Kathai solli - கதைசொல்லி

Kathai solli - கதைசொல்லி “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வைய?

கதை சொல்லி ஒரு கத்தாய இதழ்.
கரிசல் மண்ணில் மூன்று மாதங்களுக்கொருமுறை செய்யும் வேளாண்மைப் பயிருக்கு கத்தாயப் பயிர் என்று பெயர்.

இந்த இதழானது 1997ல் கரிசல்காட்டு இலக்கியப் பிதாமகன் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராணன் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்போது திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் இணை- ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியராகவும், திரு கழனியூரன் அவர்கள் பொறுப்பாசிரியராகவும் கொண்டு 2015ஏப்ரல் மாதம் ம

ுதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கதை சொல்லி இதழின் ஆலோசனைக்குழுவில்,

தோப்பில் முகமது மீரான்,
தீப.நடராஜன்,
மணா,
க.பஞ்சாங்கம்,
அப்பணசாமி,
கவிஞர் .அ.வெண்ணிலா,
கவிஞர். மதுமிதா,
வேங்கட பிரகாஷ்,
புது எழுத்து மனோன்மணி,
கோவை நவீந்திரன்,
பாரத தேவி,
விஜய இராஜேஸ்வரி,
கனவுப் பிரியன்,
ஸ்ரீதேவி செல்வராஜன்,
கார்த்திக் புகழேந்தி,
காயத்ரிதேவி
இராதா இராமச்சந்திரன்

ஆகியோர் இயங்குகின்றனர்.

கதை சொல்லி இதழ் ’பொதிகை-பொருநை-கரிசல்’ அமைப்பின் சார்பாக, “ பொருநை-கரிசல் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகின்றது.

பதிப்பகப் பணிகள் மற்றும் பொறுப்புகள் இளம்படைப்பாளி. கார்த்திக்.புகழேந்தி மேற்கொள்கிறார்.



தொடர்புக்கு :-
கதைசொல்லி
#4/359, ஸ்ரீ சைதன்யா அவென்யூ,
அண்ணாசாலை, பாலவாக்கம்,
சென்னை -600 041 . +91 9994220250

Mail : [email protected]. / [email protected]

 #கிரா_100 #கிரா_நினைவு_தொகுப்பு_இரண்டுபாகங்கள்.———————————————————கிரா நினைவு கட்டுரைகள் நூற்றாண்டின் சிறப்பு வெளியீடு ...
09/06/2022

#கிரா_100
#கிரா_நினைவு_தொகுப்பு_இரண்டுபாகங்கள்.
———————————————————
கிரா நினைவு கட்டுரைகள் நூற்றாண்டின் சிறப்பு வெளியீடு தொகுப்பு, இரண்டு பாகங்களாக 1,500 பக்கங்களில் வெளிவருகிறது. இதற்கு மொத்தம் 210 கட்டுரைகள் வரப்பெற்று அதில் அறிஞர்கள் தேர்வு செய்த 157 கட்டுரைகள் நூல் வடிவில் வருகின்றது.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரையாளர்களுக்கு இந்த தொகுப்பை அனுப்ப அவர்களின் முகவரியை rkkurunji .com இல் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுரையாளர் அனைவருக்கும் மிக்க நன்றி.

இதை தொகுத்து அளித்த மாரீஸ் மற்றும் இதற்கு கட்டுரைகள் பெற உதவிய பா.செயப்பிரகாசம், மணா,
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம்,கல்யாண் ராமன், கோவை ரவீந்திரன், நந்தா, சுலோசனா ஆகியோருக்கும் நன்றி.

இதில் பங்களித்த கட்டுரையாளர்கள் பின்வருமாறு,

1. நல்லகண்னு
2. பழ.நெடுமாறன்
3. வைகோ
4. நீதிபதி.ஜி.ஆர்.சுவாமிநாதன்
5. சிவகுமார்
6. பேரா.நா.வானமாமலை
7. காசி ஆனந்தன்
8. எம்.ஏ.நுஃமான்
9. நாஞ்சில்நாடன்
10.மீரா
11. கே.வைத்தியநாதன்
12.எஸ்.தோதாத்ரி
13.ஜெயமோகன்
14.ஆ.மாதவன்
15.நெல்லை கண்ணன்
16.பூமணி
17. அம்பை
18.எஸ்.ராமகிருஷ்ணன்
19.அ.முத்துலிங்கம்
20.எஸ்.ஏ.பெருமாள்
21.பெருமாள் முருகன்
22.சி.மகேந்திரன்
23.கோணங்கி
24.ந.முருகேசபாண்டியன்
25.இளம்பாரதி
26.அ.கா.பெருமாள்
27.கலாப்ரியா
28.கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29.ச.தமிழ்ச்செல்வன்
30. தமிழச்சி தங்கப்பாண்டியன்
31.பெ.மகேந்திரன்
32.நாஞ்சில் சம்பத்
33.கமலா ராமசாமி
34.சோ.தர்மன்
35.பாவண்ணன்
36.சுப்புலட்சுமி ஜெகதீசன்
37.ராவ்
38.கல்யாணராமன்
39.சு.வேணுகோபால்
40.பா.செயப்பிரகாசம்
41.பவா செல்லத்துரை
42.சி.மோகன்
43.கிருஷி ராமகிருஷ்ணன்
44.கீரனூர் ராஜா
45.கே.சாந்தகுமாரி
46.சமயவேல்
47.த.பழமலய்
48.பக்தவத்சல பாரதி
49.பிரிதம் கே.சக்கரவர்த்தி
50.சுப்ரபாரதி மணியன்
51.நிஜந்தன்
52.ப.திருமாவேலன்
53.விஜயா வேலாயுதம்
54.பேரா.அ.ராமசாமி
55.மணா
56.தி.இராசகோபாலன்
57.வெங்கட சுப்புராய நாயகர்
58.ரவி சுப்ரமணியன்
59.வெண்ணிலா
60.தள.ப.கி.கோபலகிருஷ்ணன்
61.லாவண்யா சுந்தரராஜன்
62.அப்பணசாமி
63.எஸ்.இலட்சுமணப்பெருமாள்
64.இரா.நாறும்பூநாதன்
65.இரா.காமராசு
66.குரு ஸ்ரீ வேங்கடப்பிரகாஷ்
67.எம்.கே.கோபாலகிருஷ்ணன்
68.உதயசங்கர்
69.குறிஞ்சிவேலன்
70.பாரதி கிருஷ்ணகுமார்
71. அசோகன் நாகமுத்து
72.கவிஞர் மீனாட்சி
73.காவ்யா சு.சண்முகசுந்தரம்
74.க.பஞ்சாங்கம்
75.மு.ராமசாமி
76.திடவை பொன்னுசாமி
77.செல்வ புவியரசன்
78.சூரங்குடி முத்தானந்தம்
79.கல்கி ப்ரியன்
80.மு.சுயம்புலிங்கம்
81.யவனிகா ஸ்ரீராம்
82.ராசி அழகப்பன்
83.சாந்தா தத்
84.அருள்செல்வன்
85.கடற்கரய் மத்த விலாச அங்கதம்
86.ஆ.தமிழ்மணி
87.ஆகாசம்பட்டு வெ.சேஷாசலம்
88.விஜயலட்சுமி ராஜாராம்
89.சிலம்பு செல்வராசு
90.சுலோசனா
91.ஆகாசமூர்த்தி
92.இர.சாம்ராஜா
93.இரா.வீரமணி
94.இரா.மோகன்ராஜன்
95.உக்கிரபாண்டி
96.உதயகுமார்
97.உதயை மு.வீரையன்
98.உமா மோகன்
99.எழிலரசி
100.என்.ஏ.எஸ் சிவகுமார்
101.எஸ்.ராஜகுமாரன்
102.காசி விஸ்வநாதன்
103.கி.ரா.பிரபி
104.அம்சா
105.நெய்வேலி சாந்தி
106.பாரததேவி
107.முபீன்சாதிகா
108.சௌந்திர மகாதேவன்
109.சோ.பத்மநாதன்
110.கவிமுகில் சுரேஷ்
111.கார்த்திகாதேவி
112.கி.பார்த்திபராஜா
113.செ.திவான்
114.ஜனநேசன்
115.கு.அ.தமிழ்மொழி
116.கோவி ராதாகிருஷ்ணன்
117.ச.சுபாஷ் சந்திரபோஸ்
118.சாரதி
119.சி.திலகம்
120.சீராளன் ஜெயந்தன்
121.சென்னிமலை தணிகாசலம்
122. மு.இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்
123. தஞ்சிகுமார்
124. துரை அறிவழகன்
125. பத்மா நாராயணன்
126. பா.வீரகணேஷ்
127. பாரதி மோகன்
128. பி.சி.மாளவிகா
129. பி.பாலசுப்பிரமணியன்
130. பி.என்.எஸ்.பாண்டியன்
131. பொன்ராஜ்
132. பேரா ரவிச்சந்திரன்
133. ம.பிரசன்னா
134. மஞ்சுநாத்
135. மணிமாறன்
136. மதரா
137. மார்க்கண்டகேயன்
138. மு.இராமனாதன்
139. முனைவர் ஆர். அருணாசலம்
140. எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி
141. கீதா
142. கோ.சுப்பையா
143. சந்தனமாரியம்மாள்
144. சரோஜாதேவி
145. சீதாபதி ரகு
146. திருமாவளவன்
147. பெ.சரஸ்வதி
148. ராஜா சிவக்குமார்
149. ராஜாராம்
150. விநாயகமூர்த்தி
151. கு.லிங்கமூர்த்தி
152. மா.ரமேஷ்குமார்
153. ராஜலட்சுமி
154. ராஜலட்சுமி
155. வாசு.அறிவழகன்
156. சாகிலி சுதாராணி (தெலுங்கு)
157. கன்னடம் கதை மொழியாக்கம்

பிற் சேர்க்கை
1)கி.ரா வாழ்க்கை குறிப்பு
2)கி.ரா நூல்கள் பட்டியல்

#கிரா_100
#கிரா_நினைவு_தொகுப்பு_இரண்டுபாகங்கள்



கே.எஸ்.இராதா கிருஷ்ணன்

9-6-2022.

