AUS Tamil TV

AUS Tamil TV Australia's very first 24x7 Tamil TV Channel. We Creates, manage and broadcast television programs

ரூ 61,000 தாண்டிய தங்கத்தின் விலை…இல்லத்தரசிகள் கவலை…Gold Prices Hit Record Highசென்னையில் 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் வி...
31/01/2025

ரூ 61,000 தாண்டிய தங்கத்தின் விலை…
இல்லத்தரசிகள் கவலை…

Gold Prices Hit Record High

சென்னையில் 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ61,840ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7730க்கு விற்கப்படுகிறது.

In Chennai, the price of 8 grams of ornamental gold has increased to Rs 61840. A gram of gold is selling at Rs7730.

கடந்த 2022ல், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ 43,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ 18 ஆயிரம் அதிகரித்து, ரூ 61840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

In 2022, the price of 8 grams of gold was Rs 43,000, but now it has increased by Rs 18000 and is being sold at Rs 61840.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 8 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நடுத்தர குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவே தங்கத்தின் விலை உயர காரணம்.

As the price of gold is approaching Rs 8 thousand per gram, middle class families are in turmoil. The share market slump is the key reason for the hike in the gold price hike.

வெளியேற்றப்படும் இலங்கை குடிமக்கள்…அமெரிக்க அரசு அதிரடி…Over 3,000 Sri Lankans face US deportation orders…அமெரிக்காவில் ...
31/01/2025

வெளியேற்றப்படும் இலங்கை குடிமக்கள்…

அமெரிக்க அரசு அதிரடி…

Over 3,000 Sri Lankans face US deportation orders…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 3,065 இலங்கை நாட்டை சேர்ந்த மக்களை வெளியேற்ற அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

The US government is taking action to evict 3,065 Sri Lankans who are staying illegally in the US.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 14,45,549 பேரை வெளியேற்றக்கூடிய நடவடிக்கையை குடியுரிமை துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

The citizenship department officials have started the process of deporting 14,45,549 people from different countries who are staying illegally in the United States.

தனி நபர்களின் குடியுரிமையை உறுதி செய்ய இந்தியா ,ஈரான், பூட்டான் போன்ற 15 நாடுகள் உரிய ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

America has accused 15 countries like India, Iran, Bhutan etc. of refusing to provide due cooperation to ensure the citizenship of individuals.

12 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை…பெர்த் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...Adam Charles Lusk jailed for 28 years for drugging,...
31/01/2025

12 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை…

பெர்த் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Adam Charles Lusk jailed for 28 years for drugging, sexually assaulting women

மயக்க மருந்து கொடுத்து 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த Adam Charles க்கு பெர்த் நீதிமன்றம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

The Perth court has sentenced Adam Charles to 28 years in prison for sexually assaulting 12 women by giving anesthesia.

2020- 2022களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பள்ளி மாணவிகள் உட்பட 12 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக Adam Charles மீது 100 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டது.

Between 2020-2022, Adam Charles assaulted 12 women, including schoolgirls. He was accused of sexually assaulting them using social media in 100 sections.

Adam Charles மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 26 ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகே பரோல் சலுகை வழங்கப்படும்.

Adam Charles was convicted and sentenced to 28 years. After serving 26 years in prison, parole will be granted.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்து உண்மை; ஆனால் புகைப்படம் வழங்கப்படவில்லை; பயிற்சிகள் ஏதும் தரப்படவில்லை...
30/01/2025

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்து உண்மை; ஆனால் புகைப்படம் வழங்கப்படவில்லை; பயிற்சிகள் ஏதும் தரப்படவில்லை"

எல்டிடிஇ அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் என்பவர் பெயரில் அறிக்கை

Via :

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட100 வது ராக்கெட்…இந்தியா புதிய சாதனை…ISRO Scripts History, Launches Its 100th Space Mission...
30/01/2025

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட100 வது ராக்கெட்…
இந்தியா புதிய சாதனை…

ISRO Scripts History, Launches Its 100th Space Mission

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

The Indian Space Research Organisation (ISRO) has successfully launched its 100th rocket.

ஜி.எஸ்.எல்.வி எஃப்15 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது மூலம் இந்த புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. இந்திய பிரதமர் மோடி இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ISRO has achieved this new milestone by launching the GSLV F15 rocket. Indian Prime Minister Modi has congratulated ISRO on its achievement.

இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட என்.வி.எஸ் செயற்கைகோள், பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ISRO has said that the NVS satellite sent on this rocket will provide accurate information during disasters.

