Arankal Media

Arankal Media அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் நலனும் அக்கறையும் எங்கள் பிரதான நோக்கம்.

ஆதலால் நாம் அருப்புக்கோட்டை அரண்கள்
(354)

கடந்தாண்டு அரண்கள் செயலால்/ செயல்களால் யாருக்காவது, ஏதேனும் வருத்தம் இருந்தால்.,  தெரியாமல் நிகழ்ந்திருக்கும் என்று நினை...
01/01/2025

கடந்தாண்டு அரண்கள் செயலால்/ செயல்களால் யாருக்காவது, ஏதேனும் வருத்தம் இருந்தால்., தெரியாமல் நிகழ்ந்திருக்கும் என்று நினைச்சிக்காதீங்க.

கண்டிப்பாக அரண்கள் அதைத் தெரிந்து தான் செய்திருப்போம். யார் எதற்கு தகுதியோ அதைத்தான் கொடுத்திருப்போம்.

ஆதலால் தவறுகளை திருத்திக் கொள்வோம். தவறினால் அதே செயல்கள் இந்த ஆண்டும் இருக்கும். இன்னும் கொஞ்சம் உக்கிரமாக கூட இருக்கும்.

அரண்கள் எப்போதும் இப்படித்தான்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாளையம்பட்டி ஊராட்சியின் விரிவாக்க பகுதியான பிளாக் ஆபீஸ் மற்றும் திருக்குமரன்...
01/01/2025

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாளையம்பட்டி ஊராட்சியின் விரிவாக்க பகுதியான பிளாக் ஆபீஸ் மற்றும் திருக்குமரன் நகர் பகுதியானது அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.

தற்போது அதனை உறுதிப் படுத்தும் விதமாக இப்படி ஒரு அறிவிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஊராட்சி பகுதியாக உள்ள திருக்குமரன் நகர் மற்றும் பிளாக் ஆபீஸ் பகுதி நகராட்சியுடன் இணைக்கப்படுவதன் மூலமாக வீட்டு வரி மற்றும் இதர வரி வகையறாக்கள் உயர்வு ஆகும். அத்துடன் இந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான 100 வேலை திட்ட பயனாளிகள் தங்கள் வேலையை இழப்பார்கள் என்பன பொதுவான பிரச்சனையாக பேசப் படுகின்றன.

இதனை தவிர்த்து நகராட்சி பகுதியாக மாறுவதன் சாதகம் மற்றும் பாதகம் என்னென்ன என்பதை பொதுமக்கள் பதிவு செய்யலாம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அவரவர் எண்ணமும் செயலும் போல இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும்..
01/01/2025

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அவரவர் எண்ணமும் செயலும் போல இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும்..

31/12/2024

Celebrating new year with our kids..

31/12/2024

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையும் பொதுமக்களும் புத்தாண்டை வரவேற்ற போது..

இன்னும் 100 நிமிடங்களில் புது வருஷம் பிறக்கவுள்ளது. இந்த 2024 நம் அனைவருக்கும் ஒவ்வொரு வகையிலும் சுக துக்கங்களை, நல்ல மற...
31/12/2024

இன்னும் 100 நிமிடங்களில் புது வருஷம் பிறக்கவுள்ளது.

இந்த 2024 நம் அனைவருக்கும் ஒவ்வொரு வகையிலும் சுக துக்கங்களை, நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களையும் அளித்து சென்றுள்ளது.

அந்த வகையில் 2024 உங்களுக்கு எப்படி இருந்தது? இந்த ஆண்டில் மறக்க முடியாத விசயம் ஏதேனும் நிகழ்ந்து இருந்தால் பகிர்ந்து கொள்வோம்.

இறைவன் அருளால் அனைவருக்கும் நல் ஆண்டாகவே இருந்திருக்கும் என்று நம்புகிறோம்..

31/12/2024

அருப்புக்கோட்டையிலிருந்து இருக்கன்குடி (வதுவார்ப்பட்டி வழி) செல்லும் அரசு பேருந்தில்
(TN67-N-0675) கைப்பிடி கூட இல்லாமல் பயணிகள் பயணிக்கும் அவலம்..

முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத பேருந்துகளில் பயணசீட்டு வாங்க தேவை இல்லைன்னு சட்டம் வந்தால் தான் எல்லாம் மாறுமோ என்னவோ..