 #*நண்பர் சமஸ் அவர்களின் அருஞ்சொல் இணைய இதழுக்கு*,*இலங்கை பிரச்சனை குறித்தான என்னுடைய நேர்காணல்…...* 7-4-2022.••••.     ...
07/04/2022

#*நண்பர் சமஸ் அவர்களின் அருஞ்சொல் இணைய இதழுக்கு*,
*இலங்கை பிரச்சனை குறித்தான என்னுடைய நேர்காணல்…...*


7-4-2022.
••••.

இலங்கையின் வீழ்ச்சிக்கான காரணங்கள்... பல கோணங்களையும் இணைத்துத் தரும் கேஎஸ்ஆர் பேட்டி. அவசியம் வாசியுங்கள்..


https://www.arunchol.com/k-s-radha-krishnan-interview-by-s-s-siva-sankar

கட்சியிலும் ஆட்சியிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்‌ஷ குடும்பம் அரசின் 75% பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் துற....

My Alma mater,  -1970, lot of memories from there….கடந்த 1970களில் படித்த  #சென்னை_சட்டக்கல்லூரி….எத்தனையோ நினைவுகள் நெஞ...
06/04/2022

My Alma mater,
-1970, lot of memories from there….
கடந்த 1970களில் படித்த
#சென்னை_சட்டக்கல்லூரி….
எத்தனையோ நினைவுகள் நெஞ்சில்…


6-4-2022.

கவிஞர் Iyyappa Madhavan படைத்த எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளைநிறப் பறவை - கவிதை நூல் நேற்று நான் வெளியிட்ட போது. விழாவில்...
04/04/2022

கவிஞர் Iyyappa Madhavan படைத்த எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளைநிறப் பறவை - கவிதை நூல் நேற்று நான் வெளியிட்ட போது. விழாவில்...

4-4-2022.

 #கரிசல்_கிராமத்துப்_பழக்க_வழக்கங்கள்_சில…… ——————————————————-(‘கரிசல்கதைகள்’ என்ற தொகுப்பின் முன்னுரையில்  #கிரா மானாவ...
27/03/2022

#கரிசல்_கிராமத்துப்_பழக்க_வழக்கங்கள்_சில……
——————————————————-

(‘கரிசல்கதைகள்’ என்ற தொகுப்பின் முன்னுரையில் #கிரா மானாவாரி விவசாயிகள் பற்றிச் சொல்வார்.
“இந்தக் கரிசலில் பிறந்த சம்சாரி, அல்லல் படுவதற்கென்றே பிறந்த மாபாவி. எந்த வகையிலும் இவனுக்கு யாராலும் எந்தவித உதவியும் இதுவரை இல்லை; எந்த அரசுக்கும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் கூட இவன் ஒரு மாற்றாந்தாய்ப் பிள்ளைதான்…..)

1) ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்ய வேண்டுமானால் உழக்கு அல்லது ஆழாக்கு, நாழி, சிரட்டை, கரண்டி ஏதாவது ஒன்றில் அடுத்த வீட்டு அடுப்பில் எப்போதும் சூடாகிக் கொண்டிருக்கும் பால் சுடவைத்த அடுப்பில் தீக்கங்கை எடுத்துவந்து அடுப்புப் பற்ற வைப்பார்கள். இந்தத் தீக்கங்கு கோனார்கள் வீட்டில்தான் எப்பொழுதும் இருக்கும்.
2) ஆட்டுக் கறியைத் தேவைக்குப் போக மீதியை உப்பு, மஞ்சள் இரண்டையும் சேர்த்துத் தடவி கறித் துண்டில் நடுவில் துவாரம் போட்டு ஒரு கயிற்றில் கோர்த்து வெயிலில் நன்றாகக் காயவைத்த பின் ஒரு பழைய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது சமைத்துச் சாப்பிடுவார்கள். இதற்கு ‘உப்புக் கண்டம்‘ என்று பெயர்.
3) ஆடு மேய்ப்பவர்கள் மூங்கில் குழலில் சாப்பாடு கொண்டுபோய் மதிய உணவாகச் சாப்பிடுவார்கள். உணவு கெட்டுப் போகாது.
4) கிணறுகள் இல்லாத இடத்தில் உழவு உழச் செல்பவர்கள் மண் தோண்டியில், கம்மஞ்சோறு, தினை குதிரைவாலி, சாமைச் சோறு இவற்றை உருண்டையாக உருட்டி நீர் ஆகாரத்தில் போட்டுக்கொண்டு செல்லுவார்கள். தண்ணீர்த் தாகம் ஏற்பட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பார்கள். பின்பு மதிய வேளையில் இந்தச் சோற்று உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டு மீதி தண்ணீரையும் குடிப்பார்கள். இது வெயில் காலத்தில் உடம்பின் சூட்டைத் தணிக்கும்.
5) புளிச்சக் கீரையைக் கடைந்து உணவுடன் சேர்த்து முன் காலத்தில் சாப்பிடுவார்கள். இது இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கும்.
6) ஒரு துக்க வீட்டில் உறவினர் இறந்தால் கண்ணீர் விட்டு அழும்போது அதிக கண்ணீர் வெளியேறும். இதை ஈடுகட்ட மறுநாள் இறந்தவரைப் புதைத்த இடத்தில் நாய், நரி தோண்டாமல் இருக்க குழி மெழுகுவார்கள். அப்போது அகத்திக் கூரையை அவித்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். முதல் நாள் இழந்த கண்ணீரை இந்த அகத்திக் கீரை ஈடு கட்டுமாம்.
7) கிராமத்தில் அம்மன் கோவில் கொடை விழாவில் சாமி ஆடுபவர்களுக்கு வீடு வீடாக தண்ணீரைத் தலை வழியாக ஊற்றி நேர்த்திக் கடனைத் தீர்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படாதவாறு மறுநாள் காலையில் அம்மனுக்கு மஞ்சள் பானை பொங்கல் என்று வைப்பார்கள். அதில் மஞ்சள் பொடி கலந்து கொதிக்க வைக்கும்போது முதல் நாள் சாமி ஆடியவர்கள் வேப்பிலையை மஞ்சள் பானையில் முக்கியெடுத்து தலையில் தெளித்துத் தெளித்து ஆடுவார்கள். இதனால் ஜலதோஷம் பிடிக்காதாம்.
இப்போதும் ஜலதோஷம் பிடித்தால் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி வைத்துக்கொண்டு ஒரு போர்வையை மூடிக்கொண்டு அந்த ஆவியைப் பிடித்தால் ஜலதோஷம் நீங்கிவிடும்.
8)மாட்டுத்தாவணி அல்லது வெகுதூரக் கோவிலுக்குச் செல்பவர்கள் நார்ப் பெட்டி அல்லது துணியில் சோற்றைக் கட்டிக்கொண்டு செல்வார்கள். இதற்குக் ‘கட்டுச் சோறு‘ என்று பெயர். சோறு கெட்டுப் போகாது.
****

#ஆடுகளின்_வகைகள்
(செம்மறி ஆட்டு வகைகள்)

1) செவ்வாடு
2) ராயாடு
3) கரா ஆடு
4) கராராயாடு
5) கொப்பாடு (கொம்பு உள்ளது.)
6) அரியாடு
7) சுட்டியாடு
8)கரிசல் மரையாடு
9) வெங்காலாடு
10) கோட்டை மரையாடு
11) கிடா (கொம்பு இல்லாததை மோழைக் கிடா என்பார்கள்.)

ஆடுகளை ஒன்றாகச் சேர்த்து இரவில் போடுவதைக் ‘கிடை‘ என்பார்கள். பின்பு அவரவர் ஆட்டை மேய்ச்சலுக்குப் பத்தும்போது ஆட்டை ஒதுக்குவார்கள். அந்த இடத்துக்குப் ‘பாங்கு‘ என்பார்கள். இரவில் அவரவர் ஆட்டைக் காப்பதை ‘பாங்கு முறை‘ என்பார்கள்.

****
#மாட்டின்_வகைகள்_சில

1) கருத்தக் காளை
2) செவலைக் காளை
3) மயிலைக் காளை
4) புல்லக் காளை
5) செம்போர்க் காளை
மாட்டில் பெரிய மாடு - கோம்பை மாடு

****

#நேரத்தைக்கணக்கிடுவது

1) அதிகாலை 3 மணி - தலைக்கோழி கூப்பிடும் நேரம்
2) சூரிய உதயத்துக்கு முன்பு - பலபலவென விடியும் நேரம்
3) 10 மணி - ஆடு எழுப்புகிற நேரம்
4) 12 மணி - உச்சி நேரம்
5) 3 மணி - பெரும் பானை உலை வைக்கிற நேரம்
6) 5 மணி - ஊர் மாடு வருகிற நேரம்
7) 6 மணி - கருக்கல் நேரம்
8)இரவு 10 மணி - ஊர் உறங்குகிற நேரம்
9) இரவு 11 மணி - ஒருச் சாமம்
10) இரவு 12 மணி - நடுச் சாமம் (அல்லது) நடுநிசி

****

#ஊரின்_மண்வளம்

இளக்கட்டாக் குறிச்சிக் கரிசலும் சரி, குருக்கள்பட்டி செவலும் சரி.