வாஷிங்டன் விமான விபத்து…அச்சத்தில் உறைந்த மக்கள்…American Airlines Plane Crash; 19 bodies recovered…அமெரிக்காவில் வாஷிங்...
30/01/2025

வாஷிங்டன் விமான விபத்து…
அச்சத்தில் உறைந்த மக்கள்…

American Airlines Plane Crash; 19 bodies recovered…

அமெரிக்காவில் வாஷிங்டனில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

The bodies of 19 people have been recovered after a passenger plane and a military helicopter collided in Washington, D.C., in the United States.

பயணிகள் விமானத்தில் 64 பேரும், ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று பேரும் பயணித்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

An investigation revealed that there were 64 people on board the passenger plane and three people on board the military helicopter.

விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் தொடங்கியுள்ளது.

Rescue work is underway at the scene of the accident, and an investigation has begun into the cause of the accident.

கார்களில் பாதுகாப்பு குறைபாடு!பிரபல கார்களின் உற்பத்தி நிறுத்தமா?All the cars axed by Australian rule changes as popular...
30/01/2025

கார்களில் பாதுகாப்பு குறைபாடு!
பிரபல கார்களின் உற்பத்தி நிறுத்தமா?

All the cars axed by Australian rule changes as popular models ‘cancelled’…

ஆஸ்திரேலியாவில் மார்ச் 1, 2025 முதல் கார்களின் பாதுகாப்பு விதிகளில் மாற்றம் வரவுள்ளதால் முக்கிய கார் நிறுவனங்கள் பிரபல மாடல்களை சந்தைகளில் இருந்து திரும்ப பெறுகின்றன.

Australia is set to introduce a new set of safety regulations for cars from March 1, 2025, with major automakers recalling popular models.

Mitsubishi ASX, Suzuki Ignis, Abarth 695 போன்ற கார்களில் விபத்துகளை எச்சரிக்கும் தொழில் நுட்பங்கள் இல்லாததால் இந்த வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Cars like the Mitsubishi ASX, Suzuki Ignis, and Abarth 695 lack crash warning technology, making it impossible to sell these vehicles.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை தரும் நோக்கத்திலும் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது.

The new regulations are aimed at ensuring drivers’ safety and prioritising electric vehicles.

27/01/2025
குடியுரிமை குறித்த டிரம்பின் உத்தரவு… நீதிமன்றம் அதிரடி  தடை! Seattle judge temporarily blocks Trump's executive order…அ...
25/01/2025

குடியுரிமை குறித்த டிரம்பின் உத்தரவு…
நீதிமன்றம் அதிரடி தடை!

Seattle judge temporarily blocks Trump's executive order…

அமெரிக்காவில், பிறப்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை நிறுத்திய டிரம்பின் உத்தரவுக்கு சியாட்டில் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

A Seattle court has temporarily blocked Trump's order to end birthright citizenship in the United States.

அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

Trump had announced that children born to non-citizen parents would not be able to obtain US citizenship.

அதிபரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், இடைக்கால தடைவிதிப்பதாக சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Seattle court has ordered a temporary injunction because the president's order is unconstitutional.

இரும்பை முதலில் பயன்படுத்தியது தமிழர்களே!ஆதாரத்துடன் பிரகடனம் செய்த தமிழ்நாடு முதல்வர்Iron Age began in Tamil Nadu, says...
25/01/2025

இரும்பை முதலில் பயன்படுத்தியது தமிழர்களே!
ஆதாரத்துடன் பிரகடனம் செய்த தமிழ்நாடு முதல்வர்

Iron Age began in Tamil Nadu, says Chief Minister MK Stalin

உலகின் இரும்பு காலம் தமிழ் நிலத்தில் இருந்து தான் தொடங்குவதாக தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that the Iron Age of the world begins in Tamil land.

சிவகளை பகுதி அகழாய்வில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்தது தெரியவந்துள்ளது.

The excavation of the Sivagalai area has revealed that the technology of smelting iron existed 5,300 years ago.

இரும்பின் தொன்மை என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தையும் தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டார்.

The Tamil Nadu Chief Minister also released a book titled The Antiquity of Iron.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்…வீரர்கள் மனம் கவர்ந்த  பழம் எது தெரியுமா?Australian Open tennis players fuelled by 200kg ...
25/01/2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்…
வீரர்கள் மனம் கவர்ந்த பழம் எது தெரியுமா?

Australian Open tennis players fuelled by 200kg of bananas a day

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் Cavendish வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுவது தெரியவந்துள்ளது.

It has been revealed that players participating in the Australian Open tennis tournament are fond of eating Cavendish bananas.

போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தினசரி 200 கிலோ குயின்ஸ்லாந்து Cavendish பழம் விநியோகிக்கப்படுகிறது.

200 kg of Queensland Cavendish fruit is distributed daily to the players participating in the tournament.

