மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதை Digital Modi "we Need Rail To" Bodi

  • Home
  • மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதை Digital Modi "we Need Rail To" Bodi
29/12/2024

தேனி ரயில் நிலையத்தில் மின் தூக்கி மற்றும் டிஸ்பிலே போர்டு மிகவும் அவசியம் அய்யா தங்கதமிழ்செல்வன்

💞💞
29/12/2024

💞💞

29/12/2024
நமது கார்டமம் சிட்டி ரயில் பயணிகள் சங்கத்திற்கான அழைப்பின் சார்பில் இன்று தென் மாநில அளவில் நடைபெறும் ஹாக்கி விளையாட்டுப...
28/12/2024

நமது கார்டமம் சிட்டி ரயில் பயணிகள் சங்கத்திற்கான அழைப்பின் சார்பில் இன்று தென் மாநில அளவில் நடைபெறும் ஹாக்கி விளையாட்டுப்
போட்டியை காண நேரில் கலந்து கொண்டு நமது சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த அழகிய தருணம் 💐 தென் மாநில அளவில் முதலாம் ஆண்டு ஐவர் பகல்/இரவு ஹாக்கி போட்டி west mountain Sports Club சார்பில் தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி தலைமை மூலம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் சிட்னி கிரவுண்ட்டில் தற்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது

இன்று போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்திருந்த மதுரை கோட்ட மேலாளர் அவர்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் ...
28/12/2024

இன்று போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்திருந்த மதுரை கோட்ட மேலாளர் அவர்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது அதாவது காலை நேரத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து எட்டு முப்பது மணி அளவில் ஒரு ரயிலானது மதுரை நோக்கி வேண்டுமென்றும் அதே போல் மாலை ஆறு மணிக்கு மேல் அங்கிருந்து ஒரு ரயில் கிளம்பி இங்கு வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது இரண்டாவது கோரிக்கையாக சென்னை ரயிலானதை தினசரி இயக்கப்பட வேண்டும் மேற்கொண்டு சென்னை செல்வதற்கு விழுப்புரம் தாம்பரம் வழியாக ஒரு ரயில் வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது மூன்றாவது முக்கிய கோரிக்கையாக ஏலக்காய் சம்பந்தமாக ஒரு வேர் ஹவுஸ் ஒன்றினை போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது கூடுதல் பிளாட்பாரம் மற்றும் ஸ்டேபிள் லைன் வசதிகள் ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது🙏

20601/02
27/12/2024

20601/02

தமிழ்நாட்டில் பல ரயில்கள் நேரம் அதிரடி மாற்றம் 🚨 எந்தெந்த ரயில்கள் தெரியுமா ⁉️ மயிலாடுதுறை மதுரை திண்டுக்கல் ...

27/12/2024

Man travels 290 kms hanging under train coach of Pune Danapur Express, caught by C&W staff during rolling test!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் ...
27/12/2024

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி வெளியான சிஆர்எஸ் ஆய்வின் அறிக்கையில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதனை சரி செய்து 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் புதிய ரயில் பாலத்தின் பாதுகாப்பு மற்றும் உதவி திறனை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட புதிய கமிட்டி பாலத்தின் நிலை குறித்து ஆராய்ந்து வருகிறது. இதனிடையே இம்மாத துவக்கத்தில் இருந்து ரயில் பாலத்தில் குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.புதிய ரயில் பாலத்தில் நேற்று மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா ட்ராலியில் சென்று பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கர்டர்களின் இணைப்புகளை பார்வையிட்டு செங்குத்து தூக்கு பாலத்தின் அருகே உள்ள ஆபரேட்டர் அறையில் இறங்கி ஆய்வு செய்தார். செங்குத்து பாலத்தின் தூண் உள்ளே உள்ள லிப்ட் மூலம் மேலே சென்று தூக்கு பாலத்தை உயர்த்தி, இறக்கி சோதனை செய்தார். சிஆர்எஸ் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். புதிய ரயில் பாலத்தின் உறுதித்திறனை ஆராய்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும் 5 பேர் கொண்ட புதிய கமிட்டியிடம் புதிய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாலத்தில் புதிய ரயில் இயக்குவது குறித்து தகவல் வெளியாகும்

