16/02/2020
கஜா புயலுக்கு பின்னர் தொழில் செய்ய முடியவில்லை. நிவாரணம் வந்து சேரவில்லை வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போனது. செய்தொழில் துவங்க வங்கியில் லோன் அப்ளை செய்து ஓராண்டு ஆகியும் அதனை பரிசீலனைக்கு ஏற்கவில்லை. நேரில் சென்றால் மதிப்பளித்து பேசுவதும் இல்லை.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவிடம் முறையிடுகின்றனர். அவரும் தொலைபேசி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கின்றார். வங்கி மேலாளர் செவி சாய்க்கவில்லை.
எம்.எல்.ஏ என்ற முறையில் கலெக்டரை நேரில் சந்திக்கின்றார். 17 பழங்குடி வகுப்பை சார்ந்தவர்களுக்கு லோன் வழங்கும் உத்தரவை பெற்று மேலாளருக்கு அனுப்புகின்றார். அதன் பின்னும் லோன் கிடைத்தபாடில்லை. இழுத்தடிப்பு தொடர்கின்றது. இந்த நிலையில் தான் வங்கி மேலாளரை சந்தித்து பேசுகிறார் டி.ஆர்.பி. ராஜா.
பணிக்காலம் நிறைவு பெறுவதால் கோப்புகளில் கையொப்பம் இடாமல் இழுத்தடிப்பு செய்வது எந்த வகையில் நியாயம்? அதனை நம்பி இருக்கும் குடும்பத்தினரிம் நிலைமை என்ன?
இதனை தட்டிக்கேட்டால் அரசு அதிகாரியை மதிக்கவில்லையாம்.
நடந்ததை நீங்களே பாருங்கள். மெத்தனமான வங்கி மேலாளர் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வரை ஓயப்போவதில்லை.