RJ Veeraa

RJ  Veeraa Believe in doing great things!

17/08/2024
”நாம கத்துக்கிற எதுவுமே வீணாகாது” என்று Dheenadayalan Natarajan சார் ஒருமுறை எங்களிடம் சொன்னார். அது உண்மைதான் என்பதை பல...
07/08/2024

”நாம கத்துக்கிற எதுவுமே வீணாகாது” என்று Dheenadayalan Natarajan சார் ஒருமுறை எங்களிடம் சொன்னார். அது உண்மைதான் என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் “மாண்புமிகு மாணவன்” என்ற தலைப்பில் Blogger-ல் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் படியுங்கள். நன்றி!

https://rjveeraa.blogspot.com/2024/08/blog-post.html

அகில இந்திய வானொலியில் தேர்வு செய்யப்பட்ட புதிதில் மோகனகிருஷ்ணன் சார் எங்கள் எல்லோரையும் ஒரு குடும்பத்தின் உ...

07/08/2024

வேலம்மாள் பள்ளி, பிரபல யூட்யூபர் A2D நந்தாவை சிறப்பு விருந்தினராக அழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்திருக்கிறார்கள். அவர் மாணவர்களிடையே பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் எதிர்கலத்திற்கு பயனுள்ள விஷயங்கள். சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவிற்கு ஒரு இன்ஸ்டா பிரபலத்தை அழைத்து கல்லூரி மானத்தையே வாங்கினார்கள். அவர்கள் வேலம்மாள் பள்ளி தலைமையிடமிருந்து யாரைக் கூப்பிடவேண்டும் என்று ட்யூஷன் போக வேண்டும். வீடியோ இணைப்பில் உள்ளது. பாருங்கள்!

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

22/05/2024

போன், வாட்சாப், ஃபேஸ்புக் என வாழ்த்திய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!

27/04/2024

காதல் படி நிலைகள்

ஒட்டுமொத்த காதல் கதைகளைக்கும் அடிப்படையாக மூன்றே நிலைகள்தான் உள்ளன.

முதல் நிலை:

ஒரு பெண்ணோ ஆணோ ஒருவர் மீது விருப்பப்படுவது. காதலை சொல்லிவிட்டு முடிவுக்காக காத்திருப்பது. இதை pre honeymoon period என்பார்கள். இந்த காலகட்டத்தில் கற்பனை ஆறு கரைபுரண்டு ஓடும். கழுதைபோல் சுற்றியவனும் கவிதை எழுதுவான். யாருடைய குறைகளும் கண்ணுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் மிகப்பெரிய போதையாக இருக்கும். மதுகுடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறும். காதல் வந்தால் வந்த உடனே ஹேங்கோவர் தான்.

இரண்டாம் நிலை:

இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதம் தெரிவித்து இனிமேல் நீதான் என் வாழ்க்கை என்ற ஒப்பந்தத்திற்கு வருவது. Honeymoon period of love என்பார்கள். இந்த காலகட்டத்தில் போதை கொஞ்சம் தெளிவதும் ஏறுவதுமாக இருக்கும். குறிப்பாக possessives என்ற எள்ளு புண்ணாக்கு ஏடாகூடமாய் இருக்கும். மிக ஆபத்தான காலகட்டம் இதுதான். இரண்டாம் நிலை எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதைப் பொறுத்தே காதலர்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிலை அதிகம் நீடித்தால் நிச்சயம் புட்டுக்கும்.

மூன்றாம் நிலை:

இந்த நிலைக்கு எப்போது வருவார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் வந்துவிட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அது வேறொன்றுமில்லை. அந்த சனியன் இப்படித்தான்னும், இந்த எழவெடுத்தவன் இப்படித்தான்னும் ஒரு புரிதலுக்கு வந்து, இஷ்ட மயிருக்கு இருந்து தொலைங்கன்னு பெருசா கண்டுக்காம விட்றது. Adjust செய்துகொள்வது. அதனால், மூன்றாம் நிலைக்கு வந்துவிட்டால் break up ஆக வாய்ப்புகள் குறைவு.

இன்னும் சொல்லப்போனால் மூன்றாம் நிலைக்கு வரும்வரைக் காத்திருந்து திருமணம் செய்துகொள்வது சிறப்பு. ஆனால் அதுவரை யாருக்கும் பொறுமையும் சூழலும் அமையாது. இரண்டாம் நிலையில் இருக்கும்போதோ அல்லது முதல் நிலையிலேயோ திருமணம் செய்துகொள்பவர்கள் தான் அதிகம். இதில் முதல் நிலையிலேயே திருமணம் செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்றே புலம்புகிறார்கள் என்கிறது ஆய்வு.

முக்கிய குறிப்பு: எந்தவித போதையையும் ருசிக்காமல் டீட்டோட்டலராக இருங்கள் தவறில்லை. ஆனால், ஒருமுறையேனும் காதல் போதையை ஏற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற போதை உங்களை அடிமையாக்கும். காதல் போதை மட்டுமே உங்களை தெளிவாக்கும்.