தகவல்:
Babu

30/12/2024

இன்று பிற்பகலில் அருப்புக்கோட்டை நகரில் மிதமான தூறல் மழை. அருப்புக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளதாக தகவல்.

நமது ஊர் மழை நிலவரம் பற்றி தகவல் update பண்ணுங்கள். எந்தெந்த ஊரில் மழை என்பதை நமது மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி இன்று மாலை திறக்கப்படவுள்ள கண்ணாடி பாலம்.
30/12/2024

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி இன்று மாலை திறக்கப்படவுள்ள கண்ணாடி பாலம்.

விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவிலில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி சிறப்பு ஆராதனை. புகைப்படம் நன்றி: Su...
30/12/2024

விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை

பட்டாபிராமர் கோவிலில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி சிறப்பு ஆராதனை.

புகைப்படம் நன்றி: Sundar Photos Sundar

நடிகராக அல்ல.. அரசியல்வாதியாக அல்ல.. அனைத்துக்கும் அப்பால் ஒரு நல்ல மனுஷன் திரு. விஜயகாந்த் அவர்கள். அரண்கள் சார்பில் யா...
28/12/2024

நடிகராக அல்ல.. அரசியல்வாதியாக அல்ல.. அனைத்துக்கும் அப்பால் ஒரு நல்ல மனுஷன் திரு. விஜயகாந்த் அவர்கள்.

அரண்கள் சார்பில் யாரையும் அடைமொழி அல்லது பட்டம் தாங்கி பேசியது இல்லை. இருந்த போதிலும் கேப்டன் என்ற வார்த்தைக்கு தகுதியானவர்.

கேப்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. உங்களைப் போல இன்னொருவர் வருவது வாய்ப்பு குறைவு. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.

மிஸ் யூ கேப்டன்.. ❣️❣️

நிதிஷ் குமார் ரெட்டி.. தலைவன் பயங்கரமான சினிமா ரசிகனா இருப்பான் போல.. 50 ரன்கள் அடிச்சப்ப புஷ்பா ஸ்டைலில் கொண்டாடுறான்.....
28/12/2024

நிதிஷ் குமார் ரெட்டி..

தலைவன் பயங்கரமான சினிமா ரசிகனா இருப்பான் போல..

50 ரன்கள் அடிச்சப்ப புஷ்பா ஸ்டைலில் கொண்டாடுறான்.. 100 ரன்கள் அடிச்சப்பா பாகுபலி ஸ்டைலில் கொண்டாடுறான்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்தத் தொடர் முழுவதும் தனது பேட்டிங் மூலம் இந்திய அணியை காப்பாற்றி வரும் நிதிஷ் ரெட்டி காரு தரமான ஆல் ரவுண்டர் ஆக தடம் பதித்து விட்டான்.

வாழ்த்துகள். 🥰

விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை நேற்று இரவு செளடாம்பிகா இஞ்சினியரிங் கல்லூரி அருகே பெட்ரோல் பங்க் எதிரே சாலை விபத்...
28/12/2024

விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை

நேற்று இரவு செளடாம்பிகா இஞ்சினியரிங் கல்லூரி அருகே பெட்ரோல் பங்க் எதிரே சாலை விபத்து.

அரசு பஸ் நடந்து சென்றவர் மீது மோதியதில் விபத்துக்கு உள்ளானவர் தலை நசுங்கி பலி. இறந்தவர் யாரென அடையாளம் தெரியவில்லை. அவரது செல்போனும் சேதமாகிவிட்டதால் காவல்துறை அவரது செல்போன் அடையாள எண் வைத்து அவரை அடையாளம் காண முயற்சித்து வருகிறார்கள்.

இறந்தவர் இந்த கைலியும், ஊதா வண்ண சட்டையும் அணிந்து இருந்தார்.

இவரை அடையாளம் தெரிந்தால் அல்லது இந்த அடையாளத்துடன் எவரேனும் காணாமல் போயிருந்தால் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கவும்.

தகவல் நன்றி: அன்னை ஆம்புலன்ஸ் சேவை, அருப்புக்கோட்டை.

27/12/2024

Nakkheeran

அருப்புக்கோட்டையின் அடையாளங்களில் ஒருவரான அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் அண்ணா பல்கலைக் கழக பலாத்கார சம்பவம் குறித்து ஏதாவது பேசி இருக்காரா?

பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்துக்கு கொதிச்சாரே.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரர் இப்படி அமைதி காப்பது நியாயமா?

27/12/2024

Tamil Nadu Police
M. K. Stalin

வணக்கம். அண்ணா பல்கலைக் கழக பலாத்கார குற்றவாளி ஞான சேகரனுக்கு உண்மையிலேயே கையிலும், காலிலும் எலும்பு முறிவுகள் உள்ளதா?

அல்லது சூழலை சமாளிக்க வெறும் கட்டுப்போட்டு மீடியா முன்பு நிறுத்தி உள்ளீர்களா?

எலும்பு முறிவுகள் குறித்த எக்ஸ்ரே மற்றும் மற்ற மருத்துவ சிகிச்சை ஆவணங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா சார்?

முன்னாள் பிரதமர் மாண்புமிகு. மன்மோகன் சிங் அவர்கள் காலமானார். மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் உடல்நல குறைவால் காலமானார்.
26/12/2024

முன்னாள் பிரதமர் மாண்புமிகு. மன்மோகன் சிங் அவர்கள் காலமானார். மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் உடல்நல குறைவால் காலமானார்.

விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை நம்ம ஊரில் தற்போதும் கூட 10 ரூபாய்க்கு உணவு கிடைக்குது என்றால் நம்புவீர்களா?  உண்ம...
26/12/2024

விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை

நம்ம ஊரில் தற்போதும் கூட 10 ரூபாய்க்கு உணவு கிடைக்குது என்றால் நம்புவீர்களா? உண்மை தான். நம்ம ஊரில் டிபன் அயிட்டம் எது சாப்பிட்டாலும் 10 ருபாதான்.

பாம்பே மெடிக்கல் எதிரே, சத்யா ஷோ ரூம் முன்பாக காலையும் மாலையும் இந்த இட்லி கடை இயங்குகிறது. இட்லி, தோசை, பூரி மற்றும் ஆம்லெட் கிடைக்கிறது.

4 இட்லி பிளேட் = 10 ரூபாய்
பூரி செட், தோசை, ஆம்லெட் ஏதுவாக இருந்தாலும் 10 ரூபாய் தான்.

இன்று இட்லி சாப்பிடலாம் என்று ஆசையோடு கடையை தேடி சுற்றிய போது கண்ணில் பட்ட இந்தக் கடை நிச்சயமாக நம்ம ஊரு மக்களுக்கு அமுத சுரபி.. அட்சய பாத்திரம்..

10 ரூபா தானே தரமா இருக்காது என்று நினைத்து விட வேண்டாம். மூன்று சட்னி மற்றும் சாம்பாருடன் 10 ரூபாய்க்கு 4 இட்லி. அவசரத்துக்கு சாப்பிட முடியாது. கூட்டம் அதிகமாக இருக்கும் பொறுத்திருந்து சாப்பிடணும்.

இரண்டு பேரு வயிறார 16 இட்லி சாப்பிட்டோம். வெறும் 40 ரூபாயில் இரவு உணவு முடிந்தது. வயிறார மட்டுமில்லை. மனசாரவும் சாப்பிட்டோம்.

இந்த விலைவாசியிலும் 10 ரூபாய்க்கு உணவளிக்கும் அந்த அண்ணன் சத்தியமாக தாயுமானவர். ஆண் தேவதை..

உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா. ஆதரவு அளிப்போம்.

FIR என்பது பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்வது, காவல்துறை உருவாக்குவது அல்ல. திரு. அருண், காவல்த...
26/12/2024

FIR என்பது பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்வது, காவல்துறை உருவாக்குவது அல்ல.

திரு. அருண், காவல்துறை ஆணையர்.

________________________________

மிகவும் அறிவார்ந்த விளக்கம் சார். ஆனால் பிரச்சனை FIR சங்கதி இல்லை. முதல் தகவல் அறிக்கை வெளியானது தான். ஏனெனில் பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப் பட்டவரின் அடையாளம் வெளிப்படும் வகையில் காவல்துறை ஆவணங்கள், நீதிமன்ற ஆவணங்கள் இருக்கக் கூடாது என்பது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறை.

தமிழ்நாடு காவல்துறை அதைக் கடைப் பிடிக்கவில்லை என்பது தான் தற்போதைய குற்றச்சாட்டு.

#அட்வகேட்_தங்கப்பாண்டியன்

Address

1-1-33 Ramson Complex, Madurai Road
Aruppukkottai
626101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arankal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category