Tamil God Speech

Tamil God Speech Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil God Speech, Video Creator, Chennai.

முருகா துணை ❤️கந்தா துணை ❤️முத்துக்குமரா துணை ❤️
06/02/2024

முருகா துணை ❤️

கந்தா துணை ❤️

முத்துக்குமரா துணை ❤️

காவடி சிந்துவை பாடிகருணைகந்தன் அவன் அருளை நாளும்  நாடிதேடி வரும் அடியார்கள் கோடி திருப்புகழை அவன் முன்னே பாடி ஆடி ராஜ அல...
05/02/2024

காவடி சிந்துவை பாடி
கருணை
கந்தன் அவன் அருளை நாளும் நாடி
தேடி வரும் அடியார்கள் கோடி
திருப்புகழை அவன் முன்னே பாடி ஆடி

ராஜ அலங்காரன் முருகன்
அழகு வள்ளி
மணவாளன் அவன்
மாலோன் மருகன்
ப்ரணவத்தின பொருள் ஆன கந்தன் வினைகளை போக்கிடும் ஞானஸ்கந்தன் கந்தன்

திருநீறு பூசியே நாமும்
முருகன் புகழ் பாடி
அருள் நாடி
பழநிக்கு செல்வோம்
ஜெயமுன்டு பயமில்லை மனமே
சுப்பிரமணியனின் அடி போற்றி பாடுவாய் மனமே
எந்த ஒரு நாளிலும் ஜெயமே
முருகன் அடியார்க்கு அறிவாயே நீ தானே மனமே

ஓம் சரவணபவ ⚜️🦚🌟கடம்பா போற்றி ,கந்தா போற்றிவெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே !மயில் நட மிடுவோய் மலரடி...
04/02/2024

ஓம் சரவணபவ ⚜️🦚🌟
கடம்பா போற்றி ,கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே !
மயில் நட மிடுவோய் மலரடி சரணம்
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏

ஆறிரு தடந்தோள் வாழ்க👏அறுமுகம் வாழ்க👏வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க👏குக்குடம் வாழ்க👏செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க👏யானை தன் அணங...
03/02/2024

ஆறிரு தடந்தோள் வாழ்க👏
அறுமுகம் வாழ்க👏
வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க👏
குக்குடம் வாழ்க👏
செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க👏
யானை தன் அணங்கு வாழ்க👏
மாறிலா வள்ளி வாழ்க👏
வாழ்க சீர் அடியாரெல்லாம்.👏👏👏
🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌹🥀🌺🌹🥀🌺🌹🥀🌺🧡💛❤️💚💙💜🙏🙏🙏

03/02/2024
வெற்றி நிச்சயம்.முருகா 🙏
02/02/2024

வெற்றி நிச்சயம்.
முருகா 🙏

ஆடும் மயிலே என்மேனி அதில் அழகியதோகை என் உள்ளம் நாண் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால் எனக்கும் இடம...
02/02/2024

ஆடும் மயிலே என்மேனி அதில் அழகியதோகை என் உள்ளம்

நாண் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்

எனக்கும் இடம் உண்டு அருள்மணக்கும் முருகன் மலர்அடிநிழலில் 🙏
🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌹🥀🌺🌹🥀🌺🌹🥀🌺💛🧡💜💙💚❤️🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏

முருகனை வணங்கிட பழ வினை தீரும்பழனியில் அவனே பழமாக நின்றான்பழுதெல்லாம் நீக்கும் பரந்தாமன் அவனேநொடியினில் தீரும் நோய்கள் எ...
01/02/2024

