15/07/2024
பிராம்ப்ட் பதிப்பகம் வெளியிடும்
வீட்டைக் கட்டிப் பார்த்தேன் - முழுமுதல் வீட்டு கட்டுமான ஆலோசனை நூல்:
அமேசானில் இப்போது
https://www.amazon.in/dp/B0D9FTYWGR
வீட்டைக் கட்டி பார்த்தேன் (Tamil Edition) Kindle Edition
தங்களது கனவு வீட்டை கட்ட இருக்கும்,கட்டிக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு வணக்கம்!
வீடு கட்டுதல் என்பது வீடியோ பார்த்து சமையல் செய்வது போல சாதரணமானது அல்ல, அப்படியெனில் வீடு? எந்தெந்த பொருளை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படி சமைக்க வேண்டும்? என்பது போல வீடு கட்டுதலை போகிற போக்கில் சொல்ல முடியாது .
எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் ஒரு வீடு கட்டுவோர் தானே, சொந்தமாக வீடு கட்ட இயலாது. அதிகபட்சம் தங்களது கனவு வீடு உருவாவதை கண்காணிக்கவும், எங்கெங்கெல்லாம் தவறுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், வீடு கட்ட திட்டமிடுதலின் போது எந்தெந்த விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை மட்டும்தான் ஒரு நூலில் சொல்ல இயலும். வெறும் புத்தகத்தை வாசித்து விட்டு நீங்கள் வீடு கட்ட முடியுமெனில் பொறியாளர்கள் எதற்கு?
நான் பல கட்டுமானப் பொறியியல் நூல்களை எழுதி இருக்கிறேன். என்னுடைய 20 ஆண்டு கால கட்டிட பொறியியல் அனுபவத்திற்குப் பின்பு தான் வீடு கட்ட ஆரம்பித்தேன்.
ஒரு புத்தகத்தை பார்த்தோ, அல்லது வீடியோவை பார்த்தோ உங்களால் வீடு கட்ட முடியும் என துணிந்து இறங்கினால் உங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் விரயமாகி செலவு எக்கச்சக்கமாகும்.
இதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு தான் .
ஒன்று அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு அக்குழுவிடம் வேலையை முழுமையாக ஒப்படைப்பது.
இரண்டு: “வீட்டைக் கட்டிப் பார்த்தேன்” என்னும் இந்த அனுபவ நூலை படித்து தெரிந்து கொண்டு எந்தெந்த விஷயங்களை எல்லாம் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல உங்களது கனவு இல்லத்தை கட்டுவது.
ஏனென்றால் இதை ஒரு அனுபவ நூலாக நீங்கள் கருத வேண்டும் .பல பேரும் தங்களது வீடு கட்டி அனுபவங்களை சொல்லி இருப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், நான் ஒரு அனுபவம் வாய்ந்த பொறியியல் களத்தில் என்னுடைய கனவுவீட்டைக் கட்டுவதற்கு நிதி திரட்டல் வங்கிக்கடன், மனை வாங்குதல், அஸ்திவாரம் முதல் கிரஹபிரவேசம் வரை நடந்த அனைத்து விஷயங்களையும் கோர்வையாக சொல்லியிருக்கிறேன். அனுபவரீதியாக எளிமையான கட்டுமான உத்திகளையும் கட்டுமானச் செலவை குறைக்கும் முறைகளையும் இந்த நூலில் கூறி இருக்கிறேன்,.
அனேகமாக தமிழில், ஏன் உலகிலேயே இது போன்ற வீட்டைக் கட்டியவரே
ஏ டூ இசட் கூறும் அனுபவ கட்டட நூல் வெளிவருவது இதுவே முதல் தடவையாக இருக்கும். இந்த நூல் வீடு கட்டும் அனைத்து பொது மக்களுக்கும் மட்டுமன்றி,
கட்டுனர்களுக்கும், பொறியாளர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் மிகச் சிறந்த கட்டட ஆலோசனைகளை தொகுத்து கூறும் புத்தகமாக இருக்கும். ஏனெனில் அவர்களது வாடிக்கையாளரான வீடு கட்டும் சாமானியர்களுக்கு எடுத்துச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இந்த அனுபவ நூலில் இருக்கிறது.
பொறியாளர் அல்லாத ஒரு சாமானியரின் பார்வையில் இதை எழுதுவதால் பொதுமக்களுக்கு நன்கு புரியும். கடின தொழில்நுட்ப வார்த்தைகள் ஏதுமில்லாததால் இது படிக்க மிகவும் எளிமையாக இருக்கும் என்பது திண்ணம். ஏதும் புரியாமல் வீட்டைக் கட்டி முழிக்கும் வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு குறிப்பேடாக இருக்கும் என நம்பிக்கையில் இதை எழுடி வெளியிடுகிறேன்.
இது ஒரு தொழில்னுட்ப நூல் அல்ல, ஆனால் சிவில் கற்கும் மாணவர்களும், அவர்களுக்கு கற்பிக்கும் சிவில் துறை பேராசிரியர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய முழு முதல் வீட்டு கட்டுமான ஆலோசனை நூல் ஆகும்.
1.மனை வாங்குதல்
3.வீட்டுகடன்?
4.பிரதம மந்திரி மானியம்
5. சரிபடுமா டர்ன் கீ சிஸ்டம்?
6.காண்ட்ராக்டர்களும் கண்டிஷன்களும்
7.ஒப்பந்தங்கள் உண்மைகள்
8. மூன்று முதற்கட்ட பணிகள்
9.பில்டிங் மார்க்கிங் பிழைகள்
10.வீட்டு வடிவமைப்பில் தவறுகள்!
11. அஸ்திவாரத்தில் அவசர தவறுகள்
12.பேஸ்மட்டப் பணிகள்
13. பில்லர் கியூரிங்!
14.கான்கிரீட் தளம்
15.கட்டுவேலையில் கவனிக்க
16.பூச்சு வேலையில்
17.பெயிண்டிங்கில் சொதப்பாமல்
18. ஜிப்சம் பிளாஸ்டர் அவசியம்
19. கதவு ஜன்னல்ஃபிட்டிங்க்ஸ்
20. கட்டட முகப்பு
21. இறுதிக்கட்ட பணிகள்
22. கிரஹபிரவேசம்
23. பில்டரை/ பொறியாளரை தேர்ந்தெடுப்பது?
24. வீட்டுக்கட்டுமான பொதுவான பிழைகள்..
25. வீட்டுக்கடன், ப்ரி குளோஸ், இன்சூரன்ஸ்
வாங்க :
https://www.amazon.in/dp/B0D9FTYWGR
வீட்டைக் கட்டிப் பார்த்தேன் - முழுமுதல் வீட்டு கட்டுமான ஆலோசனை நூல்: Veettai Katti Paarthen - A Perfect Guide for Home Construction (Tamil Edition) eBook : / P. Subramaniyam, பா......