் நிலையற்ற தன்மையை உருவாக்க முற்படுகிறது சீனா.
போர்ச்சூழல் காணப்படும் நிலையில்,
பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்களின் முதலீட்டை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து யோசிக்கும். சீனாவின் இந்த ராஜதந்திரத்தை சாதுர்யமாக
எதிர்கொள்ள வேண்டும். எல்லையில்
நமது ராணுவ கட்டமைப்புகளை
பலப்படுத்தும் அதே நேரத்தில், மோதல்கள் இல்லாத சூழலும் நிலவ வேண்டும்.
15 -5 -2020 'தினமணி' தலையங்கத்திலிருந்து......
சீனாவின் இது போன்ற நாட்டாமைக்கு
முடிவு கட்ட முதலில் அனைத்து நாடுகளும் சீன உற்பத்தி பொருட்களை
புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில்
கண்மூடித்தனமான கட்சிப்பற்றை,
தகுதியில்லாத தலைவர்களை கொண்டாடும் செயலை இரண்டாம்பட்சமாக்கி, யார் ஆட்சி செய்தாலும் தேசப்பற்றை முதலிடத்தில்
வைத்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சீன பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை எல்லா மொழிகளிலும்
பரப்ப வேண்டும். செய்வோமா ?
#BOYCOTT #CHINESE #PRODUCTS
(கீழேயுள்ள வீடியோ ஒரு மாதத்திற்கு
முந்தியது என்றாலும் இன்றைக்கும் அது ஏற்புடையதே).
#Ithayakkani S Vijayan