****

#கிராமத்து_வழக்காளிகள்

1) மருக்காலங்குளம் - மாடப்பத் தேவர்
2) கலங்கல் - சின்னசாமி கோனார்
3) கழிநீர்க்குளம் - செல்லையா தேவர்
4) புளியம்பட்டி - மாடசாமித் தேவர்
5) குப்புணாபுரம் - சீனித் தேவர்
6) குருக்கள்பட்டி - பொலத்துராமத் தேவர்
****

#முதலாளி_எனப்பட்டம்_பெற்றவர்கள்

1) கொளக்கட்டா குறிச்சி முதலாளி
2) சீகலம்பட்டி முதலாளி
3) சங்கரபாண்டியாபுரம் முதலாளி
4) நாகம்பட்டி முதலாளி
****

#அந்தக்கால_கைகாரர்கள்

1) சிப்பிப்பாறை - கந்தசாமி நாயக்கர். சீறும் புலிக் குடை படைத்தவர்
2) மீன்துள்ளி கோடாரி பொன்னையா கோனார் மான் துள்ளுவது போன்று துள்ளி எதிரிகளை மடக்கி அடிப்பது.
3) கல் எரிவதில் வில்லாளிகளையும் மடக்கி எரிவார்கள். மீன்துள்ளி காளைக் கோனார் ஆவுடையாள்புரம் எட்டையாக் கோனார்
****
1) நெல்லை மாவட்டத்தில் இரண்டு பாதைகள் அல்லது ரோடு சந்திக்கும் இடத்தை விலக்கு ரோடு, விலக்குப் பாதை என்பார்கள்.
2) கோவை மாவட்டத்தில் குச்சை என்பார்கள்
3) விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டு ரோடு அல்லது கூட்டுப் பாதை என்பார்கள்.
*****

#காரணப்பெயர்கள்

ஒரு வீட்டில் விவசாயம் பார்ப்பவரை சம்சாரி என்றும், ஆடு மேய்ப்பவரை ஆட்டுக்காரர் என்றும், சிறு வியாபாரம் செய்பவரைக் வியாபாரி என்றும், அந்த வீட்டில்படித்தவரைப்பள்ளிக்கூடத்தான் என்றும் அழைப்பார்கள்.
****
மாடுகள் விற்கும் இடத்தை மாட்டுத்தாவணி என்று கூறுவார்கள்.

1) கழுகுமலை - தைப்பூசம் பங்குனி உத்திரம்
2) திருச்செந்தூர் - மாசிமகம்
3) சீவலப்பேரி - சித்திரை மாதம்
4) முத்துலாபுரம், கன்னிசேரி - பங்குனி உத்திரம்
5) சங்கரன்கோவில் - ஆடித்தபசு
6) வாரம்தோறும் சனிக்கிழமை - பாம்புக்கோவில் சந்தை
****
#ஆட்டுக்கிடையின்_விபரம்

ஆட்டுக் கிடைக்கு மேற்பார்ப்பவரைக் கீதாரி என்றும், கிடைக்கோன் என்றும் அழைப்பார்கள். மொத்தத்தில் கிடை கிடக்கும் ஆட்டை ஒதுக்கும்போது வட்ட வடிவமாக நின்று கொண்டு அவரவர் குரலில் கூப்பிடும்போது முதலில் ஒருவரும் பின்பு ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் ஆடுகள் அனைத்தும் அவர்கள் இடத்துக்கு வந்துவிடும். இந்த இடத்தைப் பாங்கு என்று சொல்வார்கள். இரவில் ஆடுகளைப் பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பாங்கு முறை என்று கூறுவார்கள். அவர்கள் தங்கி சமையல் செய்யும் இடத்தை வலசை என்று சொல்லுவார்கள்.
***
ஒரு வாழைப்பழம் நெல்லையிலிருந்து சென்னை வரை படும் பாடு

நெல்லையில் வாழைப்பழம் என்றும்,
மதுரையில் வாழைப்பளம் என்றும்,
திருச்சியில் வாலப்பலம் என்றும்,
விழுப்புரத்தில் வாலப்பலம் என்றும்,
செங்கல்பட்டில் வாலப்பயம் என்றும்,
சென்னை எழும்பூரில் வாயப்பயம் வாயப்பயம் என்றும் தேய்ந்துவிடுகிறது.
பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் நேர்வழியாக விழுப்புரம் செல்லும் வண்டிக்குக் கூப்பிடும்போது நேரா விழப்போரை என்று அழைப்பார்கள்.

#ஊரைச்சார்ந்த_பாடல்கள்

1) கத்தரிக்காக் கூட்டு கழுகுமலை ரோட்டு அய்யாபுரம் ஏட்டு அவளைப் பிடித்து மாட்டு.
2) கோயிலாங்குளத்துப் பிள்ளை கொலுசு போட்ட வண்ணாப்பிள்ளை. நான் போட்ட சிட்டுத் துண்டை நயமாய் வெளுத்து வாடி

3) சில்லிக்குளத்துத் தேவா
சீரனிச் சமுத்துத் தேவா
பெட்டியை எடுத்துப் போய்
உன்பிட்டிதான் தெரிஞ்சுபோச்சே

4) கொலைகொண்ட பாதகன்
தென்மலை வன்னியர்
தலைகொண்டு போகிறார்
தளவாய் புலிச் சிங்கமே

5) புகுந்து குத்தும் பொன்னுச்சாமி
புலியைக் குத்து நடுவைப்பட்டி
கிராமச்சந்திரன்
செம்பு மேலே செம்பு வைத்து
சிவகாசிப் பட்டினத்தைச்
செந்தூள் பறக்கவைத்தான்

6) பார்க்கப் பகட்டான குருக்கள்பட்டியில்
பெருங்கடையாய் இருந்து
வெறுங்கடையாய் ஆகுமாம்
வெளியா
****
எட்டையபுரம், குருவிகுளம், செவல்பட்டி ஜமீனில் கிடைத்த தரவுகள் வழியாக……..

#வேட்டை_நாய்கள்
(கதநாய் வடுகர்)

நாய் வைத்துக்கொண்டு வேட்டையாடும் வடுகரை சங்க இலக்கியம்,

கடும் குரல் பம்பை கதநாய் வடுகர் - நற்.212
கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் - அகம். 107 என்றே குறிப்பிடுகிறது.

வீட்டுநாயைக் விட வேட்டையாடும் நாய் அதிக சினமும் அதிக ஆற்றலும் உடையது. இதனால் வேட்டை நாயை 'கதநாய்' என்றே தொகைப்பாடல்கள் கூறும். வடுகமொழி அதவாது தெலுங்கின் மூலமொழி பயிலும் 'வடுகர்' என்போர் காட்டில் வேட்டையாடுதலையே தொழிலாக உடைய வேட்டுவ தொல்குடிகள். இவர்களுடன் வேட்டைநாய் எப்போதும் இருக்கும், எனவே இவர்களைக் 'கதநாய் வடுகர்' என்றே இலக்கியங்கள் குறிப்பிடும்.

சரி வடுகர் மட்டும் தான் வேட்டைக்கு நாயை பயன்படுத்தினார்களா, இல்லை தமிழகத்தைச் சேர்ந்த வேட்டுவர்களும் நாய்களை வேட்டைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை,

வேட்டைநாயை விலங்குகளை வேட்டையாட பழக்கியத்தை,
"நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே" - அகம். 318

சத்தம் எழுப்பக்கூடு கொம்பினை ஊதி (விசில் போன்று) வேட்டை நாயின் உதவியுடன் காட்டில் வேட்டையாடும் வேட்டுவரின் மகள் என்பதை,

"கோடு துவையாக் கோள்வாய் நாயொடு
காடுதேர் நசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்" - நற்.276

கொலைவெறியுடன் பாய்ந்து வந்த வேட்டைநாயினைக் கண்டு பயந்துபோன மானானது வேடுவர் விரித்த வலையில் சிக்கிய,

"கொலைவெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல" - கலி.23

வேடனுக்கு பயந்து ஓடிய மானை, வேட்டை நாய்கள் பாய்ந்து கொன்றன என்பதை,

"மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ" - புறம் 205

மேலும், வேட்டுவன் காட்டில் வேட்டையாடிய இறைச்சியைக் கொண்டுவது கொடுத்துவிட்டு தானியங்களை பண்டமாற்றாகப் பெற்றுச் சென்றான் என்பதை,

"கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும்," புறம் 33
பாடல் குறிப்பிடுகிறது.

தமிழகத்தில் இருந்த தமிழக வேட்டுவரும், வடுகர் முனையில் இருந்த வடுகர் வேட்டுவரும், ஒரே மாதிரி வேட்டைப் பண்புகளைக் கொண்ட மக்களாக இருந்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, தென் தமிழகத்தை ஆண்ட பிற்கால வடுகர்களான, பாளையக்காரர்கள் தங்களது கோட்டைகளைக் காக்கவும், போர்களிலும் நாய்களை பயன்படுத்திவுள்ளனர் என்பதை அங்கிலேயர்க் கால ஆவணங்கள் கூறுகின்றன.

