08/12/2025
நாளை புதுச்சேரி தவெக மாநாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம்: கட்சித் தலைமை வலியுறுத்தல்
புதுச்சேரியில் நாளை, விஜய் பங்கேற்க உள்ள தவெக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் வலியுறுத்தி உள்ளார். ஒருவேளை தமிழ்நாட்டில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் காவல்துறையின் எச்சரிக்கை. மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதிலும், க்யூஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு இருப்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
புதுச்சேரியில் நாளை தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொ....