17/08/2024
ஞாபகத்தில் மறையா ஞாயிறு.
மறக்க முடியாத ஞாயிறு 11.8.2024 நான் என் தாயின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஊருக்கு சென்று இருந்தேன்
திடீரென்று நானும் எனது அக்காவும் பேசிக்கொண்டோம் காரில் செல்லுகிற பொழுதெல்லாம் இந்த விரைவு சாலை வழியாக விருதுநகர் வழியாக சென்று கொண்டிருக்கிறோமே இந்த முறை ஏன் நமது பள்ளி தோழர்களை குறிப்பாக பெண் தோழர்களை பார்க்க கூடாது என்று எனது அக்கா கேட்க ஏனென்றால் எனது அக்காவிற்கு அவர்களும் நன்கு பழக்கம் என்பதால் நானும் சரி என்று ஒத்துக் கொண்டு என் தாயாரை வணங்கி விட்டு முனியம்மா அவருக்கு தொலைபேசியில் அழைத்து கொடுத்தேன்
அவர் முதலில் என் குரலை கேட்டவுடன் திகைத்துப் போன அந்த நிமிடம் அற்புதமான நிமிடம் நிலைமையை சொன்னேன் அதற்கு என்ன ஐயா எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வாயா உனக்காக வீட்டு கதவு திறந்து இருக்கும்.
என்ன தம்பி நீ இப்படி கேட்கலாமா நீ என்று கேட்க ஆஹா உரிமையோடு உடன்பிறப்பு அழைக்கிறது என்று மனமகிழ்ச்சியோடு சரி அருகில் இருக்கக்கூடிய நண்பர்களை எல்லாம் அழைக்கலாமே என்று முதலில் எனது அருமை நண்பர் பாலாவுக்கு அழைப்பு விடுத்தேன்.
பாலா அதற்கு என்ன நண்பா சந்திச்சுட்டா போச்சே அப்படின்னு சொன்னாரு அடுத்ததாக நான் கர்ணீக்கு அழைப்பு விடுத்த பொழுது நான் முக்கியமான ஒரு சிறு குழு கலந்துரையாடலில் இருக்கிறேன் வாட்ஸ் அப்பில் குரல் பதிவு அனுப்பிவிடுங்கள் நண்பா என்று சொல்ல குரல் பதிவில் அனுப்பிவிட்டேன் அவரும் உடனடியாக அதற்கு என்ன நண்பா சந்திச்சா போச்சு என்று சொல்ல ஆஹா அருமையான விஷயம் நாம் நினைத்ததெல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி என்று நான் நினைத்துக் கொண்டேன்.
பின்பு அருகில் தானே நமது நண்பர் ராஜன் பாபு இருக்கிறார் அவரிடத்தில் சந்திக்கலாமே என்று தான் கேட்டேன் அவரும் எந்த வித தயக்கமும் இன்றி வாருங்கள் நண்பா உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்ல உற்சாகம் பீறிட்டுக் கொண்டது.
சரி மீதியும் அருகில் உள்ளவர்களை அழைக்கலாமே என்று நான் ஆசை கொள்ள அதை நண்பர் பாலாவிடம் எடுத்துரைக்க அவரும் நான் முயற்சி செய்கிறேன் நண்பா என்று கூறி அன்றைய உரையாடலை நிறைவு செய்த விடிந்தது.
ஆகா நண்பர்களை அதுவும் 33 வருடங்கள் கழித்து ஒரு பெண் நண்பரை பார்க்கப் போகிறோம் நம்மோடு படித்தவர் ஆறாவது வகுப்பில் இருந்து பத்தாவது வகுப்பு வரை ஒன்றாக படித்தவர் பதினொன்றாம் வகுப்பில் பிரிவு மாறி சென்றாலும் எங்கள் பாசம் மாறவில்லை என்கின்ற நிலையில் சந்திக்கப் போகிறோம்.
அதுவும் என் உடன் பிறந்த அக்காவும் அந்த பள்ளியின் முன்னாள் மாணவி அவரையும் அழைத்துக் கொண்டு போகிறோம் என்கின்ற பொழுது உற்சாகத்திற்கு அளவில்லை ஆனால் அந்த உற்சாகத்தை அணை கட்டுவது போல ஒரு அழைப்பு நண்பர் ராஜன் பாபு இடமிருந்து நண்பா என் மனைவிக்கு கொடுத்த சத்தியத்தை நான் உங்களிடம் மறந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்
நான் மதுரைக்கு அவசரமாக செல்ல வேண்டிய காரணத்தால் என்னால் வர இயலாது நீங்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கான உணவு ஏற்பாட்டை நான் செய்துவிட்டு போகிறேன் நீங்கள் தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவர் தான் ராஜன் பாபு .