சங்க காலத்திலும், நாய்கள் காவலுக்கு பயன்படுத்தப்பட்டதை,

கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125

காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240

உப்பு விற்க வந்த பெண்ணை, குரைத்து மிரட்டிய நாயை,

ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம்.140 போன்ற சங்கப் பாடல்கள் கூறுகின்றன. ஞமலி என்றால் நாய்.

மேலும், வடுக அரசர்களைப் போன்று அதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பெரிய கோவில் ஓவியத்திலும், பல்லவர் காலக் குடிகள் தங்கள் நடுகல்லிலும் நாயின் வீரத்தை, அவர்கள் வாழ்வின் அங்கம் என்பதை போற்றும் விதமாக வரைந்து வைத்துள்ளனர்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

27-3-2022.

(தொகுத்து அளித்தவர் :
அரசு சின்னசாமி வாத்தியார், ஆவுடையாள்புரம், சங்கரன்கோவில்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #எமது_பகுதி_சொலவடைகள்_சில…. (பழமொழிகள்)(கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர்,சங்கரன்கோவில் பகுதிகள்)—————————————————— ...
26/03/2022

#எமது_பகுதி_சொலவடைகள்_சில…. (பழமொழிகள்)
(கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர்,
சங்கரன்கோவில் பகுதிகள்)
——————————————————

பேயாத்தாள் ஆனாலும் பெத்த ஆத்தாள் பெத்த ஆத்தாதான்

களையே புடுங்கி போட்டாச்சு புல்லுக்கு போய் பயந்துக்கிட்டு...

எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப் புளுக்கையும் ஒண்ணாக் காயுது

ஆடு கிடப்பது ஆவுடையாபுரம்
புழுக்கை போடுவது பொம்மையாபுரம்

வடக்குப் பார்த்த மாளிகையை விட
தெற்கு பார்த்த ஓலை வீடு மேல்

வாயிலே சர்க்கரை
கையிலே கருணைக்கிழங்கு


தாயைத் தண்ணிக்கரையிலே பார்த்தால்
மகளை வீட்டில் பார்க்க வேண்டாம்

மானூறு குளத்திற்கு
நானூறு மடை

தாசனை அடித்து ஆண்டிக்குக்
கொடுத்தது போல

கொடுத்தாலும் கொடுக்க விட மாட்டான் கொச்சுராமு
வாங்கினாலும் வாங்க விட மாட்டான் வல்ராமு

வாழ்ந்து கெட்டவன் வடக்கே போ
கெட்டு நொந்தவன் கிழக்கே போ

சாத்திரம் பொய்யானால்
சமனத்தைப் பார்

நன்செயைப் பார்த்துக் கெட்டான்
புன்செயைப் பாராமல் கெட்டான்
கார்த்திகைபிறை கண்டகாராளா
கை நாற்றைப்போட்டுக் கரை ஏறு

கரிவேப்பிலை வித்தாலும்
கிரகலட்சணம் வேணும்

ஆலமரம் அரசமரம் அரசு
ஆண்டார் வைத்த மரம்
புங்க மரம் புளிய மரம்,
புண்ணியவான் வச்ச மரம்

ஊருக்கு உபதேசம்

வீட்டிற்குள் திருடிய கோழி

மோர்க்கடன் முகட்டை முட்டும்

மூக்குப் போன கழுதை
தூவானத்துக்கு அஞ்சாது


நடு வடக்கே மின்னினால்
நாளையே மழை வரும்

காலை உப்பாங் காத்து
மாலைத் தென்றல்

மலடி அறிவாளா
மத்தவ பிள்ளையை

கயத்தார்த்துக் கடல் காற்று
கடன் வாங்க அடிச்சுச்சாம்

சித்திரை உழ பத்தர மாத்துத் தங்கம்

வலிய வந்தவள் கிழவி

காணிக் காக்கா கரையிலே நிக்கிது
வந்தட்டிக் காக்கா வரப்பிலே நிக்கிது

வந்தவன் வலுத்தான்
இருந்தவன் இளைச்சான்
பாரிக்கு மிஞ்சின கொடையும் இல்லை
மாரிக்கு மிஞ்சின செழிப்பும் இல்லை

இரவல் கொடுத்தவள்
இருந்து அழவிட மாட்டாள்

பகிர்ந்து தின்னால் பசி ஆறும்

புரட்டாசி மாதத்தில் வரட்டு ஆடு
புழுக்கை போடாது

அரிசி ஆழாக்கு ஆனாலும்
அடுப்பு கட்டி மூன்று வேண்டும்

வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்

யார் தொட்டா தேர் ஓடும்
சங்கர் பட்டர் தொட்டால் தேரோடும்

தொட்டாத் துலங்கும்
தோட்டம் வச்சாக் காய்க்கும்
பாட்டம் நிறைஞ்சா
வாட்டம் இல்லை

விரிசோலையைக் கண்டு
குருத்தோலை சிரிச்சுதாம்

தொட்டிய பேயி தொட்டாலும் விடாது

கொக்கு குறிப்பறியும்
காக்கை டொப்பறியும்

ஆளு இருக்க சீரைப் பார்த்து
கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டதாம் நரி

நொண்டிக் குதிரைக்குச் சருக்குண்ணதாம் சாக்கு ஒன்றுதான்

ஆடத் தெரியாதவளுக்கு தெருக் கோணலாம்

குட்டித்த ஆட்டோட
விடுதலை ஆடும் கத்திச்சாம்

பந்திக்கு முந்துவான்
படைக்குப் பிந்துவான்

நெல்லுக்குப் புல்
நேரான கம்மபுல்

நாய் வித்த காசு குரைக்காது

கழுதை கனா கட்டதாம்
கந்தலும் பித்தலும்

கசாப்புக் கடைக்காரன்
காருண்ணியம் பேசியது போல

தாய்ப் பொன்னிலும்
மாப் பொன் எடுப்பான்

ஒழக்குக்குள்
கிழக்கும் மேற்கும்


இருட்டுக்கு இருளப்பன்
வெளிச்சத்திற்கு வெளியப்பன்

இழந்தவனுக்கு எள்ளு
வலுத்தவனுக்கு வாழை

வாழை வாழ வைத்தாலும் வைக்கும்
தாழ வைத்தாலும் வைக்கும்

கீரை வித்தாலும் கிரகம் வேண்டும்

பசுவில் கோழையும் இல்லை
பார்ப்பானில் ஏழையும் இல்லை

பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்தில்
ஏறித்தான் தீர வேண்டும்

செக்களவு பொன்னிருந்தாலும்
செதுக்கித் தின்னா இராது


யோக்கியன் வாரான்
செம்பைத் தூக்கி உள்ளே வை

வெந்ததைத் தின்னா
விதி வந்தா சாவான்

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

விருந்தும் மருந்தும் மூணு வேளை

நாரவாயில் இருந்தாலும்
நச்சு வாயில் இருக்கக் கூடாது

மூன்றாவது பெண் பிறந்தால்
முற்றம் எல்லாம் பொன்னாம்

தேவதானத்திலே தேரோட்டமாம்
திரும்பிப் பார்த்தால் நாயோட்டமாம்


கள்ளாட்டுக் கறிக்கு கார் நெல்
பருக்கை வேறா

எட்டு மிளகு இருந்தால்
எமன் அண்ட மாட்டான்

கிழட்டுக் கூத்தாடி பங்கிற்கு
லாந்துனது போல

ஏழையும் கோழையும் எதிர்த்து
மின்னினால் இரவே வருமாம் மழை

ஆடிப் பொறை தேடிப் பிடி

ஐந்தாறு பெண் பிறந்தால்
ஆண்டியும் போண்டியாவான்

சுற்றிக் குடியிருக்கும் சின்ன
பையல் சாவாசம்


எலிக்கு என்ன வேலை
மண் தோண்டு வேலை

சுண்டெலிக்குத் தக்க
கன்னிக் குடம்

ஆண்டிக்கும் உண்டு இன உணர்வு

பிச்சைச் சோத்திலேயும்
குழைஞ்ச சோறா

அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்திருக்கு

சொர்க்கத்திற்குப் போயும் ராட்டினத்தைக் கையிலே கொண்டுபோன கதை

அட்டையைப் பிடித்துக்
கட்டிலில் போட்டாலும் கிடக்காது

தவளை தண்ணிக்கு இழுக்கக்
கரட்டாண் வெட்டைக்கு இழுத்துச்சாம்
குருவி உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாம்

தலைமுடி இருந்தால் எப்படியும் முடியலாம்

ஆளு இருக்கிற சீரைக் கண்டு
ஆவரையும் மலம் வாரிச்சாம்

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா

ஆக்கங் கெட்ட கோவிலுக்கு
அருக்கெட்ட பூசாரி

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் தள்ளமாடினானாம்

செவிடி செம்படுத்ததால் என்றால்
கெட்டிக் குடத்தால் நானா மாட்டமெங்க ***

வயதிற்கு மூத்தவளைக் கட்டியது போல

கணக்கனைப் பகைத்தவன் காணி இழந்தான்

கோவில்பட்டிக் கணக்காப் பிள்ளை
இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்

