05/04/2023
வேண்டும் ஆத்தூர் மாவட்டம் ஏன் கேட்கிறோம்?
பொருள்:சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சீரமைத்து ஆத்தூர் புதிய மாவட்டம்,புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துவதற்காக.
தற்போது சேலம் மாவட்டம்
1.சேலம் மாவட்டத்தின் தற்போது மக்கள் தொகை 39.60 லட்சம்.
2.சட்டமன்ற தொகுதிகள்:11
3.வருவாய் கோட்டங்கள்-04
4.வருவாய் வட்டங்கள்-14
5 வருவாய் உள்வட்டங்கள்-44
6.நகராட்சிகள்-06
7.பேரூராட்சிகள்-31
8.ஊராட்சி ஒன்றியங்கள்-20
9.வருவாய் கிராமங்கள்-640
10.மக்கள் தொகையில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
11.தமிழ்நாட்டில் தற்போது 4 வருவாய் கோட்டங்கள் கொண்ட ஒரே மாவட்டம் சேலம்.
12.அதிக சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதும் சேலம் மாவட்டம்.
தற்போது ஆத்தூர் நிர்வாகம்:
1.ஆத்தூர் தேர்வு நிலை நகராட்சி
2.ஆத்தூர் கல்வி மாவட்டம்
3.ஆத்தூர் சுகாதர மாவட்டம்
4.ஆத்தூர் வனக்கோட்டம்
5.ஆத்தூர் சார் நிலை நீதிமன்றம்
(13 காவல் நிலையங்களை உள்ளடக்கியது)
6.அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
7.சேலம் நகரின் அடுத்த பெரிய நகரம்
8.ஆத்தூர்+நரசிங்கபுரம் இரட்டை நகராட்சி.
9.ஜவ்வரிசி ஏற்றுமதி
10.மரவள்ளி கிழக்கு சாகுபடி
ஆத்தூர் மாவட்டம்..!!
👉மக்கள் நலனுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பிரித்து ஆத்தூர் மாவட்டம் மற்றும் புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்த வேண்டும்.
👉சேலம் மாவட்டத்தின் தற்போதைய மக்கள் தொகை 39.60 லட்சமாக உள்ளது. இதில் அதிக மக்கள் தொகையை கொண்ட நகராட்சியாகவும் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆத்தூர் விளங்குகின்றது. ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அவசர தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிகளுக்கு செல்வதற்கு ஆகும் நேரம் சேலம் கிழக்கு மாவட்ட கடைக்கோடி பகுதி மக்களுக்கு மக்கள் மிகவும் சிறமபடுகின்றனர்.(வீரகனூர்,பச்சமலை, தம்மம்பட்டி, தலைவாசல்)
சேலம் மாவட்டம் கடைப்பகுதி
வீரகனூர்-சேலம் சென்றுவர 188 கி.மீ
பச்சமலை-சேலம் சென்றுவர 228 கி.மீ
தம்மம்பட்டி-சேலம் சென்றுவர 148 கி.மீ
தலைவாசல்-சேலம் சென்றுவர 162 கி.மீ
👉1965 ஆம் ஆண்டு ஆத்தூர் நகராட்சியாக உயர்த்தப்பட்டது, தற்போது கோட்டம்,கல்வி மாவட்டம், சுகாதார மாவட்டம் மற்றும் தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது.
👉30 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தை, இரண்டாக பிரிக்கலாம். புதிய மாவட்டத்தில், 10 லட்சம் மக்கள் தொகையும், மூன்று தாலுகா வரையும் இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில்,39.6 லட்சம் பேர் இருப்பதால், ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். அதன்படி, ஆத்தூர், வாழப்பாடி,கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் என ஐந்து தாலுகாவும் மற்றும் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்ட கிழக்கு கடைக்கோடி பகுதியையும் மற்றும் புதிய வட்டங்களை ஏற்படுத்தியும் இதன் மூலம் 10 லடசத்துக்கும் மேல் மக்கள் தொகையும், ஆத்தூர், கெங்கவல்லி, ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் கொண்டு ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கலாம்.
இதில்,
நகராட்சிகள்
1.ஆத்தூர் தேர்வுநிலை நகராட்சி
2.நரசிங்கபுரம் இரண்டாம் நிலை நகராட்சி.
பேரூராட்சிகள்
1.தம்மம்பட்டி (சிறப்பு நிலை)
2.வாழப்பாடி
3.பெத்தநாய்க்கன் பாளையம்
4.செந்தாரப்பட்டி(சிறப்பு நிலை)
5.கீரிப்பட்டி
6.கெங்கவல்லி
7.வீரகனூர்
8.தெடாவூர்
9.ஏத்தாப்பூர்
10.பேளூர்
👉நாமக்கல் கிழக்கு மாவட்ட கடைப்பகுதி வாழ் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.
அதாவது
👉கார்கூடல்பட்டி,மெட்டாலா,ஆயில் பட்டி,மங்களபுரம்,பெரப்பஞ்சோலை,திம்மநாய்க்கன்பட்டி,ஆயில்ப்டி
பெரியகோம்பை,மூலக்குறிச்சி,முள்ளுக்குறிச்சி,பெரியகுறிச்சி,தும்பல்பட்டி,நாரைகிணறு,ஊனாந்தாங்கல்.
வரகூர்கோம்பை.
👉இப்பகுதிகளின் மக்கள் தொகை 2011-ன் படி சுமார் 50000 எட்டுகிறது.
👉மாவட்ட தலைநகரான நாமக்கலுக்கு மக்கள் பயணம் செய்யும் தொலைவு..!!
சில பகுதிகளில் இருந்து..!!
நாரைக்கிணறு-நாமக்கல்:60 கி.மீ
திம்மநாய்க்கன்பட்டி-நாமக்கல:60 கி.மீ
கார்கூடல்பட்டி-நாமக்கல்:55 கி.மீ
முள்ளுக்குறிச்சி-நாமக்கல்:57 கி.மீ
மெட்டாலா-நாமக்கல்:45 கி.மீ
👉சேலம், நாமக்கல் மாவட்டத்தை பிரித்து ஆத்தூர் மாவட்டம் ஏற்படுத்தினால்..!!
👉இதில் ஆத்தூரை மையப்படுத்தி கிழக்கே சேலம் மாவட்ட எல்லை வரையும், மேற்கில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மெட்டாலா வரையிலும்,தென் கிழக்கு சேலம் மாவட்ட எல்லையான வீரகனூர் மற்றும் லத்துவாடி வரையிலும்,தென் மேற்கில் நாமக்கல் மாவட்ட இராசிபுரம் வட்ட எல்லையான பெரிய கோம்பை வரையிலும் என இரண்டு மாவட்ட எல்லைகளை சீரமைப்பு செய்து ஆத்தூர் மாவட்டத்தை ஏற்படுத்தலாம்.
👉 நிர்வாக வசதிக்காக புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துதல்
இதில் மாவட்ட சீரமைப்பு பிறகு தாலுக்காவாக ஆத்தூருக்கு அடுத்த பெரிய நகரம் மற்றும் சிறப்பு நிலை
பேரூராட்சியாக இருக்கும் தம்மம்பட்டி மூன்று மாவட்ட பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது.போக்குவரத்து, மக்கள் தொகை நகரின் வருவாய் என அனைத்திலும் சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூருக்கு அடுத்து மாவட்டத்திற்கு வருவாய் பெற்றுதரும் நகரமாகும்.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்ட பகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு தம்மம்பட்டி மையமாக வருகிறது.அதாவது,
கிழக்கே கொண்டையம்பள்ளி,மேற்கே முள்ளுக்குறிச்சி,தென் மேற்கு பகுதியில் பெரிய கோம்பை,வட மேற்கில் மெட்டாலா வரையிலும், மல்லியகரை,திம்மநாய்க்கன்பட்டி வரையிலும் தம்மம்பட்டியை தலைமையிடமாக மையப்படுத்தி புதிய வருவாய் வட்டம் மற்றும் ஒன்றியம் ஏற்படுத்தலாம்.