முருகனை வணங்கிட பழ வினை தீரும்

பழனியில் அவனே பழமாக நின்றான்
பழுதெல்லாம் நீக்கும் பரந்தாமன் அவனே

நொடியினில் தீரும் நோய்கள் எல்லாம்
துணையாய் வருமே வேலும் மயிலும்

கணபதி சோதரன்
கணத்தினில் வருவான்
கண்ணீரை துடைப்பான்
கந்தனாய் அருள்வான்

காவடி தலை மேல் தலை கனம் அகலும்
பழநிக்கு சென்றால் அவன் அருள் பொழியும்

பணிவாய் மனமே
பணிவாய் பணிவாய்
சின்னக் குழந்தை சேவடி பணிவாய்

வருவான் அருள்வான்
கலக்கம் வேண்டாம்
கந்தன் உண்டு
கவலையை விடுவாய்

திருநீறு அணிய தீவினை தீரும்
திடமாய்
அணிவாய்
சிந்தை தெளியும்

ஐய்யம் வேண்டாம் அற்புதம் நடக்கும்
மயிலோன் அருள்வான்
மகிழ்ந்தே பாடு

 #வேண்டும் வரங்கள் அருளும் தண்டபாணியே #மீண்டும் எப்பொழுது காண்போம் என்றாவலையே., #தூண்டும்  பேரழகுப் பழனிப் பெட்டகமே.! #ச...
01/02/2024

#வேண்டும் வரங்கள் அருளும் தண்டபாணியே
#மீண்டும் எப்பொழுது காண்போம் என்றாவலையே.,
#தூண்டும் பேரழகுப் பழனிப் பெட்டகமே.!
#சீண்டும் வினையொழித்தே யாள்வா யெனை நீயே..!

#முருகா_சரணம்.....🙏

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் சந்திபாளையம் அருள்மிகு ஶ்ரீ பாலமுருகன் திருக்கோவில் தைப்பூச சிறப்பு அலங்காரம்....
31/01/2024

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் சந்திபாளையம் அருள்மிகு ஶ்ரீ பாலமுருகன் திருக்கோவில் தைப்பூச சிறப்பு அலங்காரம்....

பேசும் முன்பே கவனமாக கேள்,எழுதும் முன்னாள் யோசிக்க தவறாதே,பிறரை விமர்சனம் செய்யும் முன்னாள் உன்னை எண்ணி பார்.
29/01/2024

பேசும் முன்பே கவனமாக கேள்,
எழுதும் முன்னாள் யோசிக்க தவறாதே,
பிறரை விமர்சனம் செய்யும் முன்னாள் உன்னை எண்ணி பார்.

அந்தக் கருணை உருவான குருபரன்என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!அப்பன் முருகனைக் கூப்பிட்டுஅப்பனே ஆறுபடை முருகா!!!🦚🦚🦚🐓🐓🐓💚💚💚  #தைப...
25/01/2024

அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!

அப்பன் முருகனைக் கூப்பிட்டு

அப்பனே ஆறுபடை முருகா!!!🦚🦚🦚🐓🐓🐓💚💚💚
#தைப்பூசம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

குன்றாறும் குடிகொண்ட முருகாபக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகாசக்தி உமை பாலனே முருகா…மனித சக்திக்கு எட்டாத தத்த...
24/01/2024

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா…
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா…

அழகென்ற சொல்லுக்கு முருகா…

அன்பிற்கு எல்லையோ முருகா…
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா….

#முருகாசரணம்

இராஜ வேல்⚜️🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா⚜️🦚🙏
24/01/2024

இராஜ வேல்⚜️🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா⚜️🦚🙏

தை பூசம் ஸ்பெஷல்: 5**************************முருகப்பெருமானை பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம்..●முருகனின் திருவுருவங...
23/01/2024

தை பூசம் ஸ்பெஷல்: 5
**************************
முருகப்பெருமானை பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம்..

●முருகனின் திருவுருவங்கள்

1, சக்திதரர், 2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர், 6. சரவணபவர்,
7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி,
9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி,
12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்சபதனர்,
16. சிகிவாகனர்

●முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

●முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு விடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடி யில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற் காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

●முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

●திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின் றது. சூரனை வதம் செய்யும்போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

●செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலை யில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பி ரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

●முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிர ம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங் களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வர மளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயு தம், வில் போன்றவையும் இருக்கும்.

●கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்ப வர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தி யாகும்.

●முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

●முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இத னால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையி னால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டா ன். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட தால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதா ல் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

●குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமா னின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

●கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலா ன திருப்புகழ் நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

●முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

●அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

●முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கி ற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

●யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டு ள்ளது.

●முருகனின் கையில் உள்ள வேல் இறைவனி ன் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

●முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

●பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்க ளில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

●தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயி ல்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழு க்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

●முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

●கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

●தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற் கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

●பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளி லும் முருகன் வழிபாடு உள்ளது.

●மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

●முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்ப வன் என்பது பொருளாகும்.

●முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

●வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

●முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலிய வை ஆகும்.

●முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

●முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

●பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலா லம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

●முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத் தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

●கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

●முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

●கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

●முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்து ள்ள நெடியமலை ஆகும்.

●முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கி றார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக் கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

●கந்தனுக்குரிய விரதங்கள்
1. வார விரதம், 2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

●முருகனின் மூலமந்திரம் ஓம் சரவண பவாய என்பதாகும்.

முருகா சரணம்...
கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்....
22.01.2024... நேசமுடன் விஜயராகவன்....

ஓம் சரவணபவ 🦚⚜️
22/01/2024

ஓம் சரவணபவ 🦚⚜️

ஓம் வெண்ணீறு அணிந்தாய் போற்றிஓம் வெள்ளி மலை வேந்தே போற்றிஓம் வெட்சித் தொடை புனைவாய் போற்றிஓம் முருகா போற்றி ❤️🦚🦚💛🙏🙏
22/01/2024

ஓம் வெண்ணீறு அணிந்தாய் போற்றி

ஓம் வெள்ளி மலை வேந்தே போற்றி

ஓம் வெட்சித் தொடை புனைவாய் போற்றி

ஓம் முருகா போற்றி ❤️🦚🦚💛🙏🙏

🙏👏💐❤️ஆறுமுகம் அருளிடம் அனுதினம் தரும் ஏறுமுகம்... ஓம் சரவணபவ...🙏🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌺🌹🥀🌺🌹🥀🌺🌹🥀❤️💙💚💛💜🧡🙏🙏🙏
21/01/2024

🙏👏💐❤️ஆறுமுகம் அருளிடம் அனுதினம் தரும் ஏறுமுகம்... ஓம் சரவணபவ...🙏
🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌺🌹🥀🌺🌹🥀🌺🌹🥀❤️💙💚💛💜🧡🙏🙏🙏

 #விதியை வெல்ல #வழிகள் செய்பவனை #நித்தமும் தொழுதிடுவோம்..! #முருகா_சரணம்.....🙏
21/01/2024

#விதியை வெல்ல

#வழிகள் செய்பவனை

#நித்தமும் தொழுதிடுவோம்..!

#முருகா_சரணம்.....🙏

"1960 வரை, மருதமலை முருகன் கோவிலுக்கு, நடந்து தான் செல்ல வேண்டும்; சரியான பாதை, மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வசதி கிடைய...
20/01/2024

"1960 வரை, மருதமலை முருகன் கோவிலுக்கு, நடந்து தான் செல்ல வேண்டும்; சரியான பாதை, மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வசதி கிடையாது. சூரியன் அஸ்தமித்த பின், பக்தர்கள் கோவிலுக்கு போக முடியாத நிலை இருந்தது.

மருதமலையில் இருந்து, இரண்டரை மைல் தொலைவில், வடவள்ளி என்ற சிற்றுார் உண்டு. அங்கு மின்சார வசதி இருந்தது. அங்கிருந்து மருதமலைக்கு, மின் தொடர்பை நீட்டிப்பது குறித்து மின்சார வாரியத்திடம் கலந்து ஆலோசித்தார் தேவர்.

ஆனால், மின்சார வாரிய அதிகாரிகளோ, 'வடவள்ளி துவங்கி, மருதமலை வரை மின் கம்பங்கள் நடுவது சாத்தியமில்லை. வேண்டுமானால், மருதமலைக்கு அடுத்து உள்ள கல்வீரன் பாளையத்துக்கு இணைப்பு தருகிறோம்; அதற்கான, டிபாசிட் தொகையை கட்டுங்கள்; அங்கிருந்து மருதமலைக்கு இணைப்பு தருகிறோம்...' என்று கூறினர்."