கணக்கன் பெண்டாட்டி இறந்தால்
வருவார் கோடி போவார் கோடி

கோடி நிழல் குடியைக் கெடுக்கும்

ஆடு தப்ப விட்டவனுக்குச்
செடி எல்லாம் கண்

குடிப்பது கூழத்தண்ணி கொப்பிழிப்பது பன்னீரா

தனக்கு எளியது சம்பந்தம்

உள்ளூர்ப் பச்சலை மருந்துக்கு உதவாது

உழுவுத நாளில் ஊர்சுற்றிவிட்டு
அறுக்க நாளில் ஆள்பார்ப்பது போல


தாய் தவுட்டுக்கு அழுவும்போது
பிள்ளை பாலுக்கு அழுததாம்

காலாட்டி வீட்டில் வாலாட்டி தங்காது

கொச்சியிலே குருணி வித்தால்
அங்கேயே போவார்கள்

மாவைத் தின்னாலும் ஒன்றுதான்
பண்ணியாரத்தைத் தின்னாலும் ஒன்றுதான்

யானைக்காரனிடம் சுண்ணாம்பு கேட்டது போல

சேத்தூரான் வழக்கு சேரவிடாது

விளக்கு மாத்திற்கு குஞ்சரம் எதற்கு

ஊர்ப் பணத்தை வெட்டியான் சுமந்தது போல

எண்ணைக்குடம் போட்டவனும்
ஆத்தாட அப்பாட
தண்ணீர்க் குடம் போட்டவனும்
ஆத்தாட அப்பாட

கால் ஒடிஞ்ச கோழிக்கு
உரல் கட தஞ்சம்

மழை பேஞ்ச இடத்திலே பேயும்
ஆடு மேஞ்ச இடத்திலே மேயும்

நாம் உள்வழி வந்தால்
இவன் பிறவா வழி வருவான்
(நாம் உள்வாசலில் வந்தால் இவன் புறக்கடை வாசல் வழி வருவான்)

மின்னல் ஒரு பக்கம் மின்ன இடி ஒரு பக்கம் விழுந்தது போல

ஆடு கொடுத்தவனுக்கு உப்புக் கண்டம்
கொடுக்க வருத்தமா

இருக்க இடம் கொடுத்தால்
படுக்க இடம் கேட்பதா

தண்டட்டிக்காரி தலையை அசைத்துப் பேசுவா

மிச்சத்தைக் கொண்டு மேற்கே போகாதே

தட்டான் பறந்தால் தட்டாம மழை வரும்

பங்காளி வீடு தீப்பிடிக்கும்போது
காலைக் கட்டி அழுதானாம்

தனக்குப் போக தானம்

நாசியால் போற சீவனை
கோடாரி கொண்டு வெட்டியது போல

பெண்டாட்டிட்ட கோபிச்சுக்கிட்டு
புடக்காளியை வெட்டினானாம்

நாய் குரைச்சா விடியுது

கரிசல் காட்டுக் கோழிக்கு
நெல் கொத்தத் தெரியாது
ஊர் நாட்டாண்மைக்குத்தால்
கழிதல் கணக்கு

அம்மி மிதக்குது ஆல இலை முங்குது

தலைக்காவேரி தெரியாதவன் எல்லாம் வியாபாரி

ஆத்திநார்மனக்க ஆண்டாங் கோனார் பகையானார்

சக்தி சிறிதானாலும் முக்தி பெரியது

நல்லவனுக்கு மூன்று பாதை
வம்பனுக்கு ஒரு பாதை

பட்டபட்ட பாட்டை எல்லாம்
பானையில் போட்டுவிட்டு
பூம்பாளை நெல்குத்திப் பொங்கல் வைக்கப் போனாளாம்

கிடைக்காதது கிடைச்சுப் போச்சு
கீழத் தெரு நமக்காச்சு

ஆறு பெருகினாலும் நாய் நக்கிதான் குடிக்கணும்


26-3-2021.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரைச்சல்கள் சோர்வூட்டும்போதெல்லாம்எல்லாமே தகர்ந்துவிட்ட நிலையில்ஏகாந்த அமைதி தேவை… 16-3-2022.(Pic-Ganges, Varanasi )
16/03/2022

இரைச்சல்கள் சோர்வூட்டும்போதெல்லாம்
எல்லாமே தகர்ந்துவிட்ட நிலையில்
ஏகாந்த அமைதி தேவை…

16-3-2022.
(Pic-Ganges, Varanasi )

 #கோவில்பட்டி_தனி_மாவட்டமாக_ஆக_வேண்டும். ———————————————————Chief Minister of Tamil NaduM.K.Stalin Kind attention of Mem...
15/03/2022

#கோவில்பட்டி_தனி_மாவட்டமாக_ஆக_வேண்டும்.
———————————————————
Chief Minister of Tamil NaduM.K.Stalin
Kind attention of Member of Parliament Kanimozhi Karunanidhi
கோவில்பட்டி தென் மாவட்டங்களில் ஒரு கேந்திர நகரம். தொழில், வணிகம், விவசாயம் சார்ந்த தொழில்கள் நிறைந்த நகரமாக தொடர்ந்து விளங்கி வருகிறது. நெசவு மற்றும் பருத்தி ஆலைகள், விவசாய விளைபொருட்கள், பருத்தி, மிளகாய், வெங்காயம், பருப்பு என விவசாய பொருட்களை விவசாயிகள் விற்க கமிஷன் மண்டிகள் அடங்கிய பகுதி.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய பகுதியாகும் தென்மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்து தெற்கே தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மட்டுமல்லாது மேற்கே குற்றாலம் வரை இணைக்கும் ஒரு மையப்பகுதி நகரம்.

காந்தி, நேரு மற்ற தலைவர்கள் வந்து சென்ற அரசியல் ரீதியாக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. பாரதி,
வ உசி உலவிய மண். கரிசல் இலக்கியத்தின் தொட்டில். காமராஜருக்கு ஆரம்பத்தில் அரசியல் தளம் அமைத்து தந்த நகர். விடுதலை வேள்வியல் பல களங்களை கண்ட இடம்.அண்ணா தென் மாவடங்களுக்கு வந்து உணவு அருந்தி ஓய்வு எடுத்து சென்ற ஊர். தலைவர் கலைஞர் முதன்
முதலாக திமுகவை தெற்கு பஜாரில்
ஜில் விலாசம் முனையில் திமுக கொடியை ஏற்றி இங்கு கிளை துவங்கினார. திமுக மாநாடும் இங்கு நடந்தது. ராஜாஜி மற்றும் ஜெபி, சஞ்சீவி ரெட்டி,தேசாய், என்.ஜி.ரங்கா என பல வட புல தலைவர்கள் வருகை
தந்த நகர். பிராபகரன் இங்கு என்னோடு வந்து தங்கியும் உண்டு. மறைந்த சி.நாராயணசாமி நாயுடுவின் விவசாய வாழ்வுரிமைப் போராளியின் போர் பூமி. கோவில்பட்டி வட்டாரம் கடந்த 1950களில் கம்யூனிஸ்ட் இயகத்தின் தலைமறைவு சரணலாயம்.
இப்படி பல சிறப்புகள் உண்டு.

தீப்பெட்டி ,கடலைமிட்டாய் ,நூற்பாலை , விவசாயம் என பல்வேறு தொழில்களை கொண்ட நகரம். அது மட்டுமல்லாது பல வரலாற்று சிறப்பியல்புகளை கொண்ட நகரம் கோவில்பட்டி. பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்பகுதியில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு கோவில்பட்டியை மாவட்ட தலைமையிடமாக ஆக வேண்டும.

இந்த நிலையில் நீண்ட காலமாக கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், இன்றைய திருவேங்கடம் வட்டம், சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து கோவில்பட்டி மாவட்டமாக அமைய வேண்டுமென்று கடந்த பத்தாண்டுகளாக மேலாக கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தாலும், வளர்ந்து வருகின்ற நிலையிலும், எளிதாக நிர்வாக நடத்த கோவில்பட்டியை ஒரு மாவட்டமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. எனவே இதை பரிசீலிக்கப்பட வேண்டிய கோரிக்கை.

அது மட்டுமல்ல இன்னொரு பிரச்சனை அந்த பகுதியில், குறு வட்டமாக (firka)இருக்கின்ற இளையரச நேந்தல் பகுதியை கோவில்பட்டி வட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதையும் கவனிக்கப்பட வேண்டும். இளையரசனேந்தல் குறுவட்டத்தின் தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எடுக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

15-3-2022.
கோவில்பட்டிதிருவேங்கடம் தாலுகா செய்திகள்கோவில்பட்டி நியூஸ்டைம்KovilpattiDigital KovilpattiKovilpatti Peoples

டெல்லி, சாகித்ய அகாடமி  அலுவலகத்தில் இருந்து வெளிவரும் "இந்தியன் லிட்ரேச்சர்"  என்ற, இரு மாதத்திற்கு ஒரு முறை வெளிவரும் ...
04/02/2022

டெல்லி, சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இருந்து வெளிவரும் "இந்தியன் லிட்ரேச்சர்" என்ற, இரு மாதத்திற்கு ஒரு முறை வெளிவரும் ஆங்கில இதழில் கிரா வை பற்றிய ஒரு பதிவை பத்திரிக்கையாளர் ஏ.ஸ். பன்னீர்செல்வம் ஆங்கிலத்தில் செய்துள்ளார். நான்கு பக்கத்திற்கு வந்து உள்ளது. நல்ல பதிவு ஆங்கிலத்தில். ஏ.ஸ். பன்னீர் செல்வத்திற்கு நன்றி.

கிரா வுடைய கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒயிட் ரெவலேஷன் என்ற அவரின் கதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அதுவும் அடங்கியுள்ளது. கிரா வுடைய நினைவை கூறும் வகையில் இந்த இரண்டு பதிவுகள் சாகித்ய அகாடமி நூலில் வந்துள்ளன.


4-2-2022.