புனித நீர் தெளித்த பின்னர் 💞💞
27/12/2024

புனித நீர் தெளித்த பின்னர் 💞💞

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளன இதில் ஒன்று தினசரி ரயில் ஆகும் 56701/56702 என்று சொ...
26/12/2024

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளன இதில் ஒன்று தினசரி ரயில் ஆகும் 56701/56702 என்று சொல்லக்கூடிய மதுரை போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர் மதுரை பேசஞ்சர் ரயில் ஆகும் மறறும் ஒரு ரயில் 2060120602 என்று சொல்லக்கூடிய எம்ஜிஆர் சென்டரில் இருந்து போடிநாயக்கனூர் வரை போடிநாயக்கனூரில் இருந்து எம்ஜிஆர் செண்ட்ரல் வரை செல்லக்கூடிய வாரத்தில் மூன்றே நாட்கள் இயங்கக்கூடிய ரயிலாகும் தற்சமயம் பள்ளி விடுமுறை காலம் என்பதால் அதிகப்படியான மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள் துரதிஷ்டவசமாக காலை நேர ரயில் இங்கிருந்து ஒன்று இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் தேனி மாவட்ட மக்களின் வர்த்தக போக்குவரத்து மற்றும் மாணவர்களுக்கான கல்வி போக்குவரத்து வயதானவர்கள் அதாவது சீனியர் சிட்டிசன் என்று சொல்லக்கூடிய மக்களுக்கான மருத்துவ போக்குவரத்திற்காக எந்த ஒரு வழியும் இல்லாமல் இந்த தேனி மாவட்ட மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் காலை நேர ரயில் இங்கு இல்லாதது ஒருபுறம் இருக்கட்டும் அதில் பல அரசியல் காரணங்கள் இருக்கலாம் அதுவும் ஒருபுறம் இருக்கட்டும் தேனி மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர் திருப்பூர் பகுதிகளுக்கு 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது தேனி மாவட்டத்தில் உள்ள நலிந்த மக்கள் கோவையை நம்பியே இருக்கிறார்கள் இவ்வாறு அதிக மக்கள் பயன்படுத்தும் இந்த கோவை வழித்தடத்திற்கு இன்னும் ரயில்வே நிர்வாகம் ஆனது எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காதது மனவேதனையை அளிக்கிறது பலமுறை பல சங்கங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போட்ட முடிவுகளாகவே ரயில்வே நிர்வாகம் வைத்திருக்கிறது. மேலும் போடிநாயக்கனூரில் இருந்து கோவைக்கு ரயில் இயக்கப்பட்டால் அதனால் மதுரை மாவட்ட மக்களும் திண்டுக்கல் மாவட்ட மக்களும் பழனி வரும் பக்தர்களளும் அதேபோல் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதி மக்களும் பயனடைவார்கள் ரயில்வே நிர்வாகம் நினைத்தால் ஆயிரம் வழிகளில் ரயில் விட முடியும் குறிப்பாக மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்பட்டு கொண்டிருக்கும் செம்மொழி ரயிலின் ரேக்குகளை கொண்டு போடிநாயக்கனூர் வரை ரயில் இயக்கி அதை மீண்டும் கோவைக்கு இரவு எட்டு மணிக்குள் கொண்டு செல்ல வழி இருக்கிறது இந்தச் செம்மொழி ரேக் ஆனது கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வெறுமனே 13 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது இந்த ரயிலை பொள்ளாச்சி பழனி ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மதுரை வழியாக உசிலம்பட்டி ஆண்டிபட்டி தேனி வழியாக போடிநாயக்கனூர் வரை இயக்க வாய்ப்பு இருக்கிறது வாரத்தில் ஏழு நாள் கூட அல்லாமல் ஆறு