"உடனே, கல்வீரன்பாளையம் மற்றும் மருதமலை இரண்டு ஊர்களுக்குமான, 'டிபாசிட்' தொகையைக் கட்டினார் தேவர். இணைப்பும் கிடைத்தது. மின்சாரக் கட்டுப்பாடு அமலில் இருந்த காலம் என்பதால், இதற்காக, கோட்டை வரை சென்று, ஆட்சியாளர்களிடம் போராடினார் தேவர். மருதமலையில் மின் விளக்குகளுக்கு, 'ஸ்விட்ச் ஆன்' செய்வதற்காக, எம்.ஜி.ஆரை அழைத்த தேவர், 'உங்கள வெச்சு நாலு படம் எடுத்தேன்; அதுல கிடைச்ச லாபத்துல, முதன் முதலா செய்யற நல்ல காரியம் இது! நீங்களே வந்து ஆரம்பிச்சு வைங்க முருகா...' என்றார்.

எம்.ஜி.ஆருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. காரணம், தி.மு.க.,விலிருந்த கட்டுப்பாடு! 'காங்கிரஸ் அமைச்சரவையின் கூட்டுறவுத் துறை அமைச்சர், நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியாருடன் இணைந்து, மருதமலையில் மின் விளக்குகளுக்கு, 'ஸ்விட்ச் ஆன்' செய்தால் தகுமா...' என தயங்கினார் எம்.ஜி.ஆர்.,

'முருகா... நீங்க மக்களுக்குத் தான் மின்சார வசதி செஞ்சு வெக்க போறீங்க; அதை யாரும் குறை சொல்ல மாட்டாங்க; தயங்காம வாங்க...' என்றார் தேவர். அதற்கு மேல், எம்.ஜி.ஆரால், மறுக்க முடியவில்லை.

டிச., 7, 1962ல் மருதமலையில், சேவற்கொடியோனின் கர்ப்பகிரகத்துக்கு மின் விளக்கேற்றி, 'தேவரண்ணன் வணங்கும் தெய்வத்தின் கோவிலில் திருவிளக்கு ஏற்றும் வாய்ப்பை, பெற்றமைக்காக பெருமைப் படுகிறேன்...' என்றார் எம்.ஜி.ஆர்.,
மருதமலையில், ஒளி பிறந்தது; தேவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்!அத்துடன், சுவாமிக்கு தேவையான, ஆபரணங்கள், வெள்ளிக் கவசம் துவங்கி, கோவிலுக்கு நிலங்களையும், நன்கொடையாக கொடுத்தார் தேவர். அரசு, வரவு - செலவு பார்க்கிற அளவு புகழ் பெற்றது மருதமலைக் கோவில்; இதுவே, தேவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசு!

அடுத்து, அவர் கவனம், முருகனின் அறுபடை வீடுகளில் திரும்பிற்று. ஒவ்வொரு படத்தின் வசூலையும், வரிசைக் கிரமமாக பங்கு வைத்து பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, வடபழனி மற்றும் திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களில் குடில்கள், கோவில் பிரகாரங்கள், கர்ப்பக் கிரகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை கட்டினார். பின், ரத்னகிரி முருகன் கோவில் துவங்கி, வள்ளிமலை, வயலூர் என்று வேறு எங்கெல்லாம் முருகன் கோவில் திருப்பணிகள் நடை பெற்றதோ, அவை அத்தனையிலும், தேவரின் வியர்வை நிறைந்தது.

வேலனை நினைப்போம் அவர் அருளை பெறுவோம்..கந்தனுக்கு அரோகரா🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌺🌹🥀🌺🌹🥀🌺🌹🥀💜💛💚❤️💙🧡🙏🙏🙏 #முருகா❤🙏
20/01/2024

வேலனை நினைப்போம் அவர் அருளை பெறுவோம்..
கந்தனுக்கு அரோகரா
🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌺🌹🥀🌺🌹🥀🌺🌹🥀💜💛💚❤️💙🧡🙏🙏🙏

#முருகா❤🙏

கன்னித்தமிழ் பாடுவது புதுசுகமே,அதில் காண்பதெல்லாம் கந்தன் கவிநயமே,என்னையே தந்து விட்டேன் கந்தனிடமே,அவன் என்ன செய்தாலும் ...
18/01/2024

கன்னித்தமிழ் பாடுவது புதுசுகமே,
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவிநயமே,
என்னையே தந்து விட்டேன் கந்தனிடமே,
அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே...!
அப்பனே ஆறுபடை முருகா🦚🦚🦚🐓🐓🐓🙇🙇🙇🌺🌹🥀🌺🌹🥀🌺🌹🥀💚💜💛❤️💙🧡🙏🙏🙏

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil God Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category