-வீரா

24/03/2024

சர்கஸ் சிங்கங்கள்:-

நேற்று முன்தினம் ஐபிஎல் பார்த்துக்கொண்டிருந்தபோது தூக்கம் வந்துவிட்டது. சென்னை அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்த சில ஓவர்களிலேயே தூங்க போய்விட்டேன். கிரிக்கெட் என்று வரும்போது இரவு பகல் பாராமல் பஞ்சாயத்து டிவி, தூரத்திலிருந்த அண்ணன் வீட்டு டிவி, இன்னும் எங்கெல்லாம் டிவி இருக்கிறதோ அந்த வீட்டு வாசலில் பசியோடு சோற்றுக்காக காத்திருக்கும் நாய் போல எப்போது டிவி போடுவார்கள், கிரிக்கெட் பார்க்கலாம் என காத்துக்கிடந்திருக்கிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது நண்பகலில் போட்டி ஆரம்பித்து நள்ளிரவில் முடிப்பார்கள். வீட்டில் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, இரவு முழுக்க கிரிக்கெட் பார்க்க அனுமதிகிடைக்கும் வீடாகத் தேடிச் சென்று உட்காருவோம். கிரிக்கெட் பார்ப்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதைவிட அதிகமாக விளையாடுவதிலும் இருந்தது. 300 ரூபாய் கொடுத்து பேட் வாங்குவதெல்லாம் பெருங்கனவு. நன்கு உருளையாக இருக்கும் வேப்பங்கட்டை, ஒதியங்கட்டையை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கத்தியால் செதுக்கி அழகான கிரிக்கெட் மட்டையை நானே உருவாக்கி, ப்ரில் சிவப்பு மையின் துணையோடு அதை சச்சினின் ஆஸ்தான MRF பேட்டாக மாற்றுவேன். தோப்புக்கு சென்று நடுத்தர வயதில் இருக்கும் சவுக்கு மரத்தை திருட்டுத்தனமாக வெட்டி, காய்ந்த சவுக்கு மரத் தழைகளை மேலேத் தூவி அடையாளம் இல்லாமல் செய்துவிட்டு தோப்பிலிருந்து வெளியேறுவோம். அந்த மரங்களை அளவெடுத்து தோல் உரித்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் நிழலென காய வைத்து ஸ்டம்ப் செய்வோம். அதில் நீள மையால் பெப்சி என எழுதி பெப்சியின் லோகோவையும் வரைந்துவிட்டால் சர்வதேச ஒருநாள் போட்டி நடத்துவதற்கான எல்லாத் தகுதியும் வந்துவிடும்.

எல்லோரிடமும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சேகரித்து பத்து ரூபாயில் கிடைக்கும் ஸ்டம்பர் பந்துகளை இரண்டு மூன்று என வாங்கி வைத்துக்கொள்வோம். அறுவடை முடிந்த வயல்களில் குறுத்துப்போல துருத்திக்கொண்டிருக்கும் நெல் நாற்று பத்தைகளை மண்வெட்டியால் கொஞ்சம் வரண்டினால் பிட்ச் தயாராகிவிடும். காலை ஏழு மணிமுதல் 11 மணி வரை பெரிய கிரவுண்டான வயல்களில் ஆடிவிட்டு, வெயில் கொஞ்சம் அதிகமானதும் சோற்றுக்கு வீட்டுக்கு வருவோம். பல நாட்கள் சோறு இல்லாமல் காலையில் ஆரம்பித்து மதியம் 3 மணிவரையில் கூட வேகாத வெயிலில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். வெயில் அதிகமாக இருக்கிறதென்று சிலர் வரத் தயங்கினால், மர நிழலில் விளையாடும் குட்டி மைதானங்களும் எங்களூரில் உண்டு. அதில் ஒன்சைட் தான் பேட்டிங், குட்டையில் நேராக பந்து விழுந்தால் அவுட், எள்ளு வயலில் இறங்கினால் நோ ரன் என ரூல்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ” மேலும், கோவில் திருவிழா நேரங்களில் டியூப்லைட் வெளிச்சத்தில் நைட் மேட்ச் கூட ஆடியிருக்கிறோம். பொழுதா பொழுதேனைக்கும் பந்து அடிச்சுகிட்டே கிடக்க வேண்டியது.. அதுவா வந்து சோறு போட போவுது? ஊர்ல இருக்க ஒப்பன ஓழ்த்த பயலெல்லாம் செட் சேர்ந்துடுரானுவொ.. குதிகால் நரம்ப வெட்டுனாதாண்டா நீயெல்லாம் அடங்குவ கம்னாட்டி பயல” என்று ஆத்தா அன்பாக வாழ்த்து மழை பொழியும். அம்மாவைத் தவிர வீட்டிலுள்ள அனைவரும் எங்களை பெரும்பாலும் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள்.

கிரிக்கெட் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருந்த எனக்கு கல்லூரிக்கு சென்ற பிறகு ஆர்வம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. விடுதிக்கு அருகில் உள்ள கிரவுண்ட் உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது விளையாண்டாலும் ஆர்வம் அதிகமில்லை. அதேபோல் கிரிக்கெட் பார்ப்பதிலும் ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் அது எந்த புள்ளியில் நிகழ்ந்தது என்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. 2003 உலகக்கோப்பையின்போது எல்லா சாமிகளையும் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால் சச்சின் என்ற குலசாமி 4 ரன்னில் அவுட்டாகி கண்ணீர்க்கடலில் ஆழ்த்திவிட்டார். சென்னைக்கு வந்தபிறகு முற்றிலுமாக கிரிக்கெட் பார்ப்பது, விளையாடுவது இரண்டுமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு முக்கியக் காரணம் இங்கு இருக்கும் இட நெருக்கடி. சவேராவில் பணியாற்றிய காலத்தில் அமைந்தங்கரை, டி நகர் என்று சில இடங்களில் விளையாட சென்றிருக்கிறேன். அதில் முதலில் கடுப்பேத்தும் விஷயம் டென்னிஸ் பந்தில் இங்கு விளையாடுவது. மற்றொன்று ஒரு கிரவுண்டுக்கு விளையாடச் சென்றால் ஏதோ திருவிழா கூட்டம்போல விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதற்குள் நாம் சென்று பிட்ச் பிடித்து விளையாட வேண்டும். எவன் பால் போடுறான்.. எவன் அடிக்கிறான்னே புரியாது. கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வம் குறைந்ததற்கு சச்சின் இல்லை என்ற ஒரு காரணம் இருந்தாலும், கிரிக்கெட் மற்றும் அதை சுற்றி நடக்கும் வியாபாரம் ஓரளவுக்கு தெரியவந்ததும் மற்றொரு காரணம்.

