D மீடியா Life

  • Home
  • D மீடியா Life

D மீடியா  Life LifeStyle - Travel - Culture - Food

  Tamil   பலமுனைப் போட்டி யாருக்கு லாபம் |     |         வரவிருக்கும் 2026 தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகி வருகிறது. த...
22/09/2025

Tamil
பலமுனைப் போட்டி யாருக்கு லாபம் | |

வரவிருக்கும் 2026 தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகி வருகிறது. திராவிட கட்சிகளுக்குள் மட்டுமே நிலவி வந்த போட்டி இப்போது பல்வேறு கட்சிகளின் வரவால் மாற்றம் அடைந்திருக்கிறது. இது குறித்து ஊடகவியலாளர் கார்டூனிஸ்ட் பாலா தயாளனுடன் நிகழ்த்திய நேர்காணல். நன்றி
முழு காணொலிக்கு:

Tamil பலமுனைப் போட்டி யாருக்கு லாபம் | | வரவிருக்கும் 2026 தேர்தலில் பலமுனைப் போட்டி ...

  | படை மானிய முறையும் நாயக்கர் பாளையங்களும் |         சோழர் காலம் வரை தன்னிச்சையாக இயங்கிய ஊர் சபைகளும் படையணிகளும், நா...
07/09/2025

| படை மானிய முறையும் நாயக்கர் பாளையங்களும் |

சோழர் காலம் வரை தன்னிச்சையாக இயங்கிய ஊர் சபைகளும் படையணிகளும், நாயக்கர் காலத்தில் படை மானிய முறைக்கு மாற்றப்படுகின்றன. படை மானிய முறையில் நாயக்க மண்டலங்கள் பாளையங்களாக பிரிக்கப்பட்டு வரி வசூல் செய்யும் முறையில் பெரும் மாற்றம் நிகழ்கிறது. இதுவே தொழில் அடிப்படையிலான குழுக்கள் ஏற்றத் தாழ்வு கொண்ட சமூகமாக இறுக்கமடைந்ததற்கான சூழலை உருவாக்கியது என்கிறார் பண்பாட்டு நுண்கலை ஆய்வாளரும் சிற்பியுமான ராமச்சந்திரன்.

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join | படை மானிய...

தமிழ் மரபு தொன்மங்கள் வரலாறு பண்பாடு இவற்றை எப்படி புரிந்து கொள்வது |     தென்னிந்திய பண்பாட்டு நுண்கலை ஆய்வாளரும் சிற்ப...
06/09/2025

தமிழ் மரபு தொன்மங்கள் வரலாறு பண்பாடு இவற்றை எப்படி புரிந்து கொள்வது |

தென்னிந்திய பண்பாட்டு நுண்கலை ஆய்வாளரும் சிற்பியுமான ராமச்சந்திரன் வழங்கும் பல்வேறு வரலாற்று பண்பாட்டு தகவல்களின் மூலம் முழுமையான தமிழ் நாட்டு வரலாற்று சித்திரத்தை முன்வைக்கிறார். கரிகாலன் தீர்ப்பை வியந்த மாவீரன் அலெக்சாண்டர், ஆற்றுக் கணவாய்கள் எப்படி செயல்பட்டன, வரி விதிப்பு முறைகளும், படைமானிய முறைகளும், கதைகளுக்கு பின்னால் உள்ள தொன்மங்கள், ஆவணங்கள் இவற்றின் மூலம் காரண காரிய தொடர்பை விளக்குகிறார்.

முழுமையான தொகுப்புக்கு :

Tamilதமிழ் மரபு தொன்மங்கள் வரலாறு பண்பாடு இவற்றை எப்படி புரிந்து கொள்வது | தென்னிந்திய பண்பாட்டு நுண...

  | சோழர்களின் நீடித்த வெற்றிக்கு காரணம் என்ன? |       மலைக் கணவாய்கள் போல ஆற்றுக் கணவாய்கள் புழக்கத்தில் இருந்தன, அவை த...
05/09/2025

| சோழர்களின் நீடித்த வெற்றிக்கு காரணம் என்ன? |

மலைக் கணவாய்கள் போல ஆற்றுக் கணவாய்கள் புழக்கத்தில் இருந்தன, அவை தாழையூத்து என்ற பெயரில் அழைக்கப்பட்டன என்றும் அங்குதான் சுங்கம் வசூலிக்கப்பட்டதாக தகவல் சொல்கிறார் ஆய்வாளர் ராமச்சந்திரன். சோழப் பேரரசில் பல்வேரு வகையான வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டன அதன் காரணமாக நுட்பமான நிதி நிர்வாகம் நடைபெற்றது என்று அதுவே அரசுகளின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன என்றும் சொல்கிறார் ராமச்சந்திரன்.