நாட்களாவது இந்த ரயிலை இயக்க வழி இருக்கிறது மீதம் இருக்கும் ஒரு நாளில் இந்த வண்டிக்கான பராமரிப்பு மற்றும் மெயின்டனன்ஸ் பணிகளை பார்த்துக் கொள்ளலாம் ரயில்வே நிர்வாகத்திற்கும் அதிகப்படியான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது கோயம்புத்தூரில் பிரபலமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் வர்த்தக பரிவர்த்தனை தேனி மாவட்டம் வரை அதிக அளவில் இருந்து வருகிறது தேனி மாவட்டத்தில் ரங்கநாதபுரம் சிலமலை ராசிங்காபுரம் போன்ற பகுதிகள் அதிகம் டெக்ஸ்டைல்ஸ் தொழிலை நம்பி இருக்கிறது ஈரோடு திருப்பூர் போன்ற பனியன் கம்பெனிகளுக்கு தேனி மாவட்ட மக்கள் வேலைக்காக அதிகப்படியாக சென்று வருகிறார்கள் அதேபோல் கோயம்புத்தூரை சுற்றியுள்ள அனேக கல்லூரிகளுக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ செல்வங்கள் சென்று வருகிறார்கள் மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து உதிரி பாகங்கள் கோயம்புத்தூரில் தயாரித்து வருவது உங்களுக்கு தெரியும் இது போன்ற வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்த ரயில் உதவும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கும் நன்றாக தெரியும் ஆனால் இதை செய்து கொடுப்பதற்கோ மனம் இல்லாமல் இந்த ரயிலை இயக்குவதில் தாமதம் காட்டி வருகிறார்கள் இதை உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கைகளை தங்கள் வாயிலாக ரயில்வே நிர்வாகத்திற்கு எடுத்து உரைக்க வேண்டும் இதனால் தேனி மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பெருகும் ஆகையால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் வர்த்தகர்களும் மாணவர்களும் இந்த கோரிக்கையை தொடர்ந்து எழுப்ப வேண்டும் விரைவில் தேனி மாவட்டத்திற்கு கோயம்புத்தூர் இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் Madurai Division of Southern Railway Southern Railway தங்கதமிழ்செல்வன் Ashwini Vaishnaw Thanthi TV Sun News Tamil Sabarimala Swami Ayyappan Chennai Division Southern Railway Sabarimala News Updates Sabarimala Ayyappa Swami BJP INDIA வெற்றி வேந்தன் Sivaraman Somasundaram

26/12/2024

28.12.2024 சனிக்கிழமை மதுரை போடிநாயக்கனூர் எலக்ட்ரிபிகேஷன் முடிந்து
AC என்ஜின் சோதனை ஓட்டமா???????

மன்னார்குடி - கோவை இடையே இயங்கும் செம்மொழி விரைவு வண்டியின் பெட்டிகளைப் பயன்படுத்தி பகலில் கோவை - போடி இன்டர்சிட்டி ரயில...
25/12/2024

மன்னார்குடி - கோவை இடையே இயங்கும் செம்மொழி விரைவு வண்டியின் பெட்டிகளைப் பயன்படுத்தி பகலில் கோவை - போடி இன்டர்சிட்டி ரயில் இயக்க போத்தனூர் ரயில் பயணாளர்கள் சங்கம் கோரிக்கை.

தேனி மாவட்ட நண்பர்களும் தங்கள் மக்களவை உறுப்பினர் மூலமாக இக்கோரிக்கையை எழுப்பி இந்த சேவையை பெற முயற்ச்சிக்கலாம்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதை Digital Modi "we Need Rail To" Bodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதை Digital Modi "we Need Rail To" Bodi:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share