இப்போது எங்கும் கிரிக்கெட் எதிலும் கிரிக்கெட் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுவும் ஐபிஎல் வந்தபிறகு கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், வெறித்தனமான ரசிகர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. அதற்கு சமூக ஊடகங்களும் முக்கிய காரணம். நான் இப்போது கிரிக்கெட் பார்க்காமல் இருப்பதற்கான காரணம் என்னைச் சுற்றிவரும் எல்லா வணிக வலைகளுக்குள்ளும் சிக்காமல் தப்பித்து ஓட முயல்வதுதான். கிரிக்கெட்டின் பின்னணியில் இரண்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று எல்லோரையும் மகிழ்விப்பது. மற்றொன்று மகிழ்வித்து அவர்களை சுரண்டுவது. இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல வணிகமயமாக்கப்பட்ட எல்லா விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொள்ளும் எல்லா விதமான கூத்துகளிலும் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற விளையாட்டுக்கள் அழிகின்றன என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். ஏனெனில், கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டும் அல்ல. நீங்கள் ஒரு கபடியையோ, கைப்பந்து விளையாட்டையோ, டென்னிஸையோ கிரிக்கெட் போல உக்கார்ந்து நீண்ட நேரத்திற்கு பார்க்க இயலாது. கால்பந்து விளையாட்டை அவ்வாறு ரசித்து பார்க்க முடியும். ஏனென்றால் கால்பந்து எப்போதும் ஆபத்து நிறைந்திருக்கும் இடத்தில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ சாகசம் செய்யும் சாகசத் திரைப்படம் போன்றது. கிரிக்கெட் ஆக்‌ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் என ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் தன்னியல்பாகவே கொண்டிருக்கிறது. அதுதான் ஒரு ரசிகனை ஒரு அணிக்காகவோ.. வீரனுக்காகவோ எந்த தீவிரத்தன்மைக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. கிரிக்கெட்டுக்கு இருக்கும் இந்த தன்னியல்பை நன்கு புரிந்துகொண்ட வியாபாரக் கனவான்கள் அதை மேலும் மேலும் எப்படி செல்வம் கொழிக்கும் வியாபராமாக மாற்றலாம் என திட்டம்போட்டு வெற்றிகாண்கிறார்கள்.

IPL பார்ப்பதையோ கிரிக்கெட் பார்ப்பதையோ தவறென்று சொல்லவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவை உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்று சுய பரிசோதை செய்துகொள்ளல் அவசியம் என்கிறேன். ஒரு நாள் போட்டிகள் பெரும்பாலும் ஒரு கிரிக்கெட் ரசிகனின் ஒரு நாளை திருடிக்கொண்டன. தற்போது 20 ஓவர் போட்டிகள் அரைநாளை திருடிக்கொள்கின்றன. அதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிகிறது. நான் என்னுடைய நேரத்தை நன்றாக மேலாண்மை செய்கிறேன் என்று நீங்கள் சொல்லாம். அதே வேளையில் கிரிக்கெட் பார்க்காமல், எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்? அல்லது அப்படி இருந்தவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள்? வாழ்க்கை வாழ்வதற்குத்தானே.. எங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பார்த்துவிட்டுப்போகிறோம் என நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் அனைத்தும் நியாயமானதுதான். அதில் தவறொன்றுமில்லை. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையும் பொழுதுபோக்கும் நீங்களாகவே தேர்ந்தெடுக்கிறீர்களா என்பதுதான் நுட்பமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி. நம்முடைய தேர்வுகளில் எழுபது விழுக்காட்டுக்கு மேல் விளம்பரங்களால் நாம் ஒன்றை தேர்ந்தெடுக்க உந்தப்படுகிறோம் என்கிறது ஒரு ஆய்வு. இதை விரிவாக மன்னர் மன்னன் தன்னுடைய விளம்பர வேட்டை புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். உலகமயமாக்கப்பட்ட வாழ்வியல் முறையில் முதலாளித்துவத்தின் சல்லி வேர்கள் நம் கால்களைக் கட்டிக்கொண்டு அதன் போக்குக்கு இழுத்துச் செல்கிறது. உலகமயமாக்கல் வந்தபிறகுதான் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மேம்பட்ட உங்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் ஏதோ சில நிறுவன முதலாளிகளின் கல்லாவை நிரப்ப உங்களை துரத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதைத்தான் அவதானிக்கவேண்டும் என்கிறேன்.