தான் இல்லாவிட்டாலும் அவ்விடத்தில் தன்னுடைய பங்களிப்பு மட்டுமல்ல தன் நண்பர்களின் பசியாற நினைக்கும் அந்த நல்ல உள்ளம் யாருக்கு வரும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் வரும் இருந்தாலும் அந்த தருணத்தில் உடனே ஏற்பாடு செய்வது என்பது என்னாலும் இயலாத ஒரு காரியம் தான் அந்த விடயத்தை இறைவன் நமது ராஜன் பாபு அருளியது ஆகச்சிறந்த அற்புதமான ஒரு விஷயம்
நண்பர் ராஜன் பாபுவின் நிலைமை நமக்கு நன்கு புரிந்தது சரி நண்பா நீங்கள் அதை கவனியுங்கள் என்று சொல்ல சூலக்கரைக்கு வண்டியை செலுத்தினோம் .
சூலக்கரையை நோக்கி வண்டி போகிற பொழுது எப்படி நம்மை எதிர்கொள்ளப் போகிறார் நாம் அப்படி முனியம்மாவை எதிர்கொள்ள போகிறோம் என்ற நினைவோடு நானும் எனது அக்காவும் வண்டியை விரட்ட வண்டி எங்களை விட வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
என்ன தம்பி சாப்பிடணும் என்ன சாப்பிட வேண்டும் அப்படின்னு முனியம்மா கேட்க ரசமும் அப்பளமும் போதுங்க அப்படின்னு நான் சொல்ல ஒரு சிரிப்பு சரி என்ன உணவு தயார் செய்தாலும் பரவாயில்லை என்றுதான் நான் அங்கு செல்ல , சூலக்கரை வந்தாச்சு வீட்டுக்கு எப்படி வரணூம் என்று நான் கேட்க, தம்பி அந்த சிக்னலில் இருந்து நேரா கிழக்காம வாங்க அக்கா அங்க ரோட்டோரத்தில் நிற்கிறோம் பாருங்க என்று நிக்க பச்சை கலரில் பாங்காய் பட்டுடுத்தி அழகாய் நின்றிருந்த முனியம்மாவை பார்க்கையில் அற்புதமான ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
அவர் ஓடிவந்து அக்காவின் கையை அளவலாக பிடித்துக் கொண்டு பேசுகிற பொழுது இது நீண்ட நாள் பிரிவானது போல் தெரியவில்லை போன வாரம் தான் வந்து விட்டுப் போனது போன்ற ஒரு பிரிவை ஏற்படுத்தியிருந்தது
அவ்வளவுதான் ஆனால் அது ஒரு 33 வருட பிரிவு என்பது அதன் பின்பு தான் பேச்சுவாக்கில் எங்களுக்கு புரிகிறது ஆனால் அந்த வீட்டின் காலடி எடுத்து வைக்கின்ற பொழுது அது 33 வருட பிரிவு என்பது எனக்கு இன்று வரை புலப்படவில்லை.
நண்பர் பாலா வருகிறேன் என்று சொன்னார் என்னவென்று தெரியவில்லை அழைக்கிறேன் பார்ப்போம் என்று அழைத்தேன் நண்பர் ஒரு மிகப் பெரிய குண்டைத் தூக்கி போட்டார்.
பள்ளியில் ஏதோ அவசர அழைப்பு நண்பா என்னை கூப்பிட்டாங்க நான் போகணும் மன்னிச்சுருங்க முடிஞ்ச அளவுக்கு வர பார்க்கிறேன் இல்லன்னா நம்ம சென்னையில் சந்திப்போம் அப்படின்னு சொல்லிட்டு போன வைக்க
இதை எப்படி முனியம்மாவிடம் சொல்லுவது என்று திணறிக் கொண்டிருந்தேன் ஏனென்றால் முனியம்மா மட்டுமல்ல அவரின் அன்பு கணவர் அவரும் முன்னாள் பள்ளி மாணவர் தான் அவரும் எங்களோடு மிகுந்த அன்போடு அளவனாக்கி கொண்டிருந்தார் பேச்சு வாழ்க்கையில் 15 பேருக்கு சாப்பாடு ரெடி பண்ணி இருக்கிறோம் என்று சொன்னவுடன் எனக்கு பகீரன தூக்கி வாரி போட்டது .
15 பேருக்கு சோறா நாம் வந்திருப்பதே ஐந்து பேரு தானே என்ன செய்வது என்று மனதிற்குள் ஒரு கலக்கம் நண்பன் கர்ணீ எப்பொழுது வருவான் உணவருந்துவானா? மாட்டானா? என்ற பயம் ஒருபக்கம்.
உணவு என்றால் சாதாரண உணவு அல்ல அவர்கள் செய்த அந்த அசைவ விருந்து மீன்வறுவலாகட்டும் ,கோழிபிறட்டலாகட்டும், ஆட்டுக்கறி தொக்காகட்டும்,மசாலக்குடலாகட்டும், முட்டையாகட்டும் எல்லாமே மிக அற்புதமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்த உணவு அது.
விருந்தோம்பல் என்பது நம்முடைய கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்த ஒன்றுதானே ஆக அந்த விருந்தோம்பல் மிக அற்புதமாக , அருமையாக இருந்தது. வயிறார உண்டால் வண்டி ஓட்டும் போது துக்கம் வருமே என்ற காரணத்தால் அதிகமாக உண்ண முடியவில்லை என்பது ஒரு வருத்தம் தான் .
ஆனால் 15 பேருக்கு என்பது நமக்கு கொஞ்சம் நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருந்த்து.
முடிவில் கரணி அழைக்க நண்பா நானும் என் மனைவியும் வாரோம் ஆனா சாப்பிட்டு வந்துட்டேன் நண்பா அப்படி என்று சொல்ல அடி வயிறு சற்று கலங்கி தான் போனது சரி வாட ந்ண்பா பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சொல்ல தன் மனைவியோடு வந்து இறங்கினார் கரணி.
அதன் பின்பு தான் அந்த இடம் வேறு ஒரு நிலைக்கு சென்றது எப்படி ஒரு இடத்தை கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற வித்தை கணவன் மனைவி இருவருக்குமே தெரிந்திருக்கிறது நமக்குள் ஒரு தயக்கம் இருந்தது அந்த தயக்கத்தை உடைத்தார் கருணையின் மனைவி அன்பு சகோதரி.
கார் ஓட்டத் தெரிந்த கர்னி என்ற தலைப்பில் ஒரு அற்புதமான உரையாடல் அங்கே சென்றது .உங்களுக்கெல்லாம் தெரியாத ஒரு கர்ணீயை எமக்கு வெளிச்சம் போட்டு காட்டினார் அன்பு தங்கை .
கர்ணி எதற்காக தங்கையை கூடவே அழைத்து வருகிறார் என்கின்ற உண்மையை போட்டு உடைத்த பொழுது தான் மனதிற்கும் ஆஹா இப்படியும் ஒரு உள்குத்து இருக்கிறதா என்பதை வியந்தேன்.இதற்கிடையே நமது ஞானசேகரன் அண்ணன் இணைந்தார். அவரும் முன்னாள் மாணவர். தும் அற்புதமான உரையாடல்களோடு நேரம் போனதே தெரியவில்லை கிட்டத்தட்ட ஒரு மூன்று மூன்றரை மணி நேரம் அங்கிருந்து இருப்போம்.
முழு மனதும் நிறைந்தது அதை வர்ணிக்க தற்போதுதான் அதற்கு நேரம் கிடைத்தது நண்பர்கள் அனைவரையும் அந்த இடத்திலே பார்த்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.
இருப்பினும் முனியம்மா அவர்களின் மூத்த புதல்வன் திருமணம் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது சனி ஞாயிறு இருக்கும் என்று சொன்னதாக ஞாபகம் இருபதுக்குள் வரக்கூடிய ஒரு சனி ஞாயிறு என்று சொன்னார் அந்த ஞாயிற்று அந்த சனி ஞாயிறு நாம் அனைவரும் கண்டிப்பாக சந்திப்போம் இன்னும் நம் நட்பு வட்டாரத்தை பலப்படுத்துவோம்.
இருக்கின்ற காலங்கள் குறைவு பேச்சினுடைய அவரவர் வயதை குறிப்பிட்டு பேசுகிற பொழுது அடடா 14 ,15 வயதில் நண்பர்களாக இருந்தவர்கள் இந்த 45 ,46 வயதிலேயே சந்திக்கிறோம் என்கின்ற நினைப்பு ஒரு பெரும் தூய்மை ஏற்படுத்தியதாகவே உணர்ந்தேன் .
ஆக முனியம்மா அவர்களின் கணவர் அற்புதமான விருந்து உபசரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்த்தும், அதை மிக லாவகமாக கையாண்ட விதம் நன்றாக இருந்தது
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு மீண்டும் ஒரு நல்லதொரு தருணத்தில் அற்புதமாய் சந்திப்போம் இன்னும் நிறைய உரையாடுவோம்.
உணர்வு பூர்வமாக உளப்பூர்வமாக
நன்றி வணக்கம்
என்றும் அன்புடன்
எழில்