முழுமையான காணொலிக்கு:

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join | சோழர்களின்...

        | Ramachandran | நெசவு தொழில் மரபு அழிந்தது எப்படி? | British India |  திருவள்ளுவர் குறிப்பிடும் அறுதொழில்கள் என...
03/09/2025


| Ramachandran | நெசவு தொழில் மரபு அழிந்தது எப்படி? | British India |

திருவள்ளுவர் குறிப்பிடும் அறுதொழில்கள் என்பவை வேளாண்மையும், நெசவும். வணிகக் குழுக்களின் படையணியாக செயல்பட்ட வரலாறு, படிப்படியாக நெசவும் வேளாண்மையும் அழிக்கப்பட்டு ஐரோப்பிய வணிகர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்த வரலாற்றை விளக்குகிறார் பண்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன்.
முழுமையான காணொலிக்கு :

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join | Ramachand...

பழந்தமிழர் வணிகத்திற்கும் ரோமப் பேரரசுக்கும் என்ன தொடர்பு? | Ramachandran | Tamiltrade | History https://youtu.be/Yhu0ip...
01/09/2025

பழந்தமிழர் வணிகத்திற்கும் ரோமப் பேரரசுக்கும் என்ன தொடர்பு? | Ramachandran | Tamiltrade | History
https://youtu.be/Yhu0ip7UMOg

தமிழர்களின் வணிகம் வரலாற்றுக் காலம் தொட்டே நிகழ்ந்து வருகிறது. முசிறியிலிருந்து சென்ற வணிகர்களுக்கும் ரோம வணிகர்களுக்கும் இடையே நிகழ்ந்த வணிக ஒப்பந்தம் சில வரலாற்று புதிர்களை விடுவிக்கிறது என்று சொல்கிறார் ஆய்வாளரும் சிற்பியுமான ராமச்சந்திரன்.
முழு காணொலிக்கு : https://youtu.be/Yhu0ip7UMOg

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join ்தமிழர் வணிகத்திற்கும் ...

படை வீடு | காவல் கோட்டம் | சதுர்வேதி மங்கலம் உருவானது எப்படி? | Ramachandran | Tamilhistoryசோழ, பாண்டிய அரசுகளால் பிராமண...
29/08/2025

படை வீடு | காவல் கோட்டம் | சதுர்வேதி மங்கலம் உருவானது எப்படி? | Ramachandran | Tamilhistory

சோழ, பாண்டிய அரசுகளால் பிராமணர்களுக்கு ஏன் நிலங்கள் வழங்கப்பட்டன? அதன் அரசியல் பின்னணி என்ன? அவை அரசின் எல்லைகளில் உருவாக்கப்பட்டவை என்கிறார் ஆய்வாளர் ராமச்சந்திரன். மேலும் அவர்களுக்கு நிலம் கொடையாக வழங்கப்படவில்லை என்றும் இறையிலி நிலங்களாக மட்டுமே வழங்கப்பட்டன. படைவீடு, காவல் கோட்டம், மங்கலங்கள், சாலைகள் ஆகியவை எல்லைகளில் வழங்கப்பட்டு அரசை பாதுகாக்கும் அரசியல் உத்தி மட்டுமே என்று விளக்குகிறார் ராமச்சந்திரன்.
காணொலிக்கு :

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join படை வீடு | காவல் கோட்டம் ...

  dance    #நம்பாடுவானின் கைசிக கூத்தும் மாதவியின் தலைக்கோலி பட்டமும் | Srirengam      திருக்குறுங்குடி நம்பாடுவான் கைசி...
24/08/2025

dance #நம்பாடுவானின் கைசிக கூத்தும் மாதவியின் தலைக்கோலி பட்டமும் | Srirengam


திருக்குறுங்குடி நம்பாடுவான் கைசிக நடனத்தில் சொல்லப்படும் கதையின் பொருள் என்ன? கைசிக கூத்து என்றால் என்ன? மாதவி கைசிக கூத்தில் சிறந்து விளங்கியதால்தான் தலைக்கோலி பட்டம் தரப்பட்டது. நடு இரவில் நிகழ்த்தப்படும் கைசிக கூத்தில் பிரம்ம ராட்சஷன் யார்? சாப விமோசனம் எதைக் குறிக்கிறது போன்ற தகவல்களை வரலாற்று கண்ணோட்டத்தில் விளக்குகிறார் பண்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன்