ஏமாற்றத்தில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஏமாந்த பின்பு ஐயோ.. நாம் ஏமாந்து போய்விட்டோமே.. நம்மை ஒருவன் ஏமாத்திவிட்டானே என்று புலம்புவது. மற்றொன்று தினம் தினம் நாம் ஏமாற்றப்படுவதை அறியாமலேயே மகிழ்ச்சியாய் இருப்பது. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றினேன். நாம் பாலிசி எடுக்கப்போகும் வாடிக்கையாளர்களிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது என்று ஒரு அஜெண்டா வைத்திருப்பார்கள். அதில் கூடுதலாக இன்னொன்று இருக்கும். அது இந்த விஷயத்தை கஸ்டமர் கேட்டால் மட்டுமே சொல்ல வேண்டும் என்பது. கஸ்டமர் கேட்டால் மட்டுமே சொல்லவேண்டும் என்பதில் என்பதில் பாலிசிதாரர் தொடர்ச்சியாக ப்ரீமியம் கட்டாமல் விட்டால் என்ன ஆகும்.. எவ்வளவு கிடைக்கும்.. சரண்டர் வேல்யூ என்ன போன்ற விஷங்கள் இடம்பெறும். அந்த பாலிசிக்கு உள்ள Free Look Period-ஐ நாம் சொல்லக்கூடாது. Free look period என்றால் நீங்கள் எடுத்த பாலிசி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பாலிசி எடுத்த தேதிதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் அதை கேன்சல் செய்துவிடலாம். கட்டிய ப்ரீமியம் தொகையும் திரும்ப கிடைத்துவிடும். வேண்டுமென்றால் அதே நிறுவனத்தில் வேறு பாலிசி எடுக்கலாம் இல்லையேல் எடுக்காமலும் இருக்கலாம். அது கஸ்டமரின் விருப்பம். ஆனால் இந்த விஷயத்தை கேட்டால் மட்டுமே சொல்லவேண்டும்.. அதுவும் முடிந்த அளவு அந்த பாலிசியின் நன்மைகளை எடுத்துச் சொல்லி கஸ்டமரைக் கேன்சல் செய்ய விடாமல் தடுக்க வேண்டும் என்பதே. இந்த உண்மையைச் சொல்லி தெரிந்த அண்ணன் ஒருவரிடம் பாலிசி போடச்சொன்னேன். பாலிசி போட்ட அவர் பத்து நாட்களில் கேன்சல் செய்துவிட்டார். அந்த தகவல் வந்த அடுத்த கணமே என்னுடைய கிளை மேலாளர் என்னை கொத்தாக தூக்கி, நீதான் கல்ப்ரிட்.. நீ சொல்லாம கஸ்டமருக்கு ஃப்ரீ லுக் பீரியட் தெரியும் என ரெய்டு விட்டதோடு மட்டுமல்லாமல் போய்ட்டுவா ராஜா என வேலையை விட்டும் அனுப்பிவிட்டார். அதனால் அடுத்த மாதம் சம்பளம் வராது என்பதைத் தாண்டி அந்த சம்பவத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நிற்க.

இப்போது மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவோம். ஜியோ ப்ரைமில் சென்னை பெங்களூரு போட்டியை 11 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த 11 கோடி என்பது ஜியோ ஐடி வைத்திருக்கும் எண்ணிக்கை மட்டும்தான். ஒரே ஐடியில் நண்பர்கள் பலர் சேர்ந்து பார்க்கலாம்.. குடும்பத்தோடு உக்கார்ந்து பார்க்கலாம். எஸ்.என்.ஜே நிறுவனத்தின் ப்ரிட்டிஷ் எம்பையர் மால்ட் பியரைக் குடித்துக்கொண்டே பாரில் கூட பல பேர் பார்க்கலாம். இப்படியெல்லாம் கணக்கிட்டால் தோராயமாக இருபதிலிருந்து முப்பது கோடிபேராவது பார்த்திருப்பார்கள். இந்த முப்பதுகோடி பேரும் உள்வாங்கும் விஷயம் என்ன? அவர்களிடம் எது கொண்டுசேர்க்கப்படுகிறது? என்று கவனித்தால் இரண்டு அணி வீரர்களின் ஜெர்சியிலும் ஹெல்மெட்டிலும் மட்டையிலும் இருக்கும் பிராண்டுகள். பெரிய நிறுவனங்கள் தங்களை இன்னும் பெரிய நிறுவனங்களாக மாற்ற மிகப்பெரிய சர்க்கஸ் காண்பிக்கின்றன. உங்கள் இஷ்டம்போல பாருங்கள்.. இஷ்டம்போல கொண்டாடுங்கள் என்று நம்மை சொல்கின்றன. அதனால் காட்டையே கட்டுப்பட்டில் வைத்திருக்கும் சிங்கம்போல நாம் கெத்தாக இருக்கிறோம். மகிழ்ந்து கொண்டாடுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த நிறுவனங்களின் சர்க்கஸ் கூண்டுக்குள் வித்தை காட்டும் சிங்கமும் நாம்தான். அதை வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளரும் நாம் தான்.

திட்டமிட்டு செய்யப்படும் இந்த விளம்பர வேட்டையில் வீரர்களும் பிரபலங்களும் நன்கு பயன்படுத்தப்பட்டு பார்வையாளனின் பாக்கெட்டை சுரண்ட வழிவகைகள் செய்யப்படுகின்றன. நாம் பார்வையாளராக உள்ளே நுழைந்து அடுத்த ஐபிஎல் எப்போது வரும் என்று புலம்பும் அளவுக்கு பிரம்மை பிடித்தவர்களாகிறோம். எது எல்லோராலும் விரும்பப்படுகிறதோ அதுதான் சந்தையில் விலைபோகும். அதனால் சமூக ஊடகங்களில் கண்டட் க்ரியேட்டர்களாக இருப்பவர்களும் ஐபிஎல் சார்ந்த வீடியோக்களை செய்து அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை பின் தொடர்பவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். அதனால் அவர்களின் வருமானம் கனிசமான அளவுக்கு பெருகுகிறது. எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விளையாட்டு மூலம் பலரின் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பதுபோலவும், எல்லோரிடமும் கையிருப்பு நன்றாக இருப்பது போலவும் தோன்றும். எல்லோரிடமும் கணிசமான அளவுக்கு பணம் இருக்கிறது அதனால்தான் இந்த கொண்டாட்டங்கள் சாத்தியமாகின்றன. ஆனால் கணிசமான அளவுக்கு இருக்கும் பணம் தண்ணீருக்குள் குதிக்க குளக்கரையில் அமர்திருக்கும் தவளையைப் போல அது எதோ ஒரு பெரு முதலாளியின் வங்கிக்கணக்கில் போய்ச்சேர ஆர்வமாய் காத்திருக்கிறது.