மேலும் கருமந்துறை மக்களுக்கு பயன்படும் வகையில் பெ.பாளையத்தில் இருந்து கருமந்துறையை வட்டம் ஏற்படுத்த வேண்டும்.
வாய்ப்புகள் இருப்பின் திருச்சி மாவட்ட கடைப்பகுதியான மங்கப்பட்டி,பாதர்பேட்டை,முருங்கப்பட்டி வரை ஆத்தூர் மாவட்டத்துடன் இணைக்கலாம் இப்பகுதி மக்கள் திருச்சி சென்று வர சுமார் 120 கி.மீ பயணம் செய்ய வேண்டியுள்ளது
மேலும் ஆத்தூர் மாவட்டத்திற்கு கோட்டம் ஏற்படுத்த ஏற்கனவே இருக்கும் வாழப்பாடியில் வட்டத்தில் அனைத்து அரசு நிர்வாக வசதிகள் இருப்பதால் கருமந்துறை மற்றும் வாழப்பாடி வட்டங்களை இணைந்து வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் ஏற்படுத்த வேண்டும்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி,ஆத்தூர் வட்டங்களை சீரமைப்பு செய்து புதிய தம்மம்பட்டி வருவாய் வட்டம் மற்றும் ஒன்றியத்துடன் இணைக்கும் பட்சத்தில் வரும் கிராம பகுதிகள் மற்றும் மக்கள் தொகை 2011-ன் படி
1.சேலம் மாவட்ட பகுதிகள்.
1.தம்மம்பட்டி-21,503
2.செந்தாரப்பட்டி-14308
3.கீரிப்பட்டி-10,208
4.கொண்டையம்பள்ளி-6,535
6.கோனேரிப்பட்டி-1000
7.செங்காடு-1000
8.வாழக்கோம்பை-1000
9.பிள்ளையார்மதி-168
10.ஜங்கம சமுத்திரம்-1273
11.மல்லியகரை-4352
12.உலிபுரம்-7,820
13.நாகியம்பட்டி-7,420
15.காளிப்பட்டி-120
14.ஜங்கம சமுத்திரம்-1,273
15.மண்மலை-1,740
16.சேரடி மூலை-100
மொத்த மக்கள் தொகை:79,839
2.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்ட பகுதிகள் தம்மம்பட்டி வட்டம் மற்றும் ஒன்றியத்துடன் இணைக்கும் பட்சத்தில் வரும் கிராம பகுதிகள் மற்றும் மக்கள் தொகை 2011-ன் படி
-
1.அடுக்கம்-243
2.பெரப்பஞ்சோலை-361
3.மாவாறு-510
4.முள்ளுக்குறிச்சி-3887
5.நாரைக்கிணறு-3772
6.நாவலப்பட்டி-1695
7.மங்கலபுரம்-10782
8.மத்துருட்டு
9.திம்மநாய்க்கன்பட்டி-3357
10.பெரியகுறிச்சி-703
11.பெரியகோம்பை-1210
12.மூலக்குறிச்சி-1271
13.ஊனந்தாங்கல்-1292
14.கார்கூடல்பட்டி-11434
15மெட்டலா
16.ஆயில்பட்டி-4055
17.மலையாளப்பட்டி-1,522
18.பிலிப்பாகுட்டை
19.பெரியசெக்கடி-255
20.சின்னசெக்கடி-187
மொத்த மக்கள் தொகை:49,847
இதில் 2011 ன் படி இரண்டு மாவட்ட பகுதிகளின் மொத்த மக்கள் தொகை:129,686 மற்றும் தம்மம்பட்டி வட்டம் மற்றும் ஒன்றியத்துடன் 36 கிராமங்கள் அடங்கும்.