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join dance #நம்பாடுவானின் கைசிக கூத்து...

  | ஏழு வள்ளல்களும் நளன் கதையும் |   | Tamilhistory | Tamiltraditionதமிழ் மரபில் ஏழு வள்ளல்களின் கதையின் சாராம்சத்தை விவ...
22/08/2025

| ஏழு வள்ளல்களும் நளன் கதையும் | | Tamilhistory | Tamiltradition

தமிழ் மரபில் ஏழு வள்ளல்களின் கதையின் சாராம்சத்தை விவரிக்கும் ராமச்சந்திரன் நளன் கதையின் தொன்மத்தையும் விளக்குகிறார். வள்ளல் தன்மை என்பது வாக்கு தவறாமை என்றும் நளனின் சனி தோஷம் விலக அவனுடைய கணித அறிவை சோதித்து விடுவிக்கப்பட்டான் என்பதையும் விவரிக்கிறார்.
முழு காணொலிக்கு :

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join | ஏழு வள்ள...

     | கோவில் நிலங்கள் உருவானது எப்படி? | Rajaraja Cholan | Tamil History | Karikalanhttps://youtu.be/eA3nMlX0-3Uதமிழ் ந...
20/08/2025


| கோவில் நிலங்கள் உருவானது எப்படி? | Rajaraja Cholan | Tamil History | Karikalan
https://youtu.be/eA3nMlX0-3U
தமிழ் நாட்டு கோவில்களின் நிலங்களும் மங்கலங்களுக்கும் இறையிலி நிலங்களாக உருவானது எப்படி என்பதை விளக்குகிறார். மண்டகப்படிகள் முறை உருவான வரலாற்றையும் கோவிலுக்கான தானங்களின் வரலாற்றையும் விளக்குகிறார் சிற்பி ராமச்சந்திரன். மங்கலங்களுக்கும் கோவிலுக்கும் உறவில்லை என்றும் அவை அரசின் எல்லைப்புறங்களில் உருவாக்கப்பட்டவை என்றும் நிறுவுகிறார் ராமச்சந்திரன்.

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join | கோவில் நிலங்கள்...

                    |  #சிறுவனாய் இருக்கும் போதே கரிகாலன் அளித்த தீர்ப்பு என்ன? | Tamilhistoryhttps://youtu.be/MSaXHdRu5...
18/08/2025


| #சிறுவனாய் இருக்கும் போதே கரிகாலன் அளித்த தீர்ப்பு என்ன? | Tamilhistory
https://youtu.be/MSaXHdRu5V8

தமிழ்நாட்டு வரலாற்றில் கரிகால சோழன் குறித்த புதிர்களை விடுவிக்கிறார் சிற்பி ராமச்சந்திரன். மூன்று கரிகாலன்கள் இருப்பதாக சொல்லப்படும் சூழலில் அவர் சிறுவனாக இருந்த போது அளித்த தீர்ப்பின் காலத்தை வரையறுப்பதன் மூலமாக அவர் அலெக்சாண்டர் காலத்திற்கும் முற்பட்டவர் என கணிக்கிறார் ராமச்சந்திரன்.

மேலும் அவ்வையாரின்
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
- என்னும் மூதுரை பாடல் கரிகாலனின் தீர்ப்பை வைத்தே எழுதப்பட்டது என்கிறார். இதன் மூலம்தான் இளஞ்சேட் சென்னியின் மகனே கரிகாலன் என்பதையும் நிறுவுகிறார்.

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCF39RiNCdpu4kGuoM785g4A/join ...

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற வாக்கில் தமிழ் மரபில் எழுத்தறிவு மட்டுமே மிஞ்சி இருக்கிறது. எண் குறித்த மரபறிவை தொ...
09/08/2025

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற வாக்கில் தமிழ் மரபில் எழுத்தறிவு மட்டுமே மிஞ்சி இருக்கிறது. எண் குறித்த மரபறிவை தொலைத்து விட்டோம் என்கிறார் பண்பாட்டு நுண்கலை ஆய்வாளர் சிற்பி ராமச்சந்திரன்.

https://youtu.be/yIrJVKYcZhM

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when D மீடியா Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D மீடியா Life:

  • Want your business to be the top-listed Media Company?

Share