22/05/2024
அருகம்புல்
இயற்கை சுய மருத்துவம்
==========
புல், பூண்டுகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் அருகம்புல். அதனால் தான், நமது முன்னோர், அருகம்புல் மாலையை, விநாயகப் பெருமானுக்கு சாற்றி, அதை போற்றி, நமக்குப் புரிய வைத்துள்ளனர்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து நீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின், நீரை சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டுகள், வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கள் கொண்டவை. அருகம்புல், தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தும் வல்லமை மிகுந்தது.
சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்றுநோய்கள், உடற் சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
இப்படி, உடலின் ரத்தத்தை சுத்திகரிக்கும் அரிய மூலிகையாக அருகம்புல் திகழ்கிறது. தவிர, புற்றுநோய் குணப்படுத்தும் தன்மை, சர்க்கரை நோயை சீராக்கும் வல்லமை, வயிற்றுப்போக்கை குணப்படுத்துவது, குமட்டல், வாந்தியை தனித்தல், நுண் கிருமிகள் பலவகையானவற்றை தடுத்தல், உற்சாகம் தரும் 'டானிக்'காக செயல்படுதல், ரத்தத்தில் பிராணவாயுவை அதிகரித்தல், மாரடைப்பை தடுக்க உதவுதல், கிருமி தொற்றினை குறைத்தல், கருத்தடைக்கு உதவி செய்தல், உடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல், சிறு காயங்களுக்கு மேற்பூச்சு களிம்பாக பயன்படுதல் போன்ற பல்வகைகளிலும் பயன்படுகிறது.
அருகம்புல்லை இடித்து, சாறாக்கி அருந்தலாம்.
இதை தினசரி அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்தல் சாலச்சிறந்தது. இதனால், ரத்தத்தில் எளிதாக கலக்கும் தன்மையும், குடலுக்குள் வேகமாக வினையாற்றும் தன்மையும் ஏற்படுகிறது. நாட்டு வெல்லம் சேர்த்தும், கரும்புச்சாறுடன் கலந்தும் அருகம்புல் சாறை அருந்தலாம். தற்போது, நாட்டு மருந்துக்கடைகள் அனைத்திலும் அருகம்புல் பொடி, பாக்கெட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, பாலிலோ, வெந்நீரிலோ கலந்தும் பயன்படுத்தலாம்.
வேதிபொருட்கள்: மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், பி.சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் 'சி' சத்தும் அடங்கியுள்ளன.
அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால், சேப்போனின்ஸ் சத்துகள் சிறுநீரை பெருக்க உதவுகின்றன.
அருகம்புல் சாறு சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத்தன்மை வாய்ந்தது. பசியை தூண்டக்கூடியது. ஞாபகசக்தியை அதிகரிக்கவல்லது.
வெண் குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது, ஆஸ்துமாவை விரட்டுவது, மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும், படை சொறி, சிரங்கு போன்றவற்றை குணமாக்குகிறது. தாய்ப்பாலை பெருக்க, கெட்டிப்பட்ட சளி கரைத்து வெளியேற்ற, மலமிளக்கியாக, வாந்தியை தடுக்க, ஈரல் நோய்களை கட்டுப்படுத்த என, யுனானி மருத்துவத்துக்கும் அருகம்புல் பரிந்துரைக்கப் படுகிறது.
அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.
அருகம்புல் தோல் நோய்களை குணப்படுத்த கூடியது, கண் எரிச்சலை சரிசெய்யும் தன்மை கொண்டது, வயிற்றுப் போக்கை நிறுத்தக் கூடியது, புண்களை ஆற்றவல்லது. வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
அருகம் புல் உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும்,
அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது. கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.
அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.
அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கைகால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.
நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.
வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும்.
அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது.
தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.
அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.
அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.
அருகம்புல் 30 கிராம், கீழாநெல்லிச் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.
அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.
வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.
அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். ( மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்) அருகம்புல் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.
ஒரு கிலோ அருகம்புல் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத்த எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும். அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.
அருகம் புல் சாறு நம் உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
அருகம்புல் சாறை பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.
அருகம் புல், பல், ஈறு கோளாறுகளை நீக்கும், வாய் துர் நாற்றத்தைப் போக்கும்.
அருகம்புல்லைச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து, அதன் ரசத்தை தினமும் காலையில் பற்களைத் துலக்கிய உடன் 48 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உஷ்ணம், பித்தம் தொடர்பான வியாதிகள் அறவே நீங்கிவிடும்.
ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, கண் சம்பந்தமான நோய் நீங்குவதற்கு அறுகம்புல் சாறுடன் தண்ணீர் விட்டு காய்ச்சி பிறகு வடிகட்டி, டைமண்ட் கற்கண்டு கலந்து குடித்தால் மேற்கண்ட வியாதிகள் நீங்கிவிடும்.
உடல் பலகீனம், மூளை பாதிப்பு, தாது விருத்தி, குடைச்சல், வாய்வு, வயிற்று நோய், மூல நோய், ஞாபக சக்தி, ரத்தக் கொதிப்பு, பித்தம் தொடர்பான உஷ்ண வியாதிகள், வெட்டை, தலைபாரம், ஆஸ்துமா, கைகால் வலி, ஊட்டச் சத்துக் குறைவினால் ஏற்பட்டுவிடக் கூடிய சோர்வு இவைகள் நீங்குவதற்கு அருகம்புல் உதவுகிறது.
அருகம்புல்லை அரைத்து ஜூஸ் ஆக குடிக்கலாம். சிலருக்கு நேரம் இல்லாதவர்கள் கடையில் அருகம்புல் பொடி கிடைக்கும். அருகம்புல் பொடி பல நன்மைகளை தருகிறது.
தோல் வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்னை தீரும். இல்லையென்றால் கசாயம் போன்று காலையில் வெறும் வயிற்றில் கிடைக்கலாம்.
அருகம்புல் பொடி ரத்தம் சுத்திகரிப்பு செய்யும். சிலருக்கு உடல் குறைப்பதற்கு அருகம்புல் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து உண்டென்றால், அது அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்...
(கர்ப்பிணிகள் மட்டும் தவிர்க்கவும்.)
====================
நண்பர்களே இயற்கை மருத்துவத்தை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்
ஏன் என்றால் எதிர்காலம் நோய்கள் வியாபாரம் செய்யும் காலம் நம்முடைய ஆரோக்கியம் நம் சிந்தனையில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளவும்
வாழ்க மகிழ்ச்சியுடன்
நோக்கு வர்ம தியான சிகிச்சை மையம் மருந்தில்லா மருத்துவம் காஞ்சிபுரம்