இதில் 2023-ன் படி தற்போது மக்கள் தொகை தோராயமாக சுமார் 150,000 க்கும் அதிகமாக இருக்கும்.
தம்மம்பட்டி மையபகுதியாகவும் அமைகிறது மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
வரைபடம்.
http://mythammampatty.blogspot.com/2023/03/blog-post.html
இவ்வாறு ஏற்படுத்தபட்டால் ஆத்தூர் மாவட்டத்துடன்
வட்டங்கள்-07
ஆத்தூர்
கெங்கவல்லி
தம்மம்பட்டி
தலைவாசல்
பெத்தநாய்க்கன் பாளையம்
வாழப்பாடி
கருமந்துறை
கோட்டங்கள்-02
1.ஆத்தூர் 2.வாழப்பாடி
1.ஆத்தூர் கோட்டத்தில் வரும் வட்டங்கள்
i)ஆத்தூர்
ii)பெத்தநாய்க்கன்பாளையம்
iii)தலைவாசல்
2.வாழப்பாடி கோட்டத்தில் வரும் வட்டங்கள்
i) வாழப்பாடி
ii)கருமந்துறை
அல்லது
கெங்கவல்லி மற்றும் தம்மம்பட்டி இரு வட்டங்களை கொண்டு தம்மம்பட்டியை தலைமையிடமாக கொண்டு கோட்டம் ஏற்படுத்த வேண்டும்.அவ்வாறு ஏற்படுத்தும் போது கெங்கவல்லி வட்ட பகுதிகளுக்கும் புதிய வட்டம் ஏற்படுத்தபட்ட தம்மம்பட்டியுடன் சேர்க்கப்பட்ட நாமக்கல் மாவட்ட பகுதிகளுக்கும் தம்மம்பட்டி மையபகுதியாகவும் மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
வரைபடம்.
http://mythammampatty.blogspot.com/2023/03/blog-post.html
காவல் உட்கோட்டங்கள் மற்றும் புதிய காவல் உட்கோட்டங்களை ஏற்படுத்துதல்.
காவல் உட்கோட்டங்கள்
1.ஆத்தூர் காவல் உட்கோட்டம்
i)ஆத்தூர் நகர காவல் நிலையம்
ii)ஆத்தூர் ஊரக காவல் நிலையம்
iii)தலைவாசல் காவல் நிலையம்
iv)வீரகனூர் காவல் நிலையம்
2.வாழப்பாடி காவல் உட்கோட்டங்கள்
1.வாழப்பாடி காவல் நிலையம்
2.ஏத்தாப்பூர் காவல் நிலையம்
3.கருமந்துறை காவல் நிலையம்
4.கரியகோவில் காவல் நிலையம்
5.காரிப்பட்டி காவல் நிலையம்
புதிய காவல் உட்கோட்டங்களை ஏற்படுத்துதல்.
3.தம்மம்பட்டி காவல் உட்கோட்டம்
i)ஆயில்பட்டி காவல் நிலையம்
ii)கெங்கவல்லி காவல் நிலையம்
iii)தம்மம்பட்டி காவல் நிலையம்
iv)மல்லியகரை காவல் நிலையம்
தம்மம்பட்டி புதிய மின் நிலைய கோட்டம் ஏற்படுத்துதல்.
1.மல்லியகரை துணை மின்நிலையம்
2.மெட்டாலா துணை மின்நிலையம்
3.தம்மம்பட்டி துணை மின்நிலையம்
4.தெடாவூர் துணை மின்நிலையம்
மேற்கண்டவாறு நிர்வாகம் ஏற்படுத்த பட்டால் மக்கள் தங்கள் அலுவலக வேலைகளுக்கு சென்று வர பயணிக்கும் தொலைவு மற்றும் அதற்கான பயண செலவு,அரசின் நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.