Town News - No 1 Neighbourhood Newspaper

  • Home
  • Town News - No 1 Neighbourhood Newspaper

Town News - No 1 Neighbourhood Newspaper Know Your Neighbourhood

டவுன்நியூஸ் வாசகர்களுக்காக இலவச கண்சிகிச்சை முகாம்
13/01/2025

டவுன்நியூஸ் வாசகர்களுக்காக இலவச கண்சிகிச்சை முகாம்

 #போகிப் பண்டிகை :தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும், பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் ...
13/01/2025

#போகிப் பண்டிகை :

தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும், பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இதன் துவக்க நாளாக கொண்டாடப்படுவதே போகி பண்டிகையாகும். அதாவது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். "பழையன கழிதலும்...புதியன புகுதலும்" என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது, எப்படி கொண்டாட வேண்டும், போகி அன்று என்ன செய்தால் வீட்டில் வருடம் முழுவதும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

#போகி பண்டிகை நோக்கம் :

சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை தெற்கில் இருந்து வடக்கில் துவக்கும் நாளையே மகர சங்கராந்தி என்கிறோம். பழைய தீய விஷயங்களை விடுத்து, வாழ்க்கையில் புதிய பயணத்தை துவங்க வேண்டும் என்பதை உணர்த்தும் நாளே போகிப் பண்டிகையாகும். வீட்டில் செல்வ வளம், மாற்றம், வளர்ச்சி ஆகியவை புதிதாக நிறைய வேண்டும் என்பதற்காக வீடுகளை சுத்தம் செய்து, புதிய பயணத்திற்கு தயாராகும் நாள் போகி பண்டிகையாகும். 2025ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை வருகிறது.

 #மகரசங்கராந்தி 2025 பொங்கல் வைக்கும் நேரம்... #2025 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில் மகரசங்கராந்தி எனப்படும் தைப்பொங்...
13/01/2025

#மகரசங்கராந்தி 2025 பொங்கல் வைக்கும் நேரம்...

#2025 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில் மகரசங்கராந்தி எனப்படும் தைப்பொங்கல் திருநாள் வரவிருக்கிறது.

#விவசாயிகள் அறுவடை செய்து, மகத்தான மகசூலை பெற்று, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாளை அவர்களுடன் நாமும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும், உணவளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வருகிறோம்.

#இந்த ஆண்டு எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

#தேவர்களுக்கு ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாத காலம் தட்சிணாய காலம் என்றும், அது இரவு பொழுதாகவும், தை முதல் ஆனி வரையிலான ஆறு மாத காலம் உத்தராயண காலம் என்றும், அது பகல் பொழுதாகவும் இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

#2025 ஆம் ஆண்டு தை மாதம் பூச நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறக்க இருக்கிறது.

#தை மாதம் பிறக்கும் முதல் நாள் தேவர்களுக்கு உத்திராயண காலம் துவங்குகிறது.

#வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி, ஒளிமயமான எதிர்காலம் துவங்கக் கூடிய இந்த நல்ல நாளில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதால் சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

#2025 பொங்கல் வைக்க சிறந்த நேரம் :*

#இவ்வருடம் தை மாதம் பிறக்கும் பொழுது சுக்கிர ஹோரையில் பொங்கல் வைத்தால் சுபயோக புண்ணிய பாக்கியங்கள் கிடைக்கும்.

#சுக்கிர ஹோரை செவ்வாய்க் கிழமையில் காலை 8 மணியில் இருந்து 9:00 மணி வரையிலான காலமாக இருக்கிறது.

#இவ்வருடம் இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் யோகமாக அமையும். வழக்கமாக பொங்கல் வைக்கக் கூடிய நல்ல நேரம் அன்றைய நாள் (14/01/2025) காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும், 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை இருக்கிறது.

#இந்த நேரத்திலும் நீங்கள் பொங்கல் வைத்து சூரியனை வழிபடலாம்.

12/01/2025

#ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா? செய்ய வேண்டியது என்ன?

#ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

#இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14, 2025 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

#ஆதார் ஒழுங்குமுறை விதிகள்

#ஆதார் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

#அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண் அல்லது அட்டை வைத்திருப்போர் பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றின் சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

#புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

புதிய தகவல்கள் உள்ள வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தி புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கூறியுள்ளது.

#மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது ஆதார் ஆணையத்தின் கீழ் இயங்கும் சேவை மையத்தில் நேரடியாகச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

#அல்லது அதிகாரபூர்வ https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆவணத்தைப் பதிவேற்றி புதுப்பித்துக் கொள்ளலாம்.

#ஆனால், புகைப்படம், கைரேகை போன்றவை நேரடியாக மட்டுமே புதுப்பிக்க முடியும்.

பிற சேவைகள் நிறுத்தம்?

ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் போன்ற சேவைகளை ஆதார் ஆணையம் தற்காலிகமாக ஆதார் ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.

ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் ஓரளவு நிறைவடைந்தவுடன் பிற சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#இலவசமாக புதுப்பிக்கலாம்...

ஆதார் விவரங்களை கட்டணமின்றி இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேதிக்குப் பின்னரும் ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். அதற்கு ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 #புதுச்சேரியில்   தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை முடிந்து நலமுடன் ...
12/01/2025

#புதுச்சேரியில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியது.

 #இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன், தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் க...
12/01/2025

#இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன், தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

 #சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகா...
12/01/2025

#சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண குவிந்திருந்தனர் ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தென்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்-மேலும் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைக்கட்டி உள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

12/01/2025
11/01/2025

#நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

 #சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்
11/01/2025

#சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்

 #பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் கவனத்திற்கு..எந்த பேருந்து ந...
11/01/2025

#பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் கவனத்திற்கு..எந்த பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்? முழு விவரம்.

Address


Opening Hours

Monday 09:30 - 18:30
Tuesday 09:30 - 18:30
Wednesday 09:30 - 18:30
Thursday 09:30 - 18:30
Friday 09:30 - 18:30
Saturday 09:30 - 18:30

Telephone

+918012080120

Alerts

Be the first to know and let us send you an email when Town News - No 1 Neighbourhood Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Town News - No 1 Neighbourhood Newspaper:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share