நேரடியாக சில்லறை விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள். அவர்கள் விளம்பரத்திற்கும் நடிகர்களுக்கும் கொடுக்கும் பணமெல்லாம் நாம் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாங்கும் ஒரு பொருளிலிருந்துதான் போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். RCB-ன் முக்கிய ஸ்பான்ஸர்களில் ஒன்றாக இருக்கும் KEI நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 6000 கோடி. மின்சார வயர்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு கிட்டதட்ட 600 கோடி ரூபாயை விளம்பரத்திற்காக செலவு செய்கிறது. CSK-ன் ஸ்பான்சரான நம்ம ஊர் சரக்கு விற்கும் SNJ நிறுவனதின் ஆண்டு வருமானம் 290 கோடி. இவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்பான்சருக்காக மூன்று வருடங்களுக்கு 40 கோடி கொடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கேட்கிறார்கள் என்று குமைந்துகொள்ளும் தமிழ்க்குடிமகன்களுக்கு அவர்கள் அந்த பாட்டிலுக்குள் விழுந்துகிடப்பது தெரிவதில்லை. நான் பாட்டில் என்று சொல்வது மது பாட்டிலை மட்டுமல்ல. பொழுதுபோக்கு என்ற பெயரில் மயக்கும் அனைத்தையும்தான். அதனால் ஐபிஎல் பாருங்கள்.. தவறில்லை.. பார்ப்பதோடு நிறுத்திவிடாமல் ஐபிஎல் வீரர்களின் ஜெர்சியில் இருக்கும் நிறுவனங்களை ஆராயுங்கள். அதில் நல்ல எதிர்காலம் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பிள்ளை குட்டிகளை காப்பாற்றுங்கள். நன்றி!

25/02/2024

ஒரு திரைதிப்படத்தை ரசிக்க வைக்க திரைக்கதை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு கதாப்பாத்திர வடிவமைப்பு மிக முக்கியம். 90 களுக்குப் பிறகு பெரும்பாலும் கதாப்பாத்திர வடிவமைப்பில் ஒரு சில இயக்குனர்களைத் தவிற பலரும் கோட்டைவிடுகின்றனர். அதுவும் நகைச்சுவை திரைப்படங்களென்றால் இதுக்கெல்லாம் எப்படித்தான் சிரிக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கும் அளவுக்குத்தான் இருக்கின்றன. திராபையான timing comedy, கேலி என்று மலிவான காட்சிகளுக்குக் கூட கைதட்டும் அளவுக்கு ரசிகர்கள் பழகிவிட்டார்களா? அல்லது மட்டமான சரக்குக்கு அடிமையான தமிழ்க்குடிமகன்கள் போல மாறிவிட்டார்களா எனத் தெரியவில்லை.

கடைசியாக கலகலப்பு திரைப்படத்தின் நகைச்சுவை வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு "வடக்குப்பட்டி ராமசாமி" படத்தில் அது ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. ரவி மரியா, ஜான் விஜய், சேஷு, லொல்லுசபா மாறன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக நிழல்கள் ரவி அதகளம் செய்திருக்கிறார்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் நிறைய இடங்களில் சிரிக்க முடிகிறது. இயக்குனர் கார்த்திக் யோகி, திரைக்கதை பங்களிப்பு செய்த விக்னேஷ் வேணுகோபால், விக்னேஷ் பாபு ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நல்ல நகைச்சுவை கதாபாத்திர வடிவமைப்புகள் தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் வருங்காலம் நன்றாக இருக்கும். நன்றி!

-வீரா

அவர்கள்அவர்கள் அவர்களாகவே வந்தார்கள்அவர்கள் அவர்களுக்கு பிடித்ததையே செய்தார்கள் அவர்கள் அவர்கள் செய்வதே சரியென்றார்கள் அ...
22/02/2024

அவர்கள்

அவர்கள் அவர்களாகவே வந்தார்கள்
அவர்கள் அவர்களுக்கு பிடித்ததையே செய்தார்கள்
அவர்கள் அவர்கள் செய்வதே சரியென்றார்கள்
அவர்களுக்கு அவர்களைத் தவிற யாருமே தெரியவில்லை
அவர்கள் அவர்களாகவே வெற்றிகொண்டார்கள்
அவர்களின் வெற்றியை அவர்களே கொண்டாடினார்கள்
அவர்களின் கொண்டாட்டத்தைக் காண அவர்களைத் தவிற யாருமில்லை;

அவர்கள் அவர்களாகவே வந்தார்கள்
அவர்கள் அவர்களுக்கு பிடித்ததையே செய்ய முயன்றார்கள்
அவர்கள் அவர்கள் செய்ய எண்ணியதே சரியன வாதிட்டார்கள்
அவர்களுக்கு அவர்களுடன் சேர்த்து மற்றவர்களும் தெரிந்தார்கள்
அதனால் அவர்களால் அவர்களாக இருக்க முடியவில்லை
அவர்கள் அவர்களை அரவணைத்துக்கொள்ள நினைத்தார்கள்
அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்-பின்னர்
அவர்களே அவர்களை அரவணைத்து அரவணைத்து அவர்களன்றிப் போனார்கள்!

இப்போது அவர்களிருக்கிறார்கள்
ஆனால் அவர்களாயில்லை!

