![புஷ்பா 2 சிறப்புக்காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்...](https://img4.medioq.com/463/060/122113076834630602.jpg)
22/12/2024
புஷ்பா 2 சிறப்புக்காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தன்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாக அல்லு அர்ஜூன் விளக்கம் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது?
தெலங்கானா சட்டமன்றத்தில் சனிக்கிழமை பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது அல்லு அர்ஜூன் போலீஸார் பேச்சை கேட்கவில்லை என்றும் அனுமதி மறுத்த போதும் திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் வந்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ரேவந்த் ரெட்டி, "கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் ஏசிபி நடிகரிடம் சென்று கிளம்பும்படி கூறினார். ஆனால், படம் முடிந்த பிறகே செல்வேன் எனக் கூறி முதலில் அவர் மறுத்திருக்கிறார். பின்னர், டிசிபி தலையிட்டு ஏற்கனவே இரண்டு பேர் கீழே விழுந்துவிட்டதால் உடனடியாக கிளம்பவில்லை எனில் கைது செய்யப்படுவீர்கள் என கூறியுள்ளார். அவ்வாறு கிளம்பும்போதும் காரின் மேற்கூரை வழியாக எழுந்து ரோட் ஷோ நடத்துகிறார்" என கூறினார்.
சினிமா புஷ்பா-2 சிறப்புக் காட்சி: தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம் admin December 22, 2024 ....