 #கி.ரா. -  #கரிசல்காட்டு_கதைசொல்லிகளின்_முன்னத்தி_ஏர் (நினைவுதொகுப்பு)——————————————————கிராவின் மறைவிற்குப்பின் கடந்த ...
15/12/2021

#கி.ரா. -
#கரிசல்காட்டு_கதைசொல்லிகளின்_முன்னத்தி_ஏர் (நினைவுதொகுப்பு)
——————————————————
கிராவின் மறைவிற்குப்பின் கடந்த ஜீலை மாதம் துவக்கம் முதல் பல்வேறு நண்பர்களிடம் பெறப்பட்ட கட்டுரைகள் தற்போது இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலரின் கட்டுரைகள் இந்த டிசம்பர் வர ஆனாது. அவர் இதற்காக கேட்டும், கேட்காமலேயே கிட்டத்தட்ட 300 கட்டுரைகள் வந்தன. அதில் 150 முதல் 160 கட்டுரைகள் வரை இறுதிப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் துவங்கிவிட்டன.

இது ஒரு பெரும் பணி. இதற்கிடையில் ‘கரிசல் காட்டின் கவிதை சோலை பாரதி’ என்ற நூலின் பணி இருந்ததால் அதுவும் ஒரு ஆறு மாத காலம் எடுத்துக் கொண்டது. அந்தப் பணி நிறைவு பெற்று, நூலும் கடந்த பாரதி பிறந்த நாளன்று ‘டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி’யில் சிறப்பாக வெளியிடப்பட்டது.

கிராவுடைய தொகுப்பு பெரிய தொகுப்பாக, கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வரும் என்று எதிர்பார்க்கின்றோம். அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வந்த கட்டுரைகளில் 300 வரை படித்துப் பார்த்து சிறப்பாக இருக்கும் சில கட்டுரைகளை தகுதியான கட்டுரைகளை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்டுரைகளும் எடுத்துக்கொள்ள இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இரண்டுமாதங்களில் இந்த நூலை வெளியிடும் வெளியிடுவதற்கான சூழல் அமையும். இது இன்னொரு ராஜநாராயணீயம் ஆகும்.முதலில் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் மூலம்1985 இல் கிராவை பற்றிய கட்டுரை தொகுப்பு ராஜநாராயணீயம்
வெளியானது

தற்போது புத்தகக் கண்காட்சி என்பதால் நூல் அச்சகங்களும் கட்டமைப்பு செய்பவர்களும் சற்றுப் பணியில் இருக்கின்றார்கள். எல்லாம் முடிந்தபின் அனைவரும் பங்களித்த கிராவுடைய நினைவுத் தொகுப்பு நிச்சயமாக பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்திற்குள் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு கேட்டவுடன் கட்டுரைகளை ஆர்வத்துடன் வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றி.

பாரதி கட்டுரை நூல் எப்படியோ அதே போன்று கி.ரா நூலிலும் அனைத்து இயக்கத்தைச் சார்ந்தவர்களும் பங்களித்துள்ளனர். பொதுவுடமை, திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம் தேசிய இயக்கங்களைச் சார்ந்தவர்களும் பல்வேறு இலக்கிய தளத்தில் இயங்குகின்ற இலக்கிய நண்பர்களின் கட்டுரைகள் உள்ளடக்கி வருகிறது.

பாரதி நூலிலும் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த ராஜாஜியும் இருக்கின்றார், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அண்ணாவும், கலைஞரும் இருக்கின்றார்கள். அதேபோல பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஜீவா, எஸ.அழகிரிசாமி, எஸ்.ஏ.பெருமாள் போன்ற பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த முன்னோடித் தலைவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

எவரையும் விடாமல் அனைத்து தரப்பினரும் பங்களிக்கக்கூடிய வகையில் இந்த இரண்டு நூல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் இந்த இரண்டு நூல்களையும் கவனிக்கும் என்று நம்புகிறேன்.

இதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகையாளர் மணா, ப.ஜெயப்பிரகாசம், கோவை விஜயா பதிப்பகம் அண்ணாச்சி வேலாயுதம், புதுவை நண்பர்கள், கோவில்பட்டி மாரீஸ், கரிசல் எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன்போன்றோர்க்கெல்லாம் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கிராவுடைய கட்டுரைத் தொகுப்பு அருமையாக வந்துள்ளது. அவரது நினைவை என்றும் போற்றும் சிரஞ்சீவியாக இந்தத் தொகுப்பு இருக்க வேண்டுமென்று கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கான கவனத்துடனும் மிக அர்ப்பணிப்போடும் செய்துள்ளோம்.

இந்தக் கிரா கட்டுரைகள் தொகுப்பும் பாரதி கட்டுரைத் தொகுப்பும் விலை இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இதுகுறித்து பதிப்பாளர் நந்தாவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நூல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வரும். இந்த அறிவிப்பை எப்படி செய்யலாம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. முடிந்த அளவு இலவசமாகக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மிகக் குறைந்த விலையில் - நன்கொடையாக விலையிலாவது இந்த இரண்டு நூல்களும் கொடுக்கப்படும் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு நூல்களையும் கொண்டு வருவதற்கு பல சிரமங்களையும் முயற்சிகளையும் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல. இதற்கு பங்களித்த அத்தனை நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் பணியும உண்டு. கிரா கட்டுரைத்தொகுப்பு அச்சாகி முடிந்தவுடன் நிச்சயமாக ஒரு சிறப்பான நிகழ்வை நடத்தி இந்த நூல் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

15-12-2021.

நம்ம சாத்தூர்கோவில்பட்டி நியூஸ்டைம்Kovilpattiகோவில்பட்டி

12/12/2021

My tweet :

*கிராவை 40 ஆண்டுகள் தூக்கி பிடித்து*
*கொண்டாடிய அடியேனுக்கு நேற்றைய கோவில்பட்டி கிரா நிகழ்ச்சி மகிழ்ச்சியே*
(இது வைகோ உட்பட
அனைவருக்கும் தெரியும்)

 #பாரதி_விழாஎனது ‘ #கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா.பாரதி பிறந்த நாள்.பாரதி நினைவு நூற்றாண்டு.11-12-202...
09/12/2021

#பாரதி_விழா

எனது ‘ #கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா.
பாரதி பிறந்த நாள்.
பாரதி நினைவு நூற்றாண்டு.
11-12-2021 காலை 10.00
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, அடையார், சென்னை.
அனைவரும் வருக!


9-12-2021.

எனது ‘ #கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா. #பாரதி பிறந்த நாள்.பாரதி நினைவு நூற்றாண்டு.11-12-2021 காலை 10....
05/12/2021

எனது ‘ #கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா.
#பாரதி பிறந்த நாள்.
பாரதி நினைவு நூற்றாண்டு.
11-12-2021 காலை 10.00
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, அடையார், சென்னை.
அனைவரும் வருக!


5-12-2021.

எனது ‘ #கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா. #பாரதி பிறந்த நாள்.பாரதி நினைவு நூற்றாண்டு.11-12-2021 காலை 10....
04/12/2021

எனது ‘ #கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா.
#பாரதி பிறந்த நாள்.
பாரதி நினைவு நூற்றாண்டு.
11-12-2021 காலை 10.00
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, அடையார், சென்னை.
அனைவரும் வருக!


4-12-2021.

 #பாரதியும்_சங்கரன்கோவிலும் 19-10-2021.
19/10/2021

#பாரதியும்_சங்கரன்கோவிலும்

19-10-2021.

*பொருநை தமிழ் இன்பம் / கரிசல் வெக்கை / நெய்தல் கொற்கை..**ஒரே ஊரில் இவ்வளவு எழுத்தாளர்களா..*https://youtu.be/l3y12b_r6Tg*...
19/10/2021

*பொருநை தமிழ் இன்பம் / கரிசல் வெக்கை / நெய்தல் கொற்கை..*

*ஒரே ஊரில் இவ்வளவு எழுத்தாளர்களா..*
https://youtu.be/l3y12b_r6Tg

*நெல்லை எழுத்தாளர்கள் / கரிசல் இலக்கியம்*

*சாகித்ய அகாதமி*
*இலக்கிய விருதுகளின் புகலிடம் திருநெல்வேலி*


26-10-2021.

 #நன்னாரி_சர்பத்: ——————————நன்னாரி சர்பத் பாட்டிலை, இரண்டு நாட்களுக்கு முன் சிவகாசி ராஜ கோபால் கொண்டு வந்து கொடுத்தார்....
10/10/2021

#நன்னாரி_சர்பத்:
——————————
நன்னாரி சர்பத் பாட்டிலை, இரண்டு நாட்களுக்கு முன் சிவகாசி ராஜ கோபால் கொண்டு வந்து கொடுத்தார்.

நன்னாரி இயற்கை மூலிகைகளில் ஒன்று, உடலைக் குளிர்ச்சியாக்கும்.

‘சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்சூடு லகமதிற் சொன்னமது மேகம் புண் சுரமிவை யெலாமொழிக்கும் மென்மதுர நன்னாரி வேர்’
- அகத்தியர்குணபாடம்.

நன்னாரி சர்பத்துடன் எலுமிச்சை பழசாறும் நீரும் கலந்து நன்னாரி சர்பத் என்ற பெயரில் முன்பு பெட்டிக்கடைகளில் கோடை காலங்களில் விற்பது வழக்கம்.
நன்னாரி பசியைத் தூண்டும்,சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும்.

இன்று நன்னாரி சர்பத்து என்பது புழகத்தில் இல்லாமல் போய் கொண்டிருக்கிறன…


10-10-2021.

