Mr.Black Coat

Mr.Black Coat lawyer and lawfirm , castless soceity, video creating, legal services . Law, the discipline and prof
(1)

01/09/2022

*சட்டப்பிரிவுகளை அறிந்து கொள்வோம்*
*ஐபிசி பிரிவுகளின் பொருளை அறிந்து கொள்ளுங்கள் .....*
*பிரிவு 307* = கொலை முயற்சி
*பிரிவு 302* = கொலைக்கான தண்டனை
*பிரிவு 376* = கற்பழிப்பு
*பிரிவு 395* = கொள்ளை
*பிரிவு 377* = இயற்கைக்கு மாறான செயல்
*பிரிவு 396* = கொலை செய்யும் போது கொலை
*பிரிவு 120* = சதி
*பிரிவு 365* = கடத்தல்
*பிரிவு 201* = ஆதாரங்களை அழித்தல்
*பிரிவு 34* = பொதுவான நோக்கம்
*பிரிவு 412* = ஊர்சுற்றுவது
*பிரிவு 378* = திருட்டு
*பிரிவு 141* = சட்டவிரோத சட்டசபை
*பிரிவு 191* = தவறான ஆதாரங்களை அளித்தல்
*பிரிவு 300* = கொலை
*பிரிவு 309* = தற்கொலை முயற்சி
*பிரிவு 310* = மோசடி
*பிரிவு 312* = கருக்கலைப்பு
*பிரிவு 351* = தாக்குதல்
*பிரிவு 354* = பெண் அவமானம்
*பிரிவு 362* = கடத்தல்
*பிரிவு 415* = மோசடி
*பிரிவு 445* = வீடு உடைத்தல்
*பிரிவு 494* = வாழ்க்கைத் துணையின் வாழ்நாளில் மறுமணம்
*பிரிவு 499* = அவதூறு
*பிரிவு 511* = ஆயுள் தண்டனையுடன் தண்டிக்கக்கூடிய குற்றங்களைச் செய்ய முயற்சித்ததற்கான தண்டனை.
▫▪▫▪▫▪▫▪
இதுபோன்ற சில உண்மைகள் நம் நாட்டில் உள்ளன, இதன் காரணமாக எங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதைப் பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை.

எனவே இது போன்ற ஏதாவது செய்வோம்
*ஐந்து சுவாரஸ்யமான உண்மைகள்* பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது,
இது வாழ்க்கையில் எந்த நேரத்திலும் பயனுள்ளதாக இருக்கும்.

*(1) மாலையில் பெண்களை கைது செய்ய முடியாது* -

குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 46 ன் கீழ், இந்திய காவல்துறை எந்தவொரு பெண்ணையும் மாலை 6 மணிக்குப் பிறகு, காலை 6 மணிக்கு முன்னதாக கைது செய்ய முடியாது. காவல்துறையினர் அவ்வாறு செய்தால், கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் (வழக்கு) பதிவு செய்யப்படலாம். இது அந்த காவல்துறை அதிகாரியின் வேலையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

*(2.) சிலிண்டர் வெடித்ததால் உயிர் மற்றும் சொத்து இழப்பு குறித்து ரூ .40 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை கோரலாம்*

பொது பொறுப்புக் கொள்கையின் கீழ், எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்து, நீங்கள் உயிர் மற்றும் சொத்துக்களை இழக்க நேரிட்டால், நீங்கள் உடனடியாக எரிவாயு நிறுவனத்திடமிருந்து காப்பீட்டுத் தொகையை கோரலாம். எரிவாயு நிறுவனத்திடமிருந்து ரூ .40 லட்சம் வரை காப்பீட்டுக் கோரலாம் என்று உங்களுக்குச் சொல்வோம். நிறுவனம் உங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டால் அல்லது ஒத்திவைத்தால், அதைப் புகார் செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், எரிவாயு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம்.

*(3) எந்த ஹோட்டலும் 5 நட்சத்திரங்களாக இருந்தாலும்… நீங்கள் இலவசமாக தண்ணீர் குடிக்கலாம் மற்றும் கழுவும் அறையைப் பயன்படுத்தலாம்*

இந்திய தொடர் சட்டம், 1887 இன் படி, நீங்கள் நாட்டின் எந்த ஹோட்டலுக்கும் சென்று தண்ணீர் கேட்கலாம், மேலும் அந்த ஹோட்டலின் கழுவும் அறையையும் பயன்படுத்தலாம். ஹோட்டல் சிறியது அல்லது 5 நட்சத்திரங்கள், அவர்களால் உங்களைத் தடுக்க முடியாது. ஹோட்டல் உரிமையாளர் அல்லது எந்தவொரு ஊழியரும் உங்களை குடிநீர் அல்லது கழுவும் அறையைப் பயன்படுத்துவதைத் தடுத்தால், நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் புகார் அந்த ஹோட்டலின் உரிமத்தை ரத்து செய்யக்கூடும்.

