Tamilnadu Today Magazine

Tamilnadu Today Magazine Tamilnadu Today Tamil Magazine

09/06/2024

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலையை இடம் மாற்றி ஏற்கனவே சாபித்திருந்த பழைய இடத்திலேயே வைக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ராமானுஜ அடியார்கள் ஆலயத்தின் உள்ளே ரங்கா ரங்கா என கோஷங்களை எழுப்பியும் உடனடியாக தீர்வுகளை கோரியும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினர் இந்த போராட்டத்திற்கு பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் தலைமையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டு போராடினர்

08/06/2024

மழை நீர் வடிகாலா?
காவு வாங்கும் பள்ளம்.
Chief Minister of Tamil Nadu Satheesh Kumar R.K. Ilanchezhian Dr. R. Nataraj Udhayanidhi Stalin Chennai, India

மதுரை மாவட்டம் மேலூரில் கலைஞர் 101 வது பிறந்த விழா..
03/06/2024

மதுரை மாவட்டம் மேலூரில் கலைஞர் 101 வது பிறந்த விழா..

02/06/2024

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டுக்கான
வசந்த விழா உற்சவம்
கடந்த மே 23 அன்று தொடங்கி ஜூன் 6 வரை 15 நாட்கள் நடைபெற்று வருகிறது இதில் 11 ஆம் நாளான இன்று, அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் உள் உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இதன் சிறப்பாக அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் உற்சவர் இன்று திருக்கோயிலினுள் அமைந்துள்ள புஷ்பக தடாகத்தை சுற்றி வளம் வந்த காணொளியை காணலாம்.

01/06/2024
ஜூன் 1 இன்று பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் தமிழ்நாடு டுடே இதழில்..
01/06/2024

ஜூன் 1 இன்று பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் தமிழ்நாடு டுடே இதழில்..

தமிழக முழுவதும் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் தமிழ்நாடு டுடே  ஜூன் 1 இதழில்..
28/05/2024

தமிழக முழுவதும் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் தமிழ்நாடு டுடே ஜூன் 1 இதழில்..

26/05/2024

உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் நடத்துநர்களை சரமாரியாக தாக்கிய

26/05/2024

உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு - தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

24/05/2024

உசிலம்பட்டி 23.05.2024

*உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் நடத்துநர்களை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியான மதுரை ரோடு, விநாயகர் கோவில் அருகில் மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை, பேருந்தின் முன் அபே ஆட்டோவில் வந்த இளைஞர்கள் வழிமறித்து வம்புக்கு இழுத்ததுடன், தட்டிக் கேட்ட தனியார் பேருந்து நடத்துநர்களை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

தாக்குதல் நடத்திய போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இளைஞர்களிடமிருந்து நடத்துநர்களை காப்பாற்றி அனுப்பி வைத்த நிலையில்,

நடத்துநரை தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தாகவும், குறுகலான சாலையில் வழிவிடாமல் வழிமறித்து ஆட்டோவை இயக்கி வந்த போது தட்டிக் கேட்ட நடத்துநரை தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.,

மேலும் இந்த சம்பவம் குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்காத சூழலில் வைரலான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் உசிலம்பட்டி பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,

வீரசேகர் மதுரை நிருபர்

24/05/2024

தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்தும் அவலம்.

விபத்து ஏற்படும் அபாயம்.

கண்டு கொள்ளாத ஹோட்டல் உரிமையாளர் .

நடவடிக்கை எடுப்பார்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்....

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே பஞ்சாபி தாபா ஹோட்டலின் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.

பொதுமக்கள் ஹோட்டலுக்கு வரும்போது சாலை ஓரத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் செல்கிறார்கள்.

ஆனால் வெளிப்புறம் நெடுஞ்சாலை ஓரத்தில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு செல்கின்ற வாடிக்கையாளர்களின் வாகனங்களை வடிவமைப்பது மற்றும் வெளியில் பாதுகாக்க பாதுகாவலர் எவரும் இல்லை.

மேலும் வாடிக்கையாளர்களே காரை நிறுத்திவிட்டு. அவர்களாகவே காரை எடுத்து செல்லும் அவல நிலை..

இதனால் நெடுஞ்சாலையில் வருகின்ற கனரக வாகனங்கள் அரசு பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் நடந்து செல்பவர்கள். மீது விபத்து ஏற்படும் அபாய நிலை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே ஹோட்டலின் அருகே அகோர விபத்து நடைபெற்றது.

மேலும் இப்பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகின்றன சூழலில்.

இனி வரும் காலங்களில் ஹோட்டலுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் அவர்களின் கார்களை ஒழுங்குமுறை படுத்துவதும் சாலை ஓரம் நிற்காமல் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும். பொதுமக்களுக்கும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் வாகனத்தை நிறுத்த வேண்டும். மேலும் விபத்து ஏற்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது ...

S.சரவணன் செங்கம் செய்தியாளர்

23/05/2024

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர்*

22/05/2024

சென்னை சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் விநாயகர் கோயில் அருகே உள்ள அமுதஸ்காவேரி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 12:30 மணியளவில் பெட்ரோல் திருடன் இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் எடுத்துச் சென்றுஉள்ளான் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பொருட்களை சோதனை செய்தும் கடைசியில் எதுவும் கிடைக்கவில்லை கடைசியாக வாகனத்திலிருந்து பெட்ரோல் மட்டும் எடுத்து சென்றுஉள்ளான் . சங்கராபுரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இதுபோன்ற பெட்ரோல் திருட்டு சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. தொடரும் நிகழ்வுகளால் சங்கராபுரத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

22/05/2024

உசிலம்பட்டி 21.05.2024

*உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.,*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன் மேட்டுப்பட்டி அரசு மதுபான கடை எதிரே புத்தூர் மலை அடிவார பகுதியில் அடையாளம் தெரியாத நபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிந்துபட்டி காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.,

அடையாளம் தெரியாத நபரை மர்ம கும்பல் கல்லால் தாக்கி படுகொலை செய்துவிட்டு சென்றிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.,

இந்த சம்பவம் குறித்து
தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.,

மேலும் சிந்துபட்டி காவல் நிலைய போலிசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து படுகொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும், அடையாளம் தெரியாத நபரை படுகொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

அரசு மதுபான கடை அருகில் அடையாளம் தெரியாத நபர் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,

வீரசேகர் நிருபர் மதுரை

சாதனை குழந்தை ஜான்விக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹
22/05/2024

சாதனை குழந்தை ஜான்விக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹

20/05/2024

கொட்டும் மழையையும் பொருள் படுத்தாமல் கிரி வீதியில் கிரிவலம் வந்தார்கள்.

20/05/2024

சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது

19/05/2024

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூர் பிர்கா, ஆலம்பட்டி ஊராட்சி கரையாம்பட்டி ஆண்டி என்பவர் மகன் ராஜா வயது 45, கடந்த 22/04/2024 அன்று பொன்னமராவதி பெரியண்ணன் மீனாட்சி மருத்துவமனையில் தனது கை கால் போன்ற இடங்களில் உள்ள கொழுப்பு கட்டியை நீக்க மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டு,அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் நான்கு கொழுப்பு கட்டிக்களும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது, அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படவே மேற்கண்ட மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்து திருச்சியில் உள்ள நீரோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளர்கள், அங்கு சென்றதும் ஏற்கனவே செய்த சிகிச்சை தவறு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், அவருடைய உடல்நிலை மோசமடையவே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்கள், பிறகு மதுரையில் உள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்து சிகிச்சை அளித்தும் ராஜா உயிர் பிழைக்கவில்லை, ஆகவே இறந்துபோன ராஜாவின் பிரேதத்தை இன்று 17/05/2024 காலை 11.00 மணிமுதல் பொன்னமராவதி மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை நுழைவாயிலில் வைத்து, இந்த மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாலேயே, ராஜா மரணம் அடைந்துவிட்டார் என அவரின் உறவினர்கள் பொதுமக்கள் அனைவரும் போராட்டம் செய்தனர்.இறுதியில் வருவாய்த்துறை, காவல்துறை அனைவரும் பேச்சுவார்த்தை நடத்தியதில், ராஜா உறவினர்கள் புகார் கொடுங்கள் வழக்கு பதிந்தும், பிரேத பரிசோதனை செய்தும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிய காவல்துறை பேச்சுவார்த்தையில் தீர்வு ஏதும் எட்டவில்லை,உடனே ராஜாவின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டுபோய் அவர்கள் ஊரில் அடக்கம் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு தூக்கி சென்றுவிட்டார்கள், காவல்துறை அனைவரையும் கலைந்துபோகுமாறு அறிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.

எம். மூர்த்தி, பி. காம்,.
தமிழ்நாடு டுடே, மாவட்ட தலைமை நிருபர், புதுக்கோட்டை.

19/05/2024

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே கள்ளச்சாராய காய்ச்சுதலில் ஈடுபட்ட நபர் கைது.

17/05/2024

பழனியில் வைகாசி பெருவிழா கொடியேற்றம்,,,, திண்டுக்கல் மாவட்டம். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை ( 16,05,2024) 9 மணி அளவில் வைகாசி விசாக கொடியேற்று விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் ஆன்மீக பெரியோர்களும்/ பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்வையும் அதன்பின் தீபாரதணையும் கண்டு முருகன் அருள்பெற்றார்கள், // செய்தி..,, ஆ,ப,தில்லை சிதம்பரம். தமிழ்நாடு டூடே / பழனி செல் 9095905802

14/05/2024

உசிலம்பட்டி 13.05.2024

*உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு, பணியை காலதாமதப்படுத்தியதால் சாலையில் முட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகர் தெருவில் சுமார் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.,

இந்த தெருவில் இருந்த தார் சாலையை அகற்றிவிட்டு சிமெண்ட் சாலை அமைக்க கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.,

ஜல்லி கற்கள் மட்டுமே பரப்பி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால் குண்டும் குழியுமாக மாறி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்த சூழலில் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.,

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் முட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது., இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,

வீரசேகர் மதுரை நிருபர்

14/05/2024

அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்

14/05/2024

செங்கம் அருகே பக்கிரிப்பாளையம் மேல்புழுதியூர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக கோழி இறைச்சி கழிவுகள். துர்நாற்றம் வீசுகின்ற அவல நிலை. தொற்று ஏற்படும் அபாயம்...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்புழுதியூர் பக்கிரிப் பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக கொட்டிக் கிடக்கும் இறைச்சி கழிவுகள் இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி.

பொது மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் மேலும் செங்கம். திருவள்ளூர்நகர். மேல்புழுதியூர்.பக்கிரிப்பாளையம். பகுதிகளில் பெரும்பாலான இறைச்சி கடைகள் உள்ளன. கோழி. ஆடு. மற்ற இதர இறைச்சி கழிவுகளை நெடுஞ்சாலை ஓரமாக மூட்டை மூட்டையாக கொட்டிச் செல்லும் அவல நிலை. இதனை கண்காணிக்க தவறிய துறை சார்ந்த அதிகாரிகள்.

மேலும் இப்பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்களும் உள்ளன பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்லும் இது போன்ற செயல்கள் மிகவும் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளுக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலை ஓரமாக இறைச்சி கழிவுகளை கொட்டி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் எச்சரிக்கையும் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

சரவணன் செங்கம் நிருபர்

14/05/2024

பழனி - தாராபுரம். ஒவ்வொரு முறையும் இந்த வழிதடத்தில் ஒவ்வொரு ரயிலும் கடந்து போனபின் சுமார் 30நிமிடங்களுக்கு மேலே இரண்டு புறமும் காத்திருக்கும் வாகனங்கள்

14/05/2024

கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் வெளியாகி கொண்டிருக்கும் தமிழ்நாடு டுடே இதழ்  12/05/2024              Chief Minister of Tamil Nadu Dr...
12/05/2024

தமிழ்நாடு முழுவதும் வெளியாகி கொண்டிருக்கும் தமிழ்நாடு டுடே இதழ் 12/05/2024

Chief Minister of Tamil Nadu Dr. R. Nataraj Sathish Mylapore R.K. Ilanchezhian Sudhakar Satheesh Kumar Tamilnadu Today Magazine

Spa Raid..
11/05/2024

Spa Raid..

11/05/2024

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சக்தி சீரடி சாய்பாபா கோயிலில் ஒன்பதாம் ஆண்டு நிறைவு பெற்று பத்தாம் ஆண்டு அடியை எடுத்து வைப்பதால் அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது அக்கம் பக்கத்தினர் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாபா நடத்திய அற்புதங்களை கொத்தனார், இந்தப் பாப்பா இங்கு வருவதற்கு காரணம் என்ன என்பதை கோவில் நிறுவனர் திருமதி மல்லேஸ்வரி அடுத்து வெளிவரும் தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் விளக்க உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு பலரின் பிரச்சனைக்கு பாபா தீர்வளித்து இருக்கிறார் என்பதால் மக்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

Address

47 Jes Pearl Appartment
Chennai
600091

Telephone

+919003014445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Today Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilnadu Today Magazine:

Videos

Share

Category