* #தமிழக_அகழ்வாராய்ச்சி_குறித்து_தகவல்_உரிமைச்சட்டத்தில்_நான்_கேட்ட_தகவல்கள்_குறித்தான_மனு #அதற்க்கு_கிடைத்த_பதில்கள்_வர...
10/10/2021

* #தமிழக_அகழ்வாராய்ச்சி_குறித்து_தகவல்_உரிமைச்சட்டத்தில்_நான்_கேட்ட_தகவல்கள்_குறித்தான_மனு
#அதற்க்கு_கிடைத்த_பதில்கள்_வருமாரு.*
————————————
To​​​​​​​​​​​
The Public Information Officer,
RTI Office,
Department of Archaeology,
Tamil Valarchi Valaagam,
Thamizh Salai,
Egmore,
Chennai – 600 008

Sub: Request to furnish information under section 6(1) of the Right to Information Act, 2005 on the following questions/points.

Sir/Madam,
You are requested to furnish following information: -

1. தமிழ்நாடு அரசு தொல்லியல் அகழாய்வுகள் & பிறர் முகாமை என 2 பெரும் பிரிவுகள் அறிவிக்கப்பட்டதன் நிலை என்ன?

2. 2021 தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி இடங்கள்..
கீழடி (சிவகங்கை)
ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி)
சிவகளை (தூத்துக்குடி)
கொற்கை (தூத்துக்குடி)
கொடுமணல் (ஈரோடு)
மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி மாவட்டம்)
கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
மாளிகை மேடு (அரியலூர்)
இங்கு மேற்கொண்ட பணிகளின் முடிவுகள் என்ன?

3. கீழடி உட்பிரிவில் மணலூர், கொந்தகை அகரம் என மேலும் அகழாய்வு தளங்கள் என அறிவிப்புகள் வெளி வந்தன. சுமார் 11 தளங்களில் ஆய்வு எனப்பட்ட அவற்றின் தற்போதைய நிலை என்ன?

4. கீழ் குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு நடத்திய விவரங்கள் என்ன? ஆய்வு தகவல்கள், அறிக்கைகள் வெளிவந்துள்ளனவா?

(i) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள்
1. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம், (ஆண்டு1876)
2. ஆனைமலை, (கோயமுத்தூர் மாவட்டம், 1969)
3. கோவலன் பொட்டல், (மதுரை மாவட்டம் ,1980)
4. திருத்தங்கல், (விருதுநகர் மாவட்டம், 1994 – 1995)
5. தேரிருவேலி, (இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000)
6. கொடுமணல் தொல்லியற் களம், (ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998)
7. மாங்குடி, (திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002)

(ii) ஆரம்பகால தொல்லியல் களங்கள்
1. வசவசமுத்திரம் தொல்லியல் களம், (காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970)
2. கரூர், (கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995)
3. அழகன்குளம் தொல்லியல் களம், (இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998)
4. அழகன்குளம் தொல்லியல் களம், (இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998)
5. கொற்கை அகழாய்வுகள், (தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969)
6. தொண்டி, (இராமநாதபுரம் மாவட்டம், 1980)
7. பல்லவமேடு தொல்லியல் களம், (காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971)
8. போளுவம்பட்டி தொல்லியல் களம், கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981)
9. பனையகுளம், (தர்மபுரி மாவட்டம், 1979 – 1980)
10. பூம்புகார், (நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998)
11. திருக்கோவிலூர், (விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993)
12. மாளிகைமேடு, (கடலூர் மாவட்டம், 1999 – 2000)
13. பேரூர், (கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002)



(iii) மத்தியக்கால தொல்லியல் களங்கள்
1. குரும்பன்மேடு, (தஞ்சாவூர் மாவட்டம், 1984)
2. கங்கைகொண்ட சோழபுரம், (அரியலூர் மாவட்டம், 1980-1981 & 1986-1987)
3. கண்ணனுர், துறையூர் ஊராட்சி ஒன்றியம், (திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983)
4. பழையாறை, (தஞ்சாவூர் மாவட்டம், 1984)
5. பாஞ்சாலங்குறிச்சி, (தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969)
6. சேந்தமங்கலம், (விழுப்புரம் மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995)
7. படவேடு, (திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993)
(iv) அண்மைய கால அகழ்வாய்வுகள்
1. ஆண்டிப்பட்டி, (திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005)
2. மோதூர், (தர்மபுரி மாவட்டம், 2005)
3. மரக்காணம், (விழுப்புரம் மாவட்டம், 2005-2006)
4. பரிகுளம், (திருவள்ளூர் மாவட்டம், 2005-2006)
5. நெடுங்கூர், (கரூர் மாவட்டம், 2006-2007)
6. மாங்குளம், (மதுரை மாவட்டம், 2006-2007)
7. செம்பிகண்டியூர், (நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008)
8. தரங்கம்பாடி, (நாகப்பட்டினம் மாவட்டம்)
9. கீழடி அகழாய்வு மையம், (சிவகங்கை மாவட்டம் 2015 – 2019)
10. பட்டரை பெரும்புதூர் (திருவள்ளூர் மாவட்டம்)


5. இது தவிர (மேற்கண்டப் பட்டியலில்) தமிழகத்தில் வேறு இடங்களில் ஆகழாய்வு செய்யப்பட்டுள்ளனவா?

6. பொது மக்கள் கவனம் தொல்லியலின்பால் எப்படி இருக்கிறது?

7. தொல்லியல் அதிகாரிகள் ஈடுபாடு, நிலைபாடு எத்தகையது?

8. கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள் தோய்வு கண்ட நிலையின் தற்போதைய துரிதம் எத்தகையது?


9. இந்த ஆய்வுகள் குறித்தான அரசு அறிக்கைகள் வெளிவந்துள்ளனவா?

10. அகழ்வாழ்வு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

If the information is not available in your office, kindly forward to the concerned public authority as per section 6(3) of the RTI Act,2005.

I am a citizen of India and address is given below. Requisite RTI application fee for Rs.20/- is being remitted vide Indian Postal Order No. 18G891897 dated 27.07.2021 is enclosed.

Yours sincerely,

( K.S.Radhakrishnan )

27.07.2021.
••••
கிடைத்த தகவல்
****
தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை
அனுப்புநர், ​​​​​​ ​ பெறுநர்,
திரு.வெ.சிவானந்தம், பி.ஏ.,​​ திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
பொது தகவல் அலுவலர்/​​​​ வழக்கறிஞர்,
உதவிஇயக்குநர்(த.இ)​​​​ செய்தி தொடர்பாளர், தி.மு.க.
தொல்லியல் துறை, ​​​​​ 4,359, ஸ்ரீ சைதன்யா அவின்யூ
தமிழ் வளர்ச்சி வளாகம், ​​​​​ அண்ணா சாலை.
தமிழ்ச் சாலை, ​​​​​​ பாலவாக்கம்,
எழும்பூர், சென்னை 600 008.​​​​​ சென்னை 600 041.
Email- [email protected]
ந.க.எண்.ஈ3/ 3440 /2021, நாள்.27.08.2021
அய்யா,
பொருள் ​தொல்லியல் துறை - தகவல் பெறும் சட்டம் 2005-ன் கீழ்
விவரங்கள் கோருவது தொடர்பாக.
பார்வை​திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர். செய்தி தொடர்பாளர், தி.மு.க.பாலவாக்கம், சென்னை 41.
கடித நாள். 27.07.2021
​​​​​​-------
பார்வையில் காணும் தங்களது மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005-கீழ் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மத்திய அரசு துறைகளுக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன் கீழ் விவரம் கோரும் மனுவிற்கு INDIAN POSTAL ORDER ஒட்டுவது பொருந்தும். மாநில அரசின் துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005- ன் கீழ் விவரம் கோரும் மனுவிற்கு காசோலை, வரைவோலை அல்லது நீதிமன்ற வில்லை அல்லது நேரில் தொகையினை செலுத்தி விவரம் பெற வேண்டும். எனவே, இத்துடன் INDIAN POSTAL ORDER ரூ.20/-க்கானது (No.18G-891897 dated:27.07.2021) இணைத்து அனுப்பப்படுகிறது.


பார்வையில் காணும் மனுவில் INDIAN POSTAL ORDER ஒட்டி விவரம் கோருவதால் இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விவரம் கோரும் மனுவாக கருதாமால் சாதாரண மனுவாக கருதி விவரம் அளிக்கப்படுகிறது.


மனுதாரர் கோரும் விவரம். 1

தமிழ்நாடு அரசு தொல்லியல் அகழாய்வுகள் & பிறர் முகாமை என
2 பெரும் பிரிவுகள் அறிவிக்கப்பட்டதன் நிலை என்ன?

பதில்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் அகழாய்வுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அலுவலர்கள் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான நிதி அரசிடமிருந்து பெறப்படுகிறது.

இது மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. தனியார் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் அகழாய்வுகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் நிதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான அனுமதி கோரும் விண்ணப்பப் படிவத்தினை இந்திய தொல்லியல் துறைக்கு அரசின் மூலமாக பரிந்துரை செய்து அனுப்பும் முகமையாக மட்டும் இத்துறை செயல்பட்டு வருகிறது.


