The ARANI NOW

The ARANI NOW ஆரணியின் வரலாறு, செய்தி மற்றும் சிறப்பம்சங்கள்.

------------------------------------------------------------🏯🕉️ *ஆயிரம் ஆண்டுகளாகக் கட்டப்பட்ட  , திருவண்ணாமலை அருணாசலேஸ...
07/12/2022

------------------------------------------------------------
🏯🕉️ *ஆயிரம் ஆண்டுகளாகக் கட்டப்பட்ட , திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் !!*🕉️🏯
------------------------------------------------------------

🏯🤙 *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்தக் கட்டமைப்பும் கட்டி முடிக்க , சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருப்பது கல்வெட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது !!*

📖 *கல்வெட்டுக்கள் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி !!* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன !! *தமிழ் , சமஸ்கிருதம் , கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தக் கல்வெட்டுகள் உள்ளன !!* இந்தக் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன !!

🌐 திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் , ரகசியங்களில் பெரும்பாலானவை இந்தக் கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்குத் தெரியவந்தன !! *அதுமட்டுமல்ல , திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று* என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம் தான் நமக்கு தெரிந்துள்ளது !!

🔺 *இத்தனைக்கும் அங்குள்ள பலநூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள் தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன !!* மொத்தக் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமானத் தகவல்கள் , ரகசியங்கள் வெளி வர வாய்ப்புள்ளது.

💮 *பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை !!* அவையும் கிடைத்திருந்தால் அண்ணாமலையார் ஆலயத்தின் பழமைச் சிறப்புகள் நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாகக் கிடைத்திருக்கும் !! *சங்க நாட்டு மன்னன் , காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளைக் கேள்விப்பட்டு நிறைய பொன்னும் பொருட்களையும் தானமாக* கொடுத்துள்ளனர்.

♒ இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளிலிருந்து , திருவண்ணாமலை ஆலயம் முதலில் *எப்படித் தோன்றியது , எப்படி வளர்ச்சி பெற்றது , யார் - யாரெல்லாம் கோவிலைக் கட்டினார்கள் என்ற உண்மை* ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது !!

🏯 *திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக உள்ளது !! ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால் , இதிகாசக் காலத்தில் , மகிழ மரத்தடியில் ஈசன் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார்* என்று தெரியவருகிறது !! அதனால்தான் *திருவண்ணாமலை தலத்தில் மகிழமரம் தல விருட்சமாக* உள்ளது !!

🌋அடிமுடி காணமுடியாத படி , ஆக்ரோஷமாக , தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து , மலையாக மாறிய போது , அவரிடம் விஷ்ணுவும் , பிரம்மாவும் இவ்வளவுப் பெரிய மலையாக இருந்தால் , எப்படி மாலை போட முடியும் , எப்படி அபிஷேகம் செய்ய முடியும் என்று கேட்டனர் !! இதைத்தொடர்ந்து *ஈசன் மலையடிவாரத்தில் சுயம்புலிங்கமாக தோன்றியதாக தல புராணத்தில்* குறிப்பிடப்பட்டுள்ளது !!

🌳 *முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்புலிங்கம் மண்சுவர் கோவிலாக இருந்தது. நான்காம் நூற்றாண்டில் கருங்கல்லால் கட்டப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டில் அது சிறிய ஆலயமாக மேம்பட்டது !!*

✋ 6 , 7 , 8 ம் நூற்றாண்டுகளில் *திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார் !!* அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில் தான் இருந்தார் !! ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் மட்டுமே இருந்தது !!

✊ *ஒன்பதாம் நூற்றாண்டில் , சோழப் பேரரசு செல்வாக்குப் பெற்றபோது , திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது !! 817 ஆம் ஆண்டு , முதலாம் ஆதித்ய சோழமன்னன் , செங்கல் கருவறையை அகற்றிவிட்டு , கருங்கல்லால் ஆனக் கருவறையைக் கட்டினார் !!* ஒரு காலக்கட்டத்தில் , அந்தக் கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்திற்கு மாறியது !! *பத்தாம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள்* கட்டப்பட்டன !! *சோழ மன்னர்களின் வாரிசுகள்* தான் இந்தப் பிரகாரங்களைக் கட்டினார்கள் !!

🏯அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கியது !! *பதினோராம் நூற்றாண்டில்* கோபுரங்கள் எழத் தொடங்கின !! *முதலாம் ராஜேந்திர சோழன் கொடிமர ரிஷி கோபுரத்தையும் , சுவர்களையும்* கட்டினான் !!

🖖🏼 *1063 ஆம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக் கோபுரம் கட்டப்பட்டது !! இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது !! *12 ம் நூற்றாண்டில் , மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமுலை அம்மனுக்கு தனிச் சன்னதி கட்டினார் !!* *13ஆம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள்* உருவானது !! சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த *பல்லவ ராஜா , கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர்* இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரிவாரி வழங்கினார்கள் !!