இதில் எந்த அவர்கள் கூட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்?

-வீரா

அந்த சட்டை:-மிகுந்த குழப்பத்தில் திரிந்துகொண்டிருந்தான் மோகன். எங்கே போயிருக்கும்..? அப்படி என்ன நாம் தவறாக சொல்லிவிட்டோ...
20/01/2024

அந்த சட்டை:-

மிகுந்த குழப்பத்தில் திரிந்துகொண்டிருந்தான் மோகன். எங்கே போயிருக்கும்..? அப்படி என்ன நாம் தவறாக சொல்லிவிட்டோம். வழக்கமாக பேசுவதைக் காட்டிலும் கொஞ்சம் ஓவராகிவிட்டது இன்று. அதுக்காக என்னை விட்டு போய்விடுவதா? இப்போ இண்டர்வியூக்கு கிளம்பனுமே? பரபரப்பில் இருந்த மோகனுக்கு மெட்ரோ நகரத்தின் சத்தங்கள் கூடுதலாக எரிச்சலூட்டின.
எல்லோருக்கும் அவரவர் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றில் மட்டும் ஒரு அலாதியான பிரியம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு சட்டைதான் அது. கல்லூரியில் உடன் படித்த மஞ்சுவின் நினைவாக வைத்திருந்தான். அது ராசியான சட்டையா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த சட்டை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிவப்பு நிறத்துணியில் வெள்ளை நிறத்தில் சின்ன சின்னதாய் வெக்டார் குறிகள் இடப்பட்ட டிசைன் அது. வானத்து வின்மீன்கள் அனைத்தும் தன் ரத்ததில் கலந்து தன்னுடனே பயணிப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்படும். அது மிகவும் பிடித்த சட்டை என்பதால், சென்னைக்கு வந்து நண்பனின் மேன்ஷனில் தங்கி, அவன் சென்ற நான்கைந்து நேர்க்கணல்களுக்கும் அதையே அணிந்து சென்றான். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவில்லை. இந்த சட்டை போட்டுகிட்டு போறதுனாலதான் வேலை கிடைக்கலையோ.. என்று சில முறை யோசித்தான். ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. ஒவ்வொரு முறை இண்டர்வியூன்னு அம்மாகிட்ட போன்ல சொல்லும்போதும், முனியய்யாவ நெனச்சிட்டு போ.. நானும் வேண்டிக்கிறேன் என்று அம்மா சொல்லியதே. அப்போ அம்மா வேண்டுனது பொய்யா.. அம்மா வேண்டுனா வேலை கிடைக்காதா? அம்மா நமக்கு நல்லதுதான நெனைக்கும். அந்த மாதிரிதான் இதையும் எடுத்துக்கணும். மஞ்சு ஞாபகமா இருக்க சட்டை எப்படி எனக்கு எதிரா வேலை செய்யும்.. அதெல்லாம் இருக்காது என்று மனசைத் தேற்றிக்கொள்வான்.
துவைத்துப் போட்டு சீக்கிரம் காயவில்லை என்றால் சட்டையைத் திட்டுவான். உனக்கு ஓரளவுக்குத்தான் மரியாதை கொடுக்க முடியும். ஒரு சட்டன்னா தொவச்சி போட்டா கரெக்ட் டைமுக்கு காயணும். வெயில் வரல, மயிறு வரலன்னு எப்ப பார்த்தாலும் காரணம் சொல்லிகிட்டே இருக்க வேண்டியது. ஒழுங்கா அயர்ன் பண்ணி போட்டுகிட்டு பஸ்ல ஏறுனா, கொஞ்ச நேரத்திலேயே கூட்டத்துல கசங்கி அயர்ன் பண்ணாத சட்ட மாதிரி ஆகிடவேண்டியது. நான் உனக்கு என்ன கொறை வச்சேன். நல்லா சர்ஃப் போட்டு ஊறவச்சி தொவைக்கிறேன். அதிகமா சுட்டுடக்கூடாதுன்னு வெதுவெதுப்பா அயர்ன் பன்றேன். என் பேச்ச கேட்டு ஒழுங்கா இருக்க மாட்டியா? இனிமேல் இந்த மாதிரி பண்ண.. அவ்ளோதான். கிழிச்சி தூரப்போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் பாத்துக்க" என்று 2 நாட்களுக்கு முன் திட்டிவிட்டான். இப்போது சட்டை காணமல் போய்விட்டதால், ஒருவேளை நம் டார்ச்சர் தாங்காமல் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதோ என்று குழம்பிப்போனான்.
அந்த சட்டை மீது அவனுக்கு இப்படி ஒரு பந்தம் ஏற்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒருமுறை தஞ்சை பேருந்து நிலைய சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிவந்த காரிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினான். அன்றுதான் முதன் முதலாக இந்த சட்டையை அணிந்திருந்தான். இவனை நோக்கி அந்த கார் வேகமாக வந்த போது, சட்டென்று சட்டையின் பின்புறத்தைப் பிடித்து ஒரு கை இழுத்தது. சர்ரென்று கார் அவனை கடந்த வேகத்தில் நிலைகுலைந்து போனவனின் முன்னாள், மின்னல் வெட்டியதுபோன்ற கண்களோடு ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் இவன் சட்டையை பிடித்து இழுத்த கணப்பொழுதில், அவனின் இடதுபக்க முதுகு லேசாக அவளின் இடதுகையில் இடித்து சற்று விலகியதை அவதானித்தான். தன்னுயிர் காக்க வானத்திலிருந்து வந்த தேவதைப் போல தோன்றிய அவளை ஒரு கணம் மெய் மறந்துதான் பார்த்தான் மோகன். அதிர்ச்சியிலிருந்து மீண்ட அவள்.. "அப்படி என்னண்ணா.. யோசனை? கொஞ்சம் பார்த்து போங்க.. " என்று சொல்லி துளிர்த்தெழுந்த அனைத்து கற்பனைகளையும் அமிலமூற்றி எரித்துவிட்டாள்.
அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய்.. என்ன நடக்கிறதென்று புரியாதவனாய் நின்ற மோகனிடம். "நான் உங்க டிபார்ட்மெண்ட் தான் அண்ணா. First year BCA. என் பேரு லாவண்யா" என்று கைகுளுக்கி விட்டு இவனிடம் பதில் எதிர்பார்க்காமல் நகர்ந்து சென்றாள். ஹ்ம்ம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு தலையசைக்க முயன்றான். அவன் தலை அசைந்ததா இல்லையா என்று அவனுக்கே தெரியவில்லை.
ஒருவாரத்திற்கு முன்புதான் மோகனுக்கு பிறந்தநாள் முடிந்திருந்தது. அதற்கு பரிசாக மஞ்சுவிடமிருந்து வந்த சட்டைதான் அந்த சிவப்பு வெள்ளை சட்டை. அந்த சட்டையை முதன் முதலாக போட்டு வெளியே சென்ற நாளிலேயே மிகப்பெரிய ஆபத்திலிருந்து அவன் காப்பாற்றப்பட்டான். அதனால் மோகனுக்கும் அந்த சட்டைக்குமான பந்தத்திற்கு விளக்கங்கள் இல்லை.
ஒருமுறை தேநீர் கொஞ்சம் சிந்தியதில் சட்டையின் அடிப்புறத்தில் கறையாகிவிட்டது. அந்த கறையை நீக்க, ஆலா வாங்கி வந்து துவைத்தான். அதில் ஆலா பட்ட இடத்தில் கறை மட்டும் போகாமல் கொஞ்சம் சிவப்பு நிறமும் சேர்ந்தே போய்விட்டது. பாதி ஐந்து ரூபாய் நோட்டு அளவுக்கு வெளிர்த்து போய் இருந்ததனால், டக் இன் செய்து மேனேஜ் பண்ண ஆரம்பித்தான்.
அந்த சட்டை காணமல் போவது இரண்டாவது முறை. இதற்கு முன்பு ஒரு நாள் நண்பர்களுடன் பீர் குடித்து கொஞ்சம் ஓவரான போது காணாமல் போய்விட்டது. அடுத்த நாள் காலையில் பணியனுடன் அறையெங்கும் சட்டையைத் தேடி, கடைசியில் ஒரு மூலையில் கண்டுபிடித்தான். கசங்கி போயிருந்த சட்டையை எடுத்து நுகர்ந்து பார்த்தால் ஒரே மூத்திர வாடை. கடும் சினத்துடன் திரும்பிய அவன், கேணப் *** எவண்டா என் சட்டையில ஒண்ணுக்கடிச்சி வச்சது? என்று கத்தினான். டேய்.. லூசுக் கூ** காலையில எழுந்து கடுப்ப கெளப்பாத.. உன் சட்டையில ஒண்ணுக்கடிக்கதான் நாங்க குடிச்சோமா என சீறினான் கார்த்தி. வினோத்தும் ராபட்டும் சிரித்துக்கொண்டிருந்தனர். மோகனுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய் கடுப்பேத்தாதீங்கடா" என்னதான் ஆச்சுன்னு சொல்லுங்கடா.. நான் எப்டி இப்போ இத போட்றது? என்று மோகன் கேட்க வினோத் சிரித்துக்கொண்டே நடந்தவற்றை விளக்கினான்.
வினோத் சொன்னதை கேட்டதும், மோகனுக்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஜாவா பிராக்டிக்கலில் இண்டர்னல் மார்க் குறைத்த HOD- ன் தலையை இறுக இழுத்துப் பிடித்து, அவன் வாயிலேயே ஒண்ணுக்கடிக்கனும்டா.. என்று மோகன் சொல்ல... எப்படி மச்சி செஞ்சி காமி என ராபர்ட் கேட்டதும். மோகன் தன் சட்டையை கழட்டி கவிட்டிக்கு இடையில் வைத்து பிராக்டிகல் செய்திருக்கிறான். அதன் விளைவாக வந்ததுதான் சட்டையில் ஏற்பட்ட மூத்திர நாற்றம்.
"மயிறு.. நான் அப்பவே சொன்னேன். எனக்கு 3 பீர் போதும்னு. இந்த வினோத் பு** மவந்தாண்டா எடுத்து எடுத்து கொடுத்தான் " என்று கடிந்துகொண்டே சட்டையை துவைக்கச் சென்றான். அதன்பிறகு அந்த சட்டையை மிகுந்த கவனத்தோடு பராமரிக்க ஆரம்பித்தான் மோகன். சட்டை அழுக்காமல் இருக்க கை வைத்த பணியன் போட்டுக்கொள்வது, காலரில் பட்ட அழுக்கை நீக்க பிரஷ் போடாமல் லேசாக துணி சோப்பை தேய்த்து நகத்தாலேயே மெதுவாக சுரண்டி எடுப்பது, துவைத்து கொடியில் உலர்த்தும்போதுகூட வெளிப்புறத்தை போட்டால் வெயில் பட்டு சீக்கிரம் வெளுத்துவிடும் என கவனமாக புறம்பக்கத்தை எடுத்துதான் க்ளிப் போடுவது என கவனமாக