———————————————————
கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர
ஆய்வு அவசியம்:
••••
மைசூர், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், கோயம்புத்தூர், திருப்பூர், பேரூர், பாலக்காடு, உடுமலைப்பேட்டை, திருச்சூர், பொள்ளாச்சி, பழநி, பட்டணம், நத்தம், கோட்டயம், மதுரை, கொல்லம், திருநெல்வேலி, ஆதிச்சநல்லூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், அழகன்குளம், தொண்டி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கொடுமணல், கரூர், கும்பகோணம், திருச்செங்கோடு, மயிலாடுதுறை, ராசிபுரம், மாளிகைமேடு, சேலம், தர்மபுரி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வசவசமுத்திரம், அரக்கோணம், அரிக்கமேடு, புதுச்சேரி, கடலூர், காவிரிப்பூம்பட்டிணம், காரைக்கால், நாகப்பட்டிணம், அரேபியக்கடல், வங்காள விரிகுடா, இலங்கை என இந்தப் பகுதிகள் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இன்னும் பல பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி செய்தால் பல தரவுகள் கிடைக்கும்.

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

10-10-2021. மனுதாரர் கோரும் விவரம். 2)
2021 தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி இடங்கள்
கீழடி(சிவகங்கை)
ஆதிச்சநல்லூர்(தூத்துக்குடி)
சிவகளை(தூத்துக்குடி)
கொற்கை (தூத்துக்குடி)
கொடுமணல் (ஈரோடு)
மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி மாவட்டம்)
கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
மாளிகைமேடு (அரியலூர்)
இங்கு மேற்கொண்ட பணிகளின் முடிவுகள் என்ன?

பதில்,
மேற்படி இடங்களில் தொடர்ந்து அகழாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழாய்வுப் பணிகள் மற்றும் ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அனைத்து விதமான கால கணக்கீடுகளின் அடிப்படையில் முடிவுகளின் அடிப்படையில் அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்படும்.
மனுதாரர் கோரும் விவரம். 3)
கீழடி உட்பிரிவில் மணலூர், கொந்தகை அகரம் என மேலும் அகழாய்வு தளங்கள் என அறிவிப்புகள் வெளிவந்தன. சுமார் 11 தளங்களில் ஆய்வு எனப்பட்ட அவற்றின் தற்போதைய நிலை என்ன?
பதில்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாக மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழாய்வுப் பணிகள் முடிவு பெற்ற உடன் அறிக்கைகள் வெளியிடப்படும்.

மனுதாரர் கோரும் விவரம் 4
4. கீழ்குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு நடத்திய விவரங்கள் என்ன? ஆய்வு தகவல்கள் அறிக்கைகள் வெளிவந்துள்ளனவா?
(i) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல்களங்கள்
1. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம், (ஆண்டு 1876)
2. ஆனை மலை, (கோயமுத்தூர் மாவட்டம், 1969)
3. கோவலன் பொட்டல், (மதுரை மாவட்டம் 1980)
4.திருத்தங்கல், (விருதுநகர் மாவட்டம் 1994-1995)
5. தேரிருவேலி (இராமநாதபுரம் மாவட்டம் 1999-2000)
6. கொடுமணல் தொல்லியற் களம், (ஈரோடு மாவட்டம்,
1992-1993, 1996-1997 & 1997-1998)
7. மாங்குடி (திருநெல்வேலி மாவட்டம் 2001-2002)
(ii) ஆரம்பகால தொல்லியல் களங்கள்
1. வசவசமுத்திரம் தொல்லியல் களம், காஞ்சிபுரம் மாவட்டம்,
1969 1970)
2. கரூர், (கரூர் மாவட்டம், 1973-1979 1994-1995)
3. அழகன்குளம் தொல்லியல் களம் (இராமநாதபுரம்
மாவட்டம், (1986-1987, 1990-1991, 1992-1993, 1994-1995,
1996-1997 & 1997-1998)
4.அழகன்குளம் தொல்லியல் களம், (இராமநாதபுரம் மாவட்டம்
1986-1987, 1990-1991,1992-1993, 1994-1995,
1996-1997 & 1997-1998)
5. கொற்கை அகழாய்வுகள் (தூத்துக்குடி மாவட்டம், 1968-1969)
6. தொண்டி (இராமநாதபுரம் மாவட்டம், 1980)
7. பல்லவமேடு தொல்லியல் களம், (காஞ்சிபுரம் மாவட்டம் 1970-1971)
8. போளுவம்பட்டி தொல்லியல் களம், கோயம்புத்தூர்
மாவட்டம் 1979-1980, 1980-1981)
9. பனையகுளம், தர்மபுரி மாவட்டம், 197-1980)
10. பூம்புகார் (நாகப்பட்டிணம், 1994-1995, 1997-1998)
11. திருக்கோவிலூர், (விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம், 1992-1993)
12. மாளிகைமேடு, (கடலூர் மாவட்டம், 1999-2000)
13. பேரூர், (கோயம்புத்தூர் மாவட்டம் 1999-2000)

(iii) மத்தியக்கால தொல்லியல் களங்கள்.
1. குரும்பன்மேடு, (தஞ்சாவூர் மாவட்டம் 1984)
2. கங்கைகொண்ட சோழபுரம், (அரியலூர் மாவட்டம், 1980-1981 & 1986-1987)
3. கண்ணனூர், துறையூர் ஊராட்சி ஒன்றியம்,
(திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982-1983)
4. பழையாறை, (தஞ்சாவூர் மாவட்டம், 1984)
5. பாஞ்சாலங்குறிச்சி (தூத்துக்குடி மாவட்டம், 1968-1969)
6. சேந்தமங்கலம், (விழுப்புரம் மாவட்டம் 1992-1993 & 1994-1995)
7. படவேடு, (திருவண்ணாமலை மாவட்டம், 1992-1993)

(iv) அண்மைய கால அகழாய்வுகள்.

1. ஆண்டிப்பட்டி, (திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005)
2. மோதூர், (தர்மபுரி மாவட்டம், 2005)
3. மரக்காணம், (விழுப்புரம் மாவட்டம் 2005-2006)
4. பரிகுளம், (திருவள்ளூர் மாவட்டம் 2005-2006)
5. நெடுங்கூர், (கரூர் மாவட்டம், 2006-2007)
6. மாங்குளம், (மதுரை மாவட்டம், 2006-2007)
7. செம்பிகண்டியூர், (நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008)
8. தரங்கம்பாடி, (நாகப்பட்டினம் மாவட்டம் 2007-2008)
9. கீழடி அகழாய்வு மையம், (சிவகங்கை மாவட்டம் 2015-2019)
10. பட்டரை பெரும்புதூர் (திருவள்ளூர் மாவட்டம்)


பதில்.

​ (i)-ல் 1. ஆதிச்சநல்லூர் (ஆண்டு 1876) அகழாய்வானது இத்துறையால் மேற்கொள்ளப்படவில்லை.


​(iv) ல் வரிசை எண்.9 கீழடி அகழாய்வு முதல் மூன்று கட்டங்கள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் கட்ட அகழாய்வுப்பணிகள் மட்டும் இத்துறையினால் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2017-2018- ஆண்டில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கை மட்டும் இத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு அறிக்கைகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. ஏழாம் கட்ட அகழாய்வுப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-2021 மாத இறுதியில் அகழாய்வுப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.


(iv)-ல் வரிசை எண்.10 பட்டரை பெரும்புதூர் அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணி இத்துறையில் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.


இவை தவிர மனுதாரர் தெரிவித்துள்ள பிற இடங்கள் அனைத்திலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர் கோரும் விவரம். 5

இது தவிர (மேற்கண்டப் பட்டியலில்) தமிழகத்தில் வேறு இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளனவா?

பதில்.

திருநெல்வேலி மாவட்டம், இராஜாக்கள் மங்கலம் மற்றும் தலைச்சங்காடு ஆகிய இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் இத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன என்பது மனுதாரருக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மனுதாரர் கோரும் விவரம்.6.
பொது மக்கள் கவனம் தொல்லியலில்பால் எப்படி இருக்கிறது?
பதில்.
தொல்லியல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளின் மீதும், துறையில் வெளியிடப்படும் நூல்களின் மீதும் பொது மக்கள் கவனம் சிறப்பாக உள்ளது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மனுதாரர் கோரும் விவரம். 7.
தொல்லியல் அதிகாரிகள் ஈடுபாடு நிலைபாடு எத்தகையது?
பதில்.
துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் இத்துறையின் அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடனும், ஆர்வமுடனும் பங்கு பெருகின்றனர் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


மனுதாரர் கோரும் விவரம். 8.
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட அகழாய்வுப் பணிகள் தோய்வு கண்ட நிலையின் தற்போதைய துரிதம் எத்தகையது?
பதில்.
கீழடி ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழாய்வுப்பணிகள் தற்போது எந்த தோய்வுகளுமின்றி உரிய கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மனுதாரர் கோரும் விவரம். 9,
இந்த, ஆய்வுகள் குறித்தான அரசு அறிக்கைகள் வெளிவந்துள்ளனவா?
பதில்.
அகழாய்வுப்பணிகள் முடிவு பெற்றதும் உரிய அறிக்கைகள் வெளியிடப்படும்.
மனுதாரர் கோரும் விவரம், 10.
அகழாய்வு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?
பதில்.
அது அரசின் முடிவு ஆகும்.
இது தொடர்பாக இத்துறையில் பதில் இல்லை.

உதவி இயக்குநர்(த.இ)/
பொது தகவல் அலுவலர்

Address

Thiruvanmiyur

Alerts

Be the first to know and let us send you an email when Kathai solli - கதைசொல்லி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kathai solli - கதைசொல்லி:

Videos

Share

Category