🖖🏼 *பதினான்காம் நூற்றாண்டு , திருவண்ணாமலை ஆலயத்திற்கு மிக முக்கியமான காலக்கட்டம்* ஆகும் !! அந்த நூற்றாண்டில்தான் *வடக்கு , தெற்கு , மேற்குப் பகுதிகளில் கோபுரங்கள்* கட்டப்பட்டன !! *1340 ஆம் ஆண்டு முதல் 1374 ஆம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது* குறிப்பிடத்தக்கது !! மன்னன் *வீர வல்லாளன்* இந்தத் திருப்பணிகளைச் செய்தார் !!

👊 *பதினைந்தாம் நூற்றாண்டில் , திருவண்ணாமலை ஆலயத்திற்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள் !! திருவண்ணாமலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான் !!*

🏯 *16 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருக்கு திருவண்ணாமலை கோயில்* மிகமிக பிடித்துப் போய்விட்டது !! திருவண்ணாமலை ஆலயத்தை மிகப் பெரிய ஆலயமாக மாற்றி அமைத்தப் பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான் !! அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை , *20 பெரிய திருப்பணிகளைச் செய்தார்* !! அந்தத் திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் *கிருஷ்ணதேவராயரை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன !!*

🌋 *217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் , சிவகங்கை தீர்த்தக் குளம் , ஆயிரம் கால் மண்டபம் , இந்திர விமானம் , விநாயகர் தேர் , திருமலை தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை , ஏழாம் திருநாள் மண்டபம் , சன்னதியில் உள்ள இரண்டு கதவுகள் , வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது உண்ணாமலை அம்மன் ஆலய வாயில் கால்கள் கதவுக்கு தங்க முலாம் பூசியது , உண்ணாமுலை அம்மன் சன்னிதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது , அண்ணாமலையார்க்கும் , உண்ணாமுலை அம்மனுக்கும் "கிருஷ்ண ராயன்" என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது , நாகாபரணம் , பொற்சிலை , வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ணதேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில ........ !!*

🏯 *1529 ல் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து , தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் , கிழக்கு ராஜ கோபுரத்தை 1590 ல் கட்டி முடித்தார் !!*

🛕இதற்கு இடையே குறுநில மன்னர்களும் , சிவனடியார்களும் சிறுசிறு கோபுரங்களைக் கட்டினார்கள் !! *பே கோபுரம் , அம்மணியம்மாள் கோபுரம் , திருமஞ்சனக் கோபுரம் , வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை !!* இன்று ஒன்பது கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது !!

🏯கோபுரங்கள் அனைத்தும் *1370 ல் கட்டத் தொடங்கப்பட்டு , 1590 ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது !! சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது !! இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்தக் கட்டமைப்பும் கட்டி முடிக்க சுமார் ஆயிரம் ஆண்டுகள்* ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது !!

👑 *மன்னர்கள் மட்டுமல்ல , மகாராணிகள் , இளவரசர்கள் , இளவரசிகள் , சிற்றரசர்கள் , ஜமீன்தார்கள் , அரசுப் பிரதிநிதிகள் , சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் !! சோழ , பாண்டிய , பல்லவ , சம்புவராய , விஜயநகர , தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள் தான் திருவண்ணாமலை* தளத்தை நோக்கி மக்கள் அலை , அலையாக வர உதவி செய்தது !!

🤺 *பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை , திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களைச் சந்தித்தது என்றாலும்* அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது !!

⛱️ *கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது !! சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள் !! *மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்குண்டு !! 1179 ஆம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கட்டிக் கொடுத்தனர் !!* அதுமட்டுமன்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.6.1903 , 4.6.1944 , 4.4.1976 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு விழாவும் நடத்தி வைத்தப் புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும் !!

👑மன்னர்களில் *கிருஷ்ணதேவராயரும் , பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனும்* செய்தத் திருப்பணிகள் அளவிடமுடியாதது !! இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த *இரு மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே* காரணமாகும் !! எத்தனையோ மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ள போதிலும் *வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு* தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது !! அதற்குக் காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்தது தான் !!

👑 *திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரைத் தந்தையாக ஏற்றுக் கொண்டார் !! அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார் !! அதுமட்டுமன்றி வல்லாள மகாராஜா மரணமடைந்தபோது அவருக்கு இறுதிச் சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன !! மேலும் ஆண்டுதோறும் வல்லாள மகாராஜாவிற்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார் !! ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார் !!*

🌋 🔥 *அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுகள் உருவாக்கம் பற்றிய வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதே !!*
உங்கள் சனாதன நேசன் கே எஸ் குமாரசாமி குருக்கள் ஆர் குண்ணத்தூர்🙏

🏯👑🌋🤺🔥🕉️🕉️🔥🤺🌋👑🏯

07/12/2022

ஆரணி அருகே கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இளைஞர்கள் மாவலி சுற்றி கொண்டாடினர்.

06/12/2022

தீப திருவிழா 🔥🙏

06/12/2022

கார்த்திகை தீபம் கிரிவலம் விழிப்புணர்வு காணொளி🙏

Address

Arani
632301

Telephone

+918072485984

Website

Alerts

Be the first to know and let us send you an email when The ARANI NOW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The ARANI NOW:

Videos

Share


Other Media/News Companies in Arani

Show All