*(4) கர்ப்பிணிப் பெண்களை வெளியேற்ற முடியாது-*

மகப்பேறு நலச் சட்டம் 1961 இன் படி, கர்ப்பிணிப் பெண்களை திடீரென நீக்க முடியாது. உரிமையாளர் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு அறிவிப்பைக் கொடுக்க வேண்டும், மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செலவுகளில் சிலவற்றைச் செலுத்த வேண்டும். அவர் இதைச் செய்யாவிட்டால், அவர் மீது அரசு வேலைவாய்ப்பு சங்கத்தில் புகார் அளிக்க முடியும். இந்த புகாரின் காரணமாக, நிறுவனம் மூடப்படலாம் அல்லது நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

*(5) உங்கள் புகாரை எழுத காவல்துறை அதிகாரி மறுக்க முடியாது*

ஐபிசியின் பிரிவு 166 ஏ படி, எந்தவொரு போலீஸ் அதிகாரியும் உங்கள் புகார்களை பதிவு செய்ய மறுக்க முடியாது. அவர் இதைச் செய்தால், அவர் மீது மூத்த போலீஸ் அலுவலகத்தில் புகார் அளிக்க முடியும். அந்த காவல்துறை அதிகாரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் குறைந்தது *(6) *மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர் வேலையை இழக்க நேரிடும்.

29/08/2022

இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம் ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ளத் தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது.

அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது.

ஓர் இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

29/08/2022
தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை வாதாடுவதற்குஅரசு வழக்கறிஞராக வழக்கறிஞர் டாக்டர் டி சண்முகநாதன...
01/07/2021

தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை வாதாடுவதற்குஅரசு வழக்கறிஞராக
வழக்கறிஞர் டாக்டர் டி சண்முகநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

22/06/2021

குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல்
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.
மேல் முறையீடு
பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.

பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள்

குற்றவியல் நீதித்துறை நடுவர்,

நிபந்தனை எதுவும் இல்லாமல்

சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு

பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.

சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம். நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால் அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.

பிணை முறிவும், பிணையாளிகளும்

பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.

பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதிவசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின்பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதிவசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.

எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.

பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்பதற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தலன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.

21/06/2021

பிணையில் விடுவிக்க மனு

குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.

வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.

அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

நிபந்தனையும் தங்குமிடத்தின் நிலைமையும் பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?

பணியை இழக்க நேரிடுமா

பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?

காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?

குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல்
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.

20/06/2021

குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்

பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்
குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.
பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.

19/06/2021

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?

நோக்கம்
பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).

சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.

ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
நீதிமன்றம் துவங்கும் நேரம்.
உங்களுக்காக பிணையாளிகளாக வரத் தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

  எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன?முதல் தகவல் அறிக்கை (FIR)குற்றவியல் நடைமுறை குறியீடு (சிஆர்பிசியின்) பிரிவு ...
16/06/2021

எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன?

முதல் தகவல் அறிக்கை (FIR)
குற்றவியல் நடைமுறை குறியீடு (சிஆர்பிசியின்) பிரிவு 154 உடைய துணைப்பிரிவு (1) இன் கீழ் கொடுக்கப்படும் ஒரு தகவல் தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) என அழைக்கப்படுகிறது. அதாவது காவல் நிலையத்தில் பொறுப்பிலுள்ள ஒரு அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவருடைய சார்பிலோ நடந்த குற்றத்தை வாய்மொழியாக தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியாலோ அல்லது தகவல் கொடுப்பவரின் உத்தரவின்படியோ எழுத்து மூலம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும்.
எந்தெந்த குற்றங்களுக்கு எஃப்ஐஆர் பதிவு செய்ய அவசியம்?

குறிப்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டுமென்றால் அது பிடியாணை வேண்டாக் குற்றமாக (Cognizable offence) இருக்க வேண்டும். அதாவது ஒருவரை கைது செய்வதற்குரிய குற்றமாக இருக்க வேண்டும். பொதுவாக பெருங்குற்றங்கள் தான் பிடியாணை வேண்டாக் குற்றங்களாக உள்ளன. அதில், கொலை, ஆட்கடத்தல், வன்கொடுமை, மோசடி, வரதட்சணை மரணம், கொள்ளை போன்றவற்றை கூறலாம். இவைகள் பிடியாணை வேண்டாக் குற்றங்களாக இருப்பதினால் காவல் துறையானது குற்றவியல் நடுவரின் முன்னனுமதி இல்லாமல் முதல் தகவல் அறிக்கையை பெற்று பதிவு செய்கிறது.
எஃப்ஐஆர் பதிவின்போது தகவல் அளிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டியவை...

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்போது தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறுதல் அவசியம். அவ்வாறு தகவல் கொடுப்பவர் கையொப்பமிட மறுத்தால், போலீசாரும் விசாரணை செய்ய மறுத்துவிடலாம். முதல் தகவல் அறிக்கை கொடுத்தவர் எழுதப் படிக்க தெரியாதவராக இருக்கும் பட்சத்தில், அது எழுதப்பட்டபின் அவருக்கு படித்து காட்டப்பட வேண்டும். இந்த தகவல் காவல் துறையின் நாட்குறிப்பேட்டில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். எஃப்ஐஆர் பதினாதும் அதன் நகலொன்று தகவல் கொடுத்தவருக்கு எந்த கட்டணமும் இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தால்?

காவல் நிலையத்தின் பொறுப்பான காவல்துறை அதிகாரி அல்லது வேறு எந்த பொறுப்பாளரும் பிடியாணை வேண்டாக் குற்றத்திற்கு காரணமின்றி எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கலாம். அத்தகைய மறுப்பால் வேதனைப்படும் எந்தவொரு நபரும் எழுத்துப்பூர்வமாக குற்றத்தின் தகவலை தபால் மூலம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அல்லது மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பலாம். இதற்கு சிஆர்பிசியின் பிரிவு 154 (3) அல்லது பிரிவு 156 (3) வழிவகை செய்கிறது

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Black Coat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.Black Coat:

Share

Category