டென்னிஸ் வீரர்களுக்காக அதிக சத்து நிறைந்த உணவுகள் இருந்தாலும், வாழைப்பழமே வீரர்களின் முன்னணி தேர்வாக உள்ளது.
Although there are more nutritious foods for tennis players, bananas are the leading choice of the players.

25/01/2025
  🌟Iron Age in Tamil Nadu Began atleast 5300 years ago !!!Oldest in the WORLD !!!What an astounding finding by the Arche...
23/01/2025

🌟
Iron Age in Tamil Nadu Began atleast 5300 years ago !!!

Oldest in the WORLD !!!

What an astounding finding by the Archeological dept of Tamil Nadu ♥️

இறக்குமதிக்கு கூடுதல் வரி…டிரம்ப் அதிரடி…Trump says he is considering 10% tariff on China starting February 1…சீனாவில் இ...
23/01/2025

இறக்குமதிக்கு கூடுதல் வரி…
டிரம்ப் அதிரடி…

Trump says he is considering 10% tariff on China starting February 1…

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

Trump plans to impose an additional 10 percent tariff on goods imported from China.

மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கவும் வாய்ப்புள்ளது.

He is also likely to impose an additional 25 percent tariff on goods imported from Mexico and Canada.

அமெரிக்க டாலருக்கு பதில் பிற பண மதிப்புகளை பயன்படுத்தினால் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trump has also publicly warned that using other currencies instead of the US dollar will result in consequences.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப்…முதல் நாளில் பிறத்த உத்தரவு என்ன தெரியுமா?U.S. President Donald Trump declares end to...
23/01/2025

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப்…
முதல் நாளில் பிறத்த உத்தரவு என்ன தெரியுமா?

U.S. President Donald Trump declares end to birthright citizenship…

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் 220 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

Donald Trump has signed 220 executive orders on his first day as the 47th President of the United States.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதை நிறுத்தி அவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் ஹெச்1பி விசா பெற்றுள்ள 18 ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர்.

He has issued an order to stop granting citizenship to children born in the United States. This will affect 18,000 Indians who have H1B visas.

அமெரிக்காவில் இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும், மூன்றாம் பாலினத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளார்.

He has cancelled the recognition of a third gender, saying that only two genders will be recognised in the United States.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

He has also ordered the withdrawal from the World Health Organisation and the deportation of illegal immigrants.

ஹண்டர் வேலி பேருந்து விபத்து…பேருந்துகளில் வரும் அதிரடி மாற்றம்…Seatbelt signs required on new buses after Hunter Valley...
23/01/2025

ஹண்டர் வேலி பேருந்து விபத்து…
பேருந்துகளில் வரும் அதிரடி மாற்றம்…
Seatbelt signs required on new buses after Hunter Valley crash

ஆஸ்திரேலியாவில் நவம்பர் 1, 2026 முதல் பொது பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு சீட் பெல்ட் அணிய அறிவுறுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

Australia will make it mandatory for people travelling on public buses to wear seat belts from November 1, 2026.

ஆஸ்திரேலியாவில் 97,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 36% மக்கள் பேருந்து சேவையை பயண்படுத்துகின்றனர்.
There are 97,000 buses in operation in Australia. 36% of the population uses bus services.

2023-ல், ஹண்டர் வேலி பேருந்து விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

In 2023, 10 people died in a bus accident in the Hunter Valley. This accident highlighted the need to wear seat belts.










More than 3000 participated in Sydney Grand Pongal celebrated in Pendle Hill on 19th Jan 2025.
20/01/2025

More than 3000 participated in Sydney Grand Pongal celebrated in Pendle Hill on 19th Jan 2025.

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+61422011811

Alerts

Be the first to know and let us send you an email when AUS Tamil TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Connecting Tamil Communities in Australia

AUS Tamil TV – Australia’s very first 24×7 Tamil entertainment channel featuring Tamil entertainment programs, Tamil Events, Shows, Interviews, Business Directory, RIP Notices and community stories that Tamil-speaking people could connect with. Operating from its own studio in Melbourne, AUS Tamil is also recognised for its unbiased reporting of news and views from around the world. Our channel also appeals to the discerning audience looking for unpredictable, energetic, exciting, thrilling and adventurous programs for an unparalleled entertainment experience.

Event Management Solutions

Organising an event in Australia? For your event to be successful and to attract the right audience, proper promotion and marketing are crucial. With extensive experience in covering several Tamil events and concerts in Melbourne, Sydney, Adelaide and Perth, we are your one-stop-shop for complete event management solutions. From event promotion, ticketing, post video production, social media marketing through to coverage and broadcasting, we handle it all.

For more info visit: