Madurai 2 Chennai

Madurai 2 Chennai Entertainment

24/12/2024

இன்று!

#பெரியார்

24/12/2024

#தமிழகத்தின்கருப்புதினம் புயலால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்த தென்தமிழகம் : வரலாற்றில் இன்று : (23-12-1964 )

வரலாற்றுக் காலத்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி.

1964 ம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவான புயல் சின்னம் இலங்கையை தாக்கி டிசம்பர் 23 ம்தேதி நள்ளிரவு தென் தமிழகத்தை தாக்கியது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் வீசிய புயலால் தென் தமிழகம் உருக்குலைந்து போனது. மழையால் இராமநாதபுரம் மதுரை சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தேனி விருதுநகர் தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

இந்த புயலால் இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி என்ற நகரமே அழிந்து போய்விட்டது.

அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர்.

சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் ஆடல்பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். கடலோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளும் அழிந்து போயின.

கோயில்களிலும், கட்டடங்களிலும், ரயில்நிலையத்திலும், எஞ்சியவர்கள் நாட்டுப் படகில் மண்டபம் முகாமுக்கு தப்பிச் சென்றனர். தற்போது இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன.

தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதில் சோக செய்தி என்ன வென்றால் அப்போது தொலைத்தொடர்பு வசதி இல்லாத காரணத்தால் தனுஷ்கோடி நகரம் அழிந்தது யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்துதான் நாட்டு மக்களுக்கு தெரியவந்தது.

அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற நகரம் என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி. ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து மக்கள் வாழத் தகுதியற்ற என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து அன்று தொலைந்த தனுஷ்கோடி இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

தனுஷ்கோடி கடலை, தாலாட்டும் தாய் மடியாகக் கருதும் மீனவர்கள் மட்டும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வாழ்வதையே சுகமாகக் கருதி, அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட சோகத்தை நெஞ்சில் சுமந்து வாழ்ந்துவருகிறார்கள்..! தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காலக்கட்டத்தில் எத்தனையோ புயல்கள் தமிழகத்தை தாக்கினாலும் 1964 ம் ஆண்டு தென் தமிழகத்தை தாக்கிய புயல் தான் அதிக சக்தி வாய்ந்தது . 1964 க்கு பிறகு இவ்வளவு சக்தி வாய்ந்த புயலை தமிழகம் சந்தித்ததில்லை.

வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது #இராமநாதபுரம்

இடம் மாறும் 'நூற்றாண்டு"மதுரை கீழமாரட் வீதி வெங்காய சந்தை!
19/12/2024

இடம் மாறும் 'நூற்றாண்டு"

மதுரை கீழமாரட் வீதி வெங்காய சந்தை!

17/12/2024

ரைட் சகோதரர்கள் தினம்

| | | |

என் நெஞ்சில் குடியிருக்கும் ❤️
14/12/2024

என் நெஞ்சில் குடியிருக்கும் ❤️

12/12/2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 😊😊 Rajinikanth🥳🥳

11/12/2024

முண்டாசுக் கவிஞன் பிறந்த நாள் இன்று

11/12/2024

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி நினைவு தினம் இன்று

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் எழுத்தாக உள்ளது நம் மதுரை. எம்.எஸ். சுப்புலட்சுமி தென்னிந்திய மொழிகள் தொடங்கி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.

1916 செப்டம்பர் 16இல் மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவரது தாயார் சண்முகவடிவு வீணை மீட்டுவதில் ஆர்வம் கொண்டவர். சுப்புலட்சுமியின் பாட்டி ஒரு வயலின் கலைஞர். இசைக்குடும்பத்தில் பிறந்த சுப்புலட்சுமி இளம்வயதிலேயே பாடல்கள் பாடுவதில் சிறந்துவிளங்கினார். 1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட இசைத்தட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் அவரது தாயார் வீணை இசையோடு சேர்ந்து வெளிவந்தது.

சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா, மீராபாய் என ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மகாத்மா காந்தி தனக்குப் பிடித்தமான பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம் பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பாராட்டு பெற்றவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான மகசாசே விருது 1974ல் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டது.

திருப்பதி பெருமாளுக்கு இவரது பாடல்தான் திருப்பள்ளியெழுச்சி. குறையொன்றுமில்லை, காற்றினிலே வரும் கீதம் இன்னும் ஊரெங்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. மதுரையில் பிறந்து உலகெங்கும் புகழ்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவுதினம் டிசம்பர் 11.

உத்தரகாண்ட்: ரிஷிகேஷில் உள்ள 117 மீட்டர் உயரமான இடத்தில் இருந்து வீல் சேருடன் Bungee Jumping செய்து தனது ஆசையை நிறைவேற்ற...
08/12/2024

உத்தரகாண்ட்: ரிஷிகேஷில் உள்ள 117 மீட்டர் உயரமான இடத்தில் இருந்து வீல் சேருடன் Bungee Jumping செய்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்ட மாற்றுத்திறனாளி!

தென் சென்னை - டிசம்பர் 13 வெளியீடு      #தென்சென்னை
08/12/2024

தென் சென்னை - டிசம்பர் 13 வெளியீடு #தென்சென்னை

06/12/2024

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய முப்படைகளின் கொடி நாள் சின்னம்
தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது

 #போஸ்டர்கலாட்டா மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே தனக்கு 'வேலை தேவை' என போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞர்.
06/12/2024

#போஸ்டர்கலாட்டா மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே தனக்கு 'வேலை தேவை' என போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞர்.

06/12/2024

சட்டமேதை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

| |

04/12/2024

03/12/2024

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

01/12/2024

கவிஞர் யுகபாரதி பிறந்த தினம் இன்று

30/11/2024

சென்னை - கூடுவாஞ்சேரி (30-11-2024)

30/11/2024

மனிதர்களை போல் பிஸ்கட் சாப்பிடும் காகம் 🙄🙄🙄

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Madurai 2 Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madurai 2 Chennai:

Videos

Share

Category