Radio Thamil

Radio Thamil Tamil Radio

DAB+ அலைவரிசையில் சுவிற்சர்லாந்து முழுவதும் ஒலிக்கும் 24 மணிநேர தமிழ் வானொலி
(9)

அம்மா என்ற மந்திரமே இந்த உலகை ஆள்கிறது! எம் அத்தனை பேரின்  அளவுகடந்த சந்தோசமே அம்மாவின் அருகாமை!🤗🥰🥰                     ...
08/05/2022

அம்மா என்ற மந்திரமே இந்த உலகை ஆள்கிறது!

எம் அத்தனை பேரின் அளவுகடந்த சந்தோசமே
அம்மாவின் அருகாமை!🤗🥰🥰

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி(வேலுப்பிள்ளை) நடராஜசிவம், இன்றுமாலை ...
03/05/2022

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி(வேலுப்பிள்ளை) நடராஜசிவம், இன்றுமாலை யாழில் காலமானார்!

உலக பத்திரிகை சுதந்திர நாள்   இன்று  பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள்...
03/05/2022

உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

✍️ )

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் குமார்  😍 AK😍
01/05/2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் குமார்
😍 AK😍

உழைப்போர்உள்ளங்கைபழுத்ததுஉலகமோசுவைத்தது!உழைக்கும் கரங்களுக்கு ரேடியோ தமிழின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!          day  ...
01/05/2022

உழைப்போர்
உள்ளங்கை
பழுத்தது
உலகமோ
சுவைத்தது!

உழைக்கும் கரங்களுக்கு
ரேடியோ தமிழின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்! day

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார் 😥
29/04/2022

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார் 😥

இலங்கை மதிப்பில் 550 கோடி ரூபா (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான மருத்துவப் பொருட்களை இந்தோனேசியா இலங்கைக்கு ...
28/04/2022

இலங்கை மதிப்பில் 550 கோடி ரூபா (1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான மருத்துவப் பொருட்களை இந்தோனேசியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்றையதினம் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளன.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சலீம்  கவுஸ் தனது 70 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.தமிழ் திரையுலக...
28/04/2022

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சலீம் கவுஸ் தனது 70 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சலீம் கவுஸ். திருடா திருடா, வெற்றி விழா, சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்.

தமிழ் படம் மட்டுமின்றி, மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ', 'திரிகல்', 'அகாத்' உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளி திரை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.  தமது அச்சுப்பதி...
28/04/2022

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா. அவர்கள் 90-இக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-இக்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்...
27/04/2022

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது....
26/04/2022

ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

அண்மைய தரவுகளின் அடிப்படையில் இலங்கை சிசி மட்டத்தில் இருந்து எஸ்.டி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மின் கட்டணம் 100 சதவீதத்தால் அதிகரிப்பு!
26/04/2022

இலங்கையில் மின் கட்டணம் 100 சதவீதத்தால் அதிகரிப்பு!

இன்று அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day)  "மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங...
26/04/2022

இன்று அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day)

"மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும்" இந்த நாள் 2001 இல் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கையில் சீமெந்தின் விலை அதிகரிப்பு!
25/04/2022

இலங்கையில் சீமெந்தின் விலை அதிகரிப்பு!

இன்று சர்வதேச  டி.என்.ஏ நாள்!
25/04/2022

இன்று சர்வதேச டி.என்.ஏ நாள்!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இலங்கை  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் ...
25/04/2022

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு எழுத்து மூலம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு தானே பிரதமர் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.58.55% வாக்குகளை மக்ரோன் பெற்றுக்கொண்ட நிலை...
25/04/2022

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

58.55% வாக்குகளை மக்ரோன் பெற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு கடும் போட்டியாளராக இருந்த தீவிர வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென் 41.45% வாக்குகளைப் சுவீகரித்தார்.

தற்போது பிரான்சில் நடைமுறையில் உள்ள ஜனாதிபதி தேர்தல் முறைமையின் கீழ் முதலாம் சுற்றில் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதைத் தொடர்ந்து அதில் அதிக வாக்குகளை பெற்ற இருவரும் இரண்டாம் சுற்றில் போட்டியிடுவார்கள்.

இதன் பிரகாரம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் அதிக வாக்குகளைப் பெற்ற இம்மானுவேல் மக்ரோன் - மரைன் லு பென் ஆகியோர் நேற்று மோதினர்.

மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி தேர்தல் பிரச்சாரத்தின் முதன்மையான பிரச்சினையாக மாறியது. மேலும் மக்ரோனின் எதிரிகள் அவர் திமிர் பிடித்தவர். பணக்காரர்களின் ஜனாதிபதியாக செயல்படுகிறார் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

எனினும் இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் மக்ரோன் மீண்டும் வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்கள் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தொடரவுள்ளார்.
macron

ரா.பி. சேதுப்பிள்ளை  நினைவுதினம் இன்றுஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், சிறந்த  மேடைப்பேச்சாளர்.அத்துடன்  தமிழில் ...
25/04/2022

ரா.பி. சேதுப்பிள்ளை நினைவுதினம் இன்று

ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், சிறந்த மேடைப்பேச்சாளர்.அத்துடன் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் என்ற சிறப்பிற்குரியவர். day

மலேரியா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொடர்ச்சியான முதலீடு மற்றும் நீடித்த அரசியல் அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்து...
25/04/2022

மலேரியா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொடர்ச்சியான முதலீடு மற்றும் நீடித்த அரசியல் அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒருநாளான உலக மலேரியா தினம் இன்று

உலகளவில் புதிய மருத்துவ கண்டுபிடிப்புக்களின்போதும் ஆய்வுகூடங்களிலும் ஆய்வுக்கு  பயன்படுத்தக்கூடிய விளங்களுகளுக்கு நேரும்...
24/04/2022

உலகளவில் புதிய மருத்துவ கண்டுபிடிப்புக்களின்போதும் ஆய்வுகூடங்களிலும் ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடிய விளங்களுகளுக்கு நேரும் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் அவற்றை தடுப்பதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக ஆய்வக விலங்குகள் நாள் இன்று!

23/04/2022
கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்...
22/04/2022

கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்திய மருத்துவ பிரிவில் இருக்க வேண்டிய ஒளடதங்களில் 50 சதவீதமான ஒளடதங்கள் தற்போது தீர்ந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எம்மை தாங்கிக்கொள்ளும் பூமியின் நலனிலும் அக்கறை கொள்வோம்!  உயிர்களுக்கு அடைக்கலம் தந்து தன்னை உருக்கிக்கொண்டிருக்கும் பூ...
22/04/2022

எம்மை தாங்கிக்கொள்ளும் பூமியின் நலனிலும் அக்கறை கொள்வோம்! உயிர்களுக்கு அடைக்கலம் தந்து தன்னை உருக்கிக்கொண்டிருக்கும் பூமியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளே புவி நாள் (Earth Day)

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக வாஷிங்டனுக்குச் சென்றிருக்கும் இலங்கை நிதியமைச்சர் தலைமையிலான குழுவினரின் பாவ...
21/04/2022

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக வாஷிங்டனுக்குச் சென்றிருக்கும் இலங்கை நிதியமைச்சர் தலைமையிலான குழுவினரின் பாவனைக்காக லிமோசீன் வாகனங்கள் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தூதரகத்திடம் ஏற்கனவே தேவையான வாகனங்கள் இருக்கின்ற போதிலும் இந்த வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. இதற்காக நாளாந்தம் 7 இலட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபா வாடகைக் கட்டணம் செலுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இப்போது இருக்கின்ற பொருளாதாரச் சூழ்நிலையில், பல்வேறு நாடுகளின் தூதரகச் செயற்பாடுகளே மட்டுப்படுத்தப்படுகின்ற நிலையில், இவ்வாறான வீண்செலவுகள் அவசியமானவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி...
21/04/2022

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற வரிகளுக்கு சொந்தக்காரரான புரட்சி கவிஞர் பா...
21/04/2022

"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற வரிகளுக்கு சொந்தக்காரரான புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று!

இலங்கை தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பநிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் எந்தவொரு கடன்...
20/04/2022

இலங்கை தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பநிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் எந்தவொரு கடன் வழங்கல் ஒப்பந்தத்திற்கும் போதுமான உத்தரவாதங்கள் தேவைப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று தற்போது அமெரிக்காவில் உள்ள சர்வதேச நாணய நித்யத்துடன் நாட்டின் வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது அதன் கடனை செலுத்துவதில் தோல்வியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் அதிகமான நிபந்தனைகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Adresse

Zürich

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Radio Thamil erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Radio Thamil senden:

Videos

Teilen

Kategorie


Andere Radiosender in Zürich

Alles Anzeigen