இருப்பான். இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்த சட்டை காணாமல் போனதால் அவனுக்கு மனசே சரியில்லை. இன்று மதியம் இண்டர்வியூ இருக்கென்பதால் நேற்று மாலையே துவைத்து மொட்டை மாடியில் உலரவிட்டிருந்தான். ராயப்பேட்டையிலுள்ள அந்த மேன்ஷனின் மொட்டை மாடிக்குச் சென்றால் எக்ஸ்பிரஸ் அவன்யூவின் முகத்திலும் மணிக்கூண்டிலும் விழிக்கலாம். சட்டை மாட்டப்பட்ட க்ளிப் அப்படியே இருந்தது. அவனின் மற்ற துணிகளில் சில காய்ந்தும் காயாமலும் இருந்தன. எங்கு போயிருக்கும்? காற்றில் பறந்து சாலையில் விழுந்திருக்குமா? பறந்து சென்று ஏதோ மரத்தில் மாட்டியிருக்குமா? அல்லது யாராவது திருடிச் சென்றிருப்பார்களா? ஒரே யோசனையாக இருந்தது. அன்று கணக்கிலிருந்த கடைசி ரெண்டு ரூபாய் சிகரட்டையும் பற்றவைத்து இழுத்துவிட்டு கீழே வந்தான். அவன் சட்டையுடன் பேசிக்கொண்டிருந்த இரவுகள் கண்ணில் வந்து போயின. அப்போது மேன்ஷனை சுத்தம் செய்யும் பெண் ஒரு சிவப்பு நிற ஈரத் துணியால் தரைப்பக்க சுவரை துடைத்துக்கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்த அவன், "அக்கா.. இங்க குடுங்க .. "என்று வாங்கி விரித்துப் பார்த்தான் அதுபழைய பாவாடைத்துணி. பெருமூச்சு விட்டவனிடம் என்னப்பா? என்று கேட்ட அக்காவுக்கு பதிலேதும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு அறைக்குத் திரும்பினான்.
வேறு எதையாவது போட்டுக்கொண்டு இண்டர்வியூக்கு செல்லலாம் என்று பார்த்தால் எந்த சட்டையும் காய்ந்திருக்கவில்லை. காய்ந்திருந்த இரண்டு சட்டைகளும், நீர்ப்புள்ளி விழுந்து பழசான சட்டைகள் தான். அதை போட்டுக்கொண்டு சென்றால் செக்யூரிட்டியே உள்ள விடமாட்டான் என்று நினைத்துக்கொண்டு.. டீ ஷர்ட் போட்டுகிட்டு ஏன் போகக்கூடாது? என யோசித்தான். ஹ்ம்ம்க்ஹ்ம்ம்ம் இந்த கார்ப்பரேட் கம்பெனில வேலைக்கு சேர்ந்த அப்புறம்தான் டி ஷர்ட்டெல்லாம் போடனும்னு சொல்வானுங்க. இண்டர்வியூக்கு formals தான் நொட்டணும் என்று கடிந்துகொண்டான்.
செய்வதறியாமல் தவித்த மோகன், தகரக் கட்டிலில் சாய்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த சட்டை அவனை நோக்கி மெல்ல மிதந்து வந்தது. சுகந்தத்தின் வாசம் வீச, சட்டைக்குள் முகத்தை நுழைத்தான். யாருமில்லை சட்டை மட்டுமே இருந்தது. தனியாக வந்த சட்டை காற்றில் பறக்கிறது என்று நம்பத்துவங்கிய நொடியில் சட்டைக் காலருக்குள் ஓர் பட்டாம்பூச்சி. தன் இறக்கைகளை மெல்ல அடித்து, அந்த அதிர்வில் சட்டையை கொஞ்சம் மேலெழுப்பியது. மதுரத்தின் வாசனை மெல்ல அவன் நாசியில் நுழைந்து உடலெங்கும் புது பரவசம் பரவியது. XL size-ல் இருந்த சட்டை சட்டென சுருங்கி, அவனைவிட்டு விலகியதும் கொஞ்சம் அதிர்ந்த அவன், ஆச்சர்யமடைந்தான். அவனின் சட்டை மகரந்த சேர்க்கைக்கு தயாராகும் மலர் போல விரிந்திருந்த ஒர் உள்ளங்கைக்குள் அடங்கியது. அந்த கை மோகனின் கன்னத்தைத் வருடி, அவனின் சட்டையை ஊதா நிற கவுனுக்குள் அமிழ்த்திக்கொண்டது. சாரைப் பாம்பின் வயிறுபோல ஏறி இறங்கிய கழுத்தைக் கடந்து சற்று அண்ணாந்து பார்த்தான். "எல்லாம் உனக்காகத்தான் மோகன்.." என்று தேன் சிதறும் புண்ணகையில் பதிலுரைத்தாள் லாவண்யா. மெய்சிலிர்த்து நின்றவனின் தோளைத் தொட்டு எல்லாம் உனக்குத்தான் மச்சி என்றாள் லாவண்யா. மச்சியா என்று கண்ணை விரித்து சுறுக்கி பார்க்கும்போது, அவன் கண் முன்னே ஒரு Old Monk இருந்தது. ங்ஙே.... என்று கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்தான்.. அதே மேன்ஷன்.. அதே சுவர்.. அதே ஜன்னல். "மச்சி எனக்கு வேல கிடச்சிருச்சி.. மூஞ்ச கழுவிட்டு வந்து உக்காரு.. சரக்க போடலாம்" என்றான் மஞ்சுநாதன்.. மோகனின் அந்த சிவப்பு வெள்ளை சட்டையை கழற்றியபடியே..!

-வீரா

19/01/2024

""அந்த சட்டை"
சிறுகதை

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when RJ Veeraa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